இலங்கைச் செய்திகள்


ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு

பொர­ளை பள்­ளி­வாசல் மீது தாக்­குதல்;கண்ணா­டிகள் சேதம் : பொ­லிஸார் தீவிர விசா­ர­ணை

சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற நபர் : பிரதேச மக்களால் நையப்புடைப்பு

கொழும்பு - யாழ் பஸ் விபத்தில் நான்கு பேர் பலி : 35 பேர் காயம்

நீதி­மன்ற தாக்­குதல் சம்­பவம் 44 பேர் இன்று நீதி­மன்றில் ஆஜர்

20 ஆவது சட்டமூலம் தொடர்பில் சிறுபான்மை இன சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆராய்வு





ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு


01/06/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக

தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி   




பொர­ளை பள்­ளி­வாசல் மீது தாக்­குதல்;கண்ணா­டிகள் சேதம் : பொ­லிஸார் தீவிர விசா­ர­ணை

01/06/2015 கொழும்பு பொரளையில் அமைந்­துள்ள ஆப்தீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை இரவு 10.45 மணி­ய­ளவில் இனந்­தெ­ரி­யா­தோரின் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.
தாக்­கு­தல்­க­ளினால் பள்­ளி­வாசல் ஜன்னல் கண்­ணா­டி­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ள­துடன் பள்­ளி­வா­ச­லினுள் உறங்­கிக்­கொண்­டி­ருந்­த­வர்கள் காயங்கள் எது­வு­மின்றி தப்­பி­யுள்­ளனர்.

சம்­பவம் தொடர்­பில் பொரளை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து உட­ன­டி­யாக ஸ்தலத்­திற்கு விரைந்த பொலிஸார் அங்கு ஆரம்ப விசா­ர­ணை­களை நடத்­தி­ய­துடன் தடயப் பொருளான கற்க­ளை சேக­ரித்­துக்­கொண்­டனர்.
தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு 24 மணி நேர பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. சம்­ப­வத்­தைக்­கேள்­வி­யுற்ற கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத்­ப­தி­யுதீன், மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அசாத்­சாலி, மேல் மாகாண சபை உறுப்­பி­னர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி ஆகி­யோர் சனிக்­கி­ழமை இரவே ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து சேத விப­ரங்­களைப் பார்­வை­யிட்­டனர்.
நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எ.எச்.எம். அஸ்வர், முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா ஆகியோர் பள்­ளி­வா­ச­லுக்கு சென்று சம்­ப­வத்தை கேட்­ட­றிந்­த­துடன் ளூஹர் தொழு­கை­யிலும் கலந்து கொண்­டனர்.
சம்­பவம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லைவர் எம்.ஆர்.எம். அவ்­தார்ட்டிடம் கேட்­ட­போது,
பள்­ளி­வா­ச­லுக்­க­ருகில் முச்­சக்­க­ர­வண்டி நிறுத்­து­மி­டத்­தி­லி­ருந்த முச்­சக்­கர வண்டி சார­தி­யொ­ருவர் தனது பேர்ஸ் காணாமற் போய்­விட்­ட­தாக சனிக்­கி­ழமை மாலை 5 மணிக்கு பொலிஸில் புகார் செய்­துள்ளார். இத­னை­ய­டுத்து முறைப்­பாட்­டுக்­கா­ரர்­க­ளுடன் பொலிஸார் வந்து சிசி­ரிவி கம­ராவை பார்ப்­ப­தற்கு அனு­மதி கோரி­யுள்­ளனர்.
ஒரு வார கால­மாக சிசி­ரிவி கமரா செய­லி­ழந்து இருப்­ப­தாக பள்­ளி­வாசல் முகா­மை­யா­ளர் பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கவே பொலிஸார் அங்­கி­ருந்து சென்று விட்­டனர்.
இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து அன்று இரவு 10.45 மணி­ய­ளவில் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை யார் மேற்­கொண்­டார்கள் என்று தெரி­ய­வில்லை. பொலி­ஸார்தான் கண்டு பிடிக்க வேண்டும். 70 வருட வர­லாற்­றினைக் கொண்ட இப்­பள்­ளி­வா­ச­லுக்கு இது­வரை இப்­ப­டி­யான ஒரு சம்­பவம் நடக்­க­வில்லை. பள்­ளி­வாசல் ஜமா அத்தை சேர்ந்­த­வர்கள் அனை­வரும் ஏனைய சமூ­கத்­துடன் நல்­லு­ற­வு­ட­னேயே வாழ்­கின்­றார்கள் என்றார்.

