மொரீஷியசின் பிரதமர் முனைவர் ராம் குலாம் தலைமையில் ஆசியவியல் கல்வி மையம்மற்றும் மொரீஷியசின் அரசு அனுசரணையுடன் புலம் பெயர் தமிழர் மாநாடு மொரீஷியசில்ஜூலை 23 மகாத்மா காந்தி நிறுவனத்தில் கோலாகலமாகத் தொடங்கியது . இது தமிழர்அடையாளம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் தலைப்பில், புலம்பெயர்ந்த தமிழர்களின்முதல் மாநாடு. மூன்று நாளும் அங்கு முத்தமிழ் அருவி கொட்டியதில் காதுகளும் மனமும்நனைந்தன,
உலகத்தமிழர்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும்தமிழர்களை ஒன்றிணைக்கும் முதலாவது அனைத்துலக மாநாடு மொரீஷியசில்“புலம்பெயர்ந்த தமிழர் மாநாடு” என்ற தலைப்பில் மூன்று நாள் மாநாடாக ஜூலை 23 முதல்25 வரை கொண்டாடப் பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் திருவிழாவாக நடந்தேறியது,
தமிழைக் கொண்டாடும் இன் நிகழ்வின் பின்புலமாக பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்மற்றும் ஆசியவியல் கல்வி மையம் இயக்குனர் ஜோன் சாமுவேல் ஆகியோரின் பெருமுயற்சி இருந்தது குறீப்பிடத்தக்கதாகும்.
இன் நிகழ்வு இனிதே நடந்தது. தவிர மொரிஷியஸ் நாட்டின் கலை மற்றும் கலாசாரஅமைச்சகம், புலம் பெயர்ந்த தமிழர்களின் சர்வதேச சங்கம், சென்னை ஆசிய கல்விநிறுவனம், மொரிஷியஸ் தமிழ் கோயில் அறக்கட்டளை ஆகியன இணைந்து,இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
உலகம் முழுவதும் இருந்து சுமார் நாற்பதற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்தபுலம்பெயர்ந்த தமிழர்கள், அவர்களின் பிரதிநிதிகள், தமிழ் அறிஞர்கள் என முன்னூறுக்கும்மேற்பட்ட தமிழர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள், அவர்கள் கலந்து கொண்டு உலகம்முழுதும் வியாபித்துள்ள தமிழின் பெருமை பற்றி பேசினார்கள். இதில் கல்வி அமர்வு,அறிவியல் அமர்வு, ஆன்மிக அமர்வு என பல்வேறு அமர்வுகள் ஆய்வுக் கட்டுரைசமர்ப்பித்தல், கருத்தரங்கங்கக்ங்கள் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூன்றுநாட்களும் .இடம்பெற்றன. மாநாட்டில் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் கலாசாரத்தைபாதுகாக்கவும், உலக நாடுகளில் தமிழர்களின் நிலையை மேம்படுத்துவதற்கானதீர்மானங்களும் நிறைவேற்றபட்டன.
இதில் சிறப்பு விருந்தினராக மதுரை ஆதீனம் பங்கேற்றார். அவர் ஜூலை 25ஆம் தேதி ,மாநாட்டின் நிறைவு நாளில் சிறப்புரையாற்றினார் மாநாடு குறித்து பேசும் போது மதுரைஆதீனம்” தமிழர்கள் புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில்வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் தமிழ்மொழியை மறந்து, தமிழர்களின் பண்பாடு,கலாசாரத்தையும் மறந்து வருகின்றனர். தமிழர்களின் கலாசாரத்தை காக்கவும்,புலம்பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை கண்டறிந்துஒருங்கிணைக்கவும், இம்மாநாடு நடத்தப்படுகிறது என்றார்.
மேலும் மாநாடு குறித்துப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின்தலைவரும், மொரீசியஸின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன்பேசுகையில், சுமார் 60 நாடுகளில் பரந்து விரிந்து வாழும், தமிழர்களைப் பண்பாடு,கலாசாரத்தால் இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான, நிரந்தர அமைப்பு உருவாக்கப்படும். அதன்மூலம், உலகெங்கும்வாழும் தமிழர்களின் பிரச்னைகளுக்கான தீர்வுக்கு, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.
ஆசியவியல் கல்வி மையம் இயக்குனர் ஜோன் சாமுவேல் இது குறித்து பேசும் போது , “தமிழர்கள் மொழியாலும், பண்பாட்டாலும், கலாசாரத்தாலும் ஒன்றுபட வேண்டுமென்றநோக்கத்தில், தமிழ்க் கலாசாரப் பாதுகாப்பு மற்றும் அடையாளப்படுத்துதல் என்ற வகையில்இந்த மாநாடு நடைபெறுகிறது ” என்றார்.
மொரிஷியஸ் தமிழர்கள் காவடி, பரதம். கரகம். மற்றும் தமிழ்க் கலை கலாச்சாரநிகழ்ச்சிகளை கண்ணுக்கு விருந்தாக்கினர், இம்மாநாட்டை முன்னிட்டு, தமிழ் ஓலைச்சுவடிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. ஓலைச் சுவடிகளை வாசித்து , 'டிஜிட்டல்' முறையில்மாற்றும் மென்பொருள் குறித்து பார்வையாளர்களுக்கு விவரிக்கும் கண்காட்சி சிறப்பாகஇருந்தது.இந்த முயற்சியில் செல்வி ஷீபா சாமுவேல், பேராசிரியர் எம் பரமசிவம் மற்றும்ஆகியோரின் பங்கு அளப்பரியது.
ஆஸ்திரேலியாவில் தமிழர் வாழ்க்கை – ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் எனதுகட்டுரை அமைந்தது. தமிழர் கலாச்சாரத்தினைப் பேணுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்குறித்து விவாதத்தை அவையில் தொடங்கி வைத்த எனது உரை, இத் தலைப்பில் பல தமிழ்ஆர்வலர் அறிஞர்களின் அனுபவப் பங்களிப்பு அவையை நிறைத்தது.
லண்டனைச் சேர்ந்த திரு சிவா பிள்ளை அவர்கள் இங்கிலாந்தில் தமிழர் வாழ்க்கை என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கிய போது சபை சல சலப்பில் ஆழ்ந்தது.
கனடாவைச் சேர்ந்த டாக்டர் திலகவதி இந்திய இலங்கைத் தமிழ் மொழி உச்சரிப்பில் உள்ள வேறுபாடுகளால் தமிழ் பயிற்றுவிப்பதில் உள்ள சவால்கள் பற்றி பேசினார்.
தென்னபிரிக்க தமிழ் கலாச்சாரம் பற்றி டாக்டர் மகேஸ்வரி நாயுடு ஆய்வுரை வழங்கினார்.மேலும் பல தமிழறிஞர்களும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
இன் நிகழ்வின் தொடர்ச்சியாக அடுத்த மா நாடு 2016 இல் தென்ஆபிரிக்காவிலும் , 2018 இல் ஆஸ்திரேலியாவிலும் நடக்கும் என நிறைவு நாளில் அறிவிக்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணா ஆய்வு இருக்கை மகாத்மா காந்தி மையத்தில் தொடக்கி வைக்க்பபட்டதுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
1 comment:
அனைத்து தமிழ் நெஞ்சுங்களுக்கு நன்றி
Post a Comment