.
--gy;itj;jpa fyhepjp ,sKUfdhu; ghujp
சென்ற ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015 அருள்மிகு துர்க்கை அம்மன் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் அவை நிறைந்த தமிழ் அன்பர்களுடன் கோலாகலமாகவும் வெற்றி விழாவாகவும் கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவரைக் கௌரவித்ததைத் தொடர்ந்து ‘யாழ் நூல்’தந்த விபுலானந்த அடிகளாரையும் ‘தமிழ்த்;தென்றல்’ திரு வி. கல்யாணசுந்தரனாரையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட சான்றோர் விழா ஆரம்பமானது.
மங்கல விளக்கேற்றல் - தமிழ்த்தாய் வாழ்த்து – தேசிய கீதம் - ஆசி உரை- இவற்றைத் தெடர்ந்து உலக சைவப் பேரவை ஆஸ்திரேலியக் கிளையின் தலைவர் திரு மா அருச்சுனமணி அவர்கள் தனது உரையில்இ “சிட்னியில் தமிழ் கற்றுவரும் மாணவர்கட்குஇ தமிழ்க் கல்வி நிலையங்கட்கு வெளியேஇ தமிழை மேடையில் பேச வாய்ப்பளிக்கவும்இ தமிழ்ச் சான்றோர்களையும் அவர்களது ஆக்கங்களையும் அறிமுகப்படுத்துவதற்காகவும் இவ்விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது “எனக் கூறினார்.
“உலகச் சைவப் பேரவை ஆஸ்திரேலியக் கிளை மாதந்தோறும் நடத்திவரும் திருமுறை முற்றோதல்இ ஆண்டிற்கு இருமுறை நடத்தும் திருவாசக முற்றோதல் ஆகியவற்றில் இளைஞர்களும் பெரி யோர்களும் கலந்து ஆதரவளிப்பதுடன் இறையருளும் பெற்றுய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
உலகச் சைவப் பேரவை ஆஸ்திரேலியக் கிளை வரும் ஜூலை மாதத்திலிருந்து நடத்த இருக்கும் ‘சிவஞானபோத ஞானயோகப் பயிற்சி’யில் பங்கேற்றுப் பயன்பெற வேண்டுமென அழைப்புவிடுத்தார் அவர்.
இவ்விழாவின் சிறப்புப் பேச்சாளர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் மானுட நேயப் பணிகளை வாழ்த்தியதுடன்இ அவர் ‘தமிழ் விவேகானந்தர்’ ஆகச் செயல்பட்டு வருகிறார் எனவும் பாராட்டினார்.
இந்;த நிகழ்ச்சியை அடுத்து --- சிட்னியிலே இளந் தலைமுறையினரின் குரல் தமிழிலே ஒலிக்க இளைஞர் தமிழ்ச் சங்கம் அமைத்துப் பல சுவை நிகழ்ச்சிகளிலே திறம்படத் தனது திறமையை வெளிக்காட்டிவரும் செல்வி மாதுமை கோணேஸ்வரன். “ முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்;” என்னும் தலைப்பிலே திறமையான ஒருசிற்றுரையை வழங்கினார். ஆவர் பேசுகையில்
“திறமையான யாழ்நூலை
ஆக்கித் தந்தான்
தித்திக்கும் தமிழ்ப் பாடம் யாத்து வைத்தான்
நறைதோய்ந்த கவிவாணன் விபுலானந்தன்
நாடுக்கும் அவனுக்கும் வணக்கம் சொன்னோம் “
நல் ஆசிரியராக - ஆளுமையுள்ள அதிபராக - பாடசாலை முகாமையாளராக
- சமூகத் துறவியாக - நல்ல கவிஞராக - சிறந்த பத்திராதிபராக - அறிவியல் எழுத்தாளராக
- தமிழ்ப் பேராசிரியராக - மொழியியல் விஞ்ஞானியாக
- அறிவியல் கலைஞராக - ஆத்மிக ஞானியாக - இயற்றமிழ் வல்லுனராக - இசைத்தமிழ் ஆராய்ச்சியாளராக
- நாடகத்தமிழ் ஆசானாக - மனிதாபிமானம் மேலோங்கியவராக
- சமூக சேவகராக - பன்முக ஆற்றல் கொண்ட- பலதுறை விற்பன்னராகத் திருத்தக வாழ்ந்திலங்கிய
பெருமை சுவாமி விபுலானந்த அடிகளையே சேரும்.
மீன்பாடும் மட்டுநகரின்கண் உள்ள காரைதீவு என்னும் சிற்றூரிலே சாமித்தம்பி -
கண்ணம்மை தம்பதியினருக்கு 1892ம்
ஆண்டில் மகனாகப் பிறந்தார். மயில்வாகனம் என்ற
பெயர்சூட்டப்பட்ட அடிகளார் காரை தீவு மற்றும்
கல்முனை ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளிலே கல்வியை
ஆரம்பித்தார். உயர்தரக் கல்வியை மட்டக்களப்புப்
புனித மைக்கல் கல்லூரியில் கற்றார் .
கேம்ப்ரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதல்
மாணாக்கராக விசேட சித்திபெற்ற இவர் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அவ் வேளையிலே கொழும்பில்
விரிவுரையாளராகவிருந்த தென்கோவை கந்தையா பிள்ளை
என்பவரிடம் தமிழ் இலக்கியத்தை ஐயந்திரிபறக் கற்று முத்தமிழ் வித்தகர் ஆனார். தான் கற்ற மட்டக்களப்பு
புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பின்பு விஞ்ஞானத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றதுடன்
- இலண்டன் பல்கலைக் கழகம் நடத்திய B Sc தேர்விலே தோற்றி முதற் பிரிவிற் சித்தியடைந்தார்.
விஞ்ஞான ஆசிரியராக யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியிற் சிறிது காலம் பணியாற்றிய பின்னர் திறமையின் நிமித்தம்
மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதிபர் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நிர்வகித்தார்
இதனைத் தொடர்ந்து மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய
தேர்விலே தோற்றிப் பண்டிதர் என்ற பட்டத்தைப் கைப்பற்றிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையைப்
பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்திலும்
முதலாவது தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பை
ஏற்றுப் பெரும் பணி புரிந்து தமிழ் வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருந்தார்
மனதை ஈர்த்து
வந்த துறவற உணர்வு நாளும் பொழுதும் பெருகி வரத் தனது பதவியைத் துறந்து சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்திற் சேர்ந்தார்.
காவி உடை யணிந்து சுவாமி சிவானந்தரிடம் பிரமச்சாரி அபிஷேகம் செய்யப் பெற்று பிரபோத சைதன்யர் என்ற தீட்சா நாமத்தால் அழைக்கப்பட்டார்..
" இராமகிருஷ்ண விஜயம்" என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும் " வேதாந்த கேசரி"
என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகப் பணி புரிந்து பல அரிய உயர்ந்த கருத்துகளைக்
கொண்ட கட்டுரைகளை எழுதினார். சமய உண்மைகள்
மட்டுமன்றித் தமிழ்மொழி தமிழ்ப் பண்பாடு பற்றிய பல தகவல்கள் எழுத்து வடிவம் பெற்றன. தமிழ்ச் சங்கம்
வெளியிட்ட "செந்தமிழ்" என்ற பத்திரிகையை இவரின் தமிழ் இலக்கியக் கட்டுரைகள்
அலங்கரித்தன.
இமயமலைக்குப் புனித யாத்திரை சென்ற அடிகளார் அல்மோரா மலைச் சாரலில்
உள்ள மாயாவதி ஆச்சிரமத்திலே சிலகாலம் தங்கி இருந்தார். அப்போது “பிரபுத்த பாரதா” என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகப் பணி புரிந்து அணிசேர்த்தார்.
ஆச்சிரமத்தில் தங்கியிருந்த வேளை குருப்பட்டம் பெற்றுச் சுவாமி விபுலானந்தர் என்ற புனிதத்
துறவியாகத் தாயகம் திரும்பினார்.
அந்நியர் ஆட்சியில் - மதம் – மொழி - கலாசாரம் என்கின்ற
பாரம்பரியத்திலிருந்து தமது தனித்துவமான இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழர்களை விழித்து எழச்செய்யும் பணியில் முழுமூச்சாக இறங்கினார்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்னும் கூற்றுக்கிணங்கத் தமிழ் மக்கள் கல்வி கற்பதற்குப்
பல பாடசாலைகளை நிறுவினார். அத்துடன் ஆன்மிக வளர்ச்சிக்காகக் கொழும்பிலும் மட்டக்களப்பிலும்
இராமகிருஷ்ண ஆச்சிரமங்களைத் தாபித்தார்.சாதி. மத மொழி இன ஏற்றத் தாழ்வுகளுக்கு -- ஏழைஇபணக்காரன்
என்ற வர்க்க வேறுபாடுகளிற்கு அப்பால் நின்றுஇ மனித நேயத்துடன் சமூகத்துக்குத் தொண்டாற்றிய பெருந்தகை விபுலாந்த அடிகள் என்றால்
மிகையாகாது.
அறிவியல்
நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற பேராவல் கொண்டவராகத் திகழ்ந்தார்.
தமிழில் கலைச் சொல் அகராதி உருவாவதற்கு பெரும் பங்காற்ற விழைந்து சென்னைத் தமிழ்ச் சங்கத்தால் அமைக்கப்பட்ட
கலைச் சொல்லாக்கப் பேரவையின் தலைவராகச் செயற்பட்டார். கணிதம் –வரலாறு –பௌதிகவியல் தாவரவியல் – விலங்கியல் – இரசாயனவியல் –உடல்நலவியல்
புவியியல் விவசாயவியல் என்ற ஒன்பது துறைகளில் பத்தாயிரம் தமிழ்ச் சொற்களைக் கொண்ட கலைச்
சொல் அகராதி வெளியிட அல்லும் பகலுமாக உழைத்த பெருமை இவரைச் சார்ந்ததே.
தமிழ் மொழியின் செழுமையும் அழகும் சிதையா வண்ணம்
நடை இயைபு மாறுபடாமல் இலக்கண இலக்கிய விதிகளுக்கமையத் தகுந்த சொல்லாக்கத்துடன் மொழி
பெயர்ப்பு அமைய வேண்டுமென அடிகளார் வலியுறுத்திவந்தார். மூல நூலில் உள்ள நடையையே மொழி
பெயர்ப்புக்கும் பின்பற்றுதல் அவசியம் என்பதை நடைமுறைப்படுத்தினார் அடிகளார்.
அடிகளார் தமிழ் மொழி மட்டுமன்றி யவனம் –வங்கம்-அரபிஇஇலத்தீன் –ஆங்கிலம்-கிரேக்கம்
- வடமொழி போன்ற பல மொழிகளிலும்; புலமை பெற்றிருந்தார்.
இந்தியாவில் பலமொழி பேசிய மக்களோடு பழகியிருந்தமையால் அடிகளாருக்கு மொழியின் நுட்பங்களை
உணர்ந்து கொள்ளும் நிறைந்த அறிவு வாய்க்கப் பெற்றிருந்தது. Modren
Review என்ற ஆய்விதழில் அவர் எழுதிய
The
Phoneic of Tamil Language என்ற
கட்டுரையும் கலைமகள் சஞ்சிகையில் எழுதிய " சோழ மண்டலத் தமிழும் ஈழ மண்டலத் தமிழும்
" என்ற கட்டுரையும் அடிகளாரின் மொழியியற் புலமைக்குத் தக்க சான்றுகளாகும்.
தமிழ்மொழி வளர்ச்சிக்காக யாழ்ப்பாணம் ஆரிய திராவிட
பாஷா அபிவிருத்திச் சங்கம் என்ற அமைப்பிலே பிரதம பரீட்சகராகப் பணியாற்றினார். பிரவேச
பண்டிதர் பால பண்டிதர் பண்டிதர் என 3 தேர்வுகளை ஏற்படுத்திப் பண்டிதர்மார் பலரை உருவாகியுள்ளார்.
ஓய்வின்றி
உறக்கமின்றி மெய்வருத்தம் பாராது 14 ஆண்டுகளாகப் பல நூல்களை வரலாற்று ரீதியிலும் ஒப்பியல் ரீதியிலும் விஞ்ஞான ரீதியிலும் ஆராய்ச்சி செய்து அருமையான நூல்
ஒன்றை யாத்து அதற்கு “யாழ்நூல்” எனப் பெயரிட்டார்;.. கரந்தை
தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன்இ திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் கோவிலில் நாளும் இன்னிசையால் செந்தமிழ் பரப்பிய திருஞான சம்பந்தர்
சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் ஏங்கிவியக்க
எண்ணற்ற். கலை வித்தகர்கள் இறுமாப்புற்றுப் போற்ற யாழ்நூலை அரங்கேற்றம் செய்தார். வழக்கொழிந்து
போன பேரியாழ்இ மகரயாழ் வில்யாழ் சீரி யாழ் செங்கோட்டி யாழ் முளரி யாழ் என்னும் அறுவகையான யாழ்களை மீண்டும் உருவாக்கி உலகுக்கு அளித்தார்
சிற்பம் ஓவியம் இசை முதலிய நுண்கலைகள் எமது நாகரிகத்தைக்
காட்டும் உண்மையான செழுங்கலை நியமங்கள் எனக்
குறிப்பிட்டுள்ளார் . மாணவர்க்கு ஓவியக் கலையும்
இசை கலையும் அவசியம் என சுட்டிக்காட்டிவந்தார்.
அரங்கேற்று காதை ஆச்சியர் குரவை முதலியவற்றிலுள்ள இசை நடன நுணுக்கங்களையும் பிற தரவுகளையும் விஞ்ஞான அறிவுடன் ஆராய்ச்சி செய்து
பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.;
நாடகக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அடிகளார்
இநாடகங்கள் பற்றி எழுதிய கட்டுரைகள் மதங்க சூளாமணி என்ற நூலிலே தொகுக்கப் பட்டுள்ளன. தலை சிறந்த
நாடகாசிரியரான சேக்ஸ்பியரின் 12 நாடகங்களைத் தெரிவு செய்து அவற்றின் சிறப்புகளை விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
ஆங்கில வாணியில் ??நாடக இலக்கியம் நாடக இலக்கணம்
பற்றிக் கருத்துக்கள் விரித்துரைக்கப் பட்டுள்ளன. நகை அழுகை முதலிய நவரசங்களையும் சாத்வீக ஆங்கிக வாசிக ஆஹார்ய
முதலிய நால்வகை அபிநயங்களைப் பற்றியும் அவற்றைப் புலப்படுத்தும் இருவகைக்கூத்து பத்து வகை
நாடகங்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார்.
இலங்கை சுதந்திரம் பெற முன்னரே இறையடி சேர்ந்த அடிகளாரின் éதவுடல் மட்டக்களப்பு
சிவானந்த வித்தியாலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட
கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கல்லறை மேல் அவராலே பாடப்பெற்ற " வெள்ளை
நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப்; பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது "என்ற கவிதை வரிகள் பொறிக்கப்
பட்டுள்ளன.
இவரது தமிழ்ப் பணியை என்றும் நினைவு கூரும் முகமாக
இலங்கையில் அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தன்று இவரது மறைவு தினம் கொண்டாடப் படுகிறது.
அகிலம் போற்றும் அடிகளாரின் பெயரால் மட்டக்களப்பில் ஒரு இசை நடனக் கல்லூரி இயங்கி வருவது
அன்னாரின் இறவாப் புகழை என்றும் நினைவு கூர வைக்கும்.
“ஆங்கிலத்துக்
கவிதை பலப்பல
அருமையாகத்
தமிழ் செய்து தந்தனன்
நாங்கள் மொண்டு பருகி மகிழவும்
நன்று நன்றென உண்டு புகழவும்
தீங்கனிச் சுவை கொண்டவை தானுமே
தீட்டினான் தெய்வ யாழினை ஆய்ந்ததால்
ஓங்கினானின் உயர்வைப் பருகுவோம்
உண்மையோடவன் நூலும் பயிலுவோம்”
என்ற மஹாகவி உருத்திர மூர்த்தி அவர்களின் கவிதையை
ஒப்பித்து நிறைவு செய்கிறேன்.
நன்றி. வணக்கம்.
மாதுமையின் பொருள் பொதிந்த உரையை அடுத்து பேராசிரியர் ஞானா குலேந்திரன் அவர்களின் சிறப்ரை இடம்பெற்றது.
(அதன் சுருக்கம் சென்ற திங்கள் தமிழ் முரசு இதழிலே பிரசுரமாகியது.)
அடுத்ததாகச் சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றத்தின் தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் உரையாற்றகையில் -----
தொடர்ந்து உரை ஆற்ற வந்த செல்வி குருகாந்தி தினகரன் அவர்கள் “ திரு வி. கவின் பன்முகச் சேவை” என்னும் பொருள்பற்றி திறமையாகப் பேசினார். அவர் பேசுகையில் “ ---
“உலகசைவப்பேரவைத் தலைவர் மதிப்பிற்குரிய அர்ச்சுனமணி அவர்களுக்கும் அறிவாற்றல் மிகுந்த தமிழ்ச் சான்றோருக்கும் எனது பணிவான வணக்கம். திரு வி. க அவர்களையும் ஈழத்து விபுலாநந்த அடிகளார் அவர்களையும் நினைவு கூரும் வண்ணம் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பரிய விழாவிலே சிற்றுரை வழங்க வாய்ப்புத் தந்தமைக்கு எனது நன்றியை விழா அமைப்பாளர்களுக்குத் தெரிவித்துப் பெரியார்களின் திருவுருவப் படங்களை வணங்கி எனது சிற்றுரையை ஆரம்பிக்கிறேன்.
திரு. வி. க. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அரசியல் சமுதாயம் சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்ட தமிழறிஞர். இவரது தமிழ்நடையின் சிறப்புக் காரணமாக இவர் 'தமிழ்த்தென்றல் ' என்று கௌரவத்துடன் இன்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் எழுத்தாளர்களுக்குத் திரு வி க அவர்கள் தந்தையர்க இருந்தார். தொழிலாளர்களுக்குத் தாயாக – வழிகாட்டியாகத் திகழ்ந்தார் ஆங்கிலத்தைப் பேசுவதிலும் எழுதுவதிலும் கலந்து பாவித்துவந்த காலத்தில் திரு. வி. க. இனிய தூய தமிழில் எழுதவும் சொற்பொழிவாற்றவும் முடியும் என்பதை நிரூபித்தவர்; இப்படித் தமிழிலே புரட்சிசெய்து தமிழ் செஞ்சங்களிலே நீங்கா இடத்தைப் பிடித்த திரு வி க அவர்கள் 1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று விருத்தாசலம் முதலியாருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாகத் தோன்றினார். 1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார். 1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது. இதனால் கல்வி தடைப்பட்டது. நான்கு ஆண்டுகள் இவராலே பள்ளிக்குச் செல்லமுடியவில்லை.
மீண்டும் 1898 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் வரை பயின்றார். இவரது அபிமான ஆசிரியர் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை அவர்களின் சார்பாக நீதிமன்றத்துக்குப் போக விழைந்ததால்இ இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து நின்றார். 1901 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம்இ சைவ சாத்திரங்களை ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்தார்.
விபின் சந்திர பால் அவர்களின் சொற்பொழிவைக் கேட்ட முதல் தேசியத்தின் பொருட்டுத் திரு.வி.க போராடத் துணிந்தார். 1907 முதல் 1908 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஸ்பென்சர் கம்பெனியில் பணி செய்தார். அங்கே இந்திய உரிமைகளைப் பற்றிச்சக ஊழியர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்துவந்தார். .
இதனால் அக்கம்பெனியின் மேலாளர் திரு.வி.க வை எச்சரிக்க நேர்ந்ததும் அவர் அப்பணியைத் துறந்தார். இளமைக் காலம் தொட்டே இவரிடம் ‘அச்சமின்மை’ காணப்பட்டதென்பதை இவரின் வாழ்க்கைக் குறிப்புகள் என்னும் நூல் விதந்துரைக்கிறது ஜஸ்டின் சதாசிவ ஐயருடனும் அன்னிபெசண்ட் அம்மையாருடனும் மிகுந்த அன்புடன் பழகியவர். அவர் அம்மா என்றுதான் அன்னிபெசண்ட்ரை. அழைத்து மகிழ்பவர் வெஸ்லியன் பள்ளியில் 1910திலிருந்து ஆறாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் இளைஞர்கள் சொற்பொழிவாற்றினால் அவர்களை எள்ளி நகையாடுவது தமிழ்ப் புலமையாளருக்கு வழக்கமாக இருந்துவந்தது. ஆனால் திரு வி க இளைஞர்களை மிகவும் ஊக்குவித்தும் அவர்களுக்கு வழிகாட்டியும் அவர்களுக்கு ஓர் உந்து சத்தியாக விளங்கினார். புற சமயங்களைப்பற்றிப் பேசுவது தவறு என்று இரந்த காலத்தில் இவரோ சைவ சபை வைணவ சபை கிறித்துவர் விழா பொளத்தர்கள் விழா இஸ்லாமியர் விழா ஆகிய அனைத்திலும்; பங்கேற்று கால்மாக்ஸ்சின் சமதர்மக் கொள்கையை இறுதிமட்டும் கடைப்பிடித்து வந்தவராவர்.”
“கமலாம்பிகை என்னும் இனியவளை 1912 ஆம் ஆண்டு இல்லத்தரசியாக்கினார். மணவாழ்க்கை அவருக்கு இனிப்பூட்டுவதாய் இருந்தது. தன்னைப் பண்புள்ள மனிதனாக மாற்றியது மணவாழ்க்கை தான் என்று தன்னுடைய குறிப்பில் திரு.வி.க குறிப்பிடத் தவறவில்லை. செந்தண்மை மிக்கவராக விளங்கிய அவர் “என் கடன் பணி கிடப்பதே” என்ற கூற்றுக்கு இலக்கணமாக இறுதிமட்டும் வாழ்ந்தவர். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்துயர்ந்த பெருந்தகை தி வி. க.
1914 ஆம் ஆண்டு சுப்புராய காமத்இ எஸ்.சீனிவாச ஐயங்கார் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது. 1916ஆம் ஆண்டிலிருந்து வெஸ்லி கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவ ராகிப் பெரும் பணி இயற்றினார். . இக்காலகட்டத்தில் திரு பி. பி வாடியா அவர்க ளுடன் ஏற்பட்ட தொடர்பு பின்னாளில் அவர் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு ஏதுவாக இருந்தது.
1917 ஆம் ஆண்டு தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டிப் பதவியைத் துறந்தார்.. திசம்பர் 7ஆம் நாள் தேசபக்தன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்விதழ் தான் அவரைச் சமூகத்துடன் பெரிதும் இணைத்தது.. நாடுஇ நாட்டு மக்கள் என்று தன்னுடைய தூரநோக்குப் பார்வையை விரிவுபடுத்படுத்திக் கொண்டார். தேசபக்தனில் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார் அதன் பின்னர் அவ்விதழின் செயலாளருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக இதழ்ப்பணியை விடுத்தார். பின்னர் நவசக்தி என்னும் இதழை நண்பர்களின் துணையுடன் ஆரம்பித்துத் திறம்பட நடத்தி வந்தார்.
1918 இல் இந்தியாவிலேயே தொழிலாளர் இயக்கம் வெறும் கேள்விக்குறியாக இருந்தகாலகட்டத்தில் இவரது அயரா முயற்சியால் தமிழ் நாட்டிலே முதன்முதலில் தொழிற்சங்கம் நிறுவிய பெருமை இவரையே சாரும்;.முதன் முதலில் ‘சென்னைத் தொழிலாளர் சங்கம்.. என்ற பெயரிலே தொழிற்சங்கம் தொடங்கிப் புரட்சிசெய்தார் இச்சங்கத்திற்குத் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்த ஆண்டிலே தான் அவரின் துணைவியார் இயற்கை எய்தினார்.
முதன் முதலாகக் காந்தியடிகளை 1919 ஆம் ஆண்டு சந்தித்தார். இவ்வாண்டிலே தான் பெரியாரின் நட்பும் திரு.வி.கவுக்குக் கிடைக்கப்பெற்றது. திலகரை வ.உ.சி உடன் சென்று சந்தித்தார். 1920 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் சங்கம் தோற்றம் பெற்றது. 1921 ஆம் ஆண்டு ஆளுநர் வெலிங்டன் பிரபு இவரை அழைத்து நாடுகடத்திவிடுவதாக மிரட்டினார். ஆனால் அதற்கு திரு.வி.க அஞ்சவில்லை. திரு. தியாகராய செட்டியாரின் உதவியால் நாடுகடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டது.
1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. தலைவர் திரு.வி.க வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா மாநாட்டிலிருந்து வெளியேறினார். இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.
1944 ஆம் ஆண்டு திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்தது. 1947 ஆம் ஆண்டு திசம்பர் 7 வரை காங்கிரஸ் ஆட்சியில் திரு.வி.கவுக்கு வீட்டுச் சிறைவாசம் விதிக்கப்பட்டது. 1949 இல் ஒரு கண் பார்வையை இழந்த இவருக்கு நாளடைவில் மற்றக் கண்ணும் பார்வையற்றதாகிவிட்டது . அளப்பரிய தமிழ்ப் பணிசெய்த திரு.வி.க 1953 செப்டம்பர் 17 அன்று இறையடி சேர்ந்தார்..
.இவரியற்றிய செவ்விய உரைநூல்கள் கவிதை நூல்கள் பல.. அவைகளுள் பெண்ணின் பெருமை - திருக்குறள் விரிவுரை-- முருகன் அல்லது அழகு - மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் ஆகியவை - குறிப்பிடத்தக்கவை.
“பொறுமையைப் பூணுங்கள் ; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள். நமது நாடு நாடாயிருக்கிறதா? நம் அன்னைக்கு முடியுண்டா? உடையுண்டா? போதிய உணவுண்டா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயந்துடிக்கிறது. சாதி வேற்றுமை தீண்டாமை பெண்ணடிமை உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன; எரிக்கின்றன; இந்நோய்களால் அவள் குருதியோட்டங்குன்றிச் கவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இள ஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்து. அவ்வொளி வீசி எழுங்கள்; எழுங்கள்!’’
நாவலர் வழியில் தமிழ் எழுத்து நடைக்கு இலக்கணம் வகுத்த திரு. வி.க. வின் இவ் வசன நடை அவர் மறைந்தாலும் நம்முள் அவரது நினைவலைகளை வீசிய வண்ணம் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது! நன்றி! வணக்கம்
இப்படி பல அரிய தகவல்களைச் சேகரித்து அழகுறப் பேசி எல்லோரின் பாராட்டையும் பெற்றவள் செல்வி குருகாந்தி தினகரன். (அவுஸ்திரேலியாவிலே ‘அ’ விலிருந்து தமிழ் கற்கத்தொடங்கி 10ஆம் வகுப்பில் கல்விபயிலும் மாணவியின் சாதனை பாராட்டத்தக்கது.)
சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றத்தின் தலைவர் திரு இரத்தினம் மகேந்திரன் அவர்களின் உரை-- சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றத்தின் தலைவர் திரு இரத்தினம் மகேந்திரன் அவர்கள் ஒரு அருமையான சிற்றுரை நிகழ்;த்தினார். தமிழின் தொன்மை பற்றிக் கூறிய அவர் “பழைய காலத்திலே அரசர்கள் தமிழ்ப் புலவர்களுக்கு சன்மானம் வழங்கி கௌரவித்துääதமிழை பெருமளவிலே வளர்த்து வந்துள்ளார்கள். ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ்ப் புலவர்களுக்குச் சன்மானம் வழங்கித் தமிழை வளர்க்க அரசர்கள் இருக்கவில்லை. வறுமையில் வாடினாலும் தமிழை தமது கண்னென மதித்து வளர்த்து வந்தவர்கள்தான் தமிழ் வளர்த்த சான்றோர்கள். அவர்களுக்கு விழா எடுப்பது மிகவும் பொருத்தமானதாகும்.”
“தமிழ்ப் பேராசான் தி. மீனாட்சிசுந்தரம்பிள்ளை ää உ. வே சாமிநாத ஐயர் போன்றோர் முதல் சோமசுந்தரப் புலவர்வரை தமிழுக்காக பெருமளவிற் பங்களிப்புச் செய்தோரை நினைவு கூரவும் அவர்களின்; ஆக்கங்களை எல்லோருக்கும் அறியச் செய்யவும் தமிழ் வளர்த்த சான்றோர் விழாவினை உலக சைவப் பேரi அரிய பல நல்ல கருத்துகளை முன்வைத்துப் பேசுகையில வ கொண்டாடுவது வரவேற்கத்தக்கது” என்றும் அரிய பல நல்ல கருத்துகளை முன்வைத்துப் பேசினார்.
No comments:
Post a Comment