கல் என்­ன­ருகில் வீழ்ந்­தது பயந்து எழும்­பினேன் பள்­ளி­வா­ச­லுக்குள் நித்­தி­ரை­யி­லி­ருந்த புத்­த­ளத்தைச் சேர்ந்த வாஹித் ஜென்சாத் என்­பவர் கருத்து தெரி­விக்­கையில்இ
நான் கடந்த 22 நாட்­க­ளாக பள்­ளி­வா­சலில் தங்­கி­யி­ருக்­கின்றேன். என்­னுடன் மேலும் இருவர் தங்­கி­யி­ருக்­கின்­றார்கள். எனது 6 மாத குழந்தை பொரள்ளை லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றது.

இரவு நாங்கள் நித்­தி­ரையில் இருந்தோம். இரவு கல் எனது பக்­கத்தில் வந்து வீழ்ந்­தது. பயத்­தினால் நான் சத்­த­மிட்டேன். மேல் மாடி­யி­லி­ருந்த ஹஸரத்இ மோதீன் என்போர் ஓடி வந்து முன் கதவை திறந்­தார்கள். எனக்கு காயம் ஏற்படவில்லை என்றார்.
நானும் பள்ளிவாசலில் மேல் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தேன். கீழ் மாடியில் நித்திரையிலிருந்தவர்களின் சப்தம் கேட்டு ஓடி வந்தோம். வந்து பார்க்கையில் சிறிய காரொன்று அங்கிருந்து வேகமாக சென்றது. பள்ளிவாசலைத் தாக்கியவர்கள் அவர்கள்தான் என்று நினைக்கின்றேன் என்றார்.   நன்றி வீரகேசரி   







சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற நபர் : பிரதேச மக்களால் நையப்புடைப்பு


01/06/2015 எட்டு வயது சிறுமி ஒருவரை காட்டுப் பகுதிக்குள் பலவந்தமாக கடத்திச் சென்ற நபர் ஒருவரை கையும் மெய்யுமாக பிடித்த பிரதேச மக்கள், குறித்த நபரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று பகல் புத்தளம் தில்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தினால் குறித்த பகுதியில் சில மணிநேரம் பதற்ற நிலை நிலவியது.
புத்தளம், தில்லையடி பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் ஒருவர் குறித்த சிறுமியை பலவந்தமாக காட்டுக்குள் தூக்கிச் செல்வதை சிலர் அவதானித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களுக்கு அறிய வந்ததையடுத்து, குறித்த காட்டுப்பகுதிக்குள்  சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி மீட்கப்பட்ட போதும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
பின்னர் நீண்ட மணிநேர தேடுதலுக்கு பின்னர் சந்தேக நபரை பிடித்த பிரதேச மக்கள் குறித்த நபர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவமானது தில்லையடி பகுதியில்  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  நன்றி வீரகேசரி   








கொழும்பு - யாழ் பஸ் விபத்தில் நான்கு பேர் பலி : 35 பேர் காயம்

02/06/2015 முல்லைத்தீவு  மாங்குளம் - கிழவன்குளம் பகுதியில்  இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் தூக்க மயக்கமே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி வீரகேசரி   




நீதி­மன்ற தாக்­குதல் சம்­பவம் 44 பேர் இன்று நீதி­மன்றில் ஆஜர்

03/06/2015 யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொ­லையைக் கண்­டித்து இடம் பெற்ற ஆர்ப்­பாட்­டத்தின் போது நீதி­மன்ற கட்­டடம் மீது தாக்­குதல் நடத்­தி­னார்கள் என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 44 பேர் இன்று யாழ். நீதி­மன்­றத்தில் ஆஜர்­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை பொலிஸ் காவ­லரண் மீதான தாக்­குதல், யாழ். சிறைச்­சாலை வாக னம் மீதான தாக்­குதல், மற்றும் பொலி ஸ் உத்­தி­யோ­கத்தர் மீதான தாக்­குதல் குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 47 பேர் நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இவர்­களில் முத­லா­வது சந்­தே­க­ந­ப­ரான யாழ். பல்­க­லைக்­க­ழக கல்­லூரி மாணவன் உட்­பட 9 பேரின் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.ஸ்ரீகாந்தா சட்­டத்­த­ரணி எஸ். தேவ­ரா­ஜாவின் அனு­ச­ரணை­யுடன் ஆஜ­ரானார். இத­னை­விட ஏனைய சந்­தேக நபர்­களின் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.ஏ. சுமந்­திரன், திரு­மதி ஜோய் மகா­தேவன், வி.ரி. சிவ­லிங்கம், வி. விஜ­ய­ரட்ணம், எம்.பி. எம். மாஹீர், ஆகி­யோரும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.
இதே­வேளை நாளை வியா­ழக்­கி­ழ­மை யும் நீதி­மன்றத் தாக்­குதல் குற்றச் சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ள்ள 33 பேர் நீதிமன்றில் ஆஜர்செய்யப் படவுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும்.  நன்றி வீரகேசரி 










20 ஆவது சட்டமூலம் தொடர்பில் சிறுபான்மை இன சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆராய்வு

03/06/2015 20ஆவது திருத்தச் சட்­ட­மூலம் தொடர்­பாக சிறு­பான்மை இன, சிறு அர­சியல் கட்­சி­களின் நேற்­றைய சந்­திப்­பிலும் இறு­தி­மு­டிவு எட்­டப்­ப­ட­வில்லை.
இவ்­வா­றி­ருக்­கையில் பல்­வேறு சர்ச்­சை­க­ளுடன் இழு­ப­றியில் இருக்கும் இத்­தி­ருத்­தச்­சட்டம் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரைவில் இறுதி முடிவை வெளியி­டுவார் என உள்­ளக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
தேர்தல் முறையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சியல் அமைப்பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள உத்­தேச 20 ஆவது திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான நேற்­றைய தினம் சிறு­பான்மை, சிறு அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­ய­க­மான தாரு­ச­லாமில் நடை­பெற்­றது.
முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தலை­மையில் இடம் பெற்ற இச்­சந்­திப்பில் அமைச்சர் பழனி திகாம்­பரம், கல்­முனை மாந­கர மேயரும் மு.கா.வின் பிரதி தவி­சா­ள­ரு­மான நிஸாம் காரி­யப்பர், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் வை.எல்.எஸ்.ஹமிட், ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் கும­ர­கு­ரு­பரன் மற்றும் முர­ளி­ர­கு­நாதன் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.
20ஆவது திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக அமைச்சர் ஹக்கீம் மற்றும் ஹெல உறு­ம­யவின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­க­விற்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பாடு, அதன் பின்னர் ஹெல உறு­ம­யவின் பிர­தி­நி­திகள் வெளியிடும் கருத்­துக்கள், 20ஆவது திருத்­தச்­சட்­ட­மூலம் தொடர்­பாக இறு­தி­யான முடிவு ஆகி­யவை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்கே இச்­சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.
எவ்­வா­றா­யினும் குறித்த கூட்­ட­த்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, ஜாதிக ஹெல உறு­மய, ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, நவ­ச­ம­ச­மா­ஜக்­கட்சி உட்­பட மேலும் சில கட்­சி­கள் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை. இதன் கார­ணத்தால் சட்­ட­மூலம் தொடர்பாக இச்­சந்­திப்பின் போது இறு­தி­மு­டி­வெ­துவும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
இச்­சந்­திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறு­கையில் இரட்டை வாக்குச் சீட்டை உள்­வாங்­க­வேண்டும் என்ற கோரிக்கை மறுக்­கப்­படும் பட்­சத்தில் அது பாரிய விளைவை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஏற்­ப­டுத்­தி­விடும். அவ்­வா­றான ஒரு சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­ப­டு­மாயின் அது எமது அதி­ருப்­திக்­கு­ரி­ய­தா­கவே இருக்கும் என்றார்.
இந்­நி­லையில் எதிர்­வரும் தினங்­களில் மீண்டும் சிறு­பான்மை சிறு அர­சியல் கட்­சிகள் கலந்­து­ரை­யா­ட­வி­ருப்­ப­தாக தெரி­ய­ வ­ரு­கின்­றது.
முன்­ன­தாக இறு­தி­யாக நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது 20ஆவது திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோ­ரி­டையே இரட்டை வாக்­குச்­சீட்டை நடை­மு­றைப்­ப­டுத்­துவது தொடர்பில் கடு­மை­யான வாய்த்­தர்க்கம் இடம்­பெற்­றி­ருந்­தது.
அதனைத் தொடர்ந்து மு.கா தலைமை, பிரதி செய­லாளர் ஆகி­யோரை மைய­மாக வைத்து ஜாதிக ஹெல உறு­மய கடுந்­தொ­னியில் கருத்­துக்­களை முன்­வைத்­த­துடன் இரட்டை வாக்­குச்­சீட்டை ஏற்­க­மு­டி­யாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
மறுபுறத்தில் 20ஆவது திருத் தச்சட்டமூலம் தொடர்பாக ஜனா­தி­பதி தனது இறுதி முடிவை எடுப்பதற்காக கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார். இந்நிலையில் வெகு விரைவில் குறித்த சட்ட மூலம் தொடர்பாக இறுதி முடிவை ஜனாதிபதி அறிவிப்பார் என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி 





No comments: