பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்
சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் காலமானார்
பாப்பரசர் பிரான்சிஸ் 2015-01-13 அன்று இலங்கை விஜயம்!
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்
08/09/2014 மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மீது மொனராகலை கெட்டிய பிரதேசத்தில் வைத்து தாக்குதல்மேற்கொண்டு அதில் ஒரு மாணவனை கடத்திச் சென்று கடுமையாக தாக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் இலக்கத் தகடு இல்லாத டிபென்டர் வாகனத்தில் வந்த இனந்தெரியாத சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கபே அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது .
நன்றி வீரகேசரி
சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் செல்வத்தம்பி மாணிக்கவாசகர் நேற்றுக் காலமானார்.
1938 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி பருத்தித்துறை புலோலி மேற்கில் பிறந்த செ.மாணிக்கவாசகர் ஊடகவியல் துறையில் ஏற்பட்ட எல்லையற்ற ஆர்வத்தின் காரணமாக இளமைப் பருவத்தில் டைம்ஸ் ஒப் சிலோன் பத்திரிகையில் தன்னை இணைத்து ஒரு ஊடகவியலாளராக அறிமுகமானார்.
ஊடகவியலாளராக சமூகதொண்டாற்றிய மாணிக்கவாசகர் தொடர்ச்சியான காலத்தில் லேக்கவுஸ் நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்தும் தனது ஊடகசேவையை இடையறாது தொடர்ந்தார்.
ஓய்வுக்காலம் வரை குறித்த நிறுவனத்தில் பணியாற்றியவர். பின்னைய நாட்களில் ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராகவும் சிரேஷ்ட பத்தி எழுத்தாளராகவும் தனது ஊடக பணியை தொடர்ந்து வந்தார்.
இவர் தமிழ், ஆங்கில மொழிகளில் தனது செய்திகளையும் விமர்சனங்களையும் பத்திகளையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். கடந்த ஒருவாரமாக நோய்வாய்ப்பட்டு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று மாலை தனது 76 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.நன்றி வீரகேசரி
பாப்பரசர் பிரான்சிஸ் 2015-01-13 அன்று இலங்கை விஜயம்!
12/09/2014 பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்ருவரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபைசற்றுமுன்னர் அறிவித்தது.
கொழும்பு ஆயர் இல்லத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கை விஜயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் 14 ஆம் திகதி காலி முகத்திடலில் பாப்பரசர் பிரான்சிஸினால் திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment