பள்ளிவாசல், வீடுகள் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு
மத்தள விமான நிலையத்திலிருந்து பயணிப்போருக்கு விசேட சலுகை
இலங்கையின் நிலைமைகள் குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை
பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி அளுத்கமவில் ஆர்ப்பாட்டம்
அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி : இருந்தவருக்கு பதவி உயர்வாம்!
முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ். பல்கலையில் கண்டனப் பேரணி
அளுத்கம சம்பவத்தை கண்டித்து யாழிலும் ஹர்த்தால்
வட்டரெக விஜித்த தேரரின் அந்தரங்க உறுப்பை வெட்ட முயற்சி
பள்ளிவாசல், வீடுகள் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு
15/06/2014 அளுத்கம, தர்ஹா நகரில் அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைக்கப்பட்டள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதனையடுத்தே நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டிருந்ததோடு ஊரடங்கு சட்டத்தையும் பிறப்பித்துள்ளனர்.நன்றி வீரகேசரி
மத்தள விமான நிலையத்திலிருந்து பயணிப்போருக்கு விசேட சலுகை
15/06/2014

சலுகைக்கட்டணமாகவோ அல்லது மேற்படி விமான நிலையத்துக்கு செல்வதற்கு இலவச பயண வசதியோ அல்லது வேறு ஒரு சலுகையோ வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கள் விமான சேவை பயணச்சீட்டு முகவர் நிலையத்தில் விமானப் பயணச்சீட்டுக்களைப் பெறும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் இந்த சலுகை வசதிகளைப் பெறவுள்ளனர்.
நன்றி வீரகேசரி
இலங்கையின் நிலைமைகள் குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை
19/06/2014 இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு இடையிலான மோதல் சம்பவங்கள் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன.

தென்னிலங்கையில் அளுத்கமவிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும், கடந்த 15 ஆம் திகதி சிங்களவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய, வெறுப்புணர்வுகளைத் தூண்டும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கருத்து வெளியிட்டுள்ளது.
மதச் சிறுபான்மையர்களைப் பாதுகாக்க இலங்கைக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை அது நிறைவேற்ற வேண்டும். அத்துடன் நடந்த வன்செயல்கள் குறித்து முழு விசாரணை தேவை என்றும் இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியமும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் சமீபத்திய வன்முறைகள் தமக்கு கவலையளிக்கிறது என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு தெரிவித்திருக்கிறது.
இனவாத வன்முறை, வெறுப்பைத் தூண்டும் செயல்களால் இலங்கையின் ஸ்திரத்தன்மையை பேணமுடியாது. நாங்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யவே இலங்கை அரசைக் கோருகிறோம். அதற்காக இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராகவுள்ளோம் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரிபாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி அளுத்கமவில் ஆர்ப்பாட்டம்
19/06/2014 அளுத்கம, பேருவளை பொலிஸ் பிரிவுகளில் நிலவிய வன்முறையுடன் கூடிய நிலைமை முழுமை யாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் அதனை அமுல் செய்யும் நோக்கம் கிடையாது எனவும்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் இனவாததை தூண்டும் வகையில் இணையம் ஊடாகவோ அல்லது குறுஞ் செய்தியூடாகவோ பரப்பப் படும் வதந்திகள் குறித்து பொலிஸார் விஷேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் விஷேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதன் படி சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் ஊடாகவும் குறுந்தகவல்கள் ஊடாகவும் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் அது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக குற்றவியல் நடைமுறை சட்டதின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பேருவளை பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்டு அல் ஹுமைஸரா வித்தியாலயத்தில் தங்கியிருந்த முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரசு அறிவித்ததை அடுத்து அங்கு நேற்று பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு தங்கியிருந்த சுமார் 2500 மக்கள் சுலோகங்களை ஏந்தி தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் பொலிஸ், இராணுவத்தினரின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன்போது சம்பவ இடத்துக்குகளுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரன் வருகை தந்த போதும் பொது மக்கள் அவருக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். தமது பாதுகாப்பை உறுதி செய்யாத நிலையில் தம்மை வெளியேறக் கோருவதை அவர்கள் நிராகரித்தனர்.
இதனால் அங்கு சற்று பதற்றமான சூழல் நிலவியது.
இந்த நிலையில் அளுத்கம மற்றும் பேருவளையின் பாதுகாப்பை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர் நேற்று காலை 8.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதாகவும் அதனை மீண்டும் அமுல் செய்யும் நோக்கம் பொலிஸாருக்கு இல்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட பொலிஸ் குழுவினர் சீருடையிலும் சிவில் உடையிலும் பிரதேசத்தில் நடமாடி வருவதாகவும் இதனை விட பிரதேசத்தில் பதற்றத்தை தோற்றுவிக்க முனைவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து நேற்று நண்பகல் வரை 47 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிலையில் பிரதேசத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினரும் விஷேட அதிரடிப்படையினரும் நிலை கொண்டுள்ளனர்.
நேற்று இரு நகரங்களும் வழமைக்கு திரும்பியிருந்தன. இதனால் அவ்வூர்களினூடான போக்குவரத்தும் வழமைக்குத் திரும்பியிருந்தது.
நன்றி வீரகேசரிஅளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி : இருந்தவருக்கு பதவி உயர்வாம்!
19/06/2014 அளுத்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த ஆர். விஜேசேகர இடம்மாற்றப்பட்டு புதிய பொறுப்பதிகாரியாக கே.ஏ. ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர். விஜேசேகர பொறுப்பதிகாரியாக இருந்த போதே அளுத்கம பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெற்றது. எனினும் குறித்த அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கும் நிலையிலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ். பல்கலையில் கண்டனப் பேரணி
19/06/2014 அளுத்கம, தர்காநகர், பேருவளை, வெலிப்பன்ன பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் கண்டனப் பேரணியொன்று பல்கலைக்கழக வாளாகத்தில் இடம்பெற்றது.

இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற கண்டனப்பேரணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றம் ஊழியர்கள், மாணவர்களும் கலந்துகொண்டதுடன் பல்வேறு சுலோகங்களையும் ஏந்தி பேரணியில் ஈடுபட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரிஅளுத்கம சம்பவத்தை கண்டித்து யாழிலும் ஹர்த்தால்

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட முஸ்லிம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் ஐந்து சந்தி வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு முழுமையாக வர்த்தகர்களின் பகிஷ்கரிப்பு இடம் பெற்றதுடன் சில இடங்களில் தமிழ் மக்களுடைய கடைகளும் கூட பூட்டப்பட்டு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பி;டத்தக்கதாகும்.
இதேவேளை, முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியான ஐந்த சந்தியில் பொலிசாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடபட்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.
நன்றி வீரகேசரிவட்டரெக விஜித்த தேரரின் அந்தரங்க உறுப்பை வெட்ட முயற்சி
19/06/2014 இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளான ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரெக விஜித்த தேரரின் அந்தரங்க உறுப்பை வெட்ட முயற்சி செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கை, கால்கள் கட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளான நிலையில் வட்டரெக விஜித்த தேரர் இன்று காலை 6.30 மணியளவில் பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான தேரர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் தேரரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment