தமிழ் சினிமா


அரிமாநம்பி !
கும்கி படம் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபுவுக்கு மற்றொரு மைல் கல்லாய் அமைந்திருக்கிறது அரிமா நம்பி. ஆக்சன் படங்களுக்கென வைத்திருக்கும் சில நியதிகளை அப்படியே பின்பற்றாமல் படத்திற்கு தேவையான ஆக்சனை மட்டும் கையிலெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆனந்த் சங்கர். இவர் ஏ.ஆர் முருகதாஸின் சிறந்த உதவி இயக்குனராம். 

கதை என்ன?

ஒரு மதுபான விடுதியில் வைத்து ப்ரியா ஆனந்தை பார்க்கிறார் விக்ரம் பிரபு. இருவருக்கும் இடையில் காதல் பற்றிக்கொள்கிறது. மறுநாளே டின்னருக்கு ப்ரியா ஆனந்தை அழைக்கிறார் விக்ரம். இருவரும் மது அருந்தி போதையில் இருக்கும் போது மர்ம நபர்கள் இருவரால் கடத்தப்படுகிறார்.விக்ரம் பிரபுவால் அவர்களைத் துரத்தியும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. போலீசிடம் புகார் கொடுத்து அவர்களுடன் திரும்பவும் வந்து பிரியா வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் அப்படி எதுவுமே நடக்காதது போல் அவர் வீடு அமைதியாக இருக்கிறது.ஏதோ, சந்தேகம் வந்து விக்ரம் பிரபு, பிரியா ஆனந்தின் அப்பா இருக்குமிடத்திற்குச் செல்ல, அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தொடர்ந்து சில கொலைகள் நடக்க, பிரியா ஆனந்தைத் தேடிப் புறப்படுகிறார் விக்ரம் பிரபு. அவர் பிரியாவைக் கண்டுபிடித்தாரா, அவரை ஏன் கடத்தினார்கள் என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.என்ன இவன் வேற மாதிரி படத்தின் கதையை சொல்வது போல் உள்ளதா?, கிட்டத்தட்ட அதே கதை தான். ஆனால் அந்த படத்தை காட்டிலும் இதில் திரைக்கதை சூடு பறக்கிறது. விக்ரம் பிரபுவிற்கும், ப்ரியா ஆனந்திற்கும் காதல் காட்சிகள் குறைவு என்றாலும், கிளைமேக்ஸ் அந்த குறையை போக்குகிறது. 

பலம்

படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதை தான், அதை நேர்த்தியாக அமைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். ட்ரம்ஸ் சிவமணி பின்னணி இசையில் மிரட்டி எடுத்திருக்கிறார். எல்லோரையும் விட ராஜசேகரின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் உள்ளது. 

பலவீனம்

லாஜிக், லாஜிக், லாஜிக் மட்டும் தான். எந்த இடத்திலும் கொஞ்சம் கூட லாஜிக் பார்க்காமலேயே எடுத்திருக்கிறார்கள். பிரியா ஆனந்த் அப்பாவின் சேனல் அலுவலகத்திற்குள் அவ்வளவு கெடுபிடிகளுக்கிடையில் விக்ரம் பிரபு நுழைந்து, எம்டி கேபினில் சுலபமாக நுழைகிறார். அந்த இடத்தில் செய்யும் காமெடிக்கு அளவேயில்லை பெரிய லாஜிக் ஓட்டை.ஆனால் இதுபோன்ற லாஜிக் விஷயங்களையெல்லாம் தவிர்த்து பார்த்தால், கண்டிப்பாக இந்த படம் நம்மை திருப்திப்படுத்தும்.மொத்தத்தில் ’விட்ட இடத்தை பிடித்துவிட்டார் விக்ரம் பிரபு’ 

நன்றி  cineulagam

No comments: