உலகச் செய்திகள்


சிரிய அலெப்போ மாகா­ணத்தில் படை­யினர் நடத்­திய வான் தாக்­கு­தலில்72 பேர் உயி­ரி­ழப்பு;70 பேர் காயம்

458 பேருடன் நதியில் மூழ்கிய உல்லாச கப்பல்

 ஈராக்­கில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தாக்­கு­தல் 45 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலி





சிரிய அலெப்போ மாகா­ணத்தில் படை­யினர் நடத்­திய வான் தாக்­கு­தலில்72 பேர் உயி­ரி­ழப்பு;70 பேர் காயம்

01/06/2015 சிரிய அலெப்போ மாகா­ணத்தில் அர­சாங்க உலங்­கு­வா­னூர்­தி­களைப் பயன்­ப­டுத்தி அந்­நாட்டுப் படை­யினர் சனிக்­கி­ழமை நடத்­திய பீப்பா குண்டுத் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 72 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.


ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள அல் – பாப் நகரில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் மட்டும் 60 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 70 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
அதே­ச­மயம் கிளர்ச்­சி­யா­ளர்­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள அலெப்போ நகரில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 12 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

சிரிய அர­சாங்­க­மா­னது பீப்பா குண்­டு­களை பயன்­ப­டுத்தி நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் தாக்­கு­தல்­க­ளுக்கு தொடர்ந்து மறுப்புத் தெரி­வித்து வரு­கி­றது.
இந்­நி­லையில் மேற்­படி தாக்­கு­தல்­களில் இடிந்து விழுந்த கட்­டட இடி­பா­டு­களின் கீழி­ருந்து சிறு­மி­யொ­ருவர் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்ளார்.
இது அந்­நாட்டு ஜனா­தி­பதி பஷார் அல் – அஸாத்தின் படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான தாக்­கு­தல்­களில் ஒன்­றாக விளங்­கு­கி­றது.

இதன் போது சன­சந்­தடி மிக்க சந்­தை­யொன்று உட்­பட பல பிர­தே­சங்கள் குண் டுத் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளன.இந்தத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களில் கிளர்ச்­சி­யா­ளர்­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள ஷார் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற பீப்பா குண்டுத் தாக்­கு­தலில் பலி­யான நான்கு சிறு­வர்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்­பட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 12 பேர் உள்­ள­டங்­கு­கின்­றனர்.
இந்த பீப்பா குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு ஐக்­கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிரிய விமானப் படை யினர் இவ்வாறு தமது பிரஜைகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளமை முழு மையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன் றென அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 








458 பேருடன் நதியில் மூழ்கிய உல்லாச கப்பல்

02/06/2015 சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று இரவு 9.30 மணியளவில் யாண்ட்சே நதியில் மூழ்கியதையடுத்து, நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி ஹ_பி பகுதியில் உள்ள யாண்ட்சே நதியில் மூழ்கியது.

இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்த 20 பேரை உயிருடன் மீட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லையென சின்குவா என்ற சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
கப்பலின் மாலுமி மற்றும் பொறியியலாளர்கள் என 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 
விபத்துக்குள் சிக்கிய கப்பலில் 405 சீன பயணிகள், 47 கப்பல் பணியாளர்கள், டிராவல் நிறுவனத்தின் தொழிலாளர்கள் 5 பேரும் இருந்தனர் என்று சீ அரசு தெரிவித்துள்ளது.
கப்பல் விபத்துக்குள் சிக்கிய பகுதியில் தொடர்ந்து கன மழை மற்றும் கடும் காற்று வீசுவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 








ஈராக்­கில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தாக்­கு­தல் 45 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலி

03/06/2015 ஈராக்­கிய அன்பர் மாகா­ணத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் புதி­தாக நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 45 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலி­யா­கி­யுள்­ளனர்.
பலுஜா மற்றும் சமாரா நகர்­களை இணைக்கும் வீதியில் அமைந்­துள்ள தர்தார் பிர­தே­சத்­தி­லுள்ள பொலிஸ் தலைமை யகத்தில் வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட 3 வாக­னங்­களை செலுத்தி வந்து தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளனர்.
இந்தத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களில் உயர்­மட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் பலர் உள்­ள­டங்­கு­வ­தாக பொலிஸ் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.
கடந்த சில வாரங்­க­ளாக அன்பர் மாகா­ணத்தில் அர­சாங்கப் படை­யி­ன­ருக்கும் தீவி­ர­வா­தி­க­ளுக்­கு­மி­டையே மோதல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.
இந்தத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களால் மேற்­படி 21 ஆவது படை­யணிப் பிரி­வொன்றின் தலைமைய கத்திலிருந்த ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் பாரிய வெடிப்பு இடம்­பெற்­றுள்­ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த உயர் மட்ட அதிகாரி களில் பிரிகேடியர் ஜெனரல் மூஸா ஹைதர் உள்ளடங்குகிறார்.   நன்றி வீரகேசரி

No comments: