கடும் காற்று காரணமாக 1,215 பேர் பாதிப்பு
யாழ்.நீதிமன்ற எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை
இலங்கை வருகிறார் இந்திய விமானப்படைத் தளபதி
யுத்த குற்றம் தொடர்பான விசாரணை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு
==================================================================
கடும் காற்று காரணமாக 1,215 பேர் பாதிப்பு
14/07/2014 நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக 1,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார்.
கடும் காற்று காரணமாக 313 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் 4 தற்காலிக முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி
யாழ்.நீதிமன்ற எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை
15/07/2014 தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ்.நகரில் நடத்தப்படவிருந்த தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியை தடுக்குமாறு கோரி யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் நா.பொன்னம்பலம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆர்ப்பாட்டத்திற்குத் தடை உத்தரவைக் கோரினர்.
இக்கோரிக்கையைப் பரிசீலித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதவான் சிவகுமார், யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த தடைவிதித்தார். நீதிமன்றத்தின் இத்தடை உத்தரவை யாழ்.பொலிஸ் நிலையப் பொலிஸார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினருக்குத் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி
இலங்கை வருகிறார் இந்திய விமானப்படைத் தளபதி
15/07/2014 இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் அருப் ரஹா மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இரு நாட்டு இராணுவ உறவை வலுப்படுத்தும் விதத்திலேயே இவரது விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் முப்படைத் தளபதிகளையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் இலங்கை விமானப்படை பயிற்சித் தளங்களையும் இந்திய விமானப் படைத் தளபதி பார்வையிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி
யுத்த குற்றம் தொடர்பான விசாரணை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
15/07/2014 இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைறே;றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நவனிதம்பிள்ளையினால் விசாரணைக் குழு நிறுவப்பட்டது.
பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் நீதவான் சில்வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைவர் அஸ்மா ஜஹானகீர் ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் விசாரணைகள் உத்தியோகப் பற்றற்ற ரீதியில் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று விசாரணைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் எதிர்வரும் பத்து மாதங்களுக்கு நடைபெறவுள்ளதோடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் வாய்மொழி மூலமான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவும் உள்ளது.
நன்றி வீரகேசரி
பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு
கொழும்பு - பதுளை பிரதான ரயில் பாதையில் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வைத்து இன்று காலை 7 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கண்டி பன்வில பகுதியை சேர்ந்த 35 வயதுடைய டீ.எம்.கே.முனசிங்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment