விழுதல் என்பது எழுகையே".. பகுதி 24 -25 - நயினை விஜயன்

.

31.10.2014 "விழுதல் என்பது எழுகையே".. பகுதி 24 -25 எழுதுபவர் திரு.நயினை விஜயன் அவர்கள் (யேர்மனி) "தமிழருவி" நயினை விஜயன் அவர்கள் அறிமுகம் 1979 முதல் எமது தாய்மொழிக்காகவும்,கலைவளர்ச்சிக்காகவும் இன்றுவரை அயராது உழைத்துக்கொன்டிருப்பவர். 20 ஆண்டுகளாக எசன் நகரில் தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நுண்கலைகல்லூரியை நடாத்தி வருபவர்...

தமிழருவி நயினை விஜயன் அவர்கள் அறிமுகம்
1979 முதல் எமது தாய்மொழிக்காகவும்இகலைவளர்ச்சிக்காகவும் இன்றுவரை  அயராது உழைத்துக்கொன்டிருப்பவர்.
20 ஆண்டுகளாக எசன் நகரில் தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நுண்கலைகல்லூரியை நடாத்தி வருபவர்.150 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலைகளைப் பயின்று வருகிறார்கள்.எமது பாரம்பரியக் கலைகளை 3 தலைமுறைக் குழந்தைகளுக்கு பதியமிட்டுள்ளார்.இவரது சேவைப்பாரட்டி தென்னபிரிக்கத் தமிழர்களும்இ பெங்களூர் டாக்டர்.அம்பெத்கார் பல்கலைகழக முதல்வரும் பாராட்டி வாழ்த்திஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.உ.த.ப.இயக்க தலைவர் பேராசிரியர் இர.ந.வீரப்பன் அவர்களால் தமிழவேள் என சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழிசைத் துறைக்கு யெர்மனியில் காத்திர்மான பங்களிப்பைசெய்துள்ளார் இவரது முயற்சிகளுக்கு ஆசிரியையான திருமதி.சசிகலா விஜயன் உற்ற துணை என்பதை என்றும் நினைவில் கொள்வார்.
இவர் ஒரு செயல்பாட்டு வீரர். துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டவர் கம்பீரமான இவருடைய நடவடிக்கைகள் வியந்து பார்ந்து மனம் கொள்ளத் தக்கவை.
தனது நகரத்தில் நடைபெறும் வெளிநாட்டவர் வாரத்தில் தமிழரின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை பல்கலாச்சார  நிகழ்ச்சிகளில் பங்காற்றச் செய்பவர்.

ஐந்து வருடங்களாக தமிழருவியின் இசைத்திருவிழாவை நடத்தி சிறந்த ஆண் பாடகர்இசிறந்து பெண் பாடகர்இ சிறந்த ஜோடிப் பாடகர்களைச் தெரிவு செய்தும் சிறந்த இசைக்குழுவையும் இரசிகர்களின் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்து பரிசளித்து கௌரவித்தவர்.
இன்று பலராலும் பேசப்படும் விஜய் தொலைக்காட்சியின் அதிசிறந்த பாடகர் போட்டியில் சிறந்த பாடகர்களைத் தெரிவு செய்வதற்கு மின்னஞ்சல் வழியாகவும்இகுறுஞ்செய்தி வழியாகவும் வாக்களிக்கும் முறையை கையாள்கிறார்கள்.
அதனை முதன்முதலாகச் செய்து காட்டியவன் ஜேர்மனியில் இருக்கின்ற முன்னோடி மணிபல்லவம் தந்த திரு.நயினை விஜயன்  அவர்கள்.
அறிமுகம்
திரு.பண்ணாகம் இக.கிருட்ணமூர்த்தி
திரு.எலையா முருகதாசன்
கதை தொடர்கிறது 
பனிதூவும் போது அதிகம் குளிராத  கால நிலை. இருப்பினும்  சூடேற்றியை இதமான வெப்பத்தில்  நிறுத்திவிட்டு படுக்கையில் சாய்ந்தான் சீலன்……! .
கலா தொலைபேசி எடுக்க இன்னும் ஐந்து மணித்திலாயாலங்கள் காத்திருக்க வேண்டும்.எப்படி இந்த நேரத்தைக் கடத்துவது..!
சுவிசுக்கும் கனடாவுக்கும்; 5 மணித்தியாலங்கள் நேர வித்தியாசம்
என்ன விந்தை உலகின்; ஒருபக்கம் விடிய மற்றொரு ஒருபக்கம் உறங்கும் !
புதிய நாடு புதிய வாழ்க்கை எல்லாமே புதிதாய்….
நித்திரை வந்தாலும்  நினைவுகள் விட்டிடுமா ? தூக்கத்தை கலைப்பதற்கே நினைவுகள் துரத்தும் புலம்பெயர்வாழ்வு…..!
எல்லா வற்றையும் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்…!
காக்கைக் கூட்டில் குயில் வாhழ்க்கை
ஒரு மனிதன் தூங்கி விழிப்பதற்குள் 243 தடவைகள்  புரண்டு புரண்டு படுப்பானாம் ஆய்வாரள்கள் கூற்று.
சீலன் அரைவாசியைத் தாண்டிவிட்டிருந்தான்.
கலாவுடன் ஊரில் பழகிய நாட்கள்  பேசிப் பிரிந்த பொழுதுகள் சின்னச்சின்ன கோபங்கள்  தணிப்புக்கள்  எல்லாம்…..!
சிந்தனைத் திரையில் தோன்றி மறைந்து கண்ணாம்பூச்சி விளையாட்டாய் …..
இன்று கலாவுடன் நீண்டநாட்களுக்குப்பின் பேச சந்தர்ப்பம் கிடைப்பதே….. …இருவர் மனங்களும்  பேசிக்கொள்வதால் இருக்குமோ…!
இரவு 10  மணியை கடிகாரம் நெருங்கிக் கெண்டிருந்தது. குளிரும் கொஞ்சம்கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது.
இன்னும் 2 மணித்தியாலங்கள்……! காத்திருப்புக்கு மட்டும் ஏன் இந்த நேரம் விரைவாகப்போவதில்லை ….! வேலை நேரத்தில் மட்டும் நத்தைவேகம் ….!
மீண்டும் நினைவுகளின் ஊர்வலம்….! கலாவுடன்  முதன்முதலாக பூங்காவில் உலாவிய நாட்கள்……!
ஊர்க்கண்ணுக்கு தண்ணிகாட்டிக் கடந்த பல நாட்களும்…எதிர்பாராமல் ….பக்கத்து வீட்டு  பையன் கண்டுவிட்ட அதிர்ச்சியும்….! இன்று வரை அவன்  வாய் திறக்காத  நட்பும்…..!  எத்தனை எத்தனை !  காதலை விட காதலர்கள் சந்திக்கும் இன்ப இடையூறுகள் தான் காதற்செடிக்கு நீர்பாய்ச்சும் ஊற்;றுக்கள்…!இல்லையா …?
வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்…இன்பமாக சில துன்பமாக….சில ..
ட்;றிங்….ட்றிங்……..
தொலைபேசி  அடித்ததோ இல்லை அலறியதோ  ….நித்திரைத்தூக்கத்தில்  மெதுவாக சீலனை எழுப்பியது…
என்ன இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் இருக்கே   கலா  அழைப்பதற்கு …. இதற்கிடையில் யாராயிருக்கும்…..?
“கலோ…….!”
“யாரது……சீலனோ..?”
ஆகா  அம்மாதான்  ….  “நான் சீலன்தான்  பேசிறன் அம்மா
“சொல்லுங்கோ….!  சுகமாயிருக்கிறியளோ…!”
“ஓம் தம்பி …..! பார்வதிமாமி அலுவலா கொழும்புக்கு வந்தவா….
நானும் அவகூட வந்தனான்….தம்பி….!“
பார்வதி மாமி கிட்டிய சொந்தமென்றாலும்  …  எங்களைவிட பணம் படைத்தவை யாராயிருந்தாலும் ஏதோ முறைசொல்லி சொந்தம் கொண்டாடும் நவநாகரீகப் பெண்மணி….! ஏன்ன அம்மாவைச் சேர்த்திட்டாh  !
ஓகோ நானும் வெளிநாட்டில என்ன…..!  சுற்று முற்றும் ஒருதடைவை பார்த்துக்கொண்டான்…!
„சுந்தர வதனி சுகுண மனோகரி …..“  என்று  பொடியள் ஏன்  நானும் உட்படத்தான் ….பகிடி பண்ண சிட்டாய் பறந்து திரிந்த மனோகரியின் தாயார்…சும்மா சொல்லக்கூடாது அப்படியொரு அழகு…மனோகரி..!
„தங்கச்சி வரவில்லையோ…!“
„இல்லைத்தம்பி…..! அவளுக்கு சோதின வருகுது…படிக்கிறா..1“
„சரியம்மா சொல்லுங்கோ….!“
„சீலன்….நீ; அனுப்பிய   இரண்டு லட்சம் ..கிடைச்சுது தம்பி…“
„பாலன் மாமாவிட்ட  பட்ட கடனைக் கொடுத்திட்டன்….!
நன்றி  என்று சொன்னார்…!
தொடரும் 25...

No comments: