தற்கொலை-கோழைத்தனமானது -தி. சுவாமிநாதன் - நாமக்கல்

.
இந்தியாவில் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது என இந்திய சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளிவிவரம் நமக்குத் தெரிவிக்கிறது. அதாவது நம் நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 240 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். உலக அளவில் தற்கொலை செய்து கொள்வோர்களின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 10-சதவீதம் (1ஃ10) ஆகும்.
பொதுவாகää தற்கொலை செய்துகொள்பவரின் சதவீதம் நம் நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலை தருகிறது. தற்கொலை முடிவை தேடுவோர்களில் விஷம் குடிப்போர்கள் 36.6 சதவீதம். தூக்கு கயிற்றில் தொங்குபவர்கள் 32 சதவீதம். தீக்குளிப்பவர்கள் 7.9 சதவீதம் ஆவர். 2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1>87>000  ஆகும்.




நம் நாட்டில் பாலியல் தொந்தரவு, குடும்ப தகராறு மற்றும் வரதட்சனை கொடுமை போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மனமுடைந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, மதிப்பெண் குறைவு, காதல் தோல்வி உள்ளிட்ட பல காரணங்களுக்காக பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் தற்கொலைகள் கடந்த ஆண்டில் மட்டும் இந்திய முழுக்க 7,373 ஆகும்.
படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காத விரக்தி, காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது, காவல்துறை  மற்றும் இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு பணிச்சுமை மனஅழுத்தம், மற்றும் விடுப்பு கிடைக்காதது, பெண்களுக்கு நல்ல வரன் அமையாதது, குடும்பத்தில், கணவனால், பெற்றோரால் திட்டப்பட்டு, இப்படியெல்லாம் திட்டிவிட்டார்களே என மன உளைச்சலுக்கு ஆளாவது, தொழிலில், வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத நஷ்டம், எய்ட்ஸ் போன்ற கொடுமையான நோய்களால் துன்புறுவது. பல குடும்பங்களில் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருப்பவர்களை கண்டிப்பதாலும், குடித்தனம் நடத்த மனைவி வர மறுப்பதாலும், தொடர்ந்து டி.வி.யில் கிரிக்கெட், கார்ட்டூன் போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதை பெற்றோர் கண்டிப்பதாலும், கடன் தொல்லை, கணவனின் குடிப்பழக்கத்தை மனைவியர் கண்டிப்பது, நன்றாக படிக்க முடியவில்லையே, தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற மன வேதனை, தாங்க முடியாத வறுமை, நடத்தையில் சந்தேகப்படும் கணவன்மார்கள், ஆபாசமாக படமெடுத்து மிரட்டப்படுவதால் அவமானம் தாங்கமுடியாத இளம் பெண்கள், பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பிக்க என பல்வேறு காரணங்களால், தற்கொலை செய்து கொள்வது என்ற தவறான முடிவுக்கு  வருகின்றனர்.

தான் மிக அதிகமாக நேசித்தவரின் திடீர் இழப்பு, தலைவர்களின் மரணம்ää காதல் தோல்வி, பொருளாதாரப் பிரச்னைகள்;, குற்ற உணர்வு, சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படுதல், போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் போன்ற பல காரணங்களாலும் நம் நாட்டில் தற்கொலைகள் நடைபெறுகின்றன.
தற்கொலை என்பது மிகவும் கோழைத்தனமானது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக நல்ல தீர்வு உண்டு. பொதுவாக தற்கொலைக்கு முயல்பவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். ஆனாலும் தற்கொலை முயற்சியில் அதிகம் வெற்றி பெறுபவர்கள் ஆண்களே.
உண்மையில் தற்கொலை செய்து கொள்வதற்கு நமக்கு தேவைப்படும் தைரியத்தில் நூறில் ஒரு பங்கு இருந்தால் கூட வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொண்டு விடலாம். வாழ்க்கையில் ஒருவன் செய்யவே கூடாத தவறு தற்கொலைதான். நமது பிரச்சினைகளை எழுதி வைத்துவிட்டு சில மாதங்கள் கழித்துப் பார்த்தால் பாதி தானாகவே தீர்ந்து போயிருக்கும். சில நீங்களாக தீர்த்திருப்பீர்கள். இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம்.
தன் வீட்டிலேயே நமக்கு மரியாதை இல்லை, செய்யும் வியாபாரத்தில் இலாபம் இல்லை, தொடர்ந்து தோல்வி, யாருமே நம்மை கண்டுகொள்வதில்லை, மதிப்பதில்லை, இனி எதற்கு நாம் வாழ வேண்டுமென்று நினைக்கும் ஒரு கட்டம் பலருக்கும் வரத்தான் செய்கிறது. துவண்டு போகக்கூடாது. வாழ்வில் எல்லா நேரமும் எல்லோரும் தேவையாகத்தான் இருக்கிறார்கள். ரம்மி சீட்டாட்டத்தில் சீட்டுக்கள் கைக்கு வந்து சேருவது விதிவசம். அது ஆடக் கூடிய சீட்டா? தவிர்க்க வேண்டியதா? என்பது நம் கையில் தான் இருக்கிறது. அதுபோலவே தற்கொலை தவிர்க்க வேண்டியது. வாழ்க்கை ஆட (வாழ) வேண்டியது.
பள்ளி இறுதித் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றான். துரதிஷ்டத்திலும் ஒரு அதிர்ஷ்டம். அவனுக்கு பல நாட்களாக கற்றுக் கொள்ள முடியாத நீச்சலை அன்றுதான் கற்றுக் கொண்டான். அப்போது அவன் எடுத்த முடிவுää வாழ்க்கையில் எந்தப் பிரச்சினை வந்தாலும், மரணத்தை முடிவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே அது.
ஆண்களைவிட பெண்களுக்கு உடல் சார்ந்தää மனம் சார்ந்த வலிகள் ஏராளம். அதனால்தான் சின்ன சின்ன சந்தோசத்தைக்கூட பெரிதாக கொண்டாடுகிறார்கள். இன்று நான் வீட்டு வாசலில் போட்ட கோலம் நன்றாக இருக்கிறதுää என் கையில் மருதாணி நன்றாக சிவந்து இருக்கிறது- என்றெல்லாம் பெண் மகிழ்கிறாள். ஆனால்ää  வலிகளை மட்டும் அவள் வெளியே காட்டுவதில்லை.
தகவல் தொழில் நுட்பத் துறையில் திடிரென்று வேலை இழப்பு அபாயம் வந்தபோதுää கைநிறைய சம்பளம் வாங்கிய பலர்;ää இனி என்ன செய்வது? என நிலைகுலைந்து போனார்கள். இப்படி வேலை இழந்த அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் தன் மனைவி குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிட்டுää தானும் தற்கொலை செய்துகொண்டார். இது எவ்வளவு துயரமானது?
அழகான பெண் குழந்தைக்கு 1½ வயதில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அதன் காரணமாக கண் பார்வை பறிபோயிற்று. காதுகள் கேட்கும் சக்தியை இழந்தன. மேலும்ää வாய்ப் பேச முடியாமல் போயிற்று. பாருங்கள். கண் தெரியாது. காது கேளாது. வாய் பேச முடியாத நிலை. அதிலும் பெண் குழந்தை. இருந்தபோதிலும் மனம் தளரவில்லை. முடங்கி விட வில்லை. பிற்காலத்தில் அந்தப் பெண் விடாமுயற்சியோடு போராடி திறன்களை வளர்த்துக் கொண்டு உலகப் புகழ்பெற்றார். அப்பெண்மணி யார் தெரியுமா? அவர்தான் ஹெலன்கெல்லர். இத்தனைக் குறைகளை வாழ்க்கையில் பெற்றும் அதனை ஜெயித்துக் காட்டினார். இப்படியல்லவா இருக்க வேண்டும்.
தன் இளவயது அண்ணியார், இறந்து போன  தன் இளம் சகோதரனுடைய சடலத்துடன் சேர்த்து உயிருடன் எரிக்கப்பட்ட அவலத்தை கண்டு சகிக்க முடியாமல் அது மாற்றப்பட வேண்டும். இது நிறுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து போராடி, இறுதியில்  இந்தியாவில் உடன் கட்டை ஏறுதல் எனும் சமுதாயக் கொடுமையை தடுத்து நிறுத்தினார் இராஜாராம் மோகன்ராய்.
கடந்த நூற்றாண்டில் பொருளாதார மந்தத்தால் (புசநயவ னுநிசநளளழைn) சிக்குண்டு அமெரிக்கா தத்தளித்த போதுää நாட்டை சரிவிலிருந்து மீட்டெடுத்தவர்  அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஆவார். அந்த அமெரிக்காவே ஆச்சர்யப்படும் வகையில்ää இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் நமது அணு விஞ்ஞானி திரு. அப்துல் கலாம் அவர்கள். சாதாரண குடும்பத்தில் ஏழை ஆசிரியரின் மகனாக பிறந்த அம்பானி தன் அயரா உழைப்பால் ஒரு இலட்சம் கோடி திரட்டிக் காட்டினார்.
தன் தந்தையை சந்திக்க கோடுகான் ரயில் நிலையத்தில் இறங்கியாயிற்று. அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. 15 கிலோமீட்டர் செல்ல வேண்டும். மாட்டுவண்டியில் பயணம் தொடர்ந்தது. போகும்வழியில் தன் வண்டியில் பயணம் செய்பவர்கள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவர உடன் மாட்டு வண்டிக்காரர் கடுமையாக திட்டியதுடன்ää குழந்தைகள் என்றும் பாராமல் மாட்டுவண்டியை கவிழ்த்துவிட்டார். தன் சகோதரனுடன் கீழே விழுந்த அந்தச் சிறுவன்ää ஏற்கனவே தான் படித்த பள்ளியில் ஒதுக்கப்பட்டுää ஆழமான மனக்காயம் அடைந்தவர். பிற்காலத்தில்ää இந்த கொடுமைகளை வேரறுக்க கடுமையாக உழைத்துää சட்ட மேதையாகää விடிவெள்ளியாகää மாறியவர்தான்  அன்னல் அம்பேத்கார்.
லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால் போன்ற தலைவர்கள் சுதந்திரத்திற்கு போராடிய காலகட்டத்தில், தான் உண்டுää தன் வேலை உண்டு என தன் கட்சிக்காரரின் வாராக்கடனை வசு10லித்து தர வழக்கறிஞராக  தென்ஆப்பிரிக்கா சென்ற இளைஞன், கோர்ட்டில் தலைப்பாகை அணிந்து வரக்கூடாது என நீதிபதியால் எச்சரிக்கப்பட்டார். இரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்திருந்தாலும்ää வெள்ளையருக்கு இணையாக அமரக் கூடாது என ஓடும் இரயிலில் இருந்து வீசி எறியப்பட்டார். இதைப் பொறுத்துக் கொள்ளாமல் அநீதியை, பாரபட்சத்தை,அடிமைத்தனத்தை, எதிர்த்து போராடிய போதுதான் மகாத்மா காந்தியாக வெளியுலகுக்கு அறிமுகமானார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
எதிர்மறை சிந்தனையே தற்கொலை. பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டும். இறப்பதற்கு எடுக்கும் சிரமத்தைவிட (சுளைம) வாழ்வதற்கு எடுக்கும் சிரமம் குறைவே. விரக்தியை விரட்டி அடிப்போம், நமக்கு கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை. வேலை கிடைக்கவில்லை எனப் பார்த்தால் நாட்டில் பாதிபேர் செத்து போயிருப்பார்கள். எந்த தீமையிலும்ää நமக்கான வாய்ப்பு நிச்சயம் ஒளிந்துள்ளது. ஆகவே மனம் தளரக்கூடாது. பிரச்னைகள், தோல்விகள், எல்லோருக்கும் உண்டு. மகிழ்ச்சியும், சோகமும் இன்பமும், துன்பமும், சந்தோசமும், துக்கமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. இந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம். ஒரு போதும் பின் வாங்க வேண்டாம். இன்றைய நம் வாழ்க்கை முறையில் பல்வேறு சிக்கல்கள் குளறுபடிகள் ஏற்பட்டுவருவது உண்மையே. பிரச்சினைகளை எதிர் கொள்பவனே உண்மையான மனிதனாகிறான். தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட சினேகா என்ற அமைப்பு 24 மணிநேர இலவச தொலைபேசி சேவையை வழங்கி வருகிறது. தொலைபேசி எண். 044-24640050 ஆகும்.
தெளிந்த நீரில்தான் முகம் தெரியும். விளக்கு ஒளியில்தான் இருள் விலகும். தீக்குச்சி உரசினால்தான் நெருப்பாகும். மேகம் கருத்தால்தான் மழை பொழியும். முயற்சி செய்தால்தான் கனவுகள் நனவாகும். அதுபோல மனிதன் அறிவுப்பூர்வமாக சிந்தித்தால்தான்ää போராடினால்தான் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வாழ்க்கைப் பயணத்தில் நம் நிறுத்தம் வரும்போது மட்டுமே இறங்கிவிட காத்திருக்கும் சக பயணியாய் வாழ்க்கையைத் தொடருவோம். கண்ணீPரைப் பன்னீராக்குவோம்.
                         

       

No comments: