உலகச் செய்திகள்


சவூ­தியில் 431 பேர் கைது

துருக்கிய எல்லையில் குண்டுத் தாக்குதல் 28 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

 ஈரான் தொடர்­பான அணு­சக்தி உடன்­ப­டிக்­கைக்கு ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபை அங்­கீ­காரம்

சயனைட் ,தொலை தொடர்பு சாதனங்களுடன் இலங்கையர் உட்பட மூவர் இந்தியாவில் கைது

பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தம்

சவூ­தியில் 431 பேர் கைது

20/07/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவூதி அதி­கா­ரிகள் சனிக்­கி­ழமை அறி­வித்­துள்­ளனர்.




மேற்­படி குழு­வினர் சவூதி அரே­பி­யாவின் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட மிக மோச­மான தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் உள்­ள­டங்­க­லான பல தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.
அவர்கள் சவூ­தியில் பிரி­வி­னைவாத வன்­மு­றை­களை தூண்டி பதற்ற நிலையை ஏற்படு த்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி 







துருக்கிய எல்லையில் குண்டுத் தாக்குதல் 28 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

21/07/2015  துருக்கிய நகரான சுரக்கில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 28 பேர் பலியானதுடன் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.

சிரிய எல்லையிலுள்ள மேற்படி நகரில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை தீவிரவாதத் தாக்குதல் ஒன்றென அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுரக் நகர கலாசார நிலையமொன்றிலுள்ள தோட்டத்திலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் இந்தத் தாக்குதல் தற்கொலைக் குண்டுதாரியொருவராலேயே நடத்தப்பட்டதாக பெயரை வெளியிட விரும்பாத அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நாட்டின் பிரதமர் அஹ்மெட் டவுதோக்லு பிரதிப் பிரதமர் நுமான் குர்துல்மஸ், உள்துறை அமைச்சர் செபஹட்டின் ஒஸ்துர்க், தொழில் அமைச்சர் பாருக் செலிக் ஆகிய 3 அமைச்சர்களை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரில் சென்ற நிலைமைகளைப் பார்வையிட அனுப்பி வைத்துள்ளார்.
மேற்படி தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.   நன்றி வீரகேசரி 









ஈரான் தொடர்­பான அணு­சக்தி உடன்­ப­டிக்­கைக்கு ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபை அங்­கீ­காரம்

22/07/2015 ஈரா­னுக்கும் உலகின் 6 அதி­கார சக்­தி­க­ளுக்­கு­மி­டையே கடந்த வாரம் இணக்கம் காணப்­பட்ட அணு­சக்தி உடன்­ப­டிக்­கைக்கு ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபை ஏக­ம­ன­தாக ஒப்­பு­த­ல­ளித்­துள்­ளது.
ஈரானின் சர்ச்­சைக்­கு­ரிய அணு­சக்தி நிகழ்ச்சித் திட்­டத்தை முடக்­கு­வ­தற்கு பதி­லாக அந்­நாட்­டுக்கு எதி­ரான தடை­களை நீக்­கு­வ­தற்கு அங்­கீ­கா­ர­ம­ளிக்கும் தீர்­மா­னத்­திற்கு ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபையின் அனைத்து 15 உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வ­ளித்­துள்­ளனர்.
எனினும் ஈரான் தனது கடப்­பா­டு­களை நிறை­வேற்றத் தவறும் பட்­சத்தில் மேற்­படி தடைகள் மீள அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் இது தொடர்பில் அங்­கீ­காரம் வழங்­கு­வதா அல்­லது இல்­லையா என தீர்­மா­னிக்க அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்­திற்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில், எதிர்­வரும் 90 நாட்­க­ளுக்குள் மேல­திக நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ஐக்­கிய நாடுகள் சபையின் இந்தத் தீர்­மா­ன­மா­னது தமது உடன்­ப­டிக்கை தொடர்பில் குற்­றஞ்­சாட்­டு­ப­வர்­க­ளுக்கு தெளி­வான செய்­தி­யொன்றை அனுப்­பு­வ­தாக உள்­ள­தென அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா கூறினார்.
ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபை 2006 ஆம் ஆண்­டுக்கும் 2015 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் ஈரா­னிய அணு­சக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் 7 தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளது.
அவற்றில் நான்கு தீர்­மா­னங்கள் ஈரான் தனது அணு­சக்­தியைப் பயன்­ப­டுத்தி அணு ஆயு­தத்தை உற்­பத்தி செய்­வதை தடுப்­பதை இலக்­காகக் கொண்டு அந்­நாட்­டிற்கு எதி­ராகத் தடை­களை விதிப்­ப­ன­வாக உள்­ளன.
இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் சபையில் அந்தத் தடை­களை நீக்­கு­வ­தற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட புதிய தீர்மானம், ஈரான் உடன்படிக்கை நிபந்தனைகளை எதிர்வரும் 10 வருடத்துக்குள் மீறும் பட்சத்தில் அந்நாட்டிற்கு எதிராக தடைகளை மீள விதிப்பதற்கு அனுமதிப்பதாக உள்ளது.  நன்றி வீரகேசரி 










சயனைட் ,தொலை தொடர்பு சாதனங்களுடன் இலங்கையர் உட்பட மூவர் இந்தியாவில் கைது

22/07/2015 இலங்கைக்கு கடத்தவிருந்த சயனைட் , தொலைத் தொடர்பு சாதனங்களுடன்  மற்றும் பொருட்களுடன் இலங்கையர் உட்பட மூவரை  ராமநாதபுரம் கடலோரப்பகுதி பாதுகாப்பு பிரிவினர்  கைதுசெய்துள்ளனர்.

இலங்கைக்கு வெடிபொருட்கள் ராமேஸ்வரம் வழியாக கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கடைத்தது. இதனையடுத்து ராமநாதபுரம் கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர் .

இந் நிலையில் நேற்று  இரவு உச்சிப்புளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டடு வந்த மாவட்ட காவல்துறையினர்  சந்திகத்தின் பேரில் காரொன்றை நிறுத்தி சோதனை செய்தனர் .
குறித்த காரில் சோதனை நடத்திய போது மறைத்து வைத்திருந்த 300 கிராம் சயனைட் ,75 சயனைட் குப்பிகள், 4 திசைகாட்டும் கருவிகள், 8 செல்போன்கள்  இந்தியப்பணம் ரூபா 50 ஆயிரம் மற்றும் இலங்கை பணம் ரூபா 19 ஆயிரம்  ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார்  காரையும் பறிமுதல் செய்தனர்.
இதேவைளை காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிரிஷ்ணகுமார் (39), உச்சிப்புளி அருகே உள்ள சுந்தரமடையான் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், மற்றும் நகாச்சி கிராமத்தை சேர்ந்த ஜெய்குமார் (27) ஆகியோரை  பொலிஸார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பிருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   நன்றி வீரகேசரி 









பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தம்


23/07/2015 வட பாகிஸ்­தானில் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது மூவர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
கைபர் பக­துன்­கவா மற்றும் பலு­சிஸ்தான் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள கிரா­மங்கள் இந்த வெள்ள அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.
கைபர் பக­துன்­கவா மாகா­ணத்­தி­லுள்ள சிட்ரல் நகர் வெள்ளத்தால் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அங்கு வீடுகள் பல இடிந்து விழுந்­துள்­ள­தா­கவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.    




நன்றி வீரகேசரி



No comments: