தமிழ் சினிமா


உன் சமையலறையில்     




இயக்குனரான பிரகாஷ்ராஜ்ஜின் அடுத்த படைப்பு தான் உன் சமையலறையில். சினிமாவால் பல பேர் இங்கு வாழ்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே சினிமாவை வாழ வைக்க வேண்டும் என இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கலைஞன் தான் பிரகாஷ்ராஜ்.படத்தயாரிப்பாக இருந்தாலும் சரி, படத்தை இயக்குவதாக இருந்தாலும் சரி தரமான படத்தை தான் தருவேன் என்று பிடிவாதமாக இருப்பவர் பிரகாஷ்ராஜ்.தோனி என்ற சமுக அக்கறை கொண்ட படத்தை இயக்கிய பிறகு மலையாளத்தில் அனைவராலும் பாராட்டப்பெற்ற சால்ட் & பெப்பர் என்ற படத்தை ரீமேக்காக தமிழில் இயக்கியிருக்கிறார்.
படத்தின் கதை

ஆர்க்கியாலஜி ஆய்வாளாரான பிரகாஷ்ராஜும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சினேகாவும் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகின்றனர்.ஒரு நாள் சினேகா சாப்பாடு ஆர்டர் செய்ய ஹோட்டலுக்கு போன் செய்வதற்கு பதில் பிரகாஷ்ராஜுக்கு தவறுதலாக போன் செய்வதன் மூலம் ஒரு குட்டி கலாட்டா ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக்கொள்கின்றனர்.ஒரு சில நாட்களில் தன் தவறை உணரும் சினேகா தனது தோழியின் ஆலோசனைப்படி பிரகாஷ்ராஜிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க, வழக்கம் போல் எல்லா தமிழ் சினிமாவிலும் வருவது போல் இருவருக்குமிடையே காதல் ஆரம்பித்து விடுகிறது.போனிலேயே எத்தனை நாள் தான் பேசுவது, ஒரு நாள் இருவரும் நேரில் பார்க்கலாம் என்று முடிவு செய்து போகும் இடத்தில் தான் இருவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து இவர்கள் காதல் என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர், நடிகைகள்

படத்தின் மிகப்பெரிய பலமே பிரகாஷ்ராஜ் தான், அவர் ஒரு தேர்ந்த நடிகர் என்பதால் வழக்கம் போல் நன்றாகவே நடித்துள்ளார். சினேகாவும் தனக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

பலம்

இவர்கள் எல்லோரையும் தாண்டி படத்திற்கு உயிராக இருப்பது இளையராஜாவின் பின்னணி இசை தான், காற்றில் கலைந்த மேகம் போல் நம் மனதையும் மெல்ல கலைத்து செல்கிறது ராஜாவின் இசை.

பலவீனம்

ஆனால் படத்தின் திரைக்கதையில் தான் பெரிய ஓட்டை, மலையாளத்தில் அது தான் பலமாக இருந்தது, இங்கு இதுவே பிரகாஷ்ராஜுக்கு வில்லன் ஆனது.அதிலும் அந்த இளம் ஜோடிகளின் காதல் நம்மை மிகவும் சோதிக்கிறது. பாமர ரசிகனுக்கு பிடிக்குமா என்பது சந்தேகம் தான். ஏ சென்டர் ரசிகர்களை கொஞ்சம் திருப்திப்படுத்தலாம்.

உன் சமையலறையில் - உயர்தர உணவை விரும்புவோர் மட்டும் ருசிக்கலாம். - 














நன்றி cineulagam

No comments: