தமிழ் சினிமா


ரோமியோ ஜுலியட்


உடலையும் உயிரையும் எப்படி பிரிக்க முடியாதோ அதே போல் தமிழ் சினிமாவையும், காதலையும் என்றுமே பிடிக்க முடியாது. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் கூட தன் ரீஎண்ட்ரீக்காக காதல் கதையை தான் கையில் எடுத்தார்.
அந்த வகையில் அறிமுக இயக்குனர் லக்‌ஷமன் தன் வாழ்க்கையில் பார்த்த ஒரு சிறு காதலை, பெரிதாக்கி அதை வெள்ளித்திரையில் கொண்டு வந்துள்ளது தான் இந்த ரோமியோ ஜுலியட்.
காதல்களம்
படத்தின் Title Cardலேயே தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்களை ஒளிப்பரப்பி தான் படத்தை ஆரம்பிக்கின்றனர். ஹீரோக்களுக்கு Gym Trainer ராக சவுக்கார்பேட்டை பையன் தான் ஜெயம் ரவி. எப்போது எதிலும் Positive Energy உள்ளவர்.
அதே நேரத்தில் விமானப்பணி பெண்ணாக எங்கும் எப்போது தன் எதிர்கால வாழ்க்கை மிகவும் Rich ஆக இருக்க வேண்டும் என்று நினைத்து வாழ்பவர் ஹன்சிகா. மிகவும் Negative குணம் உடையவர். இந்த Positive, Negative சேர்ந்தால் கரண்ட் எப்படி வருமோ அதே போல் காதல் வருகிறது.
என்ன, ரவியை பெரிய பணக்காரர் என்று நினைத்து ஹன்சிகாவிற்கு அவர் மேல் காதல் வர, பின் ஒரு கட்டத்தில் அவருக்கு உண்மை தெரிந்து, நான் உன்னை பணத்திற்காக தான் காதலித்தேன் என, அசிங்கப்படுத்தி செல்கிறார்.
பிறகு ஜெயம் ரவிக்கு, பூனம் பாஜ்வாவுடன் நட்பு ஏற்பட, அவருக்கு ரவி மேல் காதல் மலர்கிறது, ஹன்சிகா எதிர்ப்பார்த்தபடியே பணக்கார குடும்பத்தில் நிச்சயம் நடக்க, கிளைமேக்ஸில் நம்ம ரோமியோவும் ஜுலியட்டும் இணைந்தார்களா? என்பது தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ரோமியோ ரவி, ஜுலியட் ஹன்சிகா இவர்களை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தில் இப்படி ஒன்றியிருக்க மாட்டார்கள், இன்றைய இளைஞர்களின் Favorite Choice. படத்தின் முதல் பாதியில் ஹன்சிகாவின் டார்ச்சரில், அப்பாவி முகத்துடன் நெகிழ வைக்கிறார் ரவி.
அதேபோல் பின் பாதியில் ஹன்சிகாவை அவர் டார்ச்சர் செய்யும் இடத்தில் திரையரங்கில் கைத்தட்டல், விசில் என அத்தனை ஆண்களின் சோகமும் வெளிவருகிறது. ஆனால், பெண்களை மட்டும் குறைசொல்லி கைத்தட்டல் வாங்குவது தான் கொஞ்சம் கஷ்டமாகயிருக்கிறது.
VTV கணேஷ் Salt, கதகலப்பு என பல மொழிகளை இன்றைய இளைஞர்களுக்கு கற்று கொடுக்கிறார். ஆர்யா கௌரவ வேடத்தில் வந்தாலும் தன் கலகலப்பான பேச்சால் கவர, பூனம் பஜ்வா மட்டும் வழக்கம் போல் மிக்சர் சாப்பிட்டு செல்கிறார்.
டி.இமான் இத்தனை Western Styleலில் இசையமைப்பது இது தான் முதல் முறை, பாடல், பின்னணி இசை என சூப்பர் சார். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவும் Colorfull லாக இருக்கின்றது.
க்ளாப்ஸ்
ஹன்சிகா படம் முழுவதும் தன் சின்ன சின்ன Expressionனில் அசத்தியுள்ளார். பல ரோமியோக்களை உருவாக்கிவிடுவார் போல, காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து ஓவர்களிலும் சிக்சர் தான். ரவி யதார்த்தமான நடிப்பு. இன்றைய இளைஞர்களை மட்டும் கவரும் ஒரு சில வசனங்கள்.
பல்ப்ஸ்
பல படங்களில் பார்த்த சில காட்சிகள் வருவது திரையரங்கிலேயே Comment எழுகின்றது. இன்னும் எத்தனை படத்தில் தான் காதல் என்றால் பெண்கள் மீதே குற்றம் இருப்பது போல் காட்டுவார்களோ...
மொத்தத்தில் இந்த Modern ரோமியோ ஜுலியட் இன்றைய தலைமுறையினை கவர்ந்து இழுத்துவிடுவார்கள்.

Rating - 3/5     நன்றி cineulagam
No comments: