உலகச் செய்திகள்

.
ஜெயலலிதா விடுதலை

ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறினார் மோடி

நேபாள நிலநடுக்கத்தில் இலங்கைக்கான தூதரகத்துக்கு சேதம் 

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

 பாகிஸ்தானில் பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் : 41 பேர் பலி

அமெரிக்காவில் புகையிரத விபத்து : 7 பேர் பலி

ஜெயலலிதா விடுதலை

11/05/2015 சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு  பிணை வழங்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேன் முறையீட்டு மனு  இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கர்நாடக  உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் இறுதி நாளான இன்று கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலருமான ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெ.யின் தோழி சசிகலா அவரின் உறவினர்கள் சுதாகரன்இ இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றில்  18 ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும் தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும் மற்ற மூவருக்கும்இ தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து  ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் உடனடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றம் அளித்த பிணையின்அடிப்படையில் நான்கு பேரும் வெளியில் வந்தனர். 
நீதிமன்ற தீர்ப்பு மீது கேள்வி எழுப்பி ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் கர்நாடகா உயர் நீதிமன்றில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பாக 41 நாட்கள் விசாரணையை நிறைவு செய்த நீதிபதி குமாரசாமி இன்று காலை 11:00 மணிக்கு தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் தமிழகம் எங்கும் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று காலை முதல் வணக்கஸ்தலங்களில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்று வந்தன. ஜெயலலிதா விடுதலையான செய்தி அறிந்தவுடன் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறினார் மோடி

12/05/2015 அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியது.
அதில், ஜெயலலிதா  உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதாகவும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.   நன்றி வீரகேசரி 


நேபாள நிலநடுக்கத்தில் இலங்கைக்கான தூதரகத்துக்கு சேதம் 

12/05/2015 நேபாளத்தில் இன்று இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள இலங்கைக்கான தூதரகத்துக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தூதரகத்தில் பணியாற்றும் எவருக்கும் எந்தப்பாதிப்பும் இல்லையெனவும் அந்நாட்டிலுள்ள தூதரகத்துடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
நோபளத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தின் பின்னர் அங்குள்ள இலங்கையர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைக்கப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.     நன்றி வீரகேசரி 
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு


12/05/2015 நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி  பாகிஸ்தானில் பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் : 41 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 41 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த 6 ஆயுதம் தாங்கிய நபர்களே குறித்த பயணிகள் பஸ்ஸை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.    நன்றி வீரகேசரி 

அமெரிக்காவில் புகையிரத விபத்து : 7 பேர் பலி


14/05/2015 அமெ­ரிக்க பில­டெல்­பியா பிராந்­தி­யத்தில் பய­ணிகள் புகை­யி­ர­த­மொன்று செவ்­வாய்க்­கி­ழமை மாலை விபத்­துக்­குள்­ளா­னதில் குறைந்­தது 7 பேர் பலி­யா­ன­துடன் பெருந்­தொ­கை­யானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

வாஷிங்டன் நக­ருக்கும் நியூயோர்க் நக­ருக்­கு­மி­டையில் 240 க்கு மேற்­பட்ட பய­ணி­களை ஏற்றிக் கொண்டு பய­ணித்த 188 ஆம் இலக்க புகை­யி­ர­தமே இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.
இந்த விபத்தின் போது அந்த புகை­யி­ர­தத்தின் 10 பெட்­டிகள் குடை­சாய்ந்­துள்­ளன.

இந்­நி­லையில் சரிந்து விழுந்த புகை­யி­ரதப் பெட்­டி­களில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணியில் மீட்புப் பணியா ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 


No comments: