திருக்குறள் போட்டிகள் – 2015 03.08



இப்போட்டிகள் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. போட்டிகளின் முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் மின்னஞ்சல் அல்லது  தொலைபேசி மூலம் அறியத்தரப்படும். போட்டிக்கான பரிசுகளும், சான்றிதழ்களும் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் அடுத்து நடத்தும் விழாவில் வழங்கப்படும்.
போட்டி நடத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்.

பிரிவுகள்    பிறந்த திகதி விவரம்

பாலர் ஆரம்பப்பிரிவு    8.03.2010 இலும் அதற்குப் பின்னரும் பிறந்தவர்கள்
பாலர் பிரிவு    8.03.2008 முதல் 7.03.2010  வரை பிறந்தவர்கள்
கீழ்ப்பிரிவு    8.03.2006 முதல் 7.03.2008  வரை பிறந்தவர்கள்
மத்திய பிரிவு.     8.03.2003 முதல் 7.03.2006  வரை பிறந்தவர்கள்
மேற்பிரிவு    8.03.2000 முதல் 7.03.2003 வரை பிறந்தவர்கள்
அதிமேற்பிரிவு    8.03.1996 முதல் 7.03.2000 வரை பிறந்தவர்கள்

போட்டிகளுக்கான விவரங்கள்
போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவம், மனனம் செய்யவேண்டிய குறள்களின் விவரங்களை பின்வரும் போட்டிக்குழு அங்கத்தினர்களிடமும்,  தமிழ்முரசு அவுஸ்திரேலியா  (www.tamilmurasuaustralia.com)  இணையத்தளப் பத்திரிகையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.


திருமதி கனகாம்பிகை ஜெகநாதன்        - 02 9643 7054
திருமதி பிரேமினி ராஜலிங்கம்        - 0469 573 518
திரு அன்பு ஜெயா                 - 0423 515 263
திரு பஞ்சாட்சரம் பரமசாமி            - 02 9643 5224
திரு குமார் கருணாசலதேவா            - 0418 442 674


விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 01 March 2015 க்கு முன்பாக கிடைக்கக்கூடியதாக  tikmkural@gmail.com அல்லது மன்றத்தின் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். ஒருவர் அந்தந்த வயதுக்கேற்ற போட்டிகளில் பங்கு பெறலாம் . ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக $5, போட்டி நடைபெறும் தினத்தில் பெறப்படுகிறது.
Send application forms to: tikmkural@gmail.com or to the above address by 1 March 2015.




திருக்குறள் மனனப் போட்டி

பாலர் ஆரம்பப் பிரிவு

கீழே கொடுக்கப்பட்ட குறள்கள் இரண்டையும் மனனம் செய்திருக்கவேண்டும்.

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

2. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.



பாலர் பிரிவு

கீழே கொடுக்கப்பட்ட குறள்கள் நான்கையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

2. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

3. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

4. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.





கீழ்ப்பிரிவு
கீழே கொடுக்கப்பட்ட ஆறு குறள்களையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓப்புவான் இல். 
2. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 
3. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு. 
4. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினாற் சுட்ட வடு. 
5. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 
ஆவது போலக் கெடும். 
6. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 








மத்திய பிரிவு
கீழே கொடுக்கப்பட்ட எட்டு குறள்களையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.
1. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்.
2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும். 
3. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல். 
4. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. 
5. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது. 
6. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 
7. தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும். 
8. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு. 










மேற்பிரிவு 
கீழே கொடுக்கப்பட்ட ஐந்து குறள்களையும் மனனம் செய்து, அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும்.

1. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால்இ அவர் கற்ற கல்வியால் விளையக்கூடிய பயன் என்ன? 

2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும். 

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்இ வானுலகத்தில் வாழும் கடவுளோடு ஒப்பவைத்து மதிக்கப்படுவான். 

3. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 

தன் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று சான்றோர் கூற அதைக் கேட்ட தாய்இ அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு மகிழ்வாள்.

 
4. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு. 

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போலஇ நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவது நட்பு.  

5. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 

அயலாரது குற்றத்தைக் காண்பதைப்போலஇ ஒவ்வொருவரும் தம் குற்றத்தை உணரவல்லாராயின்இ அவருக்குத் துன்பம் உண்டாகாது.










அதிமேற்பிரிவு 

கீழே கொடுக்கப்பட்ட ஆறு குறள்களையும் மனனம் செய்துஇ அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும்.

1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு 

மணலைத் தோண்டி எடுக்கும் அளவுக்கு மணற்கேணியில் நீர் சுரப்பது போலஇ மக்களுக்கு தாம் கற்கும் நல்ல நூல் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும். 

2. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 

எந்தவொரு பொருளை எத்தகையவரிடம் கேட்டாலும் அப்படியே நம்பாது
தன் உண்மையான பொருளை ஆராய்ந்து அறிவதே அறிவுடைமையாகும். 

3. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். 

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழிஇ அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும்இ நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

4. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 
ஆவது போலக் கெடும். 

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்கவேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும். 

5. வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் 
குறிஎதிர்ப்பை நீர துடைத்து. 

திருப்பிக் கொடுக்கும் சக்தி இல்லாத ஏழைகளுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை. மற்றதெல்லாம் பலனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.

6. வெள்ளத் தனைய மலர்நீட்டம்இ மாந்தர்தம் 
உள்ளத் தனையது உயர்வு. 

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத்தண்டின் அளவும் இருக்கும். அதுபோல ஒருவர் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.













No comments: