மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு

.

              படைப்பிலக்கியவாதியும்   பத்திரிகையாளருமான   மெல்பனில்   வதியும்   திரு. லெ.   முருகபூபதியின்   புதிய    புனைவிலக்கிய  கட்டுரைத்தொகுதி சொல்லமறந்த   கதைகள்  நூல் வெளியீட்டு   அரங்கு   எதிர்வரும்   23-08-2014           ஆம்  திகதி சனிக்கிழமை  மாலை   மணியிலிருந்து    மணிவரையில்   மெல்பனில்  Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria - 3175)   மண்டபத்தில்  நடைபெறும்.
கலை, இலக்கிய   ஆர்வலர்   திரு. கந்தையா  குமாரதாசன்   தலைமையில் நடைபெறவுள்ள  சொல்ல   மறந்த   கதைகள்  நூல்  தமிழ்  நாடு  மலைகள் பதிப்பகத்தின்   வெளியீடாகும்.
இலங்கை - தமிழக - அவுஸ்திரேலியா - கனடா   மற்றும்   ஜெர்மனியில் வெளியாகும்   இதழ்கள்  -  இணைய   இதழ்கள்   ஆகியனவற்றில்   பதிவான படைப்புகளின்   தொகுப்பு   சொல்ல  மறந்த  கதைகள்.    இலங்கையில் நீடித்த   போர்க்காலத்தில்   அரசியலிலும்   மூவீன    மக்களிடத்திலும்   ஏற்பட்ட மாற்றங்களையும்   ஒரு    ஊடகவியலாளனின்   மனிதநேய   -  மனித உரிமைப் பார்வையில்    இலக்கிய   நயமுடன்   பதிவுசெய்த   புதிய    தொகுப்பு   நூல் சொல்ல மறந்த கதைகள்.
1972  காலப்பகுதியில்  படைப்பு   இலக்கியம்   மற்றும்   பத்திரிகைத்துறையில் பிரவேசித்த   முருகபூபதியின்   இருபதாவது   நூல்   சொல்ல  மறந்த கதைகள்.    அன்பர்களும்  கலை,  இலக்கிய  ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும்  அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு : முருகபூபதி
மின்னஞ்சல்: letchumananm@gmail.com  தொலைபேசி எண்கள்: 04 166 25 766
                       ---0---
No comments: