சுப்ரதீபம் கலையரங்கம் என்ற புதிய களத்தில்
இராஜேஷ் வைத்தியாவின் 'இது ஒரு நிலாக்கால' அரங்கேற்றம்.
தரமான சிட்னிக் கலைஞர்களும் கலந்த சிறப்பித்த
இதமான இசை நிகழ்வாக அமைந்ததில் மகிழ்ச்சி.
அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள்,
'எம் இதயவீணையை மீட்டவைக்கும் திறமைமிகு இராஜேஷ் வைத்தியா’ என்று
தன் நண்பர் வீணை வித்தகர் இராஜேஷ் அவர்களை விழித்திருப்பார்.
உண்மையான வாழ்த்து அது; வெறும் பாராட்டு வார்த்தைகளில்லை என்பதை,
சென்ற சனி மாலை இது ஒரு நிலாக்கால இசை நிகழ்வில் இணைந்து கொண்ட
இரசிகர்களும் நாமும் உணர்ந்து இலயித்திருந்தோம்.
"என்னமா வாசிக்கிறார் தம்பி,
நம்ம காலத்துப் பாடல்களா வந்து மயக்குது.
புதுசும் பழசும் எண்டு ஒரு தரமான இசைக் கலவையா கலந்தடிச்சார் பாருங்கோ…
ஓம் ஓம்.. வாசிச்சார் வாசிச்சார்!
நாங்கள் கிறங்கிப் போனமைசே.
ஏசி கொஞ்சம் வேலை செய்யமாட்டன் எண்டாலும்
தென்றலா வந்த அவற்ற வீணையிசையில,
வியர்வையெல்லாம் போயே போச்,
அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லப் பாரும்.
எங்கட பெடியளும் நல்ல அடி அடிச்சாங்கள் என்ன…
ஓம் ஓம்.. வாசிச்சாங்கள் வாசிச்சாங்கள்...
சூப்பரான நிகழ்ச்சி தம்பி!
அடுத்தமுறையும் சொல்லும் நாங்கள் வருவம்."
என்று ஒரு பெரியவர் கையைக் குலுக்கோ குலுக்கென்று குலுக்கி சந்தோஷித்தபோது,
அக மகிழ்ந்தோம், பலரும் பாராட்டியிருந்தனர், நன்றிகள் பல.
பெருந்திரளாக வந்திருந்த இரசிகர்களுக்கு நன்றி.
துணை நின்ற எக்சலன்ட் ஜுவலர்ஸ் ஸ்தாபனத்தார் மற்றும் எஸ்ஜே இமேஜசுக்கும் நன்றி.
நிலாக்கால விளம்பரங்களைத் தாங்கிச் சென்ற
தமிழ்முரசு, தமிழ்ச்சமூக வானொலிகள், இணையத்தளங்கள்,
மற்றும் முகநூல் நண்பர்களுக்கும் நன்றி.
அன்பு பாராட்டி உதவிய இசை ஆசான்களுக்கு நன்றி.
கலையரங்கமைத்த ஒலி ஒளி மற்றும் மண்டப நண்பர்களுக்கும் நன்றி.
துள்ளித்திரிந்து நிகழ்ச்சியை நடாத்திய இளையவர்களுக்கும் நன்றி.
தோள் கொடுத்த நண்பர்களுக்கும் சுப்ரதீபம் குடும்பத்திற்கும் நன்றி.
உவப்பான இசைதந்த இசைக்கலைஞர்களுக்கு நன்றி.
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
உங்கள் நட்புப் பாராட்டிய செய்திகள்,
தகுந்த முன்னேற்றத்திற்கான விடயங்களை உள்வாங்கிக் கொண்டோம்.
தரமான நிகழ்வோடு மீண்டும் சந்திப்போம்.
-சுப்ரதீபம் கலைரங்கத்தினர் சார்பாக,
அன்புடன்
ஜெய்ராம் ஜெகதீசன்.
No comments:
Post a Comment