கொலஸ்ட்ரோல் நம்மைக் கொல்லுமா?

.
கொலெஸ்ட்ரோல் (Cholestrol) என்பது வெண்மை நிறத்திலான மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் (காட்டாக எஸ்ட்ரோஜென்), பித்த நீர், வைட்டமின் D போன்ற உடலின் பல்வேறு முக்கியச் செயல்பாடுகளில் பங்கு வகிக்கும் புரதச் சத்துகள் மற்றும் திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் உதவிகரமானதாகும்.

கொலெஸ்ட்ரோலை உடல் எங்கிருந்து பெறுகிறது?

கொலெஸ்ட்ரோலை நமது உடல் பொதுவாக இரண்டு விதங்களில் பெறுகிறது.

முதலாவதாகநமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறதுநமது உடலுறுப்புகளுள் ஒன்றான கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000மில்லிகிராம்கள்வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.

இரண்டாவதாக நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கருமாமிசம்,கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கொலெஸ்ட்ரோல் உற்பத்தியாகிறது. பழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில்கொலெஸ்ட்ரோல் இல்லை.

உடலில் உள்ள பல்வேறு விதமான கொழுப்புச் சத்துகள்:

மது உடலில் ஓடும் இரத்தத்தில் 'கொலெஸ்ட்ரால்மற்றும் 'டிரைகிளிஸெரைட்ஸ்' (Triglycerides) ஆகிய இரண்டு விதமான கொழுப்புகள் உள்ளன.டிரைகிளிஸெரைட்ஸ்என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒருவிதக் கொழுப்பே!இது நம்முடைய அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடலுக்கு வழங்குகின்றதுகொலெஸ்ட்ரோலைப் போலவே இரத்தத்தில்டிரைகிளிசெரைடுகள்அதிக அளவில் இருந்தாலும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகப் படுத்திவிடும்.கொலெஸ்ட்ரோல் புரதங்களுடன் இணைந்து ஒரு லிபொப்ரொடீன் ஆகிஅதன் மூலம் உடல் முழுவதும் பயணிக்கிறதுலிபோபுரோட்டீன்கள் என்பவை இரண்டு வகைகளாகும்அவை:1. குறைந்த அடர்த்தியுள்ள (Low density) லிபோப்ரோட்டின் (LDL)

2. அதிக அடர்த்தியுள்ள (High density) லிபோபுரோட்டின் (HDL)அடர்த்திக் குறைவான லிபோபுரோட்டீன் (LDL):இது 'தீய கொலெஸ்ட்ரோல்என்று குறிப்பிடப்படுகிறதுஏனெனில்இந்த (LDL) அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலந்து செல்லும்போதுஇருதயத்திற்கும் மூளைக்கும் செலுத்தப்படும்இரத்தக் குழாய்களின் சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டு கொழுப்புக் கோடுகளை உற்பத்தி செய்து விடுகிறதுஇந்தக் கொழுப்பு கோடுகள் நாளடைவில் அதிகமதிகம் சேர்ந்து உயரத்திலும் அகலத்திலும் பெருத்த நாறுகளாலான தடுப்புப் பலகைகளைப்போல் மாறிவிடுகின்றன. காலப் போக்கில்இவற்றின் அளவு மேலும் அதிகரிப்பதன் மூலம் இருதயத்தின் பகுதிகளுக்குச் செலுத்தப்படும் இரத்த ஓட்ட வேகத்தைத் தடுத்துவிடுவதனால் மாரடைப்பு (Heart attack) ஏற்படலாம்மூளைக்குச் செலுத்தப்படும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் பக்கவாத நோயால் தாக்குதலுக்குள்ளாகலாம்.அடர்த்திமிகு லிபோபுரோட்டீன் (HDL):இது 'நல்ல கொலெஸ்ட்ரோல்என்று குறிப்பிடப்படுகிறதுஏனெனில் இது இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்ட்ரோலை தமனியிலிருந்து அகற்றியபின் கல்லீரலுக்குக் கொண்டு செல்கிறதுஇரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்டொரோலை இவ்வாறு அகற்றுவதவன் மூலம் மாரடைப்பு,பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.அதிக அளவான கொலெஸ்ட்ரோல் எவ்வாறு இருதய நோய்களுக்கு காரணமாகிறது?நமது உடல் தனக்குத் தேவையான அளவில் கொலெஸ்ட்ரோலைக் கல்லீரலின் இயக்கம் மூலம் தயாரித்துக் கொள்கிறதுஆனால் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர்,நாம் மாமிச உணவுகள் உட்கொள்வதன் மூலம் தேவைக்கு அதிகமான அளவில் கொலெஸ்ட்ரோல் உருவாகிஅது இரத்ததமனிக் குழாய்களின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் தடுப்புப் பலகைகளைப் போல் தங்கிவிடுகிறதுமேலும் இவை சிறிது சிறிதாகச் சேர்ந்து அளவை அதிகப்படுத்தும் வகையில் வளர்வதன் காரணமாக இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களின் உள் சுற்றளவைக் குறுக்கி விடுகின்றதுஇதன் விளைவாகத் தனக்குத் தேவைப் படும் அளவை விடக் குறைவான இரத்தத்தை நமது இருதயம் பெறுகிறதுஇரத்தம் நம் உடலில் பயணிக்கும்போது தன்னுடன் இருதயத்திற்குத் தேவையான 'ஆக்ஸிஜன்' (Oxygen) எனும் உயிர்வளியையும் கொண்டு செல்கிறதுநல்ல அளவிலான ஆக்ஸிஜன் கொண்ட இரத்தம் இருதயத்திற்குச் செல்ல இயலவில்லையெனில், 'ஆன்கினா' Angina எனும் நெஞ்சு வலி ஏற்படலாம்தொடர்ந்து இருதயத்தின் பகுதிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவது துண்டிக்கப்பட்டால் அதன் விளைவாகவேheart attack எனும் மாரடைப்பு ஏற்படுகிறதுசில நேரங்களில் இந்தக் கொழுப்புச் சில்லுகள் இடம் பெயர்ந்து கட்டிகளாக இரத்தக் குழாய் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்திவிடுவதும் உண்டுஅதன் விளைவாக நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்படுகிறதுஅளவைவிட அதிகமான கொலெஸ்ட்ரோலின் விளைவாக சீறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உட்பட டெமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.கொலெஸ்ட்ரோல் அளவை இரத்தத்தில் அதிகப்படுத்துபவை யாவை?
Nantri anthimaalai.blogspot

No comments: