இலங்கைச் செய்திகள்


கிளிநொச்சியில் காணாமல்போன 3வயது சிறுமியின் சடலம் மீட்பு

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரகம்

அரசியல் விவகாரங்களில் தலையிடமாட்டோம் : ஐரோப்பிய கண்காணிப்புக்குழு

வடக்கில் தேர்தலை நடத்தாதிருந்தால் இன்றும் மஹிந்த தான் ஜனாதிபதி

கைவிரலை உடைக்க பார்த்தார், தாக்கவில்லை பிடித்து தள்ளினேன் : மஹிந்த

கொல்­லப்­பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இன் இலங்கை பிரஜை முன்னாள் அதிபர்


கிளிநொச்சியில் காணாமல்போன 3வயது சிறுமியின் சடலம் மீட்பு

20/07/2015 கிளி­நொச்சி உருத்­தி­ர­புரம் எள்­ளு­காடு பகு­தியில் கடந்த மாதம் 21ஆம் திகதி காணா­மல்­போன உதயகுமார் யர்சிகா என்ற 3 வயது சிறு­மி­யி­னு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்­கப்­பட்­டுள்­ளது.


குறித்த சிறு­மி­யி­னு­டை­ய­தாக கூறப்­படும் சட­லத்தில் காணப்­பட்ட உடை­யினை வைத்தே உற­வி­னர்கள் சிறு­மியின் சட­லத்­தினை அடை­யாளம் கண்­டுள்­ளனர். எனினும் குறித்த சடலம் காணா­மல்­போன சிறு­மி­யி­னு­டை­யதா என்­பது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை பொலிசார் தற்­போது முன்­னெ­டுத்து வரும் அதேவேளை மரணம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
குறித்த சிறுமி காணா­மல்­போன காலம் தொட்டு பல்­வேறு வியூ­கங்­களில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில், தற்­போது குறித்த சிறு­மி­யி­னு­டை­யது என சந்­தே­கிக்கும் சடலம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
இந்த சடலம் சிறு­மியின் வீட்­டி­லி­ருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல் வய­லி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ளது.
நேற்று நெற்­ப­யி­ருக்கு மருந்­த­டிக்க சென்ற நபர், அவ­ரது வயல் பகு­தியில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான வகையில் சடலம் காணப்பட்டமை தொடர்பில் உறவினர் களுக்கு வழங்கிய தகவலையடுத்தே, சட லத்தை மீட்ட பொலிஸார் விசாரணை களை ஆரம்பித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி
பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரகம்

21/07/2015 கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அகில இலங்கை அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சத்தியாகிரகம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சத்தியாக்கிரகத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த சத்தியாக்கிரக போராட்டம் 217 நாட்களை தாண்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




நன்றி வீரகேசரி 


அரசியல் விவகாரங்களில் தலையிடமாட்டோம் : ஐரோப்பிய கண்காணிப்புக்குழு

22/07/2015 இலங்­கையில் சுயா­தீன தேர்­தல்கள் ஆணை­க்குழு தொடர்­பா­கவோ அர­சியல் தொடர்­பா­கவோ எவ்­வித கருத்­தையும் நாம் வெளியிடமாட்டோம். எமது பணி தேர்தல் நியா­ய­மான முறையில் நடை­பெற்றதா என்­பதை கண்­கா­ணித்து அறிக்கை சமர்­ப்பிப்­பதே ஆகும் என இலங்கை வந்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தேர்தல் கண்­கா­ணிப்பு குழுத் தலைவர் கிறிஸ்­டியன் பிரிடா தெரி­வித்தார்.

நாளை (இன்று) புதன்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கும் அதன் பின்னர் கிழக்­கிற்கும், தெற்­கிற்கும், மத்­திய மாகா­ணத்­திற்கும் விஜயம் செய்­ய­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

கொழும்பு கல­தாரி ஹோட்­டலில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இலங்கை வந்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் கண்­கா­ணிப்பு குழு­வினர் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அக்­கு­ழுவின் தலைவர் கிறிஸ்­டியன் பிரிடா மேற்கண்டவாறு தெரி­வித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உறை­யாற்­று­கையில்,
 இலங்கை தேர்தல் முறை மற்றும் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உட்­பட அர­சியல் தொடர்­பாக எந்­த­வி­த­மான கருத்­தையும் நாம் வெ ளியிடமாட்டோம். இலங்கை தேர்­தல்கள் ஆணை­யா­ளரின் அழைப்பை ஏற்றே நாம் இங்கு வந்தோம். எமது கண்­கா­ணிப்பு இன்று (நேற்று) முதல் ஆரம்­ப­மாகிறது. ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்போம்.
நாளை (இன்று) நான் யாழ்ப்­பா­னத்­திற்கு விஜயம் செய்­கின்றேன். பின்னர் கிழக்கு, தெற்கு, மத்­திய மாகாணம் என அனைத்து பிர­தே­சங்­க­ளுக்கும் செல்வேன். அர­சியல் கட்சி தலை­வர்கள் வேட்­பா­ளர்கள் சிவில் சமூக ஆர்­வ­லர்கள் மற்றும் உள்ளூர் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளையும் சந்­தித்து பேச்சு வார்த்­தை­களை நடத்­த­வுள்ளேன்.
எமது குழு இலங்­கையின் தேர்தல் நடை­மு­றையில் தலை­யீடு செய்­யாது. மற்றும் எமக்கு எவ­ருக்கும் அறி­வு­றுத்தல் வழங்­கு­வ­தற்கு அதி­காரம் இல்லை. தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை ஏற்­ப­டுத்­தவும் முடி­யாது. 2005 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் அமைப்­பினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளுக்­கான பிர­க­ட­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கண்­கா­ணிப்பு குழு செயல்­படும்.
கடந்த காலங்­களில் 2001 இ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்­டு­களில் இலங்­கையில் இடம்­பெற்ற தேர்­தல்­களில் தேர்தல் கண்­கா­ணிப்பு பணியில் எமது குழு ஈடு­பட்­டது. 2000 ஆம் ஆண்­டி­லி­ருந்து சுமார் 50க்கும் மேற்­பட்ட நாடு­களில் 100க்கும் மேற்­பட்ட தேர்தல் கண்­கா­ணிப்புக் குழுக்­களை ஈடு­ப­டுத்­தி­யுள்ளோம்.
உள்ளூர் கண்­கா­ணிப்­பா­ளர்­களை மட்­டு­மன்றி உள்ளூர் ஊட­கங்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளோம். இலங்­கையில் தேர்தல் கண்­கா­ணிப்பை மேற்­கொள்­ளு­மாறு தேர்­தல்கள் ஆணை­யா­ளர்கள் விடுத்த வேண்­டு­கோ­ளுக்­க­மை­யவே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கண்­கா­ணிப்புக் குழு இங்கு வந்­துள்­ளது. 
சர்­வ­தேச பொறுப்­புக்கள் மற்றும் தேசிய சட்ட விதி­மு­றை­களை எந்­த­ள­விற்கு தேர்தல் நடை­முறை பின்­பற்­று­கி­றது என்­பது குறித்து ஆராய்வோம். இத் தேர்­தல்கள் கண்­கா­ணிப்புக் குழுவில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­னதும் மற்றும் நோர்வே சுவிஸ்­லாந்து நாடு­களைச் சேர்ந்த 8 முக்­கிய உறுப்­பி­னர்­களும் 18 நீண்ட கால உறுப்­பி­னர்­களும் 20 குறு­கிய கால கண்­கா­ணிப்­பா­ளர்­களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும் ஐரோப்­பிய அங்­கத்­த­வர்­களின் தூது­வ­ரா­ல­யங்­களில் உள்ள குறு­கிய கால கண்­கா­ணிப்­பா­ளர்­களும் தேர்தல் தினத்தில் எமது கண்­கா­ணிப்பு பணியில் இணைந்து கொள்­வார்கள். கண்­கா­ணிப்­பா­ளர்கள் நாட்டில் அனைத்து தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் பணியில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். தபால் மூல வாக்­க­ளிப்பு எவ்­வாறு இடம்­பெ­று­கி­றது என்­பதை ஆராய்வோம்.
எமது கண்­கா­ணிப்பு பணியில் எந்­த­வொரு மாவட்­டத்­துக்கும் விசே­டத்­துவம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது. தேர்தல் முடிந்து 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் எமது கண்­கா­ணிப்பு தொடர்­பான அறிக்கை வெளி­யி­டப்­படும். கடந்த கால தேர்­தலில் கண்­கா­ணிப்பு தொடர்­பா­கவோ அன்று விடு­தலை புலி­களின் நட­வ­டிக்கை தொடர்­பா­கவோ தற்­போது எத­னையும் கூற முடி­யாது. அது முடிந்து விட்­டது என்றார்.
ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தேர்தல் கண்­கா­ணிப்பு குழுவின் நோக்­கங்கள் வருமாறு,
ஐன­நா­யக நடை­மு­றைக்கு உதவி செய்வர். சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிப்­பதை பலப்­ப­டுத்­துதல். பிழை­யான நடை­மு­றை­களை தடுத்து நிறுத்தி தேர்தல் நடை­மு­றையில் பொது மக்­களின் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­புதல். எதிர்­கால தேர்தல் செயற்­பா­டு­களை மேன்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான பரிந்­து­றை­களை மேற்­கொள்ளல் என்­பவை ஆகும்.

ஐரோப்­பிய யூனியன் தேர்தல் கண்­கா­ணிப்பு திட்­டத்தின் பொறுப்பு மற்றும் கட­மைகள் வருமாறு,
தேர்­த­லுக்கு முன்னர், தேர்­தலின் போது மற்றும் தேர்­த­லுக்கு பின்னர் உள்ள அனைத்து செயற்­பா­டு­க­ளையும் கண்­கா­ணித்தல். ஐரோப்­பிய யூனியன் தேர்தல் கண்­கா­ணிப்பு குழு கீழ் காணும் செயற்­பா­டு­களை கண்­கா­ணிப்பு செய்யும்.
சட்­டக்­கட்­ட­மைப்பு மற்றும் அதன் அமுல் படுத்தும் நடை­முறை தேர்தல் நிர்­வா­கத்தின் செயல் திறன் பெறு­பேறு அரச நிறு­வ­னங்­களின் செயல் திறன் மற்றும் அரச சொத்து துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் கண்­கா­ணிப்பு செய்தல்.  நன்றி வீரகேசரி 
வடக்கில் தேர்தலை நடத்தாதிருந்தால் இன்றும் மஹிந்த தான் ஜனாதிபதி

22/07/2015 வடக்கில் தேர்தலை நடத்தியதன் விளைவே மஹிந்த ராஜபக்ஷவின் சாம்ராச்சியம் சரிய காரணமாகிவிட்டது.
வடக்கின் தேர்தலை நடத்தாதிருந்தால் இன்றும் மஹிந்த தான் ஜனாதிபதி, நான் பாதுகாப்பு செயலாளராக இருந்திருப்பேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மீண்டும் மஹிந்த அரசாங்கத்தை உருவாக்கி நாட்டின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
நாட்டில் நல்லாட்சி, ஜனநாயகம் பற்றி பேசி எம்மை சர்வாதிகாரியாக சித்தரித்தவர்கள் இன்று நாட்டில் என்ன செய்கின்றனர். மஹிந்த ராஜபக் ஷவை அன்று அடக்குமுறை காரனாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிரானவனாகவும் சித்தரித்து மட்டுமில்லாது இந்த நாட்டில் எம்மை கள்ளர்கள் என சித்தரித்தனர். மக்கள் மத்தியில் எம்மை தவறான தலைவர்கள் என்ற கருத்தினை கொண்டுசென்று எமது அரசாங்கத்தை வீழ்த்தினர். இந்த சூழ்ச்சியில் சர்வதேச அமைப்புகள் மட்டும் அல்லாது மாதுலுவாவே சோபித தேரர், இலங்கையின் சிவில் அமைப்புகள் அனைத்தும் எமக்கு எதிராக செயற்பட்டன. இவர்கள் கொண்டு வந்த மாற்றம் இன்று நல்ல மாற்றமாக உள்ளதா என நான் இவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
எமது ஆட்சியில் வேலைத்திறன் மற்றும் தூரநோக்கு சிந்தனை மிக்க வேலைத்திட்டம் ஒன்று இருந்தது. அதனால் தான் இந்த நாட்டில் 3௦ ஆண்டுகாலம் நிலவிய விடுதலைப்புலிகள் தீவிரவாதத்தை மூன்று ஆண்டுகளில் நாம் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. அதேபோல் நாட்டில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. ஆசியாவின் சிறந்த நகராக கொழும்பை மாற்ற முடிந்தது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறு அல்ல. இன்று நிலைமைகள் முழுமையாக தலைகீழாக மாறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் மீண்டும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தலைதூகியுள்ளது.
எமக்கும் இதனால் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் அண்மையில் இந்தியாவில் தமிழ் நாட்டில் ஆயுதங்களுடன் விடுதலைப்புலிகள் இயக்க அங்கத்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே இவை அனைத்தும் இந்த நாட்டுக்கு மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழல் ஏற்படுவதற்கான அடையாளங்களாகவே நாம் கருதுகின்றோம். எமது கட்டுப்பாட்டின் கீழ் நாடு இருக்கையில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் இலங்கையார் ஒருவர் தொடர்புபட்டிருபதத்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது உலகின் மிகவும் பயங்கரமான தீவிரவாத கும்பலான ஐ.எஸ் அமைப்புடன் இலங்கையின் முஸ்லிம் நபர் தொடர்பு பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆகவே இவை தான் இப்போது நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுருதல்கலாகும்.
இன்று நல்லாட்சி பற்றி பேசுபவர்கள் முழுமையாக தனிப்பட அரசியல் பழிவாங்கலை மட்டுமே மேற்கோள்கின்றனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் ராஜபக் ஷ குடும்பத்தில் உள்ள அனைவரையும் இவர்கள் விசாரித்தனர். எம்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களால் எம்மை குற்றவாளியாக்க முடியாமல் போயுள்ளது. இவர்கள் மேற்கொண்ட எந்தவொரு விசாரணையின் இறுதி முடிவை வெளியிட முடியாமல் போயுள்ளது. என்னெனில் எம்மை குற்றவாளியாக நிருபிக்க தகுந்த ஆதாரங்கள் இவர்களிடம் இல்லை.
எமது அரசாங்கத்தில் முன்னெடுத்த அபிவிருத்திகள் அனைத்தும் முடக்கி நாட்டின் வளங்களை கொள்ளையடித்துள்ளனர். இந்த ஆறுமாத காலத்தில் நாட்டில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்துவிடனர். ரணில் விக்கிரமசிங்க தான் இந்த அரசாங்கத்தின் மிக முக்கிய கொள்ளைக்காரன் ஆவர். அவரே நாட்டின் அனைத்து வளங்களையும் கொல்லையடிக்கின்றார்.
எம்மை சர்வாதிகார அரசியல்வாதிகள் எனவும், இராணுவ அடக்குமுறை ஆட்சியை கையாள்வதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் நாம் வடக்கில் தேர்தலை நடத்தாது, இராணுவ அடக்குமுறைக்குள் தேர்தலை நடத்தியிருந்தால் இன்றும் நாம் தான் ஆட்சியில் இருந்திருப்போம். வடக்கின் தேர்தலை நடத்தியதால் தான் மஹிந்த ராஜபக் ஷ தோற்கடிக்கப்பட்டார். இல்லையென்றால் இன்றும் அவர்தான் ஜனாதிபதி, நாம் இன்றும் பாதுகாப்பு செயலாளராகவே இருந்திருப்பேன். ஆனால் ஜனநாயகத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த விரும்பியதன் காரணத்தினால் தான் எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.
எனவே மீண்டும் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லவேண்டிய நேரம் வந்துள்ளது. மஹிந்தவின் தலைமையில் மீண்டும் இந்த நாட்டை ஆளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமாக இறந்த நபர்கள் தான் இறுதி நேரத்தில் மஹிந்தவை வீழ்த்த காரணமாக அமைந்தார்கள். அன்று அவர்களை பற்றி மஹிந்த தெரிந்து கொள்ளாது செயற்பட்டதன் விளைவுகள் இப்போது அனுபவிக்கக் கூடியதாக உள்ளது. இனிமேலாவது மஹிந்தவின் உண்மையான விசுவாசிகள் யார் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் அனைவரும் மஹிந்தவை இந்த நாட்டின் பிரதமராக்கி இந்த நாட்டில் பாதுகாப்பையும், அதேபோல் நல்லாட்சியையும் உருவாக்க துணை நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி 

கைவிரலை உடைக்க பார்த்தார், தாக்கவில்லை பிடித்து தள்ளினேன் : மஹிந்த


23/07/2015 எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷ அங்கு வந்திருந்த ஒருவரை தாக்குதல் நடத்தியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் சம்பம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ,
''ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான ஆதரவாளர் ஒருவர் என் மீது கொண்ட பாசத்தால் எனது கையை பிடித்து இழுத்தார். அவர் மதுபோதையில் இருந்திருப்பார் என நினைக்கின்றேன் இதன் போது எனது கைவிரலை உடைய பார்த்தது. எனது கைவிரலை பாதுகாப்பதற்காக நான் அவரை எனது ஒரு கையால் பிடித்து தள்ளினேன். ஆனால் நான் அவரை தாக்கியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.''   நன்றி வீரகேசரி 
கொல்­லப்­பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இன் இலங்கை பிரஜை முன்னாள் அதிபர்

23/07/2015  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இலங்­கை­ய­ரான நிலாம் முஹ்ஸின் என்­ பவர் இணைந்து போரிட்டு சிரி­யாவில் வைத்து தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டமை தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் மத்­தி­ய­ மா­க­ாணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி திஸா­நா­யக்­கவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விஷேட விசா­ர­ணை­க­ளி­லேயே பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
சிரி­யாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் நபரின் தேசிய அடை­யாள அட்டை கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறிய பொலிஸ் ஊடக பேச்­சாளர், அதன் படி இந்த நபர் கண்டி பிர­தே­சத்தில் வசித்­து­வந்­துள்­ளமை உறுதிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்பிட்டார். அத்துடன் கலே­வலை மற்றும் கொலன்­னாவ ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள இரு சர்­வ­தேச பாட­சா­லை­களில் அவர் அதி­ப­ராகக் கட­மை­யாற்­றி­யுள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர குறிப்­பிட்டார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி திஸா­நா­யக்­கவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விஷேட விசா­ர­ணை­களில் நேற்று வரை பல்­வேறு தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், குறி த்த நபர் சிரி­யாவில் கொல்­லப்­பட் ­டுள்­ள­மையும் உறுதிசெய்­யப்­பட்­டுள்­ளது.
எவ்­வா­றா­யினும் இந்த விஷேட விசா­ர­ணை­யா­னது பல்­வேறு கோண ங்­களை நோக்கி நகர்த்­தப்­பட்­டுள்­ள ­துடன் சமூக வலைத்­த­ளங்கள் மற் றும் அறி­வியல் ரீதி­யி­லான சாத­னங்­களை ஆராயும் நட­வ­டிக்­கை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
இத­னை­வி­ட கலே­வலை மற்றும் கொலன்­னாவ ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள இரு வேறு சர்­வ­தேச பாட­சா­லை­களில் இருந்து நிலாம் முஹ்ஸின் தொடர்­பி­லான தக­வல்­களை பொலிஸார் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.
குறித்த நபர் ஐ.எஸ். அமைப்­பு டன் தொடர்பு பட்ட விதம், அவர் நாட்டை விட்டு வெளி­யேறிய விதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமை ப்­புடன் தொடர்­பு­டையோர் வேறு எவ­ரேனும் உள்­ள­னரா போன்ற விட­யங்­களை உள்­ள­டக்கி இந்த விரி­வான விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.
பாகிஸ்தான் பல்­க­லைக்­க­ழகம் ஒன்றில் பட்டம் பெற்­றுள்ள குறித்த நபர் கொழும்பு பல­்க­லைக்­க­ழ­கத்­திலும் விரி­வு­ரை­ய­ாள­ராகக் கடமை புரிந்­துள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளன. பொலிஸார் அது தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக் கது.
கலே­வலை பிர­தே­சத்தில் உள்ள சர்­வ­தேச பாட­சா­லையில் குறித்த நபர் அதிபராக கடமையாற்றியமை க்கான எழுத்து மூலசான்று ஆவ ணங்கள் எதனையும் விட்டு வைக் காத நிலையிலேயே அங்கிருந்து சென்றுள்ளதாக குறிப்பிடும் பொலி ஸார் அது தொடர்பில் பாடசாலை உரிமை யாளர், தற்போதைய அதிபர் உள்ளிட்டவர்களிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.    நன்றி வீரகேசரி





No comments: