தமிழ் சினிமா - இந்தியா-பாகிஸ்தான்

.நான், சலீம் என த்ரில்லர் மற்றும் சீரியஸ் கதையில் கலக்கி கொண்டிருந்த விஜய் ஆண்டனி முதன் முதலாக நகைச்சுவை களத்தில் குதித்துள்ளார். பெயரிலேயே விஜய்யை வைத்து கொண்டு ஜனரஞ்சகமான ஹீரோவாக மாறாமல் இருந்தால் எப்படி என்று யாரோ அவரின் காதில் ஒரு யோசனையை கூறியுள்ளனர்.
உடனே நானும் முழு நீள ஹீரோவாகிறேன் என தன் இசை பொறுப்பையும் மற்றவரிடம் கொடுத்து, ஜெகன், பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் என பெரிய சில நடிகர்களையும் தன்னுடன் இணைத்து கொண்டு 20/20 மேட்ச் ஆடியிருக்கும் படம் தான் இந்தியா-பாகிஸ்தான்.
கதைக்கு வருவோம்
விஜய் ஆண்டனி ஒரு வக்கீல், படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு DVD கடையில் ஹீரோயினை பார்க்க, பிறகு என்ன? 100 வருட தமிழ் சினிமாவின் லாஜிக் தான். பார்த்தவுடன் காதல், பின் சோலோ டூயட். தன் ஆபிஸை வைக்க ஒரு நல்ல வீடு தேட, ஜெகன் வீடு ப்ரோக்கராக வந்து ஒரு வீட்டை விஜய் ஆண்டனிக்கு பிடித்து கொடுக்கிறார்.
இதே வீட்டை ஹீரோயின் சுஷ்மா ராஜும் பார்க்க வர, இரண்டு பேரும் வேறு வேறு தொழில் என்றால் சேர்ந்து இருக்கிறோம் என்று சம்மதம் தெரிவிக்கின்றனர். ஆனால், இரண்டு பேருமே வக்கீல் என்பதை மறைக்கிறார்கள் ப்ரோக்கர்கள். இதை அறிந்து சந்தானத்திற்கு, விஜய் ஆண்டனி போன் செய்ய..ஓ சாரி வணக்கம் சென்னை படம் மாதிரியே இருந்ததால் அங்கு போயிடுச்சு கதை.
வழக்கம் போல் அவர் போனை ஆப் செய்ய, இவர்களாகவே யாருக்கு முதல் வழக்கு வருகிறதோ, அவர்கள் தான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். அப்போது தான் ஜெகன் மூலமாக, பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் நில வழக்கு ஒன்று விஜய் ஆண்டனி, சுஷ்மா கைக்கு வர பின் இந்த வழக்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு தான் வீடு என்று போட்டி மாறுகின்றது. இதற்கிடையில் இவர்களின் ஈகோ வழக்கம் போல் காதலாக மாறி, பின் மோதலில் இடைவேளை வருகிறது.
படத்தின் முதல் காட்சியிலேயே விஜய் ஆண்டனியும், சுஷ்மாவும் காதலுக்கு மரியாதை சிடி ஒன்றை வாங்குகிறார்கள். ஆனால், பிரச்சனையே இங்கு தான், இன்ஸ்பெக்டர் ஒருவர் போலி என்கவுண்டர் செய்ததை DVD போட்டு, இந்த காதலுக்கு மரியாதை DVDயி
ல் மறைத்து வைப்பார் ஒரு பத்திரிக்கையாளர். இதை அறிந்த போலிஸ் ஆபிஸர் சுஷ்மாவை பின்தொடர, பசுபதி மகனையும், எம்.எஸ்.பாஸ்கர் மகளையும் கடத்தி, அந்த DVDயை தரச்சொல்லி மிரட்டுகிறார். இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு வக்கீலான நம்ம ஹீரோ எப்படி முடிவு கட்டுகிறார் என்பதே மீதிக்கதை.
நடிகர், நடிகை மற்றும் டெக்னிஷியன் பங்களிப்பு
படத்தின் இயக்குனர் ஆனந்த் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட வேண்டும் என்று முடிவோடு தான் இறங்கியிருக்கிறார் போல, படம் ஆரம்பித்தது முதல் கிளைமேக்ஸ் வரை சிரிப்பு சரவெடி தான். குறிப்பாக பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் கோஷ்டி செய்யும் கலாட்டக்களில் திரையரங்கமே அதிர்கிறது.
‘எங்கய்யா உண்மையா 10 பேரை ஓடவிட்டு வெட்டுவாருய்யா’ என்று பசுபதியின் கெத்தை காட்ட அவர்கள் கூட்டாளிகள் கெஞ்சும் இடத்திலும் சரி, விஜய் ஆண்டனிக்கு தன் கெத்தை புரிய வைக்க 10 பேரை பசுபதி வெட்டுவது வரை கலாட்டா தான். ‘நீ எனக்கு பீரே குடுக்க மாட்டா, அப்பறம் எப்படிடா உயிரா கொடுப்ப’ என்று ஜெகனும் அவ்வபோது கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
கிளைமேக்ஸில் DVD Copy எங்கே என்று கேட்கும் இடத்தில் காளி வெங்கட் செய்யும் கலாட்டாவில் சிரிப்பு சரவெடிக்கு நாங்கள் கேரண்டி. இசையமைப்பாளரே ஹீரோ என்பதால் நன்றாகவே தீனா தேவராஜன் அவர்களை வேலை வாங்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி சார் இன்னும் கொஞ்சம் நல்ல எக்ஸ்பிரஷன் கொடுங்க ஜி.
க்ளாப்ஸ்
பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா, காளி வெங்கட் அனைவரும் காமெடியில் பிண்ணி பெடலெடுத்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் ஒன் லைன் வசனம் கூட ரசிக்க வைக்கின்றது. ஹீரோயின் சுஷ்மா, கொஞ்சம் அனுஷ்கா சாயல் உள்ளது, அவருடைய நடிப்பு நன்றாகவே உள்ளது.
படத்தின் இரண்டாம் பாதியில் சென்னையை சுற்றி பார்க்க வரும் பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் குழுவினர் ஒரு மாலில் செய்யும் அட்டகாசம், தொடர்ந்து 15 நிமிடம் இடைவிடாமல் சிரித்து கொண்டே இருக்கலாம்.
பல்ப்ஸ்
காமெடி காட்சியில் விஜய் ஆண்டனியின் முகபாவனைகள். சார் நான், சலீம் படத்திலிருந்து கொஞ்ச வெளியில வாங்க. அதே போல் வசன உச்சரிப்பில் ‘தமிழ் படம்’ சிவா சாயல் தெரிகிறது, அதையும் குறைக்கலாம்.
தேவையில்லாத இடத்தில் வரும் ஒரு சில பாடல்.
மொத்தத்தில் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றாலே நகத்தை கடித்து கொண்டு தான் பார்ப்போம், ஆனால், இந்த மேட்சை ஜாலியாக 2.30 மணி நேரம் சிரித்து கொண்டே பார்க்கலாம்.
ரேட்டிங்-3/5
நன்றி cineulagam


No comments: