தமிழ் சினிமா நெருங்கி வா முத்தமிடாதே
படத்தின் டைட்டில் வைத்தே பப்ளிசிட்டி தேடினார் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். இது எந்த மாதிரியான படம்? இல்லை ஒரு மாதிரியான படமா? என்று அனைவரையும் படம் ரிலிஸ்க்கு முன்பே புருவம் உயர வைத்தது படக்குழு. ஆரோகோணம் என்ற தரமான படைப்பிற்கு பிறகு லக்‌ஷ்மி இயக்கியிருக்கும் படம் தான் இந்த நெருங்கி வா முத்தமிடாதே.

படத்தின் கதை 

பெட்ரோல் பங்க் ஓனர் ஒய்.ஜி.மகேந்திரன் மகன் ஷபீர் படிப்பில் நாட்டமில்லாததால் சிறு வயதிலிருந்து ஏ.எல்.அழகப்பனின் ஒர்க் க்ஷாப்பில் வேலை செய்து பெரியவனாக வளர்கிறார். ஒரு கட்டத்தில் நாடு முழுவதும் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. 


அந்த நேரத்தில் தன் முதலாளிக்காக அப்பாவின் பெட்ரோல் பங்க்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 2000 லிட்டர் டீசலைத் திருடி வந்து, ஏ.எல்.அழகப்பன் சொல்லும் இடத்தில் கொடுப்பதற்காக வெங்காய லோடு லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்படுகிறார் ஷபீர்.நாடே டீசல், பெட்ரோல் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிக்கும் நேரத்தில் 2000 லி டீசலை எதற்காக சபீர் எடுத்துக் கொண்டு செல்கிறார்? யாரிடம் அந்த டீசல் போய்ச் சேரவிருக்கிறது என்பதை சஸ்பென்ஸாக சொல்லியிருப்பதே ‘நெருங்கி வா முத்தமிடாதே’.

படத்தின் பலம்

நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு தான். மேட்லி ப்ளூஸ்ஸின் இசை, வினோத் பாரதியின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்க்கிறது.


பலவீனம் 

படத்தில் பலவீனங்களை சொல்லிக்கொண்டே போகலாம். முதலில் திரைக்கதையில் மிகவும் தோய்வு. தமிபி ராமையாவின் காமெடிக்கு சிரிப்பே வரவில்லை. எந்த இடத்திலும் ஒரு அழுத்தம் இல்லை.மொத்தத்தில் நெருங்கி வர வைத்து ஏமாற்றிவிட்டார்கள். என்னம்மா இப்படி டைட்டில வச்சு ஏமாத்திட்டியேம்மா...


ரேட்டிங்-2/5உங்களை மனதில் உள்ள ‘வெற்றிடத்தை’ நிரப்ப வருகிறது - 
நன்றி  cineulagam

No comments: