உலகச் செய்திகள்


தம்மால் கைதியாக பிடிக்கப்பட்டவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள்

சிரியாவில் இரு பெண்களுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றம்

இஸ்ரேலிய பெருமித உணர்வு

ஈக்குவடோரை உலுக்கிய பூமியதிர்ச்சி இருவர் பலி; 8 பேர் காயம்

பிரேசிலின் ஜனாதிபதி வேட்பாளர் விமான விபத்தில் மரணம் - 3 நாள் தேசிய துக்க தினம் பிரகடனம்

================================================================

தம்மால் கைதியாக பிடிக்கப்பட்டவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள்

11/08/2014   வட ஈராக்­கி­லுள்ள கொஷோ கிரா­மத்தை சுற்றி வளைத்­துள்ள ஐ.எஸ்.போரா­ளிகள், அங்­குள்ள மக்­க­ளுக்கு மதம் மாறு­வ­தற்கு காலக்­கெடு விதித்­துள்­ளனர்.அவ்­வாறு மதம் மாறு­வ­தற்கு தவ­று­ப­வர்கள் கொல்­லப்­ப­டு­வார்கள் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்.
கொஷோ கிரா­மத்­தி­லுள்­ள­வர்கள் மதம் மாறத்­ த­வறும் பட்­சத்தில் அந்த கிரா­மத்­தி­லுள்ள 2,500 பேரும் கொல்­லப்­படும் அபாயம் நில­வு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.இது தொடர்­பான அதிர்ச்சி தக­வலை பிரித்­தா­னிய டெயிலி மெயில் ஊடகம் ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யிட்­டுள்­ளது.
போரா­ளிகள் அந்தப் பிராந்­தி­யத்தில் தம்மால் கைதி­க­ளாக பிடிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிலு­வையில் அறைந்து மரணதண்­டனை நிறை­வேற்றும் புகைப்­ப­டங்­களும் வெளி­யா­கி­யுள்­ளன.கடந்த வாரம் கனா மற்றும் ஹெஸான் ஆகிய இரு கிரா­மங்­களை ஐ.எஸ். போரா­ளிகள் கைப்­பற்­றி­யி­ருந்­தனர். அவர்கள் கனா கிரா­மத்தில் 32 ஆண்­களைக் கொன்று அங்­கி­ருந்த பெண்­களை கடத்திச் சென்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது.
ஹெஸான் கிரா­மத்தில் தம்மால் பிடிக்­கப்­பட்ட பெண்கள் அனை­வ­ரையும் நிர்­வா­ண­மாக்கி அழைத்துச் சென்­ற­துடன் சுமார் 70 ஆண்­களை சுட்டுக் கொன்­றுள்­ளனர்.இந்­நி­லையில் அச்­ச­ம­டைந்த சுமார் 60 வயது மதிக்­கத்­தக்க பெண் தற்­கொலை செய்யும் முக­மாக தனது வீட்­டின் மூன்றாம் மாடி­யி­லி­ருந்து குதித்­த­தா­கவும் புதி­தாக திரு­ம­ண­மான 26 வயது பெண்ணொருவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் 'டெயிலி மெயில்' ஊடகவியலாளர் அயன் பிரெல் கூறுகிறார்.  நன்றி வீரகேசரி 
சிரியாவில் இரு பெண்களுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றம்

11/08/2014   
நன்றி வீரகேசரி சிரியாவின் ரக்கா  நகரில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை கொண்டிருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து ஐ.எஸ். போராளிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி மரண தண்டனை நிறைவேற்றத்தை நேரில் கண்ட பெயரை வெளியிடாத நபரொருவர் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகத்துக்கு இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
பட்டாஹ் அஹமட் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்பவ தினம் பிராந்திய மதகுரு ஒருவர் தீர்ப்பை வாசித்ததும் அருகிலிருந்த நகர சபை மைதானத்தில் டிரக் வண்டியொன்றில் பெருந்தொகையான கற்கள் எடுத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பட்டாஹ் அஹமட் கால் முதல் பாதம் வரை கறுப்புத் துணியாலான ஆடை மூடியிருக்க அந்த மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் அவர் இடுப்பு பகுதி வரை மண்ணில் புதைக்கப்படுகிறார்.
அதன் பின் அங்கிருந்த போராளி குழு உறுப்பினர்கள் பட்டாஹ் அஹமட் மீது துடிதுடித்து இறக்கும் வரை அவர் மீது கற்களை வீசுகின்றனர்.
மேற்படி சம்பவமானது ரக்கா நகரிலுள்ள உதைபந்தாட்ட மைதானத்துக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இது ஈராக்கில் 24 மணி நேர காலப் பகுதியில் போராளிகளால் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது மரண தண்டனை நிறைவேற்றமாகும்.
பட்டாஹ் அஹமட்டிற்கான மரண தண்டனைக்கு முன் 26 வயதான ஷம் ஸெஹ் அப்துல்லாஹ் என்ற பெண்ணுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 
ஷம் ஸெஹ் மீதும் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. 
அவருக்கு ரக்காவிற்கு அருகிலுள்ள தப்கா நகரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பைக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு. நன்றி வீரகேசரி


இஸ்ரேலிய பெருமித உணர்வு
- சிறிதரன் (சுகு)
இஸ்ரேலியர்கள் போல் வாழவேண்டும். அவர்கள் எமக்கு முன்னுதாரணம். எந்த Not in myஒரு வளமும் இல்லாத அந்நாடு இன்று உலகத்திற்கே சவாலாக விளங்குகிறது.
அவர்கள் உலகின்; மகா புத்திசாலிகள் . அவர்களைப் போன்றவர்கள் தான் நாமும் என்று தமிழ் தேசியவாதம் மார்தட்டி வந்ததுண்டு.
கடந்த தலைமுறை தமிழ் தலைவர்களின்  யாழ் முற்றவெளி மைதான கூட்டங்களில் இந்த புளங்காங்கிதம் 1970களில்  ஒலி;த்ததை அந்தகால கட்டத்தைச்சோந்த பலர் மறந்திருக்கமுடியாது.

ஒரு படி மேலாக ஒரு நாடே இல்லாத யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கமுடிந்திருந்தால் நாம் ஏன் ஒரு நாட்டை உருவாக்கமுடியாது என்ற கேள்விகளுயும் இந்த மேடைகளில் அடிக்கடி கேட்கப்படும்.

இந்த இஸ்ரேல் மாயை யாழ் மத்தியதரவர்க்க மனங்களில் இன்று வரை குடி கொண்டுதான் இருக்கிறது.

இந்த கருத்தியல் செல்வாக்கிற்குட்பட்ட புலிகள் 1980களின் முற்பகுதியில் இஸ்ரேலிய மொசாட்டிடம் பயிற்சி பெறும் அளவிற்கு சென்றது.

ஆனால் ஈழப் போராட்டத்தில் முற்போக்கான பிரிவினர் என அழைக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்பு ஈபிஆர்எல்எப், புளொட் உறுப்பினர்கள் சிலர் பாலஸ்தீன்விடுதலை இயக்கங்களில் ஒன்றான அல்பற்றாவிடமும், பாலஸ்தீனவிடுதலைக்கான பிரபல முன்னணியிடமும் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

 1980களின் முற்பகுதியில் புலிகளுக்கு பயிற்சி அளித்த காலத்திலேயே இலங்கை அரசின் படையினருக்கும் இஸ்ரேலிய் உளவுத்துறை மொசாட் பயற்சி அளித்தது.

இரண்டாம் உலகமகாயுத்த காலத்தில் மனித குலவரலாறு கண்டிராத பேரழிவைச் சந்தித்தித்தவர்கள்  யூதர்கள். சுமார் 60 லட்சம் யூதர்கள் நாசிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் யூத சமூகத்தின் ஒருபகுதியினருக்கு பிரிட்டன் அமெரிக்கா சேர்ந்து விவிலியக் கதைகளின் பின்னணியில் ஒரு தேசத்தை அரபுலகில் உருவாக்கினர்.

அது மனிதப்பேரவலத்தை சந்தித்த யூதமக்கள் மீது கொண்ட கருணையினால் அல்ல.

அரபுலகின் எண்ணைவளங்களைச் சூறையாடுவதற்கான மூலோபாயத்தின் ஒருபகுதியாக அது இருந்தது.

அப்போது ஆரம்பித்த பாலஸ்தீனர்களின் அழிவு ஏற்கனவே தசாப்தங்களாக பாலஸ்தீனர்களின் வாழ்வும் வாழிடமும் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டு விட்டன.
இப்போது மிச்சமீதியான காசாவில் நிகழ்கிறது.

அரபுலகத்தை உய்ய விடாமல்செய்ததில் வடஅமெரிக்க மற்றும் மேற்குலகின் கைங்கரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

மத அடிப்படைவாத பயங்கரவாத குழுக்களை உருவாக்குவதிலும் -சர்வாதிகார ஆட்சிகளை ஸ்தாபிப்பதிலும்- ஆடம்பர -மூட -பழமைவாத அரசுகளை பாதுகாப்பதிலும் இந்த ஏகாதிபத்திய அதிகாரசக்திகள் பங்களித்திருக்கின்றன.
நிதானமான நியாயமான சமூகப்புரட்சி இயக்கங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

உதாரணமாக எகிப்தின் தல்லஹீரீர் சதுக்கத்தின் போராட்டம் எத்தகைய உயர்தார்மீக வலுக்களைக் கொண்டிருந்தது.

கடைசியாக ஆட்சிக்கு வந்தவர்கள் யார். கேடுகெட்ட அடிப்படைவாதிகள் பின்னர் இராணுவவாதிகள்.

பாலஸ்தீனத்தில் ஈவிரக்கமற்ற இடையறாத நீண்ட 6 தசாப்த கால தாக்குதல் யுத்தம் எந்த நல்ல அம்சங்களையும் விட்டுவைக்கவில்லை.
யுத்த காட்டுமிரண்டித்தனத்தினுள் மத்திய கிழக்கு ஒரேயடியாக சிக்கவைக்கப்பட்டிருக்கிறது.


இன்று மனிதகுலத்தின ஒரு பகுதியினரை இவ்வாறு அழிப்பது இயல்பானது சகஜமானது என்ற அளவிற்கு அற உணர்வுகள் மரத்துப் போய் நிலைமைகள் சிதைவடைந்திருக்கின்றன.

சிறுவர்களும்- பெண்களும் பெருமளவில் கொல்லப்படும் போது உலகின் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்புக்களும் ஐ.நாவும் அடக்கி வாசிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

உலகம் இரண்டு முகாம்களாக இருந்த காலத்தில் உலகளாவிய அளவில் நிலவிய தார்மீக விழுமியங்கள் இன்று சிதறிச் சின்னா பின்னமாக்கப் பட்டிருக்கின்றன.

காப்பிரேட் உலகம் - நவதாராளவாதம் மனிதர்களின் வாழ்வை இருப்பை எந்த கணக்கிலும் எடுத்துக் கொள்ளவில்லை.

சாத்தியமான வரை சாத்தியமான அளவு உலகைச் சூறையாடுகின்றன.

இஸ்ரேல் என்ற நாடு இன்று பெருமைக்குரியதல்ல. அது அபகீர்த்தியானது.
ஒரு சமுதாயத்தை மக்கள் கூட்டத்தை பூமிப்பந்தில் இருந்து அழித்து விடுவது எந்த ரகத்தில் சேரும்?

ஒருகாலத்தில் உலகம் காணாத பேரழிவைச் சந்தித்த சமூகத்தின் அங்கத்தினரா இப்படிச்செய்கிறர்hகள் என்ற கேள்வி எழுகிறது.

உலகம் பூராவும் உள்ள யூதமக்கள் இந்த தாக்குதல்கள் தொடர்பில் மனக்கிலேசம் அடைந்துள்ளனர்.

மானிட விடுதலைக்கும்- இயற்பியலுக்கும் உன்னத பங்களிப்பை வழங்கிய மாக்சும் ஐன்ஸ்ரினும் யூத சமூதாயத்தை சேர்ந்தவர்கள் .

பாஸ்தீனாக்ளுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கெதிராக சத்திய ஆவேசத்துடன் குரல்கொடுக்கும் போராடும் யூதமக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

இந்த உலகளாவிய யூதர்களை அல்ல யாழ்மையவாதம் வியப்பது. இஸ்ரேலிய சியோனிசத்தை தான் அது வியந்து நிற்கிறது.

 2009 இற்கு பின்னர் இந்த சியோனிச பெருமித வியாதி பேரினவாதிகளைத் தொற்றிக் கொண்டு விட்டது.

நாங்கள் இஸ்ரேல் காரர்களாக்கும் என்று இறுமாந்திருக்கிறார்கள்.
 “வினாசகாலே விபரீத புத்தி” என்பார்கள்.

அது இன்று பொதுப்பலசேனாவரை புற்று நோயாக வியாபித்திருக்கிறது.

இந்த சியோனிச கருத்தியல் இன்று சிறுபான்மையினரை அடக்கிவைத்திருக்க பேரினவாதத்திற்கு தேவைப்படுகிறது.

அதேபோல்  உலகம் முழுவதும் பரந்திருக்கும் நாம் இலங்கைப் பெரும்பான்மைச் சமூகத்தை ஒரு வழி பண்ணி விட முடியும் என்று யாழ்மையவாதம் கருதுகிறது.

இந்த விபரீதக் கனவுகளுடன்தான் இந்த நாடு பல தசாப்தங்களினூடாக சிதிலமாக்கப்பட்டு வந்திருக்கிறது.

“தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு” எண்ணற்ற கதைகளும் துட்டகைமுன்னு எல்லாளன் கதைகளும் இந்த பெருமிதங்களைத்தான் பேசுகின்றன. இப்போது இஸ்ரேல் வாய்த்திருக்கிறது.

யாழ் மையவாதம் எப்போதும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் உள்ள+ரில் நிகழந்தாலும் சர்வதேச அளவில் நிகழ்ந்தாலும் தனது நலன்சார்ந்து நடந்து கொள்ளும் தனக்கு வாய்ச்சால்தான் மனித உரிமை.

இல்லாவிட்டால் தன்னைத் தவிர முழுமனிதகுலத்திற்கும் அழிவு நேர்ந்தாலும் பிரச்சனை இல்லை.

இந்த யாழ்மையவாதம் பாலஸ்தீனர்களின் போராட்டத்தையோ தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கெதிரான போராட்டத்தையோ ஆதரித்தது கிடையாது. இப்போது காசா மக்களுக்காக மூச்சு கூடவிடவில்லை.

இலங்கையின் அதிகாரசக்திகளும் இஸ்ரேலை காட்டமாக கண்டிக்க முன்வரவில்லை.

சர்வதேச அளவில் இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுபவர்களும் காசா விடயத்தில அடக்கி வாசிக்கிறார்கள்.

ஏகாதிபத்திய நலன் சாhந்தே மனித உரிமை பற்றிப் பேசப்படுகிறது.
 பிரதானமாக ஏகாதிபத்திய நலன்சார்ந்தே மனித உரிமைக் கருத்தியல்கள் உருவாக்கப்படுக்கின்றன.

அந்த ஏகாதிபத்திய நலன்களுக்கு பாதகமாக இருந்தால் அந்த மக்கள் கூட்டம் அழிந்து போனாலும் பிரச்சனை இல்லை. அது பாலஸ்தீனர்களாக இருந்தாலென்ன சிரியர்கள் ,கிழக்கு உக்கிரேனியர்கள் கிறிமியர்களாக இருந்தாலேன்ன.

தற்போதைய உலக ஒழுங்கில் மாற்றம் தேவைப்படுகிறது.  வலிமையற்றவர்கள் இந்த உலகில்  நியாயமான பங்குள்ளவர்கள் வாழ்வதற்கான உலக ஒழுங்கொன்று தேவைப்படுகிறது.   நன்றி தேனீ ஈக்குவடோரை உலுக்கிய பூமியதிர்ச்சி இருவர் பலி; 8 பேர் காயம்

13/08/2014    ஈக்குவடோரை 5.1 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி செவ்வாய்கிழமை தாக்கியதில் குறைந்தது இருவர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் மேற்படி பூமியதிர்ச்சியால் குயிடோ நகருக்கு வெளியிலுள்ள கல் அகழ்வு தளமொன்றில் ஏற்பட்ட மண்சரிவுகளில் மேலும் மூவர் சிக்கியுள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சியால் கட்டடங்கள் நடுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளையும்  அலுவலகங்களையும் விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் மண்சரிவுகளால் வீதிகள் மூடப்பட்டதால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மண்சரிவொன்றில் சிக்கிக்கொண்ட காரிலிருந்த சாரதி  பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த பூமியதிர்ச்சி குயிடோ நகரின் வடகிழக்கே 23 கிலோமீற்றர் தொலைவில் 7.7 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது.
நன்றி வீரகேசரி
பிரேசிலின் ஜனாதிபதி வேட்பாளர் விமான விபத்தில் மரணம் - 3 நாள் தேசிய துக்க தினம் பிரகடனம்

14/08/2014  பிரேசிலின் ஜனாதிபதி வேட்பாளர் எடுவார்டோ கம்பொஸ் (49 வயது) விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
கம்பொஸை ஏற்றிச்சென்ற விமானம் சாயோ போலோ மாநிலத்தில் துறைமுக நகரான சந்தோஸிலுள்ள குடியிருப்பு பிரதேசத்தில் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த ஏனைய 4 பயணிகளும் இரு விமானிகளும் இறந்துள்ளனர்.
எடுவார்டோவின் மரணத்தையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 3 நாள் தேசிய துக்க தினத்தை அந்நாட்டு ஜனாதிபதி டில்மா ருஸெப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தனது பிரசார நடவடிக்கைகளையும் இரத்து செய்துள்ளார்.
இன்று நாம் மாபெரும் பிரேசில் அரசியல் தலைவரை இழந்து விட்டோம் எனவும் அவரது மறைவால் பிரேசில் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை வார்த்தைகளால் விபரிக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி

No comments: