.கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'இயல் விருது' விழா: ஜெயமோகன் உள்ளிட்ட பலருக்கு விருது!
டொரண்டோ: கனடாவில் இயங்கிவரும் கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது வழங்கும் விழா டொரண்டோவில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 13 ஆம் தேதி புகழ்பெற்ற ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில், கனடா எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான டேவிட் பெஸ்மொஸ்கிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கனடாவில் இயங்கிவரும் 'கனடா தமிழ் இலக்கிய தோட்டம்', அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் சிறப்பான இலக்கியப் பணியை ஆற்றிவருகிறது. மேலும் இந்த அமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர் களின் சிறப்பான படைப்புகளை தேர்வு செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தியும் வருகிறது.
இந்த ஆண்டுக்கான இயல்விருது வழங்கும் விழா டொரண்டோவில் நடைபெற்றது. தமிழ் படைப்பாளி களுக்கான இந்த ஆண்டின் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அளிக்கப்பட்டது.

விருதினைப் பெற்றுக்கொண்டு ஏற்புரை வழங்கிய ஜெயமோகன், தான் எழுத்தாளனாக மாறிய சூழல் தன் பெற்றோரின் மரணம் தன்னை பாதித்த விதம் என பல சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசினார். 'வாழ்க்கையை ஒரு கணமேனும் வீணாக்காது வாழ்வது எப்படி?' என்ற தலைப்பின் கீழ் அவர் ஆற்றிய உரை, அரங்கில் இருந்தவர்களை கட்டிப்போட்டதென்றே சொல்லலாம்.
இயல் விருதைத் தொடர்ந்து வேறு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. புனைவு இலக்கியப் பிரிவில் 'கனவுச்சிறை' நாவலுக்காக தேவகாந்தனுக்கும், 'நஞ்சுண்டகாடு' நாவலுக்காக குணா கவியழகனுக்கும் 'கூலித்தமிழ்' நூலுக்காக முத்தையா நித்தியானந்தனுக்கும், 'ஜாதியற்றவளின் குரல்' நூலுக்காக ஜெயராணிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை 'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' நூலுக்காக கதிர் பாரதி பெற்றுக் கொண்டார்.

மொழி பெயர்ப்பு பிரிவில் 'யாருக்கும் வேண்டாத கண்' நூலுக்காக கே. வி சைலஜாவும், 'Madras Studios - Narrative Genre and Ideology in Tamil Cinema' நூலுக்காக சுவர்ணவேல் ஈஸ்வரனும் விருதுகள் பெற்றனர்.
மாணவர் கட்டுரைப் போட்டியில் வாசுகி கைலாசம் மற்றும் யுகேந்திரா ரகுநாதன் விருதுகள் பெற்றனர். சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட ’கணிமை விருது’ முத்தையா அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

nantri: vikatan.com
No comments:
Post a Comment