கோவையில் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் படத் திறப்பு விழா

.
கோவை : கோவையில் இந்திய சுதந்திர தினத்தின் 68 ஆவது ஆண்டையொட்டி இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தியாகிகளின் படத் திறப்பு விழா 14.08.2014 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ரேஸ் கோர்ஸில் நடைபெற இருக்கிறது.

ஐக்கிய சகோதரத்துவ அமைப்பு,லயன்ஸ் 324 B 5 மாவட்டம், கோயம்புத்தூர் விங்க்ஸ் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து புனித கைலாச மெய்கண்டர் பேரூர் ஆதினம், சிரவை ஆதீனம் கௌமராமடாலயம், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ், சிறுதுளி, ரிதம், லீட் இந்தியா 2020, ராக், டாஸ்க், யூத் பௌண்டேஷன் உள்ளிட்டவை இணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தியாகிகள் படக் கண்காட்சியில் இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்ட 126 தலைவர்களின் படங்கள் வைக்கப்பட உள்ளன.

விழாவிற்கு ஐக்கிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் வி. நந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

கோயமுத்தூர் நகர காவல்துறை ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் ஐபிஎஸ் தியாகிகளின் படத்தை திறந்து வைக்கிறார்.

நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். 



நமது தேசத்தின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை நீத்துசுதந்திரத்தினை  ஈன்றெடுத்த நமது தலைவர்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் இந்த கண்காட்சி நடக்க இருப்பதாக ஐக்கிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் வி. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் பெருமையை  போற்றும் விதத்தில்சுதந்திர போராட்டதலைவர்களின்பிரம்மாண்ட உருவப்படங்கள் 6 அடி உயரத்திலும், 3 அடிஅகலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments: