மந்திரிமனையினை அரசிடம் வழங்கினால் புத்தர் குடிகொள்வார்; முதலமைச்சர்

news.




மந்திரி மனையினை மத்திய அரசின் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டால் முதலில் அங்கு ஒரு பௌத்த சின்னம் ஒன்று வரும் அதுக்கடுத்ததாக ஒரு புத்தரின் சிலை வரும் அதற்குப் பின்னர் காவி உடுத்தவர்கள் அதற்குப் பின்னர் அங்கு வந்து இருப்பார்கள் பின்னர் அங்கு போவதற்கு முடியாது போய் விடும் எனவே மந்திரி மனையினை வடக்கு மாகாண சபை பாரம் எடுப்பது என்றால் மட்டுமே மேற்கொண்டு பேசமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி .விக்கினேஸ்வரன்  தெரிவித்தார். 
வடக்கு மாகாண சபையின் 18ஆவது மாதாந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது அதன்போது எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் பிரேரணை குறித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
மந்திரிமனை அமைந்துள்ளது யாருக்கு உரிய காணி என்றும் சீனிவாசகம் பிள்ளை தம்பிப்பிள்ளை சமாதியினர் உரிமை கொண்டாட உரித்துள்ளவர்களா என்பது குறித்து அறியவேண்டும். 
அடுத்து இது மந்திரி மனை என்றால் அந்தக் காலத்தில் எவ்வாறு இவர்களிடம் வந்தது என்று அறிய வேண்டும். எனினும் இது மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு என்று முன்னர் பெயர்ப்பலகை இடப்பட்டிருந்தது. 
இருப்பினும் தற்போது அந்த பெயர்ப்பலகையினைக் காணவில்லை. அங்கு வண்டிகள் தரிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருந்தாலும் மத்திய அரசின் கலாச்சார அலுவல்களுக்கு பாரம் கொடுப்பது என்பதை நான் ஆட்சேபிக்கின்றேன். 
எனினும் இதனை வடக்கு மாகாண சபை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக இது மத்திய கலாசார அலுவல்கள்  திணைக்களத்திற்கு கொடுக்கப்பட்டால் முதலில் அங்கு ஒரு பௌத்த சின்னம் ஒன்று வரும் அதுக்கடுத்ததாக ஒரு புத்தரின் சிலை வரும் அதற்குப் பின்னர் காவி உடுத்தவர்கள்  அங்கு வந்து இருப்பார்கள் பின்னர் அங்கு போவதற்கு முடியாது போய் விடும்.
எனவே இதனை ஆராய்ந்து இது யாருக்கு உரியது என்றும் சரித்திரம்  பாரம்பரியம் என்ன என்று அறிந்த பின்னரே மற்றய நடவடிக்கையினை எடுக்க முடியும்.
இவ்வாறான நிலையில் குறித்த தீர்மானம் உடனடியாக கொண்டுவருவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். அடுத்த அமர்வில் பரீசிலிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் யாழ். பல்கலையின் வரலாற்றுத் துறையினர் இருவரின் ஆய்வு அறிக்கையினையும் விவசாய , சுற்றாடல் அமைச்சர் கோரியுள்ளது. 
எனவே பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தற்போது பலர் உரிமை கொண்டாடும் நிலையில் அதனைப்பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு செலுத்தும் வண்ணம் வர்த்தமானியில் பிரசுரத்தை செய்யுமாறு மத்திய கலாச்சார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சினை உரிய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணையினைக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=519123590929741398#sthash.YlaK7jdI.dpuf

No comments: