ஈராக்கில் தொடர்ந்து முன்னேறும் தீவிரவாதிகள்; 40 இந்தியர்கள் கடத்தல்
மலேசிய கடற்கரைக்கு அப்பால் இரு படகுகள் மூழ்கி விபத்து - 35 பேரைக் காணவில்லை
சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 13 பேருக்கு மரண தண்டனை
===========================================================
ஈராக்கில் தொடர்ந்து முன்னேறும் தீவிரவாதிகள்; 40 இந்தியர்கள் கடத்தல்
19/06/2014 ஈராக்கின் வடக்குப் பிராந்தியத்தில் பெரும் பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிர வாதிகள் தலைமையிலான சுன்னிப் போரா ளிகள் கைப்பற்றியுள்ளனர். அங்கு அரசுப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் ஏரா ளமானோர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து வெளியேற முயன்ற 40 இந்தியர்க ளும் கடத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக்கில் உள்ள பக்தாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை காணப்படுகிறது. நினிவே பிராந்தியத்தின் முக்கிய நகரான தல் அபாரின் பாதிப் பகுதி தற் போது தீவிரவாதிகளின் வசம் உள்ளது. இந்த நகரில் சுமார் 700 தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரி விக்கின்றனர்.
மேலும் மொசூல், திக்ரத், சாதியா, ஜலலா உள்ளிட்ட முக்கியமான நகரங்களை கைப்பற்றிய தீவிரவாதிகள் தலைநகர் பக்தா த்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். பக்தாத்தில் இருந்து 60 கி.மீ தொலை வில் இருக்கும் அவர்கள் மீது அமெ ரிக்க வான்வழி தாக்குதல் நடத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஈராக்கின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான பாய்ஜி ஆலையின் ஒரு பகுதியையும் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தூதரகக் குழு விரைகிறது. மேலும், 40 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில் ஈராக்கில் தொடர்ந்து நிலைமை மோசமடைவதையடுத்து இந்திய தூதரகக்குழு பக்தாத் விரைகிறது. அங்குள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு மீட்பு பணிகள் தொடரும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்களும் பங்கேற்க ஈராக் அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று பெரும்பான்மை ஷியா முஸ் லிம்கள் இராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஈராக் தலைநகர் பாக்தாதில் தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழ்நிலையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலை மையகமான பென் டகன் வெளியிட்டு ள்ள அறிக்கையில்இ ஈராக்கில் வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு தேவை யான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
மலேசிய கடற்கரைக்கு அப்பால் இரு படகுகள் மூழ்கி விபத்து - 35 பேரைக் காணவில்லை
19/06/2014 மலேசிய கடற்கரைக்கு அப்பால் இரு நாட்களில் இரு படகுகள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 35 இந்தோனேசிய குடியேற்ற வாசிகள் காணாமல் போயுள்ளனர்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முதலாவது படகு விபத்தில் 10 பேர் பலியானதுடன் 25 பேர் காணாமல் போயுள்ளனர். அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த படகு விபத்துக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது. மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வெளியேயுள்ள செபாங் நகருக்கு அப்பால் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இரண்டாவது படகு விபத்தில் குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளனர்.
இரு படகுகளிலும் பயணித்து உயிருடன் மீட்கப்பட்ட பயணிகள் குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இரு படகுகளிலும் ரமழான் புனித மாதத்தையொட்டி மலேசியாவிலிருந்து தாய் நாடான இந்தோனேசியாவை நோக்கி சென்ற சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணித்ததாக கூறப்படுகின்றது.
அந்தப் படகுகளில் பயணித்த 4 பெண்கள் உட்பட 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மலாகா நீரிணைக்கு அண்மையில் விபத்துக்குள்ளான முதலாவது படகு ஏதோ