இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.
ராஜேந்திரன் வாழ்வில்
அபூர்வமான தருணங்கள்
இலட்சிய நடிகர் எனப்புகழப்பட்டவரும்
எஸ்.எஸ்.ஆர். என்று மூன்று எழுத்துக்களினால் தமிழ்த்திரையுலகில்
பிரபலமடைந்தவருமான ராஜேந்திரனுக்கும் சிவாஜிகணேசனைப்போன்று முதலாவது
படம் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் வெளியான பராசக்தி
படம்தான். கடந்த வாரம் அவர் சென்னையில் மறைந்தார்.
அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா
ஆகிய முன்னாள் முதல்வர்கள் சிவாஜி, நாகேஷ்,
சகஸ்ரநாமம், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்,
ஏ.எல்.எஸ், கவிஞர் கண்ணதாசன்,
இயக்குநர்கள் கிருஷ்ணன், பஞ்சு, நடிகை
விஜயகுமாரி ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர். நின்று எடுத்துக்கொண்ட
படங்கள் அபூர்வமானவை.
அரசியலிலும் சமூகத்திலும் தனிப்பட்ட
வாழ்விலும் எதிரும் புதிருமாக நின்ற இவர்களில்
சிலர் இவ்வாறு படங்களில் இணைந்ததும்
அபூர்வமான தருணங்கள்தான்.
தகவல்: முருகபூபதி
No comments:
Post a Comment