ஜெயா – சசி கும்பலை ‘கணக்கு’ போட்டு விடுவித்த நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்திருந்த பலர்  – தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும் – கசப்புடனும், ஆத்திரத்துடனும் எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர். பல்வேறு ஆங்கில இணைய தளங்களில் பின்னூட்டங்களாக வெளியிடப்பட்ட சில கருத்துக்களை இங்கு தொகுத்து தருகின்றோம். ‘அம்மா’ அவர்களின் விடுதலை இப்படியாக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இனி நீதிமன்றம்தான் இறுதி நம்பிக்கை எனும் ஆசுவாசமெல்லாம் மக்களிடம் எடுபடாது.
- வினவு
இந்திய நீதித்துறைசூப்பர்மேன்களும்சூப்பர்வுமன்களும் –  by vorpal on May 12, 2015 07:51 PM ரீடிஃப்
லாலு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டு, பின்னர் பிணை வாங்கி சந்தோஷமாக தனது வழக்கமான தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.
சல்மான் கான் 13 ஆண்டுகள் வெற்றிகரமான இழுத்தடிப்புக்குப் பிறகு தண்டிக்கப்பட்டாலும், ஒலியின் வேகத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் வழக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது. மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்த போதும் அவர் விடுவிக்கப்படுகிறார். அரசுத்தரப்பு மோசடியாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது.
ஒரு பேருந்து ஓட்டுனர் அடித்து உதைக்கப்பட்டு இறக்கிறார்.


ஒரு பெண் “ஸ்கூட்டி” ஓட்டுனரும், ஒரு போக்குவரத்து காவலரும் வாக்குவாதத்தில் இறங்குகின்றனர். அந்தப் பெண் போக்குவரத்து காவலரின் பைக் மீது செங்கல் ஒன்றை எறிகிறார். பதிலடியாக காவலர் பெண்ணை அடித்து நொறுக்குகிறார். – செங்கல்லால் அடிக்கிறார்…
இன்னும் இது போல பல….
நான் ஒரு சட்டத்துக்கு பணிந்த, உயர்கல்வி பயின்ற, அமைதியை விரும்பும் வயதான பெண். நான் எப்போதுமே என்னுடைய நாட்டைக் குறித்து பெருமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால், மேலே குறிப்பிட்ட சம்பவங்கள், என்னை முழுக்க முழுக்க சோர்வடைய வைத்திருக்கிறது. எனது வாழ்வின் அந்திப் பொழுதில், இந்த நாட்டின் நீதித்துறை மீதும், சட்ட ஒழுங்கு எந்திரத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது. நான் ஒரேயடியாக இடிந்து போயிருக்கிறேன். இன்னும் ஒரு சில ஆண்டுகள்தான் வாழ்வேன் என்பதற்கு நன்றியுடன் இருக்கிறேன். அதே நேரம், என்னுடைய சக நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளம் ஆண்,பெண்களுக்கு எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது என்று நினைத்துப் பார்த்து நடுங்குகிறேன்.
___________________________
ஜெயா விடுவிக்கப்பட்டது by kumar kn on May 12, 2015 07:25 PM ரீடிஃப்
ஜெயா விடுவிக்கப்பட்டதும்,  சல்மானுக்கு பிணை மனு மீதான தீர்ப்பும் இந்த நாட்டின் நீதித்துறை எப்படி செயல்படுகிறது என்பதை மக்களுக்குக் காட்டியிருக்கிறது.
இப்போது தாவூத் (இப்ராகிம்) இந்திய நீதித்துறை மீது முழு நம்பிக்கை இருப்பதாகச் சொல்லி இந்தியாவிற்கு திரும்பி வந்து விசாரணையை எதிர்கொள்ளலாம். அவருக்கு நிச்சயம் பிணை கிடைத்து விடும், பல்வேறு மேல்முறையீட்டு நீதிமன்றங்களுக்குப் போய் அவரது வாழ்நாள் முடிவதற்கு முன்பு அவரது குற்றங்களுக்கான தீர்ப்பு வரப் போவதில்லை.
ஜெய் இந்திய நீதித்துறை..
___________________________
Re: Judcial system – by Unknown on May 12, 2015 12:03 PM ரீடிஃப்
இந்திய நீதித்துறை
“இந்தியாவிலேருந்து ஏன் எப்பவும் குற்றவாளிகளை தண்டிக்கும் வேலை நமக்கே வந்து சேருது!”
இந்தியாவின் அரசமைப்பு நொறுங்கி விழுதல் தவிர்க்க முடியாதது. பொருளாதாரம் நொறுங்கப் போகிறது.
ஊழலின் நிர்வாண ஆட்டம் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது. ‘நல்லவர்கள்’ எனப்படும் 85% மக்கள் அதை தடுத்து நிறுத்த எதுவும் செய்ய முடியாமல் போயிருக்கிறது. 10-15% மோசமானவர்கள்தான் மற்றவர்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கரையான் அரித்த இந்தக் கூடு இடிந்து நொறுங்குவதற்கு முன்பு கிடைத்ததை சுருட்டிக் கொண்டு, சாத்தியமான வழிகளில் எல்லாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான வாழ்க்கை விரைவில் இல்லாமல் போய் விடும்.
இது சரியாக புரியவில்லை என்றால், “ஒவ்வொருவரும் தன்னைத்தானே கவனித்துக் கொள்ள வேண்டியதுதான்” என்ற நிலை வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.
குட் லக்
___________________________________
Mr. Right ஃபர்ஸ்ட் போஸ்ட்
முதலில் சல்மான் கான் வழக்கு, இப்போது இந்த வழக்கில், உயர்நீதி மன்ற நீதிபதிகள் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பையும், நடைமுறைகளையும் கிண்டலடிக்கவும் வெளிப்படையாக அவமதிக்கவும் செய்திருக்கின்றனர். இரண்டு வழக்குகளிலுமே உயர்நீதிமன்ற நீதிபதிகள் குற்ற நிரூபணத்தின் அடிப்படை கருத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றனர். கீழமை நீதிபதிகள் பயிற்றுவிக்கப்பட்ட குரங்குகள் மட்டத்தில் தான் உள்ளனர் என்று அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை கூறி நம்மையெல்லாம் சிம்பான்சி குரங்குகளாக்கியிருக்கின்றனர்.
அரசுத் தரப்பு உயர்நீதிமன்றத்தில் என்ன மயிரை பிடுங்கிக் கொண்டிருந்தது, கைக்கு சொடுக்கு எடுத்துக் கொண்டிருந்தது. அவமானம், அநியாயம்.
இத்தனை ஆண்டுகால விசாரணையும், நாடகமும் உயர் நீதிமன்றங்களால் தூக்கி எறியப்படுகின்றன என்றால் கீழமை நீதிமன்றங்களை மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பி விட வேண்டியதுதானே!
______________________________________________
Amaresh Jha ஃபர்ஸ்ட் போஸ்ட்
குற்றவாளியை விடுவிக்க வேண்டும் என்பது உத்தரவாக இருக்கும் போது காரணங்களை கண்டுபிடிப்பது பெரிய வேலை இல்லை.
நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், நீதி வழங்கப்படுவது போல தோன்றவும் வேண்டும். இந்த வழக்கில் இரண்டும் நடக்கவில்லை. இந்த நாடு ஒரு வாழைப்பழ குடியரசாகி விட்டது. மக்கள் நீதித்துறை மீதும் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். அம்மா பக்தர்கள் மட்டும் வேண்டுமானால் சந்தோஷப்படலாம். ஆனால் இந்தியாவின் மற்றவர்கள் நீதித்துறையின் வீழ்ச்சி குறித்து சோகம் கொண்டாடுகின்றனர்.
____________________________
இந்திய நீதித்துறை
“ஜட்ஜ் சார், டான்ஸ் ஆடலாமா”
குமாரசாமி ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறப் போகிறார். இந்த வழக்கு அவரது ஓய்வு காலத்துக்கு சொத்து சேர்த்துக் கொள்ளவும், அவரது குடும்பத்தின் வருங்கால சந்ததிக்கு விட்டுச் செல்வதற்கான செல்வத்தை சம்பாதிக்கவும் சரியான வாய்ப்பை கொடுத்தது.
அவர் இன்னும் அதிர்ஷ்டமுடையவராக இருந்தால், இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அவரை ஏதாவது கவர்னர் பதவியிலோ அல்லது வேறு உயர்பதவியிலோ பார்க்கலாம். ஏனென்றால், அதற்குள் மக்கள் இந்த வழக்கில் அவரது கணக்குப் பிழை காமெடிகளை மறந்திருப்பார்கள்.
அவர் ஜெயலலிதாவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சரியாக வேலை செய்திருக்கிறார். இப்போது, இந்த வழக்கில் தாங்கள் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாகவும், இப்போது உண்மை வெளியாகியிருப்பதாகவும் சொல்லி தங்களை நேர்மை, பண்பு, நீதி ஆகியவற்றின் உறைவிடமாக சித்தரித்தது மக்களின் அனுதாபத்தை தேட முயற்சிக்கலாம். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகி மாநிலத்தை கொள்ளை அடிக்கலாம். முக்கியமாக, இந்த வழக்கில் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தெய்வத்தின் செயல் என்ற கருத்து இன்னும் வலுப்பெறும். கடவுள் நம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
இன்னொரு முனையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ஜெயாவையும் கூட்டாளிகளையும் தண்டித்து வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்குப் பிறகு உடனடியாக ஒரு முக்கியமில்லாத துறைக்கு மாற்றப்பட்டார்.
இதுதான் இந்த நாட்டில் நேர்மைக்குக் கிடைக்கும் பரிசு. கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டால் நீங்கள் சிறப்பிக்கப்பட்டு, செல்வங்கள் சொரியப்படுவீர்கள். நேர்மையாக இருப்பதற்காக தண்டிக்கப்படுவீர்கள். இது சமீபத்தில் குன்ஹாவுக்கும், கேம்காவுக்கும் நடந்திருக்கிறது.
மேரா பாரத் மஹான்!
_____________________________________
இந்த நீதிபதி காப்பி அடித்து தேர்வில் பாஸ் ஆகியிருப்பார். அதனால்தான் அடிப்படை கணக்கே அவருக்கு தெரியவில்லை. கூடவே, அவர் வாங்கிய சூட்கேசின் கனம் அவரை குருடாக்கியிருக்கும்.
________________________________
விசாரணை நீதிமன்ற தீர்ப்பிலும் சரி, உயர்நீதி மன்ற தீர்ப்பிலும் சரி இன்னும் பல அப்பட்டமான தவறுகள் உள்ளன. இந்த தவறுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு ரூ 30 கோடியை தாண்டும்.
மேலும் வங்கிகளிலும், நிதிநிறுவனங்களில் போடப்பட்டிருந்த பெருமளவு வைப்புநிதிகளுக்கான வட்டி வருமானமாக காட்டப்பட்டுள்ளது. முழுமையான கணக்கு போட்டு சரியான தொகையை வந்தடைய குறைந்தது 15 நாள் பிடிக்கும். அதன்படி அதிகப்படியான சொத்து 8% இல்லை 200% ஆக இருக்கும். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி வெட்கப்பட வேண்டும்.
இந்த மொத்த நாடகத்திலும் ஏதோ சரியில்லை, ஏதோ மிக அழுகிப் போயிருக்கிறது. இந்தியனாக இருக்க நான் அவமானப்படுகிறேன்.
______________________________
இந்திய நீதித்துறை
“நம்மோடது சுதந்திரமான நீதித்துறை. சொந்தமான ஊழல் செய்ய சுதந்திரமானது”
“நான் சீக்கிரம் ஓய்வடையப் போகிறேன். என்னுடைய ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க கொஞ்சம் சட்ட விரோத பணம் தேவைப்படுகிறது. அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்கு அம்மாவிடமிருந்து சிறிது பரிசை பெற்றுக் கொண்டேன். ஏன் நீங்க எல்லாம் பொறாமைப் படுறீங்க, ஆத்திரமப்படுறீங்க. பரிசு என்பது சட்டபூர்வமான பணம்தான், ஏனென்றால் அது பேலன்ஸ் ஷீட்டின் வருமான பக்கத்தில் சேர்க்கப்படுகிறது” – குமார் ஸ்வாமி.
_____________________________
இன்னும் 10 ஆண்டுகள் இப்படியே தொடர்ந்தால், மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று அஞ்சுகிறேன். லல்லு, ஜெயா, சல்லு, ராஜூ எல்லோரும் வெளியே வருகிறார்கள். நீதி கூட வழங்க முடியாத இந்த ஜனநாயகத்தால் என்ன பலன். இந்த ஜோக்கர் ஜனநாயகத்தில் விரைவில் இராணுவ ஆட்சி வந்தே தீரும்.
_____________________________
நீதித்துறை மீது எல்லா நம்பிக்கையையும் இழந்து விட்டேன். நீதிபதிகள் அரசியல்வாதிகள் அளவுக்கு மோசமானவர்கள், ஊழல்வாதிகள். அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை குப்பைத் தொட்டியில் போட வேண்டிய நேரம் வந்து விட்டது.
நீதித்துறையே அழுகி நாறிக் கொண்டிருக்கும் போது, நமது “அறிவார்ந்த” நீதிபதிகள் கொலீஜியத்துக்கும் தேசிய நீதிபதிகள் ஆணையத்துக்கும் இடையே பற்றி கவலைப்படுகிறார்கள். ரோம் எரிந்து கொண்டிருக்கும் போது நீரோ பிடில் வாசித்தது போன்றது இது.
தேசத்தின் ஒவ்வொரு நிறுவனமும் மெதுவாக, ஆனால் உறுதியாக நெறித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.
_______________________________
நீதியை எப்படி கேலிக்கூத்தாகியிருக்கிறார்கள்? இந்த அரசாங்கம் கறாராக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அப்படி எதுவும் இல்லை.
இதுதான் என்னோட இந்தியா! அரசாங்கம் என்ன சொன்னாலும் சரி, அன்னிய முதலீடு இங்க வரப் போறதேயில்லை
இந்தியா ஊழல்மயமாகியிருக்கிறது
ஜெய் ஹிந்த்
(கருத்து நீக்கப்பட்டிருக்கிறது)
_______________________________
ஜெயா விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டலும் இந்தத் தீர்ப்பு நீதித்துறையை கேலிக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால், ஜெயாவின் அடிவருடிகள் கொண்டாடுவதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன.
இந்த கும்பல்களின் நடத்தையைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் கூட்டத்தில் கும்மி அடிக்கின்றனர், எது சரி, எது தவறு என்பதை பிரித்தறிய முடியாதவர்கள்.
நமது நீதித்துறை ஒரு நகைக்கத் தக்கதாகியிருக்கிறது. மிகத் தாழ்ந்த நிலைக்கு தன்னை தாழ்த்திக் கொண்டிருக்கிறது.
(கருத்து நீக்கப்பட்டிருக்கிறது)
____________________________
அவருக்கு (குமாரசாமி) என்ன வயது? ஓய்வடையும் வயது ஆகி விட்டதா? அவருக்கு ஒரு நல்ல ஓய்வூதிய திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறாரா? இது அறியாமல் செய்த தவறு அல்ல, தெரிந்தே செய்த குற்றம். நீதிமன்றங்கள் கால்குலேட்டர்கள் வாங்க முதலீடு செய்யும் என்று நிச்சயமாக நம்பலாம்.
(கருத்து நீக்கப்பட்டிருக்கிறது)
____________________________
ஜெயா-மோடி கும்பலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனநோயாளி இந்த நீதிபதி
தீர்ப்பு ஜெயாவாலேயே எழுதப்பட்டிருக்கலாம். அவருக்கு கணக்கு வராது என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.
______________________________
இப்படிப்பட்ட விஷயங்கள் தொடர்ந்தால் நடந்தால் மிகச் சமீபத்தில் புரட்சி நடப்பதை தவிர்க்க முடியாது. சாதாரண குடிமக்களின் இறுதிப் புகலிடம் நீதித்துறைதான். இப்போது அவன் அந்த நம்பிக்கையையும் இழந்து விட்டான். கையில் இருக்கும் ஒரே தேர்வு புரட்சிதான்.
____________________________
பெரும்பான்மையானவர்களை விலைக்கு வாங்கவும், விற்கவும் முடியும் என்பது தெளிவாக, எளிமையாக நிரூபணமாகியிருக்கிறது.
____________________________
தண்டனை, சிறை, அபராதங்கள் எல்லாம் சாதாரண குடிமகனுக்கும் ஏழைகளுக்கும்தான். பணக்காரர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.
____________________________
சென்னையில் நடந்த மிக எளிமையான திருமணம் அம்மாவின் வளர்ப்பு மகனுடையது (இப்போது அவர் ஒரு அநாதை). வீடியோக்களிலும் நேரிலும் அதை பார்த்தவர்கள் அம்மா ஒரு கிழிந்த காட்டன் சாரியும் உருத்திராட்ச மாலையும் உடுத்தி நின்றதையும், ஊர்வலத்தில் ஒரு சிலர் மட்டுமே போனதையும் பற்றி சொல்ல முடியும். இப்போது, குறைந்தபட்சம் கற்றறிந்த நீதிபதி மாண்புமிகு குமாரஸ்வாமி ஜி அதை புரிந்து கொண்டுள்ளார்.
ஆடுங்க பக்தர்களே ஆடுங்க… அடிடா மேளம், குத்துடா கும்மி, அஜக்டா அஜக்டா அகஜ் அஜக்.
____________________________
அரசுத் தரப்பு தி.மு.க.வும் சுப்பிரமணியசாமியும் கொடுத்த கால்குலேட்டரை பயன்படுத்தியது. அ.தி.மு.க சொந்த கால்குலேட்டரை பயன்படுத்தியது. இப்போது, நீதிபதி குமாரசாமி அ.தி.மு.க கொடுத்த கால்குலேட்டரை பயன்படுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது.
ஏனென்றால், அ.தி.மு.க தயாரித்து வழங்கிய கால்குலேட்டரை பயன்படுத்துவதற்கு அவருக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வருவாய்க்கு அதிகமான சொத்தை அளந்து, அது உச்சநீதிமன்றத்தின் வரையறைக்கு கீழே இருக்கும்படி கணக்கு போடும் திறமை உடையது அது.
நமது நீதிபதிகள் இவ்வளவு கேவலமானவர்களா!. குமாரஸ்வாமியை உரிமை மீறல் தீர்மானம் அல்லது பொதுநல வழக்கு மூலம் நீக்க முடியாதா! அவரது நேர்மை கேள்விக்குரியது.
____________________________
சட்டத்தை பயன்படுத்துவது, அல்லது தவறாக பயன்படுத்துவதில், அதுவும் இவ்வளவு பெரிய பிரச்சனையில் வித்தியாசம் சிறிதளவு இருக்கலாம். இப்போது பார்த்தது போல எதிரெதிராக இருக்க முடியாது. ஒரே விதிமுறை இரண்டு நீதிபதிகளால் எப்படி இவ்வளவு வேறுபட்ட முறையில் பயன்படுத்த முடியும்? இந்தியாவின் நீதி வழங்கும் முறையில் ஏதோ பிரச்சனை உள்ளது. ஜனநாயகம் என்ற பெயரில் நன்கு அடையாளம் காணப்பட்ட கிரிமினல்கள் பற்றி விவாதித்து, மதிப்பீடு செய்ய பொதுப் பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.
____________________________
வழக்கறிஞர்கள் அடிப்படை கணக்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வினோதம்… கோடிகளில் கணக்கு போடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஜெயா நீதிபதியுடைய அம்மா என்று நினைத்துக் கொண்டு அலட்சியமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
____________________________
bss • 9 hours ago டெக்கான் ஹெரால்ட்
பிழையான கணக்கு போட்ட இந்த தீர்ப்பு நீதித்துறை மீதான களங்கம். இந்த அம்மாவின் ஊழல் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், சட்டத்துக்கு சாட்சியங்கள் தேவை. ஆதாரங்கள் இப்படி மோசடியாக கையாளப்பட்டால் நீதித்துறையின் புனிதத்தை யார் காப்பாற்ற முடியும்?
அரசியல் கிரிமினல் மயமாவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது நீதித்துறையின் முரண்பாட்டை பார்க்கிறோம். கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் தன்னம்பிக்கை என்னாகும்?
____________________________
Subramanian Thangavelu • 5 hours ago டெக்கான் ஹெரால்ட்
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே மக்களின் நம்பிக்கை இந்த அளவு தாழ்ந்து போனதில்லை. ஒரு ஜனநாயகத்தில் நீதித்துறை மீதான நம்பிக்கை அரிக்கப்படுவது ஜனநாயகத்துக்கே மிக அபாயகரமானது. ஏனெனில், ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்கள், நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் ஆணையம் போன்றவை தவறிழைக்கும் போது மக்கள் நிவாரணத்துக்கும் தீர்வுக்கும் இறுதி புகலிடமாக இருப்பது நீதித்துறை.
____________________________
நீதிமன்றத்தின் கணக்கு போடும் தவறுகளுக்கு குடிமக்கள் ஏன் அனுபவிக்க வேண்டும்? நீதிமன்றங்களும், நீதிபதிகளும் இழைக்கும் இத்தகைய ஆயிரக்கணக்கான தவறுகளால், மதிப்புக்குரிய குடிமக்கள் பலர் அவதிப்படுகின்றனர். நீதிபதி அவரது தவறுக்காக ஏன் தண்டிக்கப்படக் கூடாது.
எத்தகைய தவறையும் செய்து விட்டு ஒரு நீதிபதி தப்பி விட முடியுமா?
இது முழுக்க முழுக்க அபத்தமானது.
நீதிமன்றங்கள், நீதித்துறை விபச்சார விடுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.
இந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நரகத் தீயில் வேக வைக்கப்படுவார்கள்.
தெல்கியை ஏன் விடுவிக்கக் கூடாது. அவரும் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், தேச விரோதிகள் அணியில் இருப்பவர்தானே!
கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் ரெட்டி, சல்மான், ஜெயலலிதா, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் இன்னும் பலர் வெளியில் விடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நாட்டை கொள்ளை அடிப்பவர்களுடன் இணைந்து கொள்ளலாம்.
வனத்துறை அதிகாரிகளாலும், காவல் துறை அதிகாரிகளாலும் உருவாக்கப்பட்ட வீரப்பன் இன்றைக்கு உயிரோடு இருந்தால் அவரும் விடுவிக்கப்பட்டு ஒரு அமைச்சர் ஆகியிருப்பார்.
இப்போது, தாவூத் இப்ராகிமின் முறை. அவர் சரணடைய வேண்டும், குற்றமற்றவர் என்று விடுதலை பெற்று, சுதந்திரமாக வாழலாம்.
நமது நாடு நாய்களுக்கு பிய்த்து போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
____________________________
இந்திய உயர்நீதி மன்றங்கள் ஊழலின் சாக்கடை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பணக்காரர்களும் அதிகாரம் படைத்தவர்களும் சிறையிலிருந்து விடுதலையை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இந்திய நீதித் துறை ஒரு மோசடி.
____________________________
Dhokla Bhai • 2 days ago டெக்கான் ஹெரால்ட்ஒட்டுமொத்த அரசு எந்திரமும் தன்னுடைய பையில் வைத்திருக்கும் அவர் தண்டிக்கப்படுவது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.
இதே முறையில்தான் நமது மதிப்பிற்குரிய பிரதமர் குஜராத் கலவரங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
____________________________
Nag • 2 days ago
ஊழல் ஏவ ஜெயதே.
ஜி.எஸ்.டி-யுடன் ஒரு ஊழல் கூடுதல் வரியைச் சேர்ந்து ஜனநாயகத்தின் எல்லா தூண்களுக்கும் வினியோகித்து விடலாம். குடிமக்களை தோலுரிக்காமல், சேவை வழங்கும்படி அவர்களை வேண்டிக் கொள்ளலாம்.
(கருத்து நீக்கப்பட்டிருக்கிறது)
____________________________
Truth Be Dared • 14 hours ago டெக்கான் ஹெரால்ட்
இந்த வெளிப்படையான பிழை கடந்த 19 ஆண்டுகளாக வழக்கு நடந்த போது கண்டுபிடிக்கப்படவில்லையாம்… என்ன ஒரு கேலிக்குரிய நீதிமுறை. ஊழலற்ற இந்தியாவுக்கான எல்லா நம்பிக்கைகளும் நாசமாகப் போய் விட்டன.
மேலே தரப்பட்டிக்கும் கருத்துக்கள் எடுக்கப்பட்ட செய்திகள் கட்டுரைகள்
  1. “ஜெயலலிதா தீர்ப்பில் வெளிப்படையாக தவறுகள் உள்ளன – அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா” – Public prosecutor BV Acharya says Jayalalithaa judgement has glaring errors
  2. “ஜெயலலிதா குற்றவாளியாக இல்லாமல் இருக்கலாம், நீதித்துறை குற்றவாளி”- Bad day for justice: Jayalalithaa may not be guilty, but the judicial system is
  3. “அம்மாவின் மீட்சி தி.மு.க.வுக்கு சாவு மணி அடிப்பு” – Jaya acquitted in DA case: Amma’s comeback rings death-knell for DMK
  4. “ஜெயலலிதாவின் விடுதலை ஒட்டுமொத்த நாட்டுக்கும் மோசமான அறிகுறி” – ‘Jayalalithaa’s acquittal is a bad omen for the entire country’
  5. ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து கணக்கிடுவதில் பிழை என்ற கட்டுரை  – Judgement error? Jayalalithaa’s disproportionate assets may be 76% and not 8.12% 
  6. அரசு வழக்கறிஞர் ஜெயா வழக்கில் குறை கண்டுபிடிப்பு – SPP finds fault with calculation of DA in Jayalalitha judgement
NANTRIvinavu.com