
.
விழுதல் என்பது எழுகையே
பகுதி 46
எழுதியவர் மாலினி மாலா
பகுதி 46
எழுதியவர் மாலினி மாலா
தெடர்கிறது
அவளோடு பேசிக் கொண்டிருந்தாலும் மனம் அவளோடான எதிர்காலக் கனவுகளில் திளைக்க மறுத்தது. அந்த வித்தியாசம் ஒரு நெருக்கமற்ற உணர்வாய் அவளை உறுத்த அடிக்கடி வாக்குவாதப் பட்டுக் கொண்டாள். அப்போதும் அவனால் தன்னை மாற்றிக் கொள்ள விருப்பமில்லாது போயிற்று.
மனம் எப்போதும் உழைப்பு உயர்வு என்று ஓலமிட ஆரம்பித்தது . உழைப்பே உத்வேகமாகையில் பருவத்துக்கே உரிய காதல் கனவுகளின் ஆக்கிரமிப்பு குறைந்து நிஜ வாழ்வில் சிறக்க முயன்று கொண்டிருந்தான். உள்ளங்கையில் உள்ள பொருளே எந்த நேரத்திலும் தவறி விழத் தயாராக இருப்பது போல்இ கனவுகண்டு கைக்கெட்டிய மருத்துவப் படிப்பே எதிர்பாராமல் காவு போகையில் அருகே இல்லாத இன்னொரு உள்ளத்தை நம்பி அதையே எண்ணி அது கிடைக்கும் என்ற காத்திருப்பில் நிஜத்தில் உள்ள கடமைகளைத் தொலைக்க அவன் தயாராக இல்லை.
அவன் பட்ட அடிகளும் இடையில் பத்மகலாவுடக்ன் ஏற்பட்ட பிளவும் அவனை நிறையவே வாழ்க்கையின் யதார்த்தத்துக்குப் பதப்படுத்தியிருன்தது. விரும்பிய காதலி கிடைத்தால் வாழ்க்கை இனிக்கலாம் அதற்காக அதுவே கதி என்று கிடந்து கிடைக்காமல் போனால் மூலையில் சுருள அவன் தயாராக இல்லை. அவனை நம்பி அவன் மீது பாசமானவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்கால அத்திவாரம் அவனிடம் இருக்கிறது. அதை செய்து முடிக்க வேண்டும் பிறந்ததின் அர்த்தத்தை எழுந்து நின்று நிரூபிக்க வேண்டும்.
ஓரளவு டொச் மொழி பிடிபட அவுஸ்பில்டுங் செய்ய விரும்பினான். மருத்துவப் படிப்பே கதி என்று அதை இழந்த வலியில் கிட க்காமல் வாழ்க்கையில் மேலும் நடக்க இன்னொரு பாதையை தேர்வு செய்தான். அதே நிலைப்பாடு தான் பத்மகலா பற்றியும் அவனின் மனதில் உருவாகியிருந்தது. . ஒருகாலத்தில் நினைத்தவள் கிடைத்தால் சந்தோசம். கிடைக்கா விட்டால் அதிலேயே துவண்டு விடாத மனப்பாங்குக்கு மனம் பக்குவப் பட்டிருந்தது.
ஜெர்மனி உலகின் சிறந்த கார்களைத் தயாரிக்கும் பணக்கார நிறுவனங்களின் பணக்கார நாடு. முடிந்த வரை தன் மக்களை பூரண பொருளாதார தனிமனித சுதந்திர திருப்தியுடன் வாழவைக்க முற்படும் நாடு. அவன் இருந்தது கார் நிறுவனங்கள் பல உள்ள பணக்கார மாநிலம். அந்த நிறுவனங்களின் சம்பள விகிதமும் அந்த மாநிலங்களுக்கு ஏற்ப அதிகமாகவே இருக்கும் என்பது உணர்ந்து கார் தயாரிப்புப் பொருட்களின் மெக்கானிக் வேலையையே தனது படிப்பாகத் தெரிவு செய்து படிக்க ஆரம்பித்தான்.
தொழிலில் சிறக்கச் சிறக்க பணமும் நேரமும் இருந்தால் மேற்கொண்டு படிக்கலாம். என்பது அவனுக்குப் பிடித்த நடைமுறை வசதி. ஒருவேளை தான் அதிலேயே மேற்கொண்டு பெரிய தரத்துக்கு உயரும் வாய்ப்புக்கள் வரலாம் என்ற நம்பிக்கையோடு தொடர ஆரமித்தான்.
இப்போது எல்லாம் சீட்டு போன்ற போலி நடவடிக்கைகளில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. தன் மனத்தைக் கட்டுப் படுத்தி தானே சேர்க்க முடியும் போது இப்படியான தொந்தரவுகள் கேவலங்கள் தேவையில்லை என்பது உணர்ந்திருந்ததால் சிறுகச் சேமித்த பணம் ரொக்கமாகியத்தில் அக்காவின் திருமணம் சிரமமில்லாமல் நடந்து முடிந்தது.
தன் கடமைகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளேன். தன்னால் முடிகிறது. எந்த வீழ்ச்சியின் பின்னும் எழுந்து விடலாம் என்ற நம்பிக்கை விதைகள் அவனுள் கிளைவிரிக்க வாழ்க்கை பசுமை வீதியில் பயணிக்கத் தொடங்கியது.
ஒருவனின் மன அமைதியை முதலில் அவனது பொருளாதார நிலைமை நிர்ணயிக்கிறது. சீரான வருமான சூழல் அடுத்த வேலைக்கான அல்லது அடுத்த நாளுக்கான அடுத்த மாதத்துக்கான பயத்திலிருந்து அவனை மீட்டு எடுக்கிறது. எம் சொந்த நாட்டில் வாழ்ந்ததை விட வெளிநாடுகளில் அந்த நிலை மிக அதிக அழுத்தத்தைத் தரும் ஒரு விடயம்.
ஊரில் கொட்டிலோஇ குடிலோ அனேகமாக சொந்தமாக காணித்துண்டு இருக்கும். காற்றும் தண்ணியும் இலவசமாகக் கிடைக்கும். கழிவு தண்ணிக்கும் மழைத்தண்ணி ஓடுவதுக்கும் கூட காசு கட்டும் அவலம் இல்லை. மின்சாரம் இல்லை என்றால் விளக்கோடு வாழலாம். குளிர் இல்லை கணப்பு வசதி தேவை இல்லை. இங்கு வீட்டு வாடகையில் இருந்து காசு. குடிக்கும் நீரில் இருந்து கழிவாகும் சிறுநீர்வரை பணத்தோடு சம்பந்தப் பட்டது ஆகவே உழைப்பும் ஊதியமும் அவசியம்.
இந்த நாடுகளுக்கு வந்து வேலை அனுமதி கிடைக்கும் வரையான காலப்பகுதிகளின் செலவுகளை அரசாங்கள் எந்தக் குறையும் வைக்காமல் பொறுப்பெடுத்துக் கவனிக்கும். வேலை அனுமதி கிடைத்த பின் ஒவ்வொரு சலுகையாக நிறுத்தி தன் கால் ஊன்றும் நிலைக்குக் கொண்டு வரும். குழந்தைகள்இ குழந்தை உள்ள தனிமையில் இருக்கும் பெண்கள்இ நோயாளிகள் தவிர்ந்தவர்களுக்கான செலவுப் பொறுப்பை அரசு ஏற்பதில்லை. ஏற்க வேண்டிய கட்டாயம் துளி கூட இல்லை.
எமது நாட்டில் அரசு எந்தப் பாதுகாப்பும் சலுகைகளும் தராத ஊழலில் வளர்ந்து வாழ்ந்தவர்கள் நாம் . இங்கு இத்தனை வசதிகளை அரசு வழங்கும் போது பல ஆண்களுக்கு உடம்பு அசைக்கக் கசந்து போகிறது. நோகாமல் இருக்கஇ நேரமற்று ஊர் சுற்றி விடுப்பு வவிண்ணாணம் சேகரிக்கஇ கால நேரமில்லாமல் தமிழ் படம் போட்டுப் பார்க்கஇ பார்ட்டிகளில் அடிபட இ ஏதாவது ஒரு சங்கம் உருவாக்கி சண்டை வளர்க்க என்று அதிக நேரம் தேவைப் படுவதால் உழைக்க நேரமில்லாமல் சமூக உதவிக்காக இல்லாத நோயெல்லாம் சொல்லி முடிந்தவரை அரசாங்கப் பிச்சையில் கவுரவமாக வாழ நினைக்கிறார்கள்.
ஆனால் சீலன் நிஜமாகவே கவுரவமாக கால் ஊன்றி வாழ நினைத்தான். அந்த முயற்சி வெற்றியாகி பொருளாதாரம் சீரடைந்த போது மனதில் தெளிவு ஏற்பட்டிருந்தது. மேற்கொண்டு நகர வேண்டிய பாதை தெளிவாகி இருந்தது விழுந்துஇ உடைந்துஇ எழுந்துஇ நிமிர்ந்ததில் விழாத திடம் வந்திருந்தது. வாழ்க்கையை கனவுகளற்று வாழ்க்கையாக பார்க்கும் தெளிவு வந்திருக்க அதன் வழியான நகர்வில் வாழ்க்கை சிரமம் அற்று நகர ஆரம்பித்தது.
வேலை நேரம் தவிர்ந்த மாலை நேரக் கல்வி மெல்ல மெல்ல தொழில் வகையிலும் உயர்த்த ஆரம்பிக்க இ அவனது குடிஇ புகைஇ வீண்வம்பு போன்ற தீய பழக்கங்கள் அற்ற நடவடிக்கை புலம்பெயர் மண்ணில் ஆரம்பகாலங்களில் குடியேறிய பலகுடும்பங்களின் வளர்ந்த பெண் பிள்ளைகளில் சிலரையும் இ கல்யாண வயதில் பெண் பிள்ளைகளை வைத்திருந்த பெற்றோர்கள் பலரையும் அவன்பால் திரும்பிப் பார்க்கவைக்க..... ஊரில் வீடு தேடி கனத்த சீதனத்துடன் கல்யாணம் பேசிவர.... அம்மா அடுத்தவளுக்கான வரதட்சனையை இவனது சீதனக் காசில் எதிர்பார்க்க .......
எதுவும் தெரியாமல் அவன் வேலைக்கும் மாலைநேரக் கல்விக் கூடத்துக்குமாய் ஓடி நேரத்தைத் துரத்தஇ எதுகும் தெரியாத தூரத்தில் இருந்து பிரேமகலா நம்பிக்கைக் கனவுகள் வளர்த்து காதலுடன் தொலைபேசிக் கொண்டிருந்தாள்.
No comments:
Post a Comment