யாருக்குப் பின்னால் யார்?
சப்ரகமுவ பல்கலை மாணவன் தன்னைத்தானே தாக்கியுள்ளார் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
வைத்தியசாலை ஊழியர்கள் நாளை பணிபகிஷ்கரிப்பு
சார்க் அமைப்பின் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
விசாரணை அறிக்கை நம்பகமாக அமையும்
130 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலரை வைத்திருந்தவர்கள் கைது
யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் மீது கல்வீச்சு
பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முயன்ற கடற்படை வீரர் மக்களால் மடக்கிப் பிடிப்பு
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
======================================================================
யாருக்குப் பின்னால் யார்?
-வருணி கருணாரத்ன
13/08/2014 கடந்த வாரம் சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பல சம்பவங்கள்
மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் சொல்வதன்படி, ஆகஸ்ட் 3ல் முதலாம் வருட தமிழ் மாணவர் ஒருவர் இனந்தெரியாத குழு ஒன்றினால் தாக்கப்பட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டதினால் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவர்களை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேறும்படி அச்சுறுத்தி சமீபத்தில் வெறுப்பை தூண்டும் சுவரொட்டிகளும் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கிடையில் கடந்த வாரம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் மற்றொரு தமிழ் மாணவனும் பல்கலைக்கழகத்தில் வெறுப்பையும் பதற்றத்தையும் பரப்பும் செயல்களில் ஈடுபட்டாரா என்பதைப் பற்றி விசாரிப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தவதற்காக இவை வெளிக் கட்சிகளால் உருவாக்கப் பட்டவை என மாணவர்கள் எண்ணுகிறார்கள். சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் இயக்கத்தின் தலைவரான ரசிந்து ஜயசிங்க, பல்கலைக்கழகத்தினுள் இனக் குரோதங்களை தூண்டுவதற்காக வெளிச் சக்திகள் முயற்சி செய்கின்றன எனக் குற்றம் சாட்டினார். இங்கு சகல சமூகங்களையும் சேர்ந்த மாணவர்கள் எந்தப் பிரச்சினையுமின்றி ஒன்றாகப் படித்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, பல்கலைக்கழகத்தில் அநேக வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த தமிழ் பேசும் மாணவர்கள் உள்ளார்கள், மற்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் பாகுபாட்டுக்கு உட்படத்தப் படவில்லை.
தங்கள் சக மாணவர்களைப் பாதுகாக்க வெளிச் சக்திகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்து நிற்போம் என அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் மாணவரின் கைதினைப் பற்றி சமனலவௌ காவல் நிலையத்தில் அவர்கள் விசாரித்தபோது, அந்த விடயம் பற்றி மேலும் விசாரிக்க வேண்டாம் என அவர்களுக்குச் சொல்லப்பட்டதாம். பல்கலைக்கழகம் நடைபெறுவதை குழப்பும் முகமாகன செயற்பாடுகளை மேற்கொண்டதற்காக எதிர்காலத்தல் உடனடியாக ஒரு பட்டியலில் உள்ள மாணவர்களை கைது செய்யப் போவதாக காவலர்கள் தங்களை எச்சரித்ததாகவும் ரசிந்து மேலும் தெரிவித்தார்.
சண்டே லீடர் சமனலவௌ காவல்நிலையத்தை தொடர்பு கொண்டபோது,அங்குள்ளவர்கள் அந்தக் கைதுக்கும் தங்களுக்கும் எதுவித மொடர்புமில்லை என்றும், அந்தக் கைது பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) மேற்கொள்ளப் பட்டது என்றும், ஏனைய சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்கள்.
காவல்துறைப் பேச்சாளர் எஸ்.எஸ்..பி அஜித் ரோகண, சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டதையும் மற்றும் பல்கலைக்கழகத்தில் பகைமை மற்றும் பதற்றத்தை தூண்டும் நடவடிக்கைகளில் தொடர்புள்ளதாக சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சண்டே லீடரிடம் உறுதிப்படுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில,; அந்த மாணவன் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் என்றும் அவர் 2008 முதல் 2009 வரையான கடைசிக் கட்ட போரின்போது எல்.ரீ.ரீ.ஈயில் இருந்துள்ளார் என்றும் சொன்னார். இந்த மாணவன் புனர்வாழ்வு பெறும் சமயத்தில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சப்பிரகமுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். காவல்துறையினரின் எண்ணப் பிரகாரம் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த குழப்பங்களுக்கும் இந்த மாணவருக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இவரைப் பற்றிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன மற்றும் சுமத்தப்பட்டுள்ள ஏதாவது குற்றச் சம்பவங்களில் இவருக்கு தொடர்பு உண்டென்று கண்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.எஸ்.பி அஜித் ரோகண தெரிவித்தார்.
சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் சொல்வதின்படி, மூன்றாம் வருட மாணவன் யோகேந்திரன் நிரோஜன் கைது செய்யப்பட்டு இப்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக கடந்த வியாழக்கிழமை மாணவர்கள் ஒரு எதிர்ப்பு ஆhப்பாட்டம் நடத்தினார்களாம். ரசிந்து மேலும் தெரிவிக்கையில்,”அவர் தனது பரீட்சையை எழுதிக் கொண்டிருக்கும்போது கைது செய்யபபட்டாh. அந்தக் கைதையும் மற்றும் அவர் கைது செய்யப்பட்ட முறையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதிகாரிகளிடம் எங்கள் சக மாணவனை உடனடியாக விடுவிக்குமாறு நாங்கள் வேண்டுதல் விடுக்கிறோம்” என்றார். சமீபத்தில் முதலாம் வருட மாணவன் சந்திர்குமார் சுதர்சனும் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானார் என அவர் தொடர்ந்து சொன்னார். அவரது கூற்றுப்படி தனது காயங்களுக்காக அந்த மாணவன் மருத்துவ மனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறாராம்.
சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் கலாச்சார சங்கத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான தினேஷ் தேவராஜா என்பவருடன் த சண்டே லீடர் பேசியபோது அவரும் வெளிச் சக்திகள் மீதே குற்றம் சாட்டினார். அவர் மேலும் தொடர்கையில் “சிங்கள,தமிழ்,மற்றும் முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நல்லுறவுடனேயே வாழ்கிறார்கள். நாங்கள் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக படித்து வருகிறோம். நிச்சயமாக எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று சொன்னார். மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சை பெற்றுவரும் முதலாம் வருட மாணவன் சொல்வதன்படி, அவரைத் தாக்கியவர்கள் நல்ல உடற் கட்டமைப்புடன் கூடிய தங்களது முப்பது வயதுகளில் உள்ள நபர்கள் என்றும், அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேவராஜா தொடர்ந்து சொல்கையில் இங்குள்ள கிராமத்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுடன் நல்லுறவைப் பேணி வருவதால் இந்தச் சம்பவங்களுடன் அவர்கள் தொடர்பு பட்டிருக்க முடியாது என்றார். “கிராமத்தவர்கள் பல்கலைக்கழகத்தினால் பயனடைபவர்களாக உள்ளார்;கள் மற்றும் அவர்கள் மாணவர்களுடன் மிகவும் சிறந்த உறவையும்; பேணி வருகிறார்கள். பல்கலைக்கழகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டால், அந்தக் குழப்பங்கள் அவர்களையும் கூடப் பாதிக்கும்” எனவே இந்தச் சம்பவங்களில் அவர்கள் தொடர்பு கொண்டிருக்க முடியாது, ஆனால் அது சில வெளிக் கட்சிகளாலேயே நடத்தப்பட்டுள்ளது என்ற அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் குழுத் தலைவரான நாஜித் இந்திக, த சண்டே லீடருக்கு சொல்லும்போது, சமூகத்தில் இன மற்றும் வகுப்புவாத பகைமைகளை வளர்ப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களைக் குறி வைப்பதை தாங்கள் வன்மையாகக கண்டிப்பதாக தெரிவித்தார். பல்வேறு இனக் குழக்களைச் சோந்த மாணவர்கள் மத்தியில் எந்தப் பிரச்சினையும் கிடையாது என வலியுறுத்திய அவர், ஆனால் வெளிக்கட்சிகள் தங்கள் நிகழ்ச்சித் திட்டத்தின்படி மாணவர்களைக் குறி வைப்பதைப் போலத் தெரிகிறது என்றும் சொன்னார்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி தேனீ
சப்ரகமுவ பல்கலை மாணவன் தன்னைத்தானே தாக்கியுள்ளார் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
12/08/2014 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கியமை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பல்கலைக்கழக மாணவனுக்கு எதிராக இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவித்தமை தொடர்பாக குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
வைத்தியசாலை ஊழியர்கள் நாளை பணிபகிஷ்கரிப்பு
12/08/2014 சம்பள உயர்வு தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கல் போன்ற வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு வழங்காமையை அடிப்படையாகக் கொண்டு நாளை நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இப்பணிப்பகிஷ்கரிப்பை அகில இலங்கை சுவசேவை சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இவ் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏனைய சுகாதார தொழிற் சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை சுவசேவை சங்கத்தின் செயலாளர் காமினி குமாரசிங்க கருத்து தெரிவிக்கையில் 03/2006ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் பி.எல். மற்றும் எம்.என். பிரிவுகளை சேர்ந்த வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய சம்பள நிலுவை மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நியமன வழங்கல் போன்ற பிரச்சினைகள் குறித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை தீர்வு கிட்டவில்லை.
மேற்குறித்த சுற்றறிக்கைக்கு அமைவான சம்பள நிலுவை சப்ரகமுவ மாகாண சுகாதார ஊழியர்களுக்கும் ஆயுர்வேத திணைக்களத்தின் ஊழியர்களுக்கும் பகிரப்பட்ட போதிலும் பி.எல். பிரிவினருக்கு உரித்தான 15 வருட நிலுவையான 50 ஆயிரம் ரூபா இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் மேற்குறித்த கோரிக்கைகளை பெற்று கொள்ளும் நோக்குடன் இன்றைய தினம் அனைத்து வைத்தியசாலைகளிலும் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதற்கமைய சுகாதார அமைச்சுக்கு முன்பு ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி சார்க் அமைப்பின் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இவ்வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கை எதிர்பார்ப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
சார்க் அமைப்பின் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு முதற் தடவையாக விஜயம் செய்துள்ள அர்ஜுன் பி. தபா நவம்பரில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பாகவும் பிராந்திய அமைப்பின் நடப்பு விவகாரங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது சார்க் உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்காக ஜனாதிபதி இரண்டு யோசனைகளை முன்வைத்துள்ளார். அதாவது பிராந்தியத்தின் இளைஞர்களை பாதிக்கும் விடயங்கள் குறித்து கலந்துரையாட சார்க் இளைஞர் அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் கூறிய ஜனாதிபதி சார்க் பிராந்தியத்தில் நாட்டமுள்ள சமய, கலாசார இடங்களின் இணைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடு ஒன்றை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டத்தையும் முன்மொழிந்துள்ளார்.
அதுமட்டுமன்றி சார்க் அமைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகவும் சர்வதேச அரங்கிலும் பொருளாதார செழிப்புக்கான பங்களிப்பாளராக சார்க் அமைப்பை நிலைநாட்டுவது குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வர உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரிவிசாரணை அறிக்கை நம்பகமாக அமையும்
12/08/2014 இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும். விசாரணை அறிக்கையானது முறையான தரங்களுக்கு அமைய நம்பகமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியை உருவாக்கிக் கொடுக்க இந்த விசாரணையானது உதவும் என்பதுடன் இது சகல இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுககு வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை. இலங்கையிடமோ அல்லது வேறு நாடுகளிடமோ வீசா கோரி எவரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தொம்சன் ராய்ட்டர் சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையிடமோ அல்லது வேறு நாடுகளிடமோ வீசா கோரி எவரும் விண்ணப்பிக்கவில்லை. . இந்தியாவிடம் வீசாவுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை மறுக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவினர் நாட்டுக்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படாவிட்டாலும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவது சரியான தரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும். இலங்கைக்கு வெளியில் தகவல்களை பெறக் கூடிய சிறந்த வாய்ப்புகள் உள்ளன.
வடகொரிய மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த இரண்டு நாடுகளிலும் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் விசாரணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த இரு நாடுகள் தொடர்பான விசாரணைக்கும் இலங்கை சம்பந்தமான விசாரணைக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக நான் காணவில்லை.இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாக செய்திகளில் உண்மையில்லை. இலங்கையிடமோ அல்லது வேறு நாடுகளிடமோ வீசா கோரி எவரும் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் கவலைக்கிடமான முறையில் தவறான தகவல்களும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
விசாரணைக்குழுவினர் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் தொடர்பாக சில இலங்கை ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்ட தவறான தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
12 பேர் கொண்ட விசாரணைக்குழு ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும். தேவை ஏற்பட்டால் வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும். விசாரணைக்குழுவினர் சாட்சியங்கள் பெறுவதுடன் தகவல்களை சேகரிக்கின்றனர். மேலும் அட்டூழிய குற்றச்சாட்டுக்களை சரிபார்க்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். விசாரணைகளில் அவர்கள் கண்டறியும் விடயங்களை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிப்பார்கள்.
குற்றச் செயல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை கண்டறியவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த விடயமே இதன் தேவையாக இருந்தது.இந்த விசாரணையானது சகல இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் நிரந்தரமான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியை உருவாக்கி கொடுக்க இது உதவும்.
நன்றி வீரகேசரி130 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலரை வைத்திருந்தவர்கள் கைது
11/08/2014

யாழ்ப்பாணத்தில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை (130 கோடி 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா) வைத்திருந்த இருவர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரியாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் மீது கல்வீச்சு

இதன் போது நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முயன்ற கடற்படை வீரர் மக்களால் மடக்கிப் பிடிப்பு
14/08/2014 வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அத்துமீறி உட்புகுந்த கடற்படை வீரரொருவர் அவ்வீட்டில் வசித்த இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார். ஆனால் அயலவர்களின் உதவியுடன் குறித்த கடற்படைவீரர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ. வகாப்தீன் கட்டளையிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை 1 மணியளவில் கடற்படைவீரர் ஒருவர் உட்புகுந்து அவ் வீட்டில் வசித்த இரு பிள்ளைகளின் தாயாரின் வாயைப் பொத்தி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு மூன்று மற்றும் ஒரு வயதுடைய இரு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இச் சம்பவம் இடம்பெற்றபொழுது இப்பெண்ணின் கணவர் வீட்டுக்கு வெளியே மணலில் படுத்துறங்கியுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்திய கடற்படை வீரர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண் எழுப்பிய அவலக்குரலினால் அயலவர்கள் அங்கு விரைந்து சென்று கடற்படை வீரரை மடக்கிப் பிடித்து நையப்புடைத்து கட்டி வைத்துள்ளனர். இதன்பின்னர் இச் சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸாருக்குப் பொது மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

உடனடியாக அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸாரிடம் அதிகாலை 2.30 மணியளவில் கடற்படை வீரர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன் பின்னர் நேற்றுக் காலை சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்தவர்களை பளைப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ. வகாப்தீன் கட்டளையிட்டுள்ளார்.
இதேவேளை கடற்படைவீரர் தங்களுடைய முகாமில் கடமையாற்றுகின்றார் எனவும் அவருக்கு மனநோய் எனவும் அப்பகுதிக்குப் பொறுப்பான கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ். சுகிர்தன், எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தினைப் பார்வையிட்டுள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவேண்டுமெனவும் குறித்த மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
16/08/2014 இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பிரசாத் அஜந்தா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்தப் பெண் கடந்து மே மாதம் 22ஆம் திகதி இராணுவத்தில் இணைந்துள்ளார். இவர் இராணுவ பயிற்சிகளில் ஈடுபடும் போதே சுகயீனம் ஏற்பட்டதாகவும் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
குறித்தப் பெண்ணின் சடலம் செல்வபுரத்தில் உள்ள உயிரிழந்த பெண்ணின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இராணுவ மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment