கவிதை




கடல் குடிக்கும் போட்டி
- எச். . அஸீஸ்
குந்தியிருந்து எல்லோரும்
குடிக்கிறார்கள் கடலை
இது கடல் குடிக்கும் போட்டி
மீன்களெல்லாம் மேலெழுந்து
மூக்குகளால் பயணம் செய்ய
சுறாவும் திமிங்கிலமும்
சுருண்டு படுத்திருக்க
கரையில் எல்லோரும்
குந்தியிருந்து குடிக்கிறார்கள்
கடல் குடித்து முடிந்து
பெரும் குழிதான் தோன்றியது
எலும்புகளும் எச்சங்களும்
மிச்சங்களா
சூரியக்கதிர் பட்டு தெறித்தன
மலை உயர
கூட்டம் கூட்டமாய் பெரு மீன்கள்
கரை வந்து கையுயர்த்தி சரணடைய
ஒரு போர் முடிந்த காட்சிபோல்
தெரிகிறது எங்கும்
குந்தியிருந்து
குடித்து முடித்தனரோ
பெரும் கடலை
ஒருகணம் தான்
எங்கே 


இப்பொழுது
எல்லோரும்
மலைகளும் காடுகளும்
மலசல கூடங்களா
வாந்தி எடுப்பதும்
வயிற்றால் போவதும்
எல்லா மனிதருக்கும்
ஏன் இந்த பெரு வருத்தம்
நிலங்களெல்லாம் இப்போது
நாறும் கடலாக மாறி
நீந்தித் தவிக்கிறதோ மானுடம் தான்
நிலமும் கடலும் நிலை மாறிப்
போன கதி
இந்த பெரும் குடி மனிதரால்
                                  - எச். . அஸீஸ்

No comments: