உலகச் செய்திகள்


ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைவிதிப்­பு­கள் தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டுறவை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது : ரஷ்யா

அமெரிக்காவில் இரு காட்டுத் தீ

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டமை ஒரு போர் குற்றமாக கருதப்படலாம்

தனது பெயரை மாற்ற மலேசியா விமான சேவை முடிவு

காஸா மீது வான், கடல், தரை மார்க்கமாக இஸ்ரேல் உக்கிர தாக்குதல்; 60 பேர் பலி

ரஷ்யா அணுசக்தி ஏவுகணை உடன்படிக்கையை மீறியுள்ளது - அமெரிக்கா குற்றச்சாட்டு

நைஜீரியாவில் இரு பள்ளிவாசல்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்; 6 பேர் பலி




====================================================================

ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைவிதிப்­பு­கள் தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டுறவை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது : ரஷ்யா

28/07/2014  உக்­ரே­னிய நெருக்­கடி தொடர்பில் ரஷ்­யா­வுக்கு எதி­ரான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் புதிய தடைகள் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான பாது­காப்பு கூட்­டு­றவை ஆபத்­துக்­குள்­ளாக்­கி­யுள்­ள­தாக ரஷ்யா தெரி­வித்­துள்­ளது.
ரஷ்­யாவைச் சேர்ந்த 15 உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் 18 பேர் மீதான சொத்து முடக்கம் மற்றும் விசா தடைகள் என்­பன தொடர்­பான நகர்­வுக்­கான பழியை ஐரோப்­பிய ஒன்­றியம் ஏற்க வேண்­டி­யி­ருக்கும் என ரஷ்யா வெளி­நாட்டு அமைச்சு தெரி­வித்­தது.
உக்­ரே­னி­லுள்ள கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ரஷ்யா ஆத­ர­வ­ளித்து வரு­வ­தாக ஐரோப்­பிய ஒன்­றி­யமும் அமெ­ரிக்­காவும் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றன. எனினும் அந்தக் குற்­றச்­சாட்­டுக்கு ரஷ்யா தொடர்ந்து மறுப்புத் தெரி­வித்து வரு­கி­றது.
இந்­நி­லையில் உக்­ரே­னிய பிராந்­தி­யத்தில் வெடித்துச் சித­றிய மலே­சிய எம்.எச். 17 விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளது இறுதி தொகுதி சடல எச்­சங்கள் கார்கிவ் நக­ரி­லி­ருந்து 38 சவப்­பெட்­டி­களில் நெதர்­லாந்­துக்கு கொண்டுசெல்­லப்­பட்­டுள்­ளன.
இதன் பிர­காரம் நெதர்­லாந்தில் ஆள­டை­யாளம் காண்­ப­தற்­காக கொண்டு செல்­லப்­பட்ட சட­லங்­களின் எண்­ணிக்கை 227 ஆக உயர்ந்­துள்­ளது.
கடந்த ஜூலை மாதம் கிழக்கு உக்­ரேனில் மேற்­படி மலே­சிய விமானம் வெடித்துச் சித­றி­ய­மைக்கு ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சி­யா­ளர்­களே காரணம் என குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில், ரஷ்ய வெளி­நாட்டு அமைச்சால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில், 28 அங்­கத்­து­வர்­களை உள்­ள­டக்­கிய ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தடை­க­ளா­னது பாரிய அழிவை ஏற்­ப­டுத்தும் ஆயுத பரம்­ப­லுக்கும் தீவி­ர­வா­தத்­துக்கும் குற்றச் செயல்­க­ளுக்கும் ஏனைய சவால்­க­ளுக்கும் எதி­ரான போராட்டம் உட்­பட சர்­வ­தேச மற்றும் பிராந்­திய பாது­காப்பு தொடர்­பான ரஷ்­யாவின் இணைந்து பணி­யாற்றும் செயற்­பாட்­டுக்கு குந்­தகம் விளை­விப்­ப­ன­வாக உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரஸல்ஸில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்திருந்தது.   நன்றி வீரகேசரி 









அமெரிக்காவில் இரு காட்டுத் தீ

28/07/2014   அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் வேகமாக பரவி வரும் இரு காட்டுத்தீ காரணமாக 10 வீடுகள் அழிவடைந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
சக்ரமென்டோ பிராந்தியத்தில் இந்த காட்டுத்தீயால் சுமார் 4000 ஏக்கர் அளவான பிரதேசம் அழிவடைந்துள்ளது.
அதேசமயம் யொஸிமைட் தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள வீடுகளை அச்சுறுத்தும் வகையில் பிறிதொரு தீ பரவி வருகின்றது.
இந்நிலையில் லொஸ்ஏஞ்சலில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி சுமார் 20 வயதான இளைஞர் ஒருவர் பலியானதுடன் ஏனையவர்கள் காயமடைந்துள்ளனர். 

நன்றி வீரகேசரி 








மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டமை ஒரு போர் குற்றமாக கருதப்படலாம்



29/07/2014   கிழக்கு உக்­ரேனில் மலே­சிய எம்.எச். 17 விமானம் வீழ்த்­தப்­பட்­டமை ஒரு போர்க் குற்­ற­மாக வகைப்­ப­டுத்­தப்­ப­டலாம் என ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் நவ­நீ­தம்­பிள்ளை திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்ளார்.
அந்த விமானம் ரஷ்­யாவால் விநி­யோ­கிக்­கப்­பட்ட ஏவு­கணை முறை­மையைப் பயன்­ப­டுத்தி ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சி­யா­ளர்­களால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தாக உக்­ரேனும் மேற்­கு­லக நாடு­களும் நம்­பு­கின்­றன. இந்­நி­லையில் உக்­ரே­னியப் படை­யி­னரே அந்த விமா­னத்தை சுட்டு வீழ்த்­தி­ய­தாக ரஷ்­யாவும் கிளர்ச்­சி­யா­ளர்­களும் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர்.
சர்­வ­தேச சட்­ட­ததை மீறும் இந்த செயற்­பாடு போர்க் குற்­ற­மொன்­றாகக் கரு­தப்­ப­டலாம் என நவ­நீ­தம்­பிள்ளை ஜெனீ­வாவில் உரை­யாற்­று­கையில் தெரி­வித்தார்.உக்­ரேனில் கடந்த ஏப்ரல் மாதத்­தி­லி­ருந்து இடம்­பெற்று வரும் மோதல்­களில் குறைந்­தது 1129 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 3442பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை தெரி­விக்கிறது. அத்­துடன் 200,000 பேருக்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.
எதிர்­வரும் சில நாட்­க­ளுக்குள் உக்­ரே­னிய, ரஷ்ய எல்­லைக்கு ஐரோப்­பிய பாது­காப்பு மற்றும் கூட்­டு­றவு அமைப்பைச் சேர்ந்த கண்­கா­ணிப்­பா­ளர்கள் சென்­ற­டை­வார்கள் என நம்­பு­வ­தாக ரஷ்ய வெளி­நாட்டு அமைச்சர் ஸெர்­கேயி லாவ்ரோவ் திங்­கட்­கி­ழமை தெரி­வித்தார். உக்­ரே­னிய டொனெட்ஸ்க் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஹொர்லிவ்கா நகரில் கடந்த 24 மணி நேர காலத்தில் கடும் ஆர்ட்டிலெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டதில், பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன
நன்றி வீரகேசரி












தனது பெயரை மாற்ற மலேசியா விமான சேவை முடிவு

29/07/2014  மலேசியா விமான சேவை தனது பெயரை மாற்றுவதற்கு முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்தடுத்து விமான விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதால் முதலீட்டாளர்கள் மற்றும் பயணிகளிடம் இழந்துள்ள நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்காகவே மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம்  தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் எம்எச்370 விமானம் நடுவானில் மாயமானது. 
இந்நிலையில் இம்மாதம் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன்  ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17 உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது.  
இந்த சம்பவத்தில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு உலக அளவில் மதிப்பு குறைந்துள்ளதுடன் அந் நிறுவனத்தின் பெயரை கேட்டாலே பயணிகள் அலறியடித்து ஓடுகிற நிலைமை ஏற்பட்டுள்ளது. 
எனவே மலேசியா விமான சேவை தனது பெயரை மாற்றுவதன் மூலம் மீண்டும் ஸ்திரத்தன்மையை பெற முடிவு செய்துள்ளது.
நன்றி வீரகேசரி












காஸா மீது வான், கடல், தரை மார்க்கமாக இஸ்ரேல் உக்கிர தாக்குதல்; 60 பேர் பலி



29/07/2014  இஸ்ரேலானது பலஸ்தீன காஸா பிராந்தியத்தின் வான் கடல் மற்றும் தரை மார்க்கமான உக்கிர தாக்குதல்களை திங்கட்கிழமை இரவு ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸாவிலுள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் காஸாவை கட்டுப்படுத்தி வரும் ஹமாஸ் போராளிகளின் தளங்கள் மீது 60 க்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இந்த தாக்குதல்களில் 60க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு இஸ்ரேல் தனது இலக்கை அடையும் வரை தாக்குதலை தொடரும் என எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஹமாஸ் போராளிகள் உட்பிரவேசிப்பதை தடுப்பதற்கு காஸா இஸ்ரேல் எல்லையிலுள்ள சுரங்க பாதைகளை அழிப்பது அவசியமாகவுள்ளதாக தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார்.
வட காஸாவிலுள்ள மக்களை வெளியேற வலியுறுத்தி  இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை விநியோகத்துள்ளதாக வெளியான செய்திகள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலையை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு இடம்பெயரும் மக்களுக்கு உதவுவதற்கு போதுமான வளங்கள் ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்களிடம் இல்லை என அவர் கூறினார்.
அதேசமயம் இஸ்ரேலானது மோதல்களில் காஸா பிராந்தியத்திலான பொதுமக்கள் உயிரிழப்பதை தவிர்ப்பதற்காகவே மேற்படி துண்டுபிரசுரங்களை விநியோகித்ததாக தெரிவித்துள்ளது.
காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய தாக்குதல்களில் 55 வீடுகள் அழிவடைந்துள்ளன.
அவற்றில் 3 வீடுகளின் இடிபாடுகளின் கீழ் மக்கள் புதையுண்டுள்ளதாக பலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாலைகளும் ஒரு பாலர் பாடசாலையும் தாக்குதல்களில் சிக்கி தீக்கிரையாகியுள்ளன. காஸா பிராந்தியத்தில் கடந்த  24 மணி நேரத்தில் 110 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அந்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது.
திங்கட்கிழமை நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 குடும்பங்கள் முழுமையாக கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறுகின்றது.
அதேசமயம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 9 பெண்கள் 4சிறுவர்கள் உட்பட குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 14 ஏவுகணைகளை ஏவியதாக ஹமாஸ் போராளி குழு தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையை ஊடுருவி திங்கட்கிழமை நடத்திய தாக்குதலில் 5 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 8ம் திகதி மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை 1,115 பலஸ்தீனர்களும் 53 படை வீரர்கள் 3 பொதுமக்கள் உட்பட 53 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேலிய உச்ச நிலை தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கமெனி இஸ்ரேல் வெறி நாய் போன்று செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் பலஸ்தீனர்களுக்கு முஸ்லிம்கள் ஆயுதமளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நன்றி வீரகேசரி











ரஷ்யா அணுசக்தி ஏவுகணை உடன்படிக்கையை மீறியுள்ளது - அமெரிக்கா குற்றச்சாட்டு

30/07/2014   ரஷ்யாவானது அணுசக்தி ஏவுணையொன்றை பரிசோதித்ததன் மூலம் முக்கிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்படிக்கையொன்றை மீறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. ரஷ்ய கரையிலிருந்து ஏவுகணையொன்றை ஏவிப்பரிசோதித்தது 1987 ஆம் ஆண்டு பனிப்போரின்போது கைச்சாத்திடப்பட்ட மத்திய நடுத்தர அணுசக்தி படைகள் உடன்படிக்கையை  மீறியுள்ளதாக அமெரிக்கா சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அந்த உடன்படிக்கையானது 500 கிலோ மீற்றருக்கும் 5500 கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட தூரம் பயணிக்கக்கூடிய நடுத்தர ஏவுகணைகளை பரிசோதிப்பதற்கு தடை விதிக்கின்றது.
உக்ரேனிலான பதற்ற நிலைக்கு ரஷ்யாவே காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ள சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா உக்ரேனிய நெருக்கடி குறித்து ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிப்பதற்கு இணக்கம் கண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நன்றி வீரகேசரி










நைஜீரியாவில் இரு பள்ளிவாசல்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்; 6 பேர் பலி

30/07/2014    நைஜீரியாவின் யொப் மாநிலத்திலுள்ள இரு பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுதாரிகள் செவ்வாய்க்கிழமை பின்னிரவு நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

பொரிஸ்கம நகரில் டொகோ டெபோ பிரதேசத்திலுள்ள திறந்தவெளி பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்பில் குறைந்தது 4 பேர் பலியாகியுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் மேற்படி தாக்குதல் இடம்பெற்று 5 நிமிடங்களின் பின்னர் அந்நகரின் அங்குவர் பொலவா பிரதேசத்தில் தலைமை இமாமா மின் வளாகத்திலிருந்த பிறிதொரு பள்ளிவாசலின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
திறந்த வெளி பள்ளிவாசலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய போகோ ஹராம் போராளி குழுவைச் சேர்ந்தவர் என நம்பப்படும் நபரது சடலத்தை தொடுவதற்கு பிரதேசவாசிகள் மறுத்ததால், அந்த சடலம் அங்கு கைவிடப்பட்ட நிலையில் நெடுநேரமாக கிடந்ததாக கூறப்படுகிறது.
நன்றி வீரகேசரி




No comments: