வாழ்வா? சாவா? மரணத்தின் தருணத்தில் ஒரு தமிழ் இளைஞன்

.
பத்து மாதத்தில் மகனின் பிறப்புக்குக்காக காத்திருந்த தாய் பத்து ஆண்டுகளாக தன் மகன்வாழ்வானா  வீழ்வானா எனக்  காத்திருக்கும் கொடுமை
” பாலி நைன் “ மயூரன் சுகுமாரன் உயிர் ஊசலாடுகிறது.
வழக்குரைஞர் சந்திரிகா சுப்ரமண்யன்


உன்னை நான் சுமந்த ஒவ்வொரு மணித்துளியும்  
என் கண் முன் நீ வாழ்வாய் என்றே எண்ணியிருந்தேன்.
மரணத்தின் வாசலில் நீ மணிக்கணக்காய் காத்திருக்க
மனம் இரங்க நானும்  மண்டியிட்டு வேண்டி நின்றேன்
ஒரு தாயின் தவிப்பு இது என்பதே உண்மை.
என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்அவன் செய்ததவறுக்காக அவனை மன்னித்துவிடுங்கள்” என்று  கதறுகிறார் ,  மயூரனின்  தாய் ராஜினிபத்துமாதத்தில் மகனின் பிறப்புக்குக்காக காத்திருந்த அந்தத்தாய் பத்து ஆண்டுகளாக தன் மகனின்வாழ்க்கைக்காகக் காத்திருந்தது போன்ற அவஸ்தையும் கொடுமையும் எந்தத் தாயினாலும்தாங்க முடியாத ஒன்றாகும்.



என் பேரனை மன்னித்து அவரை உயிர் வாழ விடுங்கள் “பாட்டி எடித் கோரிக்கைவிடுத்துள்ளார்.
மயூரனின் தங்கையான பிருந்தா சுகுமாரன் இத் குறித்து , “இந்தொனேசிய போலிசாருக்குஅவுஸ்திரேலிய மத்திய பொலிசார் (Australian Federal Police)  கொடுத்த தகவலின்அடிப்படையிலேயே இந்தக் கைது நடந்தது . ஏற்கனவே நூயன் என்ற வியட்னாம் வம்சாவளிஆஸ்திரேலிய  பிரஜைக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை வழங்கப்பட்டது தெரிந்திருந்தும்அவுஸ்திரேலிய அரசு தனது குடிமக்களை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திடம் ஏன் காட்டிக்கொடுத்ததுஇதனால் இவர்கள் எதை சாதித்து விட்டார்கள்அவர்களுடைய குற்றத்தை ஏன்அவுஸ்திரேலியாவில் விசாரித்து தண்டனை வழங்கியிருக்கக் கூடாதுதமது குடிமக்கள்தூக்கிலிடப் படுவார்கள் எனத் தெரிந்திருந்தும்கூட ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்கள்?”என்று கேட்டிருக்கிறார். “மயூரனைத் தூக்கிலிடுவதன் மூலம் அவர் மட்டும்இறக்கப்போவதில்லை” அப்பாஅம்மாநான்தம்பி மற்றும் அவருடைய நண்பர்கள்அனைவரும் ஒரு நிரந்தரமான இழப்புடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்அந்த இழப்பிலிருந்து எங்களால் என்றும் மீள முடியாது”. என்கிறார் மயூரனின்தங்கை பிருந்தா சுகுமாரன்.
வாழ்க்கையின் நோக்கங்கள் எவை என்று புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து விடேன் என  நான்கவலைப்படுகிறேன்சிறை எனக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்துவிட்டது” என்கிறார்மயூரன்.
தற்போது  மயூரன் குடும்பத்தினர் மயூரனது பொருட்களை சிறைச்சாலையிலிந்து  எடுத்துவந்து விட்டனர்.அவர்கள் திரும்பியும் அவந்து விட்டனர்.


ஆஸ்திரேலியாவின் ஆறு பிரதமர்கள் இணைந்து மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்பொது மக்கள்  ஒன்றரை இலட்சம் பேர் இணைந்துவேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய பிரதமர்  டோனி அப்பொட் தனது கடைசி கட்ட கோரிக்கையாக ” சுனாமிவந்தபோது இந்தோனேசியாவுக்கு நாம் செய்த உதவியைக் கருத்தில்  கொண்டு பிரதி பலனாகஇந்த இருவரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்தனேசிய மக்கள் இணைந்து தூக்கு தண்டனை தவறென்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்தனேசிய கவர்னர் மயூரனின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதே சரி என்றிருக்கிறார்.
மயூரனுக்கு கேர்டின் பல்கலைக்கழகம் நுண்கலையில் இணை இளம் கலைப் பட்டம்வழங்கியுள்ளது.
தனது இருபத்து நான்கு  வயதில் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறை வாசத்தின்பின் தற்போது தூக்குத் தண்டனைக்  கைதியாக மரண அவஸ்தையுடன் , மரண தண்டனையைநிறைவேற்றுவதற்குப் பொறுப்பான இந்தோனேஷிய காவல் குழுவின் (Death Squad)துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் குண்டுகள் எந்த நிமிடத்திலும் தன்  உயிரைக்குடிக்கலாம் என்ற நிலையில் மயூரனின் மன(ரண)ப் போராட்டம் இருக்கிறது.
மயூரன் சுகுமாரன் இலங்கை தமிழ் பெற்றோரான சுகுமாரன் - ராஜினி தம்பதிகளுக்கு மூத்தபிள்ளையாக 1981 இல் இங்கிலாந்தில் பிறந்தார். 1984 இல் பெற்றோருடன்அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அங்கேயே  வளர்ந்தவர்தற்காப்பு கலையில்வல்லவரான மயூரன்அதில் பயிற்சி அளித்தும் வந்தார்தவறான சகவாசங்களும் போதனைகளும்இளம் வயதிற்குரிய சவாலை எதிர் கொள்ளும் மனப்பாங்கும் தான்மயூரனையும் அவரது ஏனைய நண்பர்களையும் இவ்வாறானதொரு சட்டத்திற்கு புறம்பானசெயலில் ஈடுபட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்தோனேசியாவில் ,  பாலியில்வைத்து   ஏப்ரல் 17, 2005 இல் கைது செய்யப்பட்டார்.  "பாலி ஒன்பதுஎன்ற  பெயருடன்இவ்வழக்கு பதிவாகியதுஅண்ட்ரூ சான்சீ யி சென்மைக்கல் சூகாஜ்ரினாய் லோரென்ஸ்(பெண்), டாக் டுக் தான் நியூவென்மாத்தியூ நோர்மன்ஸ்கொட் ரஷ்மார்ட்டின் ஸ்டீபன்ஸ்,மயூரன் சுகுமாரன்  ஆகிய அந்த  ஒன்பது பேர்களின் தலைவர்களில்  முக்கியமான நபராகமயூரன் சுகுமாரன் கருதப்பட்டார்.
ஒன்பது பேரில் முதல் நான்கு பேர் மைக்கல் சூகாஜ்ரினாய் லோரென்ஸ் (பெண்), ஸ்கொட்ரஷ்மார்ட்டின் ஸ்டீபன்ஸ் ஆகியோர் பாலியின் அனைத்துலக விமானநிலையத்தில்அவுஸ்திரேலியாவுக்கு செல்லக் காத்திருக்கும் போது தமது உடம்புடன் சேர்த்து மொத்தம் 8.3கிகி போதைப் பொருளைக் கட்டி எடுத்துக் கொண்டு போக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக்கைது செய்யப்பட்டனர்மயூரனும் மேலும் மூன்று பேர் பாலியில் உள்ள விடுதி ஒன்றில்வைத்து 350 கிராம் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்மயூரனே மற்றவர்களின்உடலில் போதைப் பொருளைக் கட்ட உதவியவர் என்று குற்றஞ் சாட்டப்பட்டது .ஆனாலும்மயூரன் தனக்கும் இதற்கும் ஒரு தொடர்புமிருக்கவில்லை என மறுத்தார்தொடர்ந்துஆண்ட்ரூ சான் கைது செய்யப்பட்டார்.

பாலியின் டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு ,  பெப்ரவரி 13, 2006 இல்லோரன்ஸ்ரஷ் இருவருக்கும் ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுஇதற்குஅடுத்த நாள் பெப்ரவரி 14,2006 இல் சூகாஜ்ஸ்டீபன்ஸ் இருவருக்கும் ஆயுட்காலச்சிறைத்தண்டனையும்ஒன்பது பேர்களின் தலைவர்களான சான் மற்றும் மயூரன்இருவருக்கும் சுட்டுக் கொல்லும் முறையிலான மரண தண்டனை விதித்துத்தீர்ப்பளிக்கப்பட்டதுஇப்படியான மரணதண்டனைத் தீர்ப்பு அந்த நீதிமன்றின் வரலாற்றில்முதற்தடவையாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
சுகுமாரனின் மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து,  பாலி உயர்நீதிமன்றம் 2011  ஜூலை ஆறாம் தேதி  மரணதண்டனையை உறுதிப்படுத்தியது.தொடர்ந்து பொது மன்னிப்புக்குவிண்ணப்பிக்கப்பட்டதுஇந்தனேசியாவின் தலைவர்ஜோக்கோ விடோடோவினால் , 2014டிசம்பர் 30 அன்று சுகுமாரனின் பொதுமன்னிப்புக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.மயூரன் தற்போது பாலி கெரொபோக்கான் சிறைச்சாலையில்  மரணத்தை எதிர் நோக்கிஇருக்கிறார்.

பாடசாலைப் படிப்பு முடிந்ததும் வங்கி ஒன்றிலும் பின்னர் சிட்னியில் கடவுச்சீட்டுஅலுவலகத்திலும் பணி புரிந்த மயூரன் நண்பர்களின் தூண்டுதலால் போதைக் கடத்தல்கும்பலுடன் இணைந்தார்மயூரன் அவரது 24வது பிறந்தநாளான 2005 ஏப்ரல் 17 அன்று  பாலியில்வைத்து மேலும் 8 அவுஸ்திரேலியர்களுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார்.
மயூரனுடன் குற்றம் இழைத்த ஸ்கொட் ரஷ் என்பவரின் தந்தை லீ ரஷ்தனது மகனின்நடத்தையில் சந்தேகப்பட்டுசம்பவம் நடப்பதற்கு முன்னர் அவுஸ்திரேலிய நடுவண் அரசின்காவல்துறையினருக்கு தெரிவித்ததை தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன்னரேஅவுஸ்திரேலியப் பொலீஸ் கொடுத்த தகவலின் பேரில் இந்தக் கைதுகள் நடந்தன.
அப்போது பிரதமராக இருந்த , அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் இது குறித்துக்கருத்துத் தெரிவிக்கும் போது, "அவுஸ்திரேலிய அரசு மரண தண்டனையை எதிர்க்கிறதுஎன்றும் வேறொரு நாடொன்றின் அவுஸ்திரேலியர் ஒருவருக்கு மரண தண்டனைவிதிக்கப்படும் போது தண்டனையை நிறுத்தும்படி அந்நாட்டு அரசை நாம் முறைப்படிகேட்போம்என்றார்.
இந்தோனேசிய சட்டத்தின் படி போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வழங்கமுடியாதென மயூரன்சான்மற்றும் ரஷ் ஆகியோர் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.இதனை விசாரித்த 9 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு இவ்வழக்கை அக்டோபர் 30, 2007இல்தள்ளுபடி செய்ததுஆனாலும் 9 நீதிபதிகளில் மூன்று பேர் மரணதண்டனை சட்டத்துக்குவிரோதமானது எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் மரண தண்டனை
1973 இலிருந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் முறை அவுஸ்திரேலியாவில் முற்றாக நீக்கப்பட்டதுஅத்துடன் மரண தண்டனைக்கு எதிரான தனது நிலைப்பாட்டைசர்வதேச மன்றங்களில் அவுஸ்திரேலியா தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளதுமரணதண்டனையை சர்வதேச ரீதியாக இல்லாதொழிப்பதை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள்சபையின் தீர்மானத்தில் 1990 இல் ஏற்றுக் கொண்ட அவுஸ்திரேலியாஅத்தீர்மானத்தில்கையொப்பமிட்ட அனைத்து உறுப்பு நாடுகளும் தமது நீதி பரிபாலன முறையிலிருந்து மரணதண்டனையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திவந்துள்ளது.
1990 களில் போதைப் பொருட்களுடன் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இருஅவுஸ்திரேலியர்களுக்கு மலேசிய நீதிமன்றம் விதித்த மரண தண்டனையிலிருந்துமன்னிப்பு அளிக்கும்படிஅந்நாளில் பிரதமராயிருந்த பாப் ஹாக் (Bob Hawke) மலேசியஅரசாங்கத்தை மிக உருக்கமாக வேண்டினார்அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு,பின்பு அவர்கள் தூக்கிலிடப்பட்ட செயலை “காட்டுமிராண்டித்தனம்” என அவர் வர்ணித்துமலேசியரின் கோபத்துக்கு ஆளானார்.
2005 இல்சிங்கப்பூரில் போதைபொருட்களுடன் கைது செய்யப் பட்ட வான் ருவோங் ங்குயென் ( Van Tuong Nguyen ) என்ற அவுஸ்திரேலியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததுஅவரை மன்னிக்குபடி அவுஸ்திரேலிய பாராளுமன்றம் நிறைவேற்றியவேண்டுகோள் தீர்மானத்தையும் புறக்கணித்து சிங்கப்பூர் அரசாங்கம் அவரை தூக்கிலிட்டது.அப்போதைய அவுஸ்திரேலிய பிரதமராயிருந்த ஜோன் ஹவர்ட் (John Howard) ஐந்து தடவைக்குமேலாக சிங்கப்பூர் பிரதமருக்கு தனிப்பட்ட முறையிலான மன்னிப்பு வேண்டுகோளைவிடுத்திருந்தார்இந்த பின்னணியிலேதான் மயூரன் சுகுமாரன் உட்பட்ட 9 பேர் பாலியில் கைதுசெய்யப்பட்டனர்இந்தொனேசியாவில் மரண தண்டனைக்கு உள்ளாவார்கள் எனத்தெரிந்திருந்தும் அவுஸ்திரேலிய அரசு தனது குடிமக்களை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திடம், , இந்த ”போட்டுக் கொடுத்த” சம்பவத்தை அவுஸ்திரேலிய அரசு தவிர்த்து இருக்கலாம்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை அனுசரிக்கும்இந்தோனேஷிய அரசாங்கம் அண்மையில் ஆறு பேர் மீதான மரணதண்டனையைநிறைவேற்றியதுஇவர்களில் ஐந்து பேர் வெளிநாட்டுப் பிரஜைகள்இவர்களில் பிரேசில்,நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்தமது பிரஜைகள் மீதானமரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து பிரேசிலும்நெதர்லாந்தும் ஆத்திரத்தைவெளிப்படுத்தினதமது தூதுவர்களையும் திருப்பி அழைத்திருந்தன.
ஆனால் ஆஸ்திரேலிய தனது நடவடிக்கைகளை அடக்கியே வாசிக்கிறதுகாரணம்,ஏற்கனவே இந்தோனேசியவ்டன் ஆஸ்திரேலிய உறவுகள் சொல்லும் படியாக இல்லைஎன்பதே.    இந்தோனேசியாவின் முன்னாள் ஜனாதிபதியை அவுஸ்திரேலிய உளவுபார்த்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்இந்தோனேசியாவில் இருந்துஅவுஸ்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் அகதிப் படகுகளை திருப்பி அனுப்பியமைபோன்ற விவகாரங்களினால் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தனஇந்த உறவுகளைபுனரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில்மயூரன் – சான் விவகாரத்தைக்கையாள்வதற்காக அவுஸ்திரேலியாகள் கடுமையான நிலைப்பாட்டை அனுசரிப்பார்களாஎன்பது சந்தேகமானது தான்.
கருணை மனு நிராரிக்கப்பட்டதாக தகவல் தெரிந்த போது  மயூரன் முன்வைத்த ” ” என்னைக்கொல்வதால் கிடைக்கக்கூடிய பயன் என்ன ”  என்ர ஒற்றை கேள்விக்கு இன்றுஅவுஸ்திரேலிய ஊடகங்கள் முன்னுரிமை அளித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.மயூரன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் , அதன் தாக்கத்தையும் புரிந்துகொண்டிருக்கிறார்மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தியுள்ளார்படைப்பாளியாக மாறியுள்ளதுடன் சககைதிகளையும் நல்வழிப்படுத்துவதில் மயூரன் வெற்றி கண்டுள்ளதாக சிறைச்சாலைவட்டாரங்கள் அறிவித்துள்ளனகைதிகளின் நலன்களைக் கவனிப்பதுசீர்திருத்தவேலைகளைக் கவனிப்பது என்பவற்றுடன் சககைதிகளுக்கு ஓவியம் வரையக்கற்றுக்கொடுக்கிறார்தானும் ஓவியம் தீட்டுகிறார்பாலியின் தலைநகரத்தில் ஒரு ஓவியக்கண்காட்சியை ஏற்பாடு செய்து சிறைக்குள் வரையப்பட்ட ஓவியங்களை விற்பனைசெய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தில்போதைப்பொருள் பாவனையிலிருந்து மீளவிரும்புபவர்களுக்கான உதவி நிலையம் ஒன்றை பாலியில் இயங்கச் செய்கிறார்
பாலியின் கெரபொக்கான் சிறைச்சாலையின் பிரதமப் பொறுப்பதிகாரி ” மயூரன் சிறைக்குள்ளேஒரு முன்னுதாரணமான மனிதராக விளங்குகிறார் எனவும் அவர் செய்த தவறை மீண்டும்செய்யமாட்டார் எனத்தாம் முழுமனதுடன் நம்புவதாகவும் அவருடைய மரண தண்டனையைஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் ” எனவும் இந்தோனேசிய உயர் நீதிமன்றத்தில்வேண்டினார்.
ஒரு நாடு தனது சட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் அடுத்தவர் தலையிட முடியாது.ஆனால் இன்னொரு நாட்டு பிரஜை எனும் போது  அரசியல் ரீதியான  சில சிக்கல்கள்உள்ளதென்பதை  மறுக்க முடியாது.
ஜே.ஆர்.ஆர்.ரொல்கீன்” உயிர் வாழும் பலர் மரண தண்டனை பெற வேண்டியவர்கள்மரணதண்டனை பெறவுள்ள பலர் உயிர் வாழ வேண்டியவர்கள்உங்களால் உயிரைத் தர முடியுமா?”எனக் கூறுகிறார்.
இன்றைய நிலையில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆசிய நாடுகள் மரண தண்டனையைஅகற்றிவிட்டன.உலகிலேயே இன்று அதிகமான மரண தண்டனை நிறைவேற்றப்படும்நாடுகளாக சீனாஈரான்அமெரிக்காவியட்நாம்சூடான் ஆகியவை விளங்குகின்றன.
ஜெனீவாவில் மார்ச் 2007இல்  நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்சங்கத்தின் மாநாட்டில்வன்முறை சம்பந்தப்படாத குற்றங்களுக்கு மரண தண்டனைவிதிப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்ற வாதத்தைச் சர்வதேசச் சட்டத்தின்அடிப்படையில் வலியுறுத்திநியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியரான பிலிப்ஆல்ஸ்ரன் முன்வைத்தார்.
இங்கிலாந்தில் கொலைக் குற்றஞ் சாட்டப்பட்டு, 1953இல் பெருந் தொகையான மக்களதுஎதிர்ப்பின் மத்தியில் டெரெக் பெண்ட்லி தூக்கில் தொங்கவிடப்பட்டபோது அவருக்கு 19 வயது.அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தவறானது என்றும் ஆனால் குற்றச் செயலில் அவர்பங்கெடுத்தமைக்காக அவருக்குப் பகுதி மன்னிப்பு (இறந்த பின்புவழங்குவதாயும் 1993இல்(சரியாக 40 வருடங்களின் பின்அப்போதைய உள்துறை அமைச்சர் அறிவித்தார். 1998இல்அப்பீல் நீதிமன்றம் பெண்ட்லி குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கியதுதவறான நீதிமுறையினால் பறிக்கப்பட்ட உயிரை மீண்டும் கொண்டுவர முடியுமா?
மரண தண்டனைக் கைதியாக இருந்த வால்மீகி முனிவர் மன்னிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட பின்னரே இராமாயணத்தை எழுதினார்.அப்ப்டி ஒரு சந்தர்ப்பத்தை மயூரனுக்கும் சானுக்கும் வழன்காமலேயே
குற்றவாளிகளை திருத்துவதே தண்டனையின் நோக்கமாக இருக்க வேண்டும்.ஓர் உயிரப்பறிப்பதால் குற்றம் நேர் செய்யபடுவதில்லைஅப்படிப் பார்த்தால் , 2002 இலும் 2005 இலும் பாலியில் 130 ஆஸ்திரேலியர்களை குண்டு வைத்துக் கொன்ற 36 தீவிரவாதிகள் விடுதலைசெய்யப்பட்டு வெளியில் நடமாடுகின்றனர்.

No comments: