குழந்தை பருவத்தில் குதூகலித்து, இளமையில் ஆடி அனுபவித்து நடுத்தர வயதில் வாரிசுகளுக்காக ஓடாய் உழைத்த பலர், இன்று முதுமை எனும் வாசலில் மனம் நிறைய ஏக்கங்களுடன் பாசத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக காப்பகங்களில் வாடும் முதியவர்களின் உணர்வுகளைப் பண்டிகைகள்தான் அவ்வப்போது தொட்டுப்பார்க்கின்றன.
நாகர்கோவிலில் `ரோஜாவனம்’ எனும் முதியோர் இல்லத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை கொடுத்து, செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கான தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள் கைகளில் மத்தாப்பு சிரித்தாலும், அவர்களின் முகம் ஏனோ பூரித்திருக்கவில்லை.
அங்கு தங்கியிருந்த தென்காசியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ராஜம் (86) கூறும்போது, ‘என் பையன் பாசமானவன். டெல்லி யில் நல்ல வேலையில் இருக்கிறான். என் கணவர் 5 வருஷத்துக்கு முன் னால இறந்துட்டாரு. பணம் இருக்கு, வசதி இருக்கு. ஆனா மகன் பக்கத் தில் இல்லை. டெல்லியில் 2 மாசம் இருந்தேன். அபார்ட்மென்ட் வாழ்க்கை பிடிக்கலை. இங்கு வந்துட்டேன். தீபாவளி நெருங்கும் வேளையில் என் பேரன், பேத்தி ஞாபகம் அதிகமா வருது’ என்றார் கண்ணீர் மல்க.பார்க்க ஆள் இல்லை
தேங்காய்பட்டணத்தை சேர்ந்த ஆஞ்சன்ராஜ் (92) கூறும்போது, ‘நான் வெளிநாடுகளுக்கு போய் பணம் சேர்த்தவன். என் இரு மகன் களும் துபாயில் நல்ல நிலையில் இருக்காங்க. வீட்டில் பார்த்துக்க ஆள் இல்லாததால இங்கு வந்துட் டேன். கிறிஸ்துமஸ் நேரத்தில் பேரக் குழந்தைகளை பார்க்க முடியலை யேன்னு தோன்றும்’ என்றார்.
நெல்லை மாவட்டம், கருங்குளம் சரஸ்வதி (89) கூறும்போது, ‘கணவர் மத்திய அரசில் உயர்ந்த பணியில் இருந்தார். போன வருஷம் இறந்து போனார். அவர் இருக்கும்போது, இந்தியா முழுசும் கோயில், குளம்னு சுத்துனோம். எங்களுக்கு குழந்தையில்லை. காப்பகத்தில் அடைக்கலமானேன். குழந்தைகள் இருக்குறவங்களும் இங்கு இருக்காங்கன்னு இப்பதான் தெரியுது’ என்றார்.
ஆனந்தம் எப்போது?
`ரோஜாவனம்’ நிறுவனர் அருள் கண்ணன் கூறும்போது, `மாதம் ரூ.10 ஆயிரம் வரை பராமரிப்பு கட்டணம் பெற்றாலும், நடக்க இயலாத நிலையில் மற்றும் வீட்டில் பராமரிக்க முடியாமல் இருப்பவர்களை சேவை மனப்பான்மையுடன் இங்கு பார்த்து வருகிறோம்’ என்றார்.
முதுமை என்ற ஒரே காரணத்துக் காக அவர்களை தூரத்தில் வைக் கின்றன உறவுகள். இது தொடர் கதையானால், தீபாவளி போன்ற பண்டிகைகள், காப்பகங்களில் தவிக் கும் முதியோருக்கு ஆனந்தத்தை கொடுக்கும் நாள் எப்போதோ?.
பண்டிகைகளின் மேன்மை!
நாகர்கோவில் இந்து கல்லூரி சமூகவியல் துறைத் தலைவர் சுரேந்திரன் கூறும்போது, ‘கூட்டுக்குடும்பம் சிதறத் தொடங்கியபோதே முதியோரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இளைஞர்களின் லட்சியம் கார், பங்களா, உயர்ந்த வாழ்க்கை என்ற சுயநலத்துக்குள் போய்விட்டது. பெற்றோரோடு கொண்டாடும் போதுதான் பண்டிகைகள் மேன்மையடைகின்றன’ என்றார்

nantri thehindu.com