கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள் - - அருண் பாலாஜி

ஆயிரமாவது பிறை காணும் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'மூன்றாம் பிறை' நாயகன் பற்றிச் சில சுவையான தகவல்கள்:

 • தமிழ்த் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.
 • நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர் கமல்ஹாசன்! களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காகத் தேசிய விருதுகள் பெற்றார். விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள், சிறந்த படத்திற்கான விருதுகள் வென்றார்.
 • இதுவரை, இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள்தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன!
 • இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர்! திலீப்குமாரே 14 பிலிம்பேர் விருதுகள்தாம் பெற்றிருக்கிறார்.
 • கலைச்சேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் 'முனைவர்' பட்டம் அளிக்கப்பட்டவர்.
 • இவரது 'ராஜ்கமல் இண்டர்நேஷனல்' திரைநிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேல் வணிகம் செய்திருக்கிறது.
 • இவரது கனவுப் படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாராணி எலிசபெத்-2 அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
 • தன் ரசிகர் மன்றங்களை மக்களுக்குச் சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய நடிகர்!
 • கமல்ஹாசனும் அவரது நற்பணி இயக்கத்தினரும் சேர்ந்து இதுவரை 10,000 ஜோடி கண்களைத் தானம் செய்திருக்கிறார்கள். 10,000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
 • 100 கோடி ரூபாய் தருகிறோம் என அரசியல் கட்சி ஒன்று அழைத்தும் அதைத் துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.
 • இரண்டுமுறை ஆந்திர அரசின் விருதுகள் பெற்றவர்.
 • 8 முறை தமிழக அரசின் விருதுகள் பெற்றவர்.
 • இவருக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் காதல் இளவரசன் - ஜெமினி கணேசன், புரட்சி மன்னன் - கே.பாலசந்தர், சூப்பர் ஆக்டர் - பஞ்சு அருணாசலம், கலைஞானி - கலைஞர்.கருணாநிதி, உலக நாயகன் - கே.எஸ்.ரவிக்குமார்.

 • The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra) அமைப்பு ‘நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர்’ எனும் விருதை இவருக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே! (டாடா உட்பட).
 • சென்னை ரோட்டரி சங்கமும் இவருக்குச் 'சிறந்த மனிதர்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
 • சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகச் சேவைகளுக்காக டாக்டர் ஏ.டி.கோவூர் தேசிய விருது வழங்கப்பட்டவர். இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India).
 • மதுரையில் திரைப்படத் தொடக்க விழா நிகழ்த்திய ஒரே நடிகர். படம்: விருமாண்டி.
 • இன்டெல் நிறுவனம் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயின்மெண்டை அறிமுகப்படுத்தப் பணியாற்றி வருகிறது. இந்தியாவில் இவர் ஒருவருடன் மட்டுமே இந்நிறுவனம் இப்படி இணைந்து பணியாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஒரே ஆண்டில் 5 சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர்! எந்த நடிகராலும் இந்தச் சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள்: 1982 – ஜனவரி 26: 'வாழ்வே மாயம்' (200 நாள்), பிப்ரவரி 19: மூன்றாம் பிறை (329 நாள்), மே 15: சனம் தேரி கஸம் (175 நாள்), ஆகஸ்டு 14: சகலகலா வல்லவன் (175 நாள்), அக்டோபர் 29: ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்).
 • இவர் நடித்த 'மரோசரித்திரா' பெங்களூருவின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாட்கள் ஓடியது. இந்தியில் 'ஏக் துஜே கேலியே' என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாட்கள் ஓடியது.
 • இந்தியாவிலேயே அகில இந்திய ரசிகர் மன்ற மாநாடு நடத்திய ஒரே நடிகர்! 1985இல் கோவையில்.
 • இவரது நூறாவது படமான 'ராஜபார்வை'யில் நடிக்கும்போது இவருக்கு வயது 27.
 • இவர் நடித்த 'நாயகன்' திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் ஒன்றாக டைம்ஸ் பத்திரிகை அறிவித்திருக்கிறது.
 • உடல்தானம் செய்த முதல் தென்னிந்திய நடிகர். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று.
 • இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான 'ராஜபார்வை'யில்.
 • தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது இவருடைய 'மைக்கேல் மதன காமராஜ'னில்.
 • ஹாலிவுட்டில் இருந்து ஒப்பனையாளரை வரவழைத்து ஒப்பனை செய்யப்பட்ட முதல் இந்தியப்படம் இவர் நடித்த 'இந்தியன்'.
 • இந்தியத் திரையுலகில் முதன்முதலாக கணினி வரைகலை (Computer Graphics) பயன்படுத்தப்பட்ட படம் இவர் நடித்த 'மங்கம்மா சபதம்'!
 • ஹாலிவுட் படமொன்றில் ஒப்பனை உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறார் கமல்ஹாசன். படத்தின் டைட்டிலில் அவர் பெயரையும் காணலாம்.
 • சென்னையில் முதன்முதலாகத் தொடர்ந்து ஆயிரம் காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிய படம் கமலின் 'சகலகலா வல்லவன்'.
 • இவர் கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையில் தன் 'குணா' படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்தக் குகைக்கே 'குணா குகை' எனும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
 • இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டவர்.
 • முத்தாய்ப்பாக, இந்தியாவில், குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் 4ஆவது சிறந்த விருதான தாமரைத்திரு (பத்மஸ்ரீ) விருது பெற்றவர் என்ற பெருமையினைக் குறிப்பிட்டு முடிக்கலாம்.
Nantri nilacharal.com

No comments: