தமிழ் சினிமா - பொறியாளன்





வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள படம் பொறியாளன்.

உதயம் என்.எச்.4 படத்தின் இயக்குநர் மணிமாறன் கதை திரைக்கதை வசனத்தில் அறிமுக இயக்குனர் தாணுகுமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர் ஹரிஷ் கல்யாண், ஆனந்தி.இடம் வாங்கும்போது மிகவும் கவனமாக விசாரித்து வாங்கவேண்டும் என்பதை கூறும் படம்தான் படத்தின் கரு.கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்க விரும்புகிறான். இதற்காக கந்துவட்டி நபரிடம் வேலைபார்க்கும் நண்பன் அந்த நபர் ஜெயிலுக்கு போன சமயத்தில் வசூலில் இருந்து இரண்டு கோடி ரூபாயை ஹரீஷ்ஷுடம் கொடுக்கிறார்.சாஸ்திரி என்பவரிடம் இடத்தை வாங்கி கட்டிடம் கட்டி விற்க முடிவு செய்யும் போது தான் அந்த இடத்தில் பேரில் வழக்கு இருக்கிறது என்பதும் தான் ஏமாற்றப்பட்டதும் தெரியவருகிறது.



அந்த நேரம் பார்த்து பெயிலில் வெளியே வரும் கந்து வட்டி ஆசாமிக்கு விஷயம் தெரிந்து பணத்தை கேட்டு டார்ச்சர் செய்கிறான். இந்த பிரச்சனையில் இருந்து மீண்டாரா இல்லையா என்பதே மீதி கதை.படத்தின் முதல் பாதி ஹரிஷ் கல்யாண், ஆனந்தி காதல், கந்து வட்டி ஆசாமியின் அடாவடிகள் என நகருகிறது. இரண்டாவது பாதியில் சாஸ்திரியை தேடிக் கொண்டிருப்பது சம்பந்தப்பட்ட காட்சிகளே அதிகம் நிறைந்திருக்கின்றன. சிந்து சமவெளி படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் நடிப்பில் கொஞ்சம் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஆனந்தி என்னும் புதுமுகம். 




பிரபுசாலமனின் கயல் படத்தின் நாயகியாவார்.இவரது விழிகளும் சிரிப்பும் இனி தமிழ் சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறது. மயில்சாமி, நரேன் சில காட்சிகளில் தலைகாட்டுகிறார்கள். பிரபுவாக நடித்திருக்கும் நடிகரும் நன்றாகவே தனது கேரக்டரில் நடித்திருக்கிறார். கந்து வட்டி ஆசாமியாக வரும் வில்லன் மிரட்டுகிறார்.ஜோன்ஸ் இசையில் ஜிவி பிரகாஷ் பாடிய பாடலும் கானா பாலா பாடிய பாடலும் ரசிக்க வைக்கிறது. 



பின்னணி இசையிலும் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார் ஜோன்ஸ். ஒளிப்பதிவோடு நில்லாமல் ஒரு காட்சியில் தலைகாட்டிவிட்டும் போகிறார் வேல்ராஜ்.கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் மணிமாறன். நல்ல த்ரில்லர் படங்களுக்குரிய கதைகளத்துடன் இயக்கியிருக்கிறார் தாணுகுமார்.இரண்டாவது பாதி திரைக்கதை காட்சியமைப்பில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கக் கூடும்.மொத்தத்தில் பொறியாளன் கட்டிவிட்டான் கோட்டை. நன்றி cineulaga


No comments: