உலகச் செய்திகள்


சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் திருமணம்

லொறியின் பின்னால் மறைந்­தி­ருந்த 26 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள்

பெண்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட தம்பதியினர் கைது : கொலை செய்த பெண்ணின் குழந்தைக்கும் உணவு உண்ண கொடுத்த அதிர்ச்சி

10 வருட இரா­ணுவ சேவை­யி­லி­ருந்து விடை­பெற்றார் இள­வ­ரசர் ஹரி

சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் திருமணம்

15/06/2015 சுவீடன் இள­வ­ரசர் கார்ல் பிலிப் முன்னாள் தொலைக்­காட்சி நட்­சத்­தி­ரமும் மொடல் அழ­கி­யு­மான சோபியா ஹெல்க்­விஸ்­ஸுடன் ஸ்டொக்­ஹோ­மிலுள்ள அரண்­மனை தேவா­ல­யத்தில் சனிக்­கி­ழமை திரு­மண பந்­தத்தில் இணைந்தார்.




சோபியா (30 வயது) தொண்டு ஸ்தாப­ன­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு உத­வு­வ­தற்கு முன்னர் மேலா­டை­யின்றித் தோன்றும் மொடல் அழ­கி­யா­கவும் யோகா ஆசி­ரி­ய­ரா­கவும் பணி­யாற்­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­ச­மயம் கார்ல் பிலிப் (36 வயது) அந்­நாட்டின் முடிக்­கு­ரிய வாரி­சுகள் வரி­சையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.திரு­ம­ணத்­திற்கு பின்னர் மேற்­படி புது­மணத் தம்­பதியினர் குதிரை வண்­டியில் நக­ரி­னூ­டாக ஊர்­வ­ல­மாக சென்­றனர். இந்த திரு­ம­ணத்­தை­யொட்டி 21 மரி­யாதை வேட்­டுகள் தீர்க்­கப்­பட்­டன.

மேலும் இந்தத் திரு­ம­ணத்தில் ஜப்­பா­னிய இள­வ­ரசி தக­மடோ மற்றும் பிரித்­தா­னிய இள­வ­ரசர் எட்வார்ட் உள்­ள­டங்­க­லான அரச குடும்ப உறுப்­பி­னர்கள் உட்­பட சுமார் 550 விருந்­தி­னர்கள் கலந்­து­கொண்­டனர். சுவீடன் அரச குடும்­பத்தின் பிர­பலம் வீழ்ச்­சி­ய­டைந்து வரு­வ­தாக கருத்­துக்­க­ணிப்பு வாக்­கெ­டுப்­புகள் தெரி­விக்­கின்ற போதும், பெருந்­தொ­கை­யான மக்கள் ஊர்­வ­ல­மாக சென்ற அரச குடும்ப புது­மணத் தம்­ப­தியைக் காண வீதி­களில் கூடி­யி­ருந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. 
இளவரசர் கார்ல் பிலிப்பும் சோபியாவும் 2010 ஆம் ஆண்டில் உணவகமொன்றில் முதன் முதலாக சந்தித்தனர். அந்த சந்திப்பு பின்னர் காதலாக மலர்ந்தது.  நன்றி வீரகேசரி 









லொறியின் பின்னால் மறைந்­தி­ருந்த 26 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள்

18/06/2015 பிரான்­ஸி­லி­ருந்து பிரித்­தானி­யா­வுக்கு வந்த லொறி­யொன் றின் பின்­பு­றத்தில் 26 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் மறைந்­திருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து அந்த லொறியின் சாரதி பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.

மேற்­படி லொறி­ தொ­டர்பில் பொலி­ஸா­ருக்கு கிடைத்த இர­க­சிய தக­வ­லொன்­றை­ய­டுத்து அது கேம்­பி­ரிட்­ஜி­லுள்ள ஏ 1 நெடுஞ்­சா­லையில் தடுத்து நிறுத்­தப்­பட்­டது.
அந்த லொறியில் பய­ணித்த குடி­யேற்­ற­வா­சி­களில் ஐவர் நீரின்றி மயக்க நிலைக்கு உள்­ளான நிலையில் காணப்­பட்­டனர். அவர்கள் உட­ன­டி­யாக மருத்­துவ­ ம­னைக்கு கொண்டுசெல்­லப்பட் ­டனர்.
தொடர்ந்து டோவர் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த 54 வயது லொறி யின் சாரதி சட்டவிரோத ஆட் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட் டில் கைதுசெய்யப்பட்டார்.  நன்றி வீரகேசரி 









பெண்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட தம்பதியினர் கைது : கொலை செய்த பெண்ணின் குழந்தைக்கும் உணவு உண்ண கொடுத்த அதிர்ச்சி

18/06/2015 பிரேசில் நாட்டில் 3 பெண்களை கொலை செய்து அவர்களை சமைத்து சாப்பிட்ட ஒரு கணவனும் இரு மனைவி மார்களும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கொலை செய்யப்பட்ட பெண்களில், ஒரு பெண்ணின் மாமிசத்தை அப் பெண்ணின் குழந்தைக்கும் உண்பதற்கு கொடுத்துள்ளனர்.




இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, 
பிரேசில் நாட்டின் குவாரன்ஹன்ஸ் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஜோர்ஜ் பெல்ட்ரோவ் நீகுரோமாண்ட் மற்றும் 54 வயதுடைய அவருடைய மனைவி இசபெல் ஆகியோருக்கு  கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லை. 

 இந்நிலையில் ஜோர்ஜ் மற்றொரு பெண்ணை 2ஆவது மணம் முடிப்பதற்கு அவரது மனைவி இசபெல் உதவி செய்துள்ளார்.
இதனையடுத்து இளம் மனைவி (வயது 28) புரூனா மற்றும் முதல் மனைவி இசபெல் ஆகியோருடன் ஜோர்ஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.  
எனினும், புரூனா வழியாகவும் கடந்த சில வருடங்களாக ஜோர்ஜுக்கு குழந்தை இல்லை.  இந்நிலையில், வீட்டிற்கு முன் உள்ள வீதி வழியே செல்லும் இளம்பெண்களை அவர்கள் தங்களது பேச்சாற்றலால் ஈர்த்து தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து பழகியுள்ளனர்.
இதன்பின்பு ஜோர்ஜ் மற்றும் அவரது 2 மனைவிகளும் சேர்ந்து குறித்தப் பெண்களை கொலை செய்து சமைத்து உண்டுள்ளனர். பெண்களை கொலை செய்தபின் அவற்றை வெங்காயம், பச்சை காய்கறிகளை சேர்த்து சமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களது பேச்சாற்றலுக்கு ஈர்க்கப்பட்டு கொலையான அனைவரும் 17, 20 மற்றும் 21 வயது கொண்ட இளம்பெண்கள் ஆவர்.  
கொலை செய்தவர்களில் 17 வயதுடைய ஜெசிகா  என்ற இளம்பெண்ணுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.  அந்த குழந்தையை அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து பாசம் காட்டி வளர்த்து வந்துள்ளனர்.  அதனை தங்களது குழந்தையாக மாற்ற முயற்சி செய்துள்ளனர்.  அதன் ஒரு பகுதியாகவே ஜெசிகாவை அவர்கள் கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளனர்.
இதற்கு அடிப்படை காரணம் 2ஆவது மனைவி புரூனா என ஜோர்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.  அவர்கள் சமைத்த பின் ஜெசிகாவின் மாமிசத்தை அவரது குழந்தைக்கும் ஊட்டியுள்ளனர்.  
ஜோர்ஜின் முதல் மனைவி இசபெல் மாமிசத்தை சந்தேகப்படாமல் கடைகளில் விற்று வந்துள்ளார்.  3ஆவது பெண்ணை கொன்ற பின் அவரது கடன் அட்டையை பயன்படுத்தியபோது பொலிஸாரிடம் குறித்த 3 பேரும் அகப்பட்டனர்.
ஜோர்ஜ் கைது செய்யப்பட்டு 23 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.  ஜோர்ஜ், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியவர்.  இதேவேளை கராத்தேவில் கறுப்பு பட்டியும் வாங்கியுள்ளதோடு இக்கலை    தொடர்பாக மாணவர்களுக்கு வகுப்புகளையும் நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








10 வருட இரா­ணுவ சேவை­யி­லி­ருந்து விடை­பெற்றார் இள­வ­ரசர் ஹரி

21/06/2015 இள­வ­ரசர் ஹரி பிரித்­தா­னிய இரா­ணு­வத்தில் இருந்து நேற்­று­முன்­தினம் விடை­பெற்றார் என்று அரச குடும்­பத்தின் அதி­கா­ர­பூர்வ வலை­த­ளத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.



கடந்த 10 ஆண்­டு­க­ளாக பிரித்­தா­னிய இரா­ணு­வத்தில் பணி­யாற்­றி­வந்த இள­வ­ரசர் ஹரி நேற்­று­முன்­தினம் விடை­பெற்றார்.
இதை­ய­டுத்து, அவர் விலங்­கு­களை பாது­காப்­பது தொடர்­பான திட்­டங்­க­ளுக்­காக ஆபி­ரிக்கா செல்­ல­வுள்ளார். அங்கு அவர் மூன்று மாதங்கள் தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இது தொடர்­பாக பிரித்­தா­னிய அரச குடும்­பத்தின் அதி­கா­ரப்­பூர்வ டுவிட்டர் வலை­த­ள­மான கென்­சிங்க்டன் அரண்­மனை செய்தி வெளி­யிட்­டுள்­ளது. ஹரி முழு­மை­யாக தனது பணி­களை செய்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.
மேலும், அவ­ரது தந்தை சார்ள்ஸ் மற்றும் அவ­ரது அண்ணன் வில்­லி­யம்ஸை போல் அவரும் வன­வி­லங்கு பாது­காப்­புக்கு முக்­கி­யத்­துவம் தரு­வ­தா­கவும், எதிர்­வரும் 3 மாதங்கள் அவர் ஆபிரிக்காவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி 

No comments: