மாசு
தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே சிறு பட்ஜெட் படங்களாக தான் இருக்கும். ஆனால், இதையே நாம் புதிதாக செய்தால் என்ன? என்று வெங்கட் பிரபுவின் 7ம் அறிவில் ஒரு மணி அடிக்க, மாஸ் ஹீரோவான சூர்யாவை வைத்து மாஸ்..இல்ல மாஸி...அதுவும் இல்ல மாசு என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சூர்யா பேயாக ட்ரைலரில் கலக்க, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக இந்த படத்தை முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்த மாசு.
கதைக்களம்
பணமா அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என மங்காத்தா அஜித் ஸ்டைலில் எண்ட்ரி கொடுத்து, சிறுசிறு திருட்டை வெங்கட் பிரபுவின் டெம்லேட் ப்ரேம்ஜியுடன் சேர்ந்து செய்து வருகிறார். அப்படி ஒரு சம்பவத்தில் அடிதடி ஆகி தப்பிக்கும் போது ஒரு கார் விபத்தில் சூர்யாவிற்கு ஒரு சூப்பர் பவர் கிடைக்கின்றது.
இதன் மூலம் அவர் கண்களுக்கு ஆவிகள் எல்லாம் தெரிய, முதலில் பயந்து ஓட, பின் எதிர்த்து நின்று உங்கள் தேவைகள் என்ன என்று கேட்கின்றார். உங்களுக்கு நான் உதவ வேண்டும் என்றால், நான் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும் என்று ஆவிகளுடன் டீல் பேசி பணம் சம்பாதிக்கிறார்.
இப்படி ஒரு வீட்டிற்கு போகும் போது அங்கு ஒரு சூர்யா ஆவியாக வருகிறார், அந்த சூர்யா கதாபாத்திரம் தான் ஈழத்தமிழன். அந்த சூர்யாவும், இவரிடம் உதவி கேட்க, மாஸ் சூர்யா பல பிரச்சனைகளில் மாட்டி கொள்கிறார். ஆவி சூர்யா ஏன் இப்படி செய்கிறார், இவருக்கும் மாஸ் சூர்யாவிற்கும் என்ன சம்மந்தம்? அந்த ஆவிகளின் ஆசைகளை சூர்யா நிறைவேற்றினாரா? என்பது தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
எப்போதும் ஸ்மார்ட் லுக்கில் பார்த்து வந்த சூர்யா அயன் படத்திற்கு பிறகு சென்னை இளைஞனாக துறுதுறு என சேட்டை செய்கிறார். படத்தில் கதை இல்லையென்றாலும் என் தம்பி இருப்பான், என கூறும் வெங்கட் பிரபு இதிலும் சூர்யாவின் நண்பராக ப்ரேம்ஜியை Book செய்து விட்டார். அவரும் ஒரு சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
குழந்தைகளுக்கான சில Graphics கலாட்டாக்களும் உள்ளது. ஈழத்தமிழனாக வரும் சூர்யா கதாபாத்திரம் மிக அழகாக உள்ளது. சூர்யா அப்படியே அந்த அழகு தமிழை பேசி நடித்துள்ளார். கருணாஸ், ஸ்ரீமன் என ஆவிகளாக வரும் அனைவரும் செம்ம கலாட்டா செய்துள்ளனர். படத்தின் இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்துவதே பார்த்திபன் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் தான், அவருக்கே உண்டான ஸ்டைலுடன் தன் ஏரியாவில் கலக்கியுள்ளார்.
RD.ராஜசேகர் ஒளிப்பதிவில் எது வெளிநாடு, எது சென்னை என்று தெரியாத அளவிற்கு Colorfull ஆக உள்ளது. யுவன் பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும், பின்னணி இசையில் கலக்கிவிட்டார். விஜய், அஜித் ரசிகர்களும் படத்தில் விசில் அடிக்க பல இடங்கள் உண்டு. அதிலும் ஜெய் வேற சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கிறார். அட படத்துல நயன்தாரா இருக்காங்க...அப்படின்னு ஒருவர் சொன்னால் தான் நமக்கு தெரியும். சூர்யாவை வழக்கம் போல் காதலிக்கும் கதாபாத்திரம். ப்ரணிதா கெஸ்ட் ரோல் தான் போல.
க்ளாப்ஸ்
மாஸ், ஷக்தி என இரண்டு கதாபாத்திரத்திலும் செம்ம வித்தியாசம் காட்டியுள்ளார் சூர்யா. இத்தனை அழகாக தமிழை பேசியதற்கே சூர்யாவிற்கு ஒரு சல்யூட். இரண்டாம் பாதியில் வரும் சுவாராசியமான டுவிஸ்டுகள் ரசிக்கும் படி உள்ளது.
நீண்ட இடைவேளைக்கும் பிறகு யுவனின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறார், அதிலும் குறிப்பாக ஆவி சூர்யாவிற்கு வரும் தீம் மியூஸிக் சூப்பர் சார்.
பல்ப்ஸ்
இது வெங்கட் பிரபு படமா, ஏன் இத்தனை Sentiment என்று திரையரங்கிலேயே சில இடங்களில் கமெண்ட் விழுந்தது, பிறவி பாடலை தவிர வேறு எந்த பாடல்களும் ரசிக்கும் படி இல்லை.
மொத்தத்தில் ’மாசு’வில் சூர்யாவுடன், வெங்கட் பிரபு இணைந்து 6 அடிக்க முயற்சி செய்து 4 அடித்துள்ளார்.
No comments:
Post a Comment