இந்திய கலைஞர் லாவண்யா ஆனந்த் வழங்கும் தேவ நிருத்தியம்

.
இந்தியாவின் பிரபல பரதக் கலைஞர் லாவண்யா ஆனந்த் வரும் 29 ஆம் தேதி வெண்ட்வெர்த்வில் ,ரெட் கம் அரங்கில்  நடன நிகழ்ச்சி வழங்க இருக்கிறார்நிகழ்ச்சிக்குநாட்டியாஞ்சலி ஆஸ்திரேலியா ஒழுங்கு செய்துள்ளது.
பிரபல நடன குரு வழுவூர் ராமைய்யா பிள்ளையின் நடன பாணியை பின் பற்றி வரும் லாவண்யா ஆனந்த் எஸ் கே ராஜரத்னம் பிள்ளைகலாநிதி நாராயணன்,கே ஜே சரசாஆகியோரின் மாணவியாவார்நடனக் கலையின் பாரம்பரியம் முரண்படாமல் புதியபாணிகளினை அறிமுகப்படுத்துவதில் லாவண்யாவின் பல ஆண்டுகால நடனப் பயிற்சியும்ஆர்வமும் கைகொடுப்பது பாராட்டு பெற்றது.


ஐரோப்பிய நாடுகளிலும்அமெரிக்க , ஆசிய நாடுகளில் பல பயிற்சி பட்டறைகளை நடனம்தொடர்பாக நடத்தியுள்ள இவர் சங்கீத நாடக அகாடமி முதல் பல விருதுகளை பெற்றுள்ளார்.
வரும் வாரத்தில் இவர் நடனமாடத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு ’தேவ நிருத்தியம்’ -தெய்வ நடனம்.தானே நடனக் கோர்வைகளை அமைத்து , வகை வகையான இயல்,இசையுடன் நடன உத்திகளை பரதக் கலையின் இலக்கணங்களுக்கு இசைய அமைத்துவழங்குகிறார்.
இந்தியக் கடவுள்களை மையக் கருத்தாகக் கொண்டுநிருத்திய மொழியின் மூலம் , நூறுநிமிடங்களில்,  அவர்களின் தெய்வீக வாழ்வை கண்முன் கொண்டு வந்து நிறுத்தமுயற்சிக்கிறார்நிகழ்ச்சித் தொடர்புக்கு சிட்னி  நடன ஆசிரியை காயத்ரி கிருஷ்ணமூர்த்தியை அணுகவும் 0438 652 052.
 கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்

No comments: