என் பார்வையில் எந்திரமாலை - கலா ஜீவகுமார்

.
கடந்த சனிக்கிழமை Engineers foundation சிட்னி கிளையினரால் நடாத்தப்பட்ட எந்திரமாலை எனும் நிகழ்வைக் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. இந்த நிகழ்வானது , Blacktown  Bowman ஹால் இல் சரியாக மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகியது. வழமை போல தலைவர் திரு தெய்வேந்திரன் , உப தலைவர் ஆகியோர் மங்கள விளக்கேற்ற திருநாவுக்கரசு சிறிதரன் தனக்கே உரித்தான பாணியில் அதிகம் அலட்டிக்கொள்ளாது அழகாக நிகழ்வைத் தொடக்கி வைத்தார். எந்திரமாலை மௌனாஞ்சலியுடன் ஆரம்பித்தது.

Engineers foundation 2007 ம் ஆண்டு தற்போதைய நடப்பு ஆண்டு தலைவர் திரு தெய்வேந்திரனால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 7 வருடங்களாக பல துயர் துடைப்பு பணிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆற்றி வருகிறது என்பது இங்கு குறிபிடத்தக்கது. அவற்றில் சில என் மனதில் நிற்பவைகளை உங்களுக்குத் தருகின்றேன்.
cataract கண் சிகிச்சை ,செயற்கை கால் பொருத்துதல், துவிச்சக்கர வண்டிகள் வழங்குதல் , வாழ்வாதார வழிகளை பெண்களுக்கு வகுத்துக் கொடுத்தல் , மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பண உதவி, அனாதை சிறுவர் இல்லங்களுக்கு உதவி எனப் பல வழிகளில் நம் மக்களுக்கு உதவி புரிகின்றனர்.இந்த நிகழ்வின் மூலம் கிடைக்கும் நிதி கூட இவ்வாறு ஒரு விடியலுக்கு வழி காட்ட பயன்படப் போகின்றது என்பது ஒரு மகிழ்வான செய்தியே. இவை பற்றிய ஒரு விரிவான தொகுப்பை தலைவர் தெய்வேந்திரன், நாகேஸ்வரன் ஆகியோர் தமது உரை மூலம் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து யாவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. நிகழ்வைத் தொடக்கி வைத்தனர் சிட்னியின் இளம் பாடகர்கள் கவிதா, பானு, கேசினி மற்றும் கிரி ஆகியோர். இளம் தளிர்கள் என்றாலும் தங்கள் இனிமையான குரலினால் அனைவரையும் மெய்மறக்க வைத்தனர் இந்தச் சிறார்கள். இதில் கிரி எனும் ஆண் மகன் எனக்குப் புதியவராக இருந்தார், அதிகம் மேடைகளில் காணவில்லை ஆனால் அவரது குரல் மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது, குறிப்பாக அவர் பாடிய " தண்ணித் தொட்டி தேடி வந்த " பாடல் மிகவும் அருமையாக அமைந்திருந்தது. அத்துடன் கவிதா பானு சகோதரிகள் பாடிய " ஒருகிளி உருகுது ", கேசினி  , கிரி இணைந்து பாடிய " சகானா பூக்கள் என்பன குறிப்பிடக் கூடியன. அதனைத் தொடர்ந்து ஒரு புதிய நடனக் குழு D 'fate வழங்கிய fusion நடனம் இளம் நெஞ்சங்களை மகிழ்வித்தது. இது முற்று முழுதாக பல்கலைக் கழக மாணவர்களினால் வழங்கப் பட்டது. இதனைத் தொகுத்து வழங்கியிருந்தார் பிருந்தா .


அதனைத் தொடர்ந்து ஜனனி பீடில் வழங்கிய பாலிவுட் நடனம் இடம்பெற்றது .கண்கவர் நடனமாக இளம் சிறார்கள் மிகவும் வேகமாகவும் அழகாகவும் அற்புதமாக மேடையை அலங்கரித்து அந்த நடன நிகழ்வை அளித்திருந்தனர். ஜனனி சிட்னியில் தனக்கென ஒரு இடத்தை வெற்றிகரமாக பலகாலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மீண்டும் karaoke நிகழ்வை பெரியவர்கள் தொடர்ந்தார்கள். ஞானா , ரகுராம் ஜோடிகுரல் " காதல் ஓவியம் " , " விண்ணோடும் முகிலோடும் " போன்ற பாடல்களை அற்புதமாகப் பாடி மக்களை அசத்த அவர்களுக்கு நாமும் சளைத்தவர்கள் அல்ல என சிவாஜிராஜா  " கல்யாண மாலை கொண்டாட ", ராஜயோகன் "பொன்மகள் வந்தாள்" பாட ஒருவாறு சிறிதரன் இரவு உணவுக்கு அழைப்பை விடுத்தார். 


அறுசுவை உணவை அளித்திருந்தனர் ஸ்ரீ தக்சனா ஸ்தாபனத்தினர். நல்லதோர் சுவையான உணவு , பிரமாதமாக இருந்தது. அப்பம் கொஞ்சம் தாமதமாக வந்ததைத் தவிர உணவில் குறை ஒன்றும் இருக்கவில்லைதமது நிதி திரட்டும் பணியில் முன்னேறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த Engineers foundation ஒரு அமெரிக்கன் auction ஒன்றை அன்று இரவு  நிகழ்த்தி அதன் மூலம் சுமார் $1600 டாலர்களை திரட்டியிருந்தனர். நிச்சயமாக அவர்கள் முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அதனைத் தொடர்ந்து பல பாடகர்கள் பாடல்களைத்தர , ஸ்வர்ணா ராஜலிங்கம் குழுவினரின் கண்கவர் நடனத்துடனும் நற்றியுரையுடனும் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்வு நிச்சயமாக ஒரு கலகலப்பான நிகழ்வாகவும் எல்லா வயதினரையும் மகிழ்வூட்டும் நிகழ்வாகவும் அமைந்தது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்த அமைப்பினரின் பணி மென்மேலும் வளரவும் தொடரவும் நான் வாழ்த்துகிறேன்.
5 comments:

Anonymous said...

சிட்னி கிளையினரால் நடாத்தப்பட்ட எந்திரமாலை எனும் நிகழ்வைக் காணும் வாய்ப்ப்பு எனது தோழியின் மூலமாக கிடைத்தது. நான் சிட்னிக்கு விடுமுறைக்கு வந்துளேன், போரினால்பாதிக்கபட்டவர்களுக்
உதவி செய்யும் நோக்கோடு நடந்த நிகழ்ச்சி மிகவும் அருமை.சிட்னி Engineers foundatio க்கு எனது பாராட்டுக்கள்.க்லைநிகழ்ச்சி, உணவு மிகவும் அருமை. பாடல்களை பாடிய சிட்னி பாடகர்கலுக்கு. குறிப்பாக
ராஜயோகன் "பொன்மகள் வந்தாள்" கேசிகா கண்ணாளனே, விண்ணோடும் முகிலோடும் " கிரி தண்ணித் தொட்டி தேடி வந்த " பாடல் மிகவும் அருமை. சில பாடகர்கள் பாடிய பாடல்கள் செயட்கையாக இருந்து புதிய நடனக் குழு D 'fate வழங்கிய fusion நடனம் மிகவும்.மீண்டும் ஒரு முறை Engineers foundation வாழ்த்துக்கள்.இந்த நிகழ்வை எழுதிய விமர்சகர்ருக்கு எனது வாழ்த்துகள்Anonymous said...

It was so nice.

Ramesh said...

நல்ல ஒரு நிகழ்ச்சி ஒழுங்கமைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு சிலர் தாங்கள் மட்டுமேதான் செய்கின்றோம் என்று பீற்றித் திரிவதை உடைத்துள்ளார்கள் பல புதிய அமைப்புக்கள் மீண்டும் வாழ்த்துக்கள். எழுதியவரும் நல்ல பதிவை தந்திருக்கின்றார் அவருக்கும் வாழ்த்துக்கள்.உள்ளுர் கலைஞர்களை வைத்தே பணம் திரட்டலாம் என்று அன்பாலயம் காட்டித்தந்ததை பின்பற்றிய இவரகளுக்கு பாராட்டுக்கள்

Gowri said...

Nice write-up Kala Jeevakumar.

Thanks
Gowri

Anonymous said...

சிறந்த ஒரு நிகழ்ச்சி.

மண்டபம் நிறைந்து , எல்லோரும் சந்தோஷப் படும் அளவுக்கு நிகழ்சிகள். நண்பர் திருநாவுக்கரசு ஸ்ரீதரன் அழகாக தொகுத்து வழங்கினார்.

பாடிய பாடகர்கள் அனைவரும் சிட்னிக்கு புதியவர்கள் அல்ல. எல்லோரும் முத்தான பாடல்களை அழகாக பாடினார்கள். புது வரவு கிரிஷாந்த் சிட்னி மேடைகளில் இனி அடிக்கடி பார்க்கப் போகும் ஒரு பாடகார் என்பதில் சந்தேகம் இல்லை.

நடனம் - Brintha , Janani Beadle வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள்.

Dinner - ஹோடேலில் கூட இவ்வளவு variety கிடைப்பது இல்லை. அருமையான சாப்பாடு.

எல்லா வற்றிற்கும் மகுடம் வைத்தாட் போல், ஒவ்வரு வருடமும் $70,000 இற்கு மேல், ஊரில் வாழும்/வாடும் எமது உறவுகளுக்கு பல நல்ல உதவித்திட்டங்களை தொடர்ந்து செய்துவரும் engineers குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

ரமேஷ் நடராஜா - சிட்னி


Note : மேலே 20/08/2014 Ramesh - அன்பாலயம் பற்றி எழுதிய கருத்திட்கு நன்றி