உலகச் செய்திகள்


காஸாவிலுள்ள பாதுகாப்பு தலைமையகங்கள் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் மோதல் 

ஆப்கான் சந்தையில் கார் குண்டு தாக்குதல்; 89பேர் பலி; 40 பேர் காயம்   

காஸாவிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கைக்கு இஸ்ரேல் இணக்கம்

லிபிய சர்வதேச விமானநிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் : ஒருவர் பலி, 6 பேர் காயம்; 12 விமானங்களுக்கு சேதம்

காஸாவிலுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்­ச­ரிக்­கை

மலேசிய விமானம் நடுவானில் வெடித்து சிதறியதில் 295 பேர் பரிதாபகரமாக பலி

சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 விமானத்தின் பின்னால் பயணித்த மோடியின் விமானம்   
================================================================


காஸாவிலுள்ள பாதுகாப்பு தலைமையகங்கள் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

14/07/2014   இஸ்­ரே­லா­னது காஸாவின் பாது­காப்பு தலை­மை­ய­கங்கள் மற்றும் பொலிஸ் நிலை­யங்­களை இலக்குவைத்து சனிக்­கி­ழமை இரவு கடும் வான் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளது.
கடந்த 8 ஆம் திகதி காஸா­வுக்கு எதி­ரான தாக்­கு­தலை இஸ்ரேல் ஆரம்­பித்­த­தை­ய­டுத்து இடம்­பெற்ற உக்­கிர குண்டு வீச்சுத் தாக்­குதல் சம்­ப­வ­மாக இது உள்­ளது.
இஸ்ரேல் ஞாயிற்­றுக்­கி­ழமை காஸா பிராந்­தி­யத்தில் நடத்­திய இருவேறு தாக்­கு­தல்­களில் 14 வயது சிறுவன் ஒரு­வனும் பெண்­ணொ­ரு­வரும் பலி­யா­கி­யுள்­ளனர்.
காஸாவின் வட நக­ரான ஜபா­லியா மற்றும் மத்­திய காஸா­வி­லுள்ள மகாஸி அக­திகள் முகாம் என்­ப­வற்றின் மீது இந்தத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.காஸா பிராந்­தி­யத்­தி­லுள்ள பலஸ்­தீன போரா­ளிகள் சனிக்­கி­ழமை சுமார் 90 ஏவு­க­ணை­களை தமது பிராந்­தி­யத்தின் மீது ஏவி­ய­தாக இஸ்ரேல் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.
காஸா­வி­லான வான் தாக்­கு­தலில் குறைந்­தது 159 பலஸ்­தீ­னர்கள் பலி­யா­கி­யுள்­ளனர். அவர்­களில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 17 பேர் உள்­ள­டங்­கு­கின்­றனர்.இந்­நி­லையில் இஸ்­ரே­லா­னது தாம் ஹமாஸ் போரா­ளி­களின் சிரேஷ்ட செயற்­பாட்­டா­ளர்­களின் வீடுகள் உட்­பட போரா­ளி­களின் தளங்­களை இலக்கு வைத்தே தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக குறிப்­பிட்­டுள்­ளது.
காஸா பிராந்­தி­யத்தில் கொல்­லப்­பட்­ட­வர்­களில் 77 சத­வீ­த­மா­ன­வர்கள் பொது­மக்கள் என ஐக்­கிய நாடுகள் சபை மதிப்­பீடுசெய்­துள்­ளது.
இந்­நி­லையில், ஈராக்கில் யுத்த நிறுத்­த­மொன்­றையும் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­யும் முன்­னெ­டுக்க அந்த சபை அழைப்பு விடுத்­துள்­ளது.
காஸா மீதான தாக்­கு­தல்­களை இஸ்ரேல் ஆரம்­பித்­த­மைக்குப் பின்னர் ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபை அது தொடர்பில் அறிக்­கையை வெளி­யி­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.
ஹமாஸ் போரா­ளி­களின் பாது­காப்புத் தலை­மை­ய­கங்கள், பொலிஸ் நிலை­யங்கள் என்­ப­வற்றில் சனிக்­கி­ழமை நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் அவர்­களின் பாது­காப்பு வளா­க­மொன்று கடும் சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.
காஸா பிராந்­தி­யத்­தி­லுள்ள சுமார் 1,320 தீவி­ர­வாத தளங்­களை இலக்கு வைத்துதாக்­குதல் நடத்­தி­ய­தாக இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை­யினர் தெரி­வித்­தனர்.அதே­ச­மயம் ஹமாஸ் போராளிக் குழு­வா­னது இஸ்ரேல் மீது 800 க்கும் மேற்­பட்ட ஏவு­க­ணை­களை ஏவியுள்ளது.   நன்றி வீரகேசரி 









லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் மோதல்

15/07/2014  விபிய தலை­நகர் திரி­போ­லி­யி­லுள்ள சர்­வ­தேச விமானநிலை­யத்தில் எதிர்ப்­போ­ராளிக் குழுக்­க­ளி­டையே இடம்­பெற்ற மோதலில் குறைந்­தது 7 பேர் பலி­யா­ன­துடன் 30 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
மேற்­படி, விமான நிலை­யத்தனை கட்­டுப்­ப­டுத்தும் ஸின்டான் பிராந்­திய கிளர்ச்­சி­யா­ளர்கள், அந்தப் பிர­தே­சத்தின் கட்­டுப்­பாட்டை கைப்­பற்றும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ள எதிர்க்­கு­ழுவால் தாக்­கப்­பட்­டுள்­ளனர்.
2011 ஆம் ஆண்டு மும்மர் கடாபி ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டது முதற்­கொண்டு ஸ்திரத்­தன்­மையை நிலை நாட்ட லிபியா போராடி வரு­கி­றது.
விமான நிலை­யத்­தினை கட்­டுப்­ப­டுத்தி வந்த கிளர்ச்­சி­யா­ளர்கள் மீது தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்கள் யார் என்­பது அறி­யப்­ப­ட­வில்லை.
இந்­நி­லையில் மேற்­படி விமான நிலை­யத்தில் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 3 தினங்களுக்கு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நன்றி வீரகேசரி








ஆப்கான் சந்தையில் கார் குண்டு தாக்குதல்; 89பேர் பலி; 40 பேர் காயம்

15/07/2014   கிழக்கு ஆப்கானிஸ்தானில் பகிதா  மாகாணத்தில் சனசந்தடிமிக்க சந்தையொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 89 பேர் பலியாகியுள்ளதுடன் 40 பேருக்கும் அதிகமானோர்  காயமடைந்துள்ளனர்.
தாக்குதல்தாரி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓர்குன பிரதேசத்திலுள்ள சந்தையின் பக்கமாக செலுத்தி வந்து குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை.
மேற்படி தாக்குதல் இடம்பெற்ற வேளை அந்த சந்தையில் மக்கள் ரமழான் நோன்புக் காலப் பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
குண்டுவெடிப்பையடுத்து உடல் சிதறிய நிலையில் மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஜெனரல் ஸாஹிர் அஸிமி தெரிவித்தார்.
சந்தைக்குள் பிரவேசிக்க முயற்சித்த குண்டுதாரியை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்திய போதே அவர் குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
பலியானவர்களில் பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
 நன்றி வீரகேசரி









காஸாவிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கைக்கு இஸ்ரேல் இணக்கம்

16/07/2014  பலஸ்­தீன காஸா­வி­லான மோதல்கள் தொடர்பில் உடன்­ப­டிக்­கை­யொன்றை செய்துகொள்­வ­தற்கு எகிப்தால் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணையை இஸ்ரேல் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.
எனினும் காஸா பிராந்­தி­யத்தை கட்­டுப்­ப­டுத்தி வரும் ஹமாஸ் அமைப்பு இதற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மான பதி­லெ­த­னையும் அளிக்­க­வில்லை.
அதே­ச­மயம் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு இது ஒரு சர­ணா­கதித் திட்டம் என தெரி­வித்து அதனை நிரா­க­ரித்­துள்­ளது.
எகிப்­திய கெய்ரோ நகரில் இடம்­பெற்ற இரு தரப்பு உயர்­மட்ட தூதுக்குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பை தொடர்ந்து முன்­வைக்­கப்­பட்ட மேற்­படி பிரே­ரணை யுத்த நிறுத்­த­மொன்றை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு வலி­யு­றுத்­து­கி­றது.
இஸ்ரேல் மீதான காஸா பிராந்­திய போரா­ளி­களின் தொடர் ஏவு­கணைத் தாக்­கு­தல்­க­ளுக்கு பதி­லடி கொடுக்கும் முக­மாக 8 நாட்­க­ளுக்கு முன் இஸ்ரேல் காஸா மீதான வான் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்தது முதற்­கொண்டு இது­வ­ரை பலஸ்­தீ­னர்கள் தரப்பில் குறைந்­தது 192 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 1400 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
அவர்­களில் முக்கால் பங்­கிற்கும் அதி­க­மானோர் பொதுமக்கள் என ஐக்­கிய நாடுகள் சபை கூறு­கி­றது. இஸ்­ரே­லிய தரப்பில் இது­வரை 4 பேர் மட்­டுமே படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.
இந்­நி­லையில், பலஸ்­தீன ஹமாஸ் போரா­ளிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர். காஸாவின் தெற்­கே­யுள்ள கான் யுனிஸில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வன்­மு­றை­களில் குறைந்­தது 3 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
இஸ்ரேல் பிரே­ரிக்­கப்­பட்ட சமா­தான உடன்­ப­டிக்­கைக்கு இணக்­கப்­பா­ட்டு தெரி­விப்­ப­தற்கு முன்னர் இந்த வன்­மு­றைகள் இடம்­பெற்­றுள்­ளன. மேலும் இஸ்­ரே­லிய நக­ரான எயிலட்டில் திங்கட்கிழமை குறைந்தது 3 ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. அந்த ஏவுகணைகள் காஸா பிராந்தியத்திலிருந்து அல்லாது எகிப்திய சினாய் தீபகற்பத்திலிருந்து ஏவப்பட்டதாக நம்பப்படுகிறது.
 நன்றி வீரகேசரி







லிபிய சர்வதேச விமானநிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் : ஒருவர் பலி, 6 பேர் காயம்; 12 விமானங்களுக்கு சேதம்

16/07/2014  லிபி­யாவின் தலை­நகர் திரி­போ­லி­யி­லுள்ள பிர­தான சர்­வ­தேச விமான நிலை­யத்தின் மீது திங்­கட்­கி­ழமை மாலை புதிய ஏவு­கணைத் தாக்­கு­த­லொன்று நடத்­தப்­பட்­டுள்­ளது.
மேற்­படி விமான நிலையம் மூடப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்த மோதல்கள் இடம்­பெற்­ற­மைக்கு மறு­நாளே இந்த ஏவு­கணைத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.
இந்த தாக்­கு­தலில் குறைந்­தது ஒருவர் உயி­ரி­ழந்து 6 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் 12 விமா­னங்கள் சேத­ம­டைந்­துள்­ளன.
இந்­நி­லையில்இ நாட்டின் பாது­காப்பை மீள நிலை­நி­றுத்­து­வ­தற்கு சர்­வ­தேச படை­களின் உத­வியை நாடு­வ­தற்கு லிபிய அர­சாங்கம் எதிர்­பார்த்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்கப் பேச்­சாளர் ஒருவர் கூறினார்.
வெளி உல­கத்­திற்­கான லிபி­யாவின் பிர­தான போக்­கு­வ­ரத்து இணைப்­பாக விளங்கும் இந்த விமான நிலை­யத்தின் மீது ஒருதொகை ஏவு­கணைத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­தா­கவும் இந்த சம்­ப­வத்தில் விமான நிலை­யத்தை பாது­காக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த படையின் உறுப்­பினர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன்இ 6 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாகவும் அவர் தெரி­வித்தார்.
இந்த ஏவு­கணைத் தாக்­கு­தலில் விமான நிலையக் கட்­டுப்­பாட்டு கோபுரம் சேத­ம­டைந்­துள்­ளது.
அந்த விமான நிலை­யத்­தி­லான அனைத்து விமான சேவை­களும் குறைந்­தது இன்று புதன்­கி­ழமை வரை இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளன.
மேற்­படி ஏவு­கணைத் தாக்­கு­தலில் மில்­லியன்கணக்­கான டொலர் பெறு­ம­தி­யு­டைய நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக லிபிய அர­சாங்கப் பேச்­சா­ள­ரான அஹமட் லமின் தெரிவித்தார்.
லிபியாவில் இடம்பெற்று வரும் மோதல்களையடுத்து அந்நாட்டிலுள்ள தனது ஊழியர்கள் அனைவரையும் வாபஸ் பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
 நன்றி வீரகேசரி







காஸாவிலுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்­ச­ரிக்­கை

17/07/2014  இஸ்­ரே­லா­னது கிழக்கு மற்றும் வடக்கு காஸா­வி­லுள்ள சுமார் ஒரு இலட்சம் பாலஸ்­தீ­னர்­களை வீடு­களை விட்டு வெளி­யே­று­மாறு புதன்­கி­ழமை எச்­ச­ரிக்கை பிறப்­பித்­துள்­ளது.
 
காஸா பிராந்­தி­யத்தின் மீது இஸ்­ரேல் தொடர்ந்து 9 ஆவது நாளாக வான் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்­துள்ள நிலை­யி­லேயே மேற்­படி எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­க­பட்­டுள்­ளது.
 
எகிப்தால் செவ்­வாய்க்­கி­ழமை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த யுத்த நிறுத்த உடன்­ப­டிக்­கை­யொன்றை இஸ்ரேல் ஏற்­றுக்­கொண்­டி­ருந்த போதும், அந்த உடன்­ப­டிக்கை பலஸ்­தீன ஹமாஸ் போரா­ளி­க­ளதும் ஏனைய குழுக்­க­ளதும் ஏவு­கணைத் தாக்­கு­தல்களை தடுத்து நிறுத்த தவ­றி­யதையடுத்து இஸ்­ரேல் காஸா மீதான வான் தாக்­கு­தல்­களை தொடர தீர்­மா­னித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
 
இஸ்ரேல் செவ்­வாய்க்­கி­ழமை இரவு காஸா பிராந்­தி­யத்தின் மீது நடத்­திய வான் தாக்­கு­தல்­களில் சிரேஷ்ட ஹமாஸ் போரா­ளிகள் உட்­பட 10 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். பலி­யா­ன­வர்­களில் ஐந்து மாத குழந்­தை­யொன்றும் உள்­ள­டங்­கு­கி­றது.
 
கடந்த 8 ஆம் திகதி காஸா மீதான தாக்­கு­தலை இஸ்­ரேல் ஆரம்­பித்­த­தி­லி­ருந்து இது­வரை 208 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
 
காஸா பிராந்­தி­யத்தில் ரபாஹ் நகரிலுள்­ள வீடொன்றின் மீது இஸ்ரேல் புதன்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் 19 வயது இளைஞர் ஒருவர் உட்­பட இருவர் பலி­யா­கி­யுள்­ளனர்.
 
அதேசமயம் காஸா பிராந்­தி­யத்திலுள்­ள போரா­ளிக்­கு­ழுக்கள் தென் மற்றும் மத்­திய இஸ்ரேல் மீது இது­வரை 1200 ஏவு­க­ணை­களை ஏவி­யுள்­ளன.
 
இஸ்­ரேலின் எரெஸ் எல்­லைக் ­க­ட­வைக்கு அண்­மையில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஏவு­கணைத் தாக்­கு­தலில் 38 வயது நபர் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.
இது மேற்­படி மோதல்கள் ஆரம்­பித்­தது முதற்கொண்டு இஸ்ரேல் தரப்பில் இடம்­பெற்ற முத­லா­வது உயி­ரி­ழப்­பாகும்.
 
எகிப்தால் முன்­வைக்­கப்­பட்ட யுத்த நிறுத்த உடன்­ப­டிக்கை தொடர்­பான திட்­டத்­திற்கு இணக்கம் தெரி­வித்­ததையடுத்து இஸ்ரேல் தனது வான் தாக்­கு­தல்­களை 6 மணி­நேரம் நிறுத்­தி­யி­ருந்­தது.
ஆனால், போரா­ளிகள் அந்த உடன்­ப­டிக்­கையை அலட்­சி­யப்­ப­டுத்தி இஸ்ரேல் மீது ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருந்­தனர்.
 
இது தொடர்பில் இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்­டான்­யாஹு விப­ரிக்­கையில், ''இங்கு யுத்த நிறுத்தம் இல்­லா­த­போது, எமது பதில் யுத்­த­மாகும். அதனால் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதை தவிர எமக்கு வேறு வழி­யில்­லா­துள்­ளது" என்று தெரி­வித்­துள்ளார்.
 
காஸா பிராந்தியப் போராளிகள் செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது 140 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி யுள்ளனர்.
நன்றி வீரகேசரி








மலேசிய விமானம் நடுவானில் வெடித்து சிதறியதில் 295 பேர் பரிதாபகரமாக பலி

18/07/2014 மலே­சிய ஏயார்லைன்ஸ் நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான பய­ணிகள் விமானம் கிழக்கு உக்ரைன் பகு­தியில் விபத்­துக்­குள்­ளானதில் விமா­னத்தில் பயணம் செய்த 295 பேர் பரிதாபகரமாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.
நெதர்­லாந்தின் அம்ஸ்­டர்டாம் நகரில் இருந்து கோலா­லம்பூர் நோக்கிப் பயணம் செய்த எம்.எச்-17 என்ற விமா­னமே உக்­ரை­னுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடைப்­பட்ட எல்­லைப்­ப­கு­தியில் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. இவ்­வி­மா­னத்தில் 280பய­ணி­களும் 15விமான சிப்­பந்­தி­களும் பய­ணித்­துள்­ளனர்.
இவ்­வி­மான விபத்துச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­தா­வது,
 

மலே­சிய தலை­நகர் கோலாம்பூர் நோக்கி 33000 அடி உய­ரத்தில் பய­ணித்த போயிங் 777 ரக மலே­சிய விமானம் உக்­ரை­னுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடைப்­பட்ட கிழக்கு உக்ரைன் பகு­தியில் விழுந்து நொறுங்­கி­யதை உக்ரைன் அரசு உறுதி செய்­துள்­ளது.
கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­களின் கருத்து
 

உக்­ரை­னுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடை­யி­லான எல்­லைப்­ப­கு­தியில் கிழக்கு உக்­ரைனில் இந்த விமானம் பறந்து கொண்­டி­ருந்­த­போது ரஷ்ய எல்­லைக்கு 50கிலோ­மீற்­ற­ருக்கு முன்னால் திடீ­ரென தாழ்­வாக பறந்­தது. பின்னர் விமா­னத்தில் தீப்­பி­டித்து எரிந்­தது. தொடர்ந்து தரையில் விமானம் எரிந்­ததை கண்­ட­தாக மாஸ்­கோவில் இருக்கும் வான்­வழி கண்­கா­ணிப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ள­தாக ராய்ட்டர் செய்தி நிறு­வனம் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.
தகவல் துண்­டிக்­கப்­பட்­டு­விட்­டது
 
எமது விமா­னத்­தி­னு­ட­னான தக­வல்­தொ­டர்­புகள் அனைத்தும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன. கடை­சி­யாக உக்ரைன் வான்­ப­ரப்பில் பறந்து கொண்­டி­ருந்­த­போது தான் அந்த விமா­னத்­து­ட­னான தொடர்பு காணப்­பட்­ட­தாக விமான சேவை நிறு­வ­ன­மான மலே­ஷியன் ஏயார்லைன்ஸ் நிறு­வனம் தனது டுவிட்­டரில் தெரி­வித்­தி­ருக்­கி­றது.
துரித நட­வ­டிக்கை
 
இந்தச் விபத்துச் சம்­பவம் தொடர்­பாக எமக்கு தகவல் வந்­துள்­ளது. மலே­சிய விமா­னத்தின் நிலை குறித்து அறிய, துரித நட­வ­டிக்­கைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன என பிரித்­தா­னியா வெளி­யு­ற­வுத்­துறை தெரி­வித்­துள்­ளது.
 
ஏவு­கணைத் தாக்­கு­தலா?
 
மலே­சிய விமானம் விழுந்து நொறுங்­கிய கிழக்கு உக்ரைன் பகுதி, கிளர்ச்­சி­யா­ளர்கள் வசிக்கும் ஷக்டார்ஸ்க் நக­ருக்கு அருகில் உள்­ளது. கடந்த சில வாரங்­க­ளாக, உக்ரைன் ராணுவ விமா­னங்­களை, கிளர்ச்­சி­யா­ளர்கள் தொடர்ச்­சி­யாக சுட்டு வீழ்த்தி வந்­த­தா­கவும், அவர்­க­ளுக்கு ரஷ்ய ராணுவம் ஆயு­தங்­களை வழங்கி வந்­த­தா­கவும் உக்ரைன் தரப்பு குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தது.
அவ்­வா­றான நிலையில் ரஷ்ய ஆத­ரவு பிரி­வி­னை­வாத கிளர்ச்­சி­யா­ளர்­களே இந்தத் தாக்­கு­த­லையும் நடத்­தி­ய­தாக உக்ரைன் தரப்பு குற்­றம்­சாட்­டு­கி­றது.இந்த விமானம் சுமார் 33000 அடி உய­ரத்தில் ஏவு­கணை மூலம் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­ன­தாக உக்­ரைனின் உள்­துறை அமைச்­சரின் ஆலோ­சகர் அன்டன் ஹெர­ஷெங்கோ தெரி­வித்­த­தாக அசோ­சி­யேட்டட் செய்தி நிறு­வனம் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.
முன்­ன­தாக உக்ரைன் அரசு ரஷ்யா தனது போர் விமா­னங்­களில் ஒன்றை, அது யுக்­ரெயின் நிலப்­ப­ரப்பில் பறந்து கொண்­டி­ருந்த போது, சுட்டு வீழ்த்­தி­விட்­ட­தாகக் குற்றம் சாட்­டி­யி­ருந்­தது. உக்ரைன் ராணு­வத்­துக்கு சொந்­த­மான எஸ்.யு 25 ரக விமானம் ஒன்று புத­னன்று ரஷ்ய ஏவு­கணை ஒன்றால் தாக்­கப்­பட்­ட­தா­கவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார் என்றும், அவர் காய­மின்றி மீட்­கப்­பட்டார் என்றும் யுக்­ரெய்­னிய பாது­காப்பு அமைச்­சக அதி­காரி ஒருவர் கூறி­யுள்ளார்.
ரஷ்ய நிலப்­ப­ரப்­பி­லி­ருந்து ஒரு உக்­ரை­னிய கிராமம் ஒன்றில் க்ராட் ரக ரொக்­கெட்­டுகள் ஏவப்­ப­டு­வது போல காட்டும் வீடியோ காட்­சி­களை யுக்­ரெ­யி­னிய ஊட­கங்கள் வெளி­யிட்­டி­ருந்­த­போதும் கிழக்கு உக்­ரைனில் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்குத் தான் உதவி செய்­வ­தாகக் கூறப்­ப­டு­வதை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்­தது.
 
சந்­தேகம்
 
இதே­வேளை 10,000 அடி உய­ரத்­திற்கும் மேலாக பறக்கும் ஒரு விமா­னத்தை சுட்டு வீழ்த்­த­வேண்­டு­மானால் அது தொலை­தூரம் பறக்­க­வல்ல நிலத்தில் இருந்து விண்­ணுக்கு ஏவக்­கூ­டி­யதும் நீண்­ட­தூரம் சென்று தாக்­க­வல்­ல­து­மான ஏவு­க­ணையால் மட்­டுமே சாத்­தியம். அதுவும் கூட அத்­த­கைய ஏவு­கணை ரடார் உத­வி­யுடன் வழி­ந­டத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும் என பாது­காப்­புத்­துறை நிபுணர் ஒருவர் குறிப்­பிட்­டுள்ளார்.
 
அத­ன­டிப்­ப­டையில் இந்த விமா­ன­மா­னது மனி­தர்கள் எளிதில் எடுத்துச் செல்­லக்­கூ­டிய மேன்பேட் எனப்­படும் ஏவு­க­ணைத்­தாக்­குதல் மூலம் சுட்டு வீழ்த்­தப்­பட்­டி­ருக்­காது என்று கரு­தப்­ப­டு­கி­றது. காரணம் அவ்­வா­றான குறு­கிய தூர ஏவு­க­ணையின் வீச்சு விமானம் பறந்­து­கொண்­டி­ருந்த உய­ரத்­துக்கு செல்­லாது என்று மதிப்­பி­டப்­ப­டு­கி­றது.
 
ஆகவே வானி­லி­ருந்­த­ப­டியே ஏவப்­பட்டு தாக்­கக்­கூ­டிய ஏவு­க­ணை­களை ஏற்றிச் சென்ற ராணுவ தாக்­குதல் விமா­னத்­தினால் மட்­டுமே இந்த விமானம் தாக்­கப்­பட்­டி­ருக்க முடியும்.
 
செயற்­கைகோள் பதிவு உதவும்
 
அவ்­வா­றா­ன­தொரு தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்­கு­மாயின் எந்த ஏவு­கணை பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது அல்­லது எப்­படி இந்த விமானம் வீழ்ந்து நொறுங்­கி­யது என்­பதை அமெ­ரிக்­காவின் வசம் இருக்கும் செயற்­கைக்கோள் படங்கள் மூலம் கண்­ட­றிய முடியும் என்று நம்­பப்­ப­டு­கி­றது. நிலத்தில் இருந்து வான் நோக்கிச் சென்று தொலை­தூர தாக்­குதல் நடத்­தப்­ப­டும்­போது அத்­த­கைய ஏவு­க­ணைகள் வெளித்­தள்ளும் ஊதா நிற புகையை இந்த செயற்­கைக்­கோள்­களின் படங்கள் அடை­யாளம் காட்டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.
 
மாய­மான முதல் விமானம்
 
மலே­சிய தலை­நகர் கோலா­லம்­பூரில் இருந்து சீனத் தலை­நகர் பெய்­ஜிங்­குக்கு 239 பேருடன் புறப்­பட்ட விமானம் தென் சீனக் கடல் கடந்த மார்ச் 8ஆம் திகதி மாய­மா­கி­யி­ருந்­தது. குறித்த தின­மன்று அதி­காலை 12.41.க்கு புறப்­பட்ட மலே­சியன் ஏயர்லைன்ஸ் நிறு­வ­னத்தின் எம்.எச். 370 என்ற விமானம் 227 பய­ணிகள், 12 ஊழி­யர்­க­ளுடன் கோலா­லம்­பூரில் புறப்­பட்­டது.
இந்த விமானம் அதி­காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் சென்­ற­டைய வேண்டும். ஆனால் விமானம் புறப்­பட்ட 2 மணி நேரத்தில் கட்­டுப்­பாட்டு அறைத் தொடர்பை இழந்­தது. இதைத் தொடர்ந்து காணா­மல்­போன விமா­னத்தை தேடும் பணி ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது
 
குறித்த விமா­னத்தில் 152 சீனர்கள், 38 மலே­சி­யர்கள், 5 இந்­தி­யர்கள், 6 ஆஸ்­தி­ரே­லி­யர்கள், ஒரு குழந்தை உள்­பட 4 அமெ­ரிக்­கர்கள், பிரான்ஸை சேர்ந்த 3 பேர், நியூ­சி­லாந்தை சேர்ந்த 2 பேர், உக்­ரைனைச் சேர்ந்த 2 பேர், கன­டாவைச் சேர்ந்த 2 பேர், ரஷ்யா, இத்­தாலி, தைவான், நெதர்­லாந்து, ஆஸ்­தி­ரியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 227 பய­ணிகள் மற்றும் விமானி, பணிப்­பெண்கள் 12 சிப்பந்திகள் உட்பட 14நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமானத்தில் பயணித்திருந்தனர்.
 
பின்னர் மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தைக் கண்டுபிடிப்பாதற்காக 10இற்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து தேடுதலில் ஈடுப்பட்டிருந்தன. அந்நிலையில் பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, அவுஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்த போதும் மேலதிகமான தேடுதல் பணிகள் இடம்பெற்றிருந்தன. இருந்போதும் இறுதிவரையில் விமானம் தொடர்பாக எந்தவிமான தகவல்களும் கிடைக்காத நிலையில் அனைத்துப் பயணிகளும் இறந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி










சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 விமானத்தின் பின்னால் பயணித்த மோடியின் விமானம்

18/07/2014 சுட்டு வீழ்த்தப்பட்ட மலே­சிய ஏயார்லைன்ஸ் நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான MH17 பய­ணிகள் விமானத்திற்குப் பின்னால் சிறிது நேரம் கழித்து அதே வான்வழியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
 
 
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசிய எயார்லைனர் விமானம்  MH17 நேற்று (17) இரவு சுட்டுத் வீழ்த்தப்பட்டது.
அதில் பயணித்த 298 பேரும் பரிதாபகரமாக உயி­ரி­ழந்தனர்.
 
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறிக்ஸ் கூட்டத்தொடரை முடித்துவிட்டு பிரேசிலில் இருந்து புறப்பட்டு அவ் வழியால் பயணித்துள்ளார். 
 
குறித்த மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டிருக்காவிட்டால் சம்பவம் நடந்த பகுதி வழியாகவே பிரதமர் மோடி பயணித்த எயர் இந்தியா - 001 விமானமும் சென்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உக்ரைன் - ரஷ்யா எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் டோரெஸ் எனும் இடத்தில் MH17 விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. 
 
 
இது பற்றி கருத்து தெரிவித்த விமான அதிகாரி ஒருவர், சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 சென்ற அதே வான்வழியாகவே பிரதமர் மோடியின் விமானமும் சென்றிருக்கும். ஆனால், குறித்த விமான ஓட்டுனர் சாதுரியமாக யோசித்து பயணத்தை மாற்றியிருக்கிறார் என்றார். 
 
298 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் நேற்று வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி




No comments: