உலகச் செய்திகள்


எரிமலையினுள் 1200 அடி வரை இறங்கி ஆபத்தான முறையில் செல்பி எடுத்த நடிகர்!

எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 2300 பேர் உயிரிழப்புஎரிமலையினுள் 1200 அடி வரை இறங்கி ஆபத்தான முறையில் செல்பி எடுத்த நடிகர்!


எரிமலையினுள் 1200 அடிவரை இறங்கி கனடா நடிகர் ஒருவர் செல்பி புகைப்படம் எடுத்து சாகசம் புரிந்துள்ளார்.

கனடாவில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான என்கிரி பிளனட், என்ற தொடரில் நடிக்கும் ஜோர்ஜ் கௌரோயுனிஸ் என்ற நடிகரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்தளவுக்கு  இதுவரை நடிப்பில் புகழ் பெற்று வந்த அவர், தற்போது சாகச நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளார்.

வனுவாட்டு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு எரிமலையில் உள்ளே சென்று தன்னைத்தானே செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். நன்றி வீரகேசரி எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 2300 பேர் உயிரிழப்பு

 11/09/2014 எபோலா வைரஸ் நோய் காரணமாக இதுவரை 2300 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நோய் மேற்கு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா, கின்னியா, சியார்ரா லியோன் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவி வருகின்றது. 

எபோலா நோயை குணப்படுத்துவதற்கு இதுவரை மருந்துகள் பிடிக்கவில்லை. சர்வதேச நாடுகள்  இந்த நோய் பரவுவதை தடுக்க  தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.     
இந்நோயினால் லைபீரியாவில் 1,224 பேரும், கின்னியாவில் 555 பேரும் சியார்ரா லியோனில் 509 பேரும், காங்கோவில் 32 பேரும், நைஜீரியாவில் 8 பேரும் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி


தகுந்த பாதுகாப்பு கவசத்துடன் அமைந்து உடைகளுடன் கடந்த வாரம் வரை கொதித்துக்கொண்டிருந்த லாவா குழம்பு உள்ள எரிமலையின் உள்ளே இறங்கினார். இவர் இறங்கும் சமயத்தில் எரிமலை குழம்பு வெளியேறவில்லை எனினும் அதில் இருந்த வெப்பதால் இவருடைய செல்பி கெமராவும், இவர் அணிந்திருந்த உடைகளும் முற்றிலும் அழிந்துவிட்டது. ஆனாலும் அவர் எவ்வித ஆபத்துமின்றி வெளியே வந்தார்.
ஜோர்ஜ் கௌரோயுனிஸ்  சுமார் 1200 அடி வரை உள்ளே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கெமரா கருகினாலும், இவர் எடுத்த புகைப்படம் பாதுகாப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: 

No comments: