கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மாருதி' விருது

.
அன்பானவர்களே,
எம் பணிவான வணக்கம்.


அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மாருதி' விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகளை 
உங்களிடமிருந்து வேண்டி நிற்கின்றோம்.

தமிழ் மொழியினதும், தமிழ்ச் சமுதாயத்தினதும் உயர்வுக்காக, அவுஸ்திரேலிய மண்ணில்/மண்ணிலிருந்து தன்னலமற்ற சேவையாற்றிய ஒருவரை, தமிழ் மக்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வுசெய்து, அவுஸ்திரேலியக் கம்பன் கழக உயர் 'மாருதி' விருதினை, 2012ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் கம்பன் விழாக்களில் வழங்கி வருகின்றோம்.

மேற்படி விருதுக்கான பரிந்துரைகள், அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களிடமிருந்து எதிர்வரும் 10-08-2014ஆம் திகதிக்கு முன்னர் எதிர்பார்க்கப்படுகின்றன.

அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூக அமைப்புகளோ அல்லது தனிநபரோ பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். 
பரிந்துரைக்கப்படுபவர் தெரிவிற்கான வரையறைகளை பெரிதும் திருப்திப்படுத்தக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

தயவு செய்து பரிந்துரைப்பிற்கான வரையறைகளையும் பரிந்துரைப் படிவத்தையும் தரவிறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும். 

மேலதிக விபரங்களுக்கு:
மின்னஞ்சல் - kambanaustralia@kambankazhagam.org
செல்லிடப்பேசி இல - 0430 176 547 |  0430 173 918 | 0432 796 424

SBS தமிழ் வானொலி நேர்காணல்.

எம் கழகத்திற்காக உங்கள் தொடர்ச்சியான ஆதரவை நாடி நிற்கின்றோம். 
இச்சந்தர்ப்பத்திற்கு எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து அமைகின்றோம்.

நன்றி,

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-


No comments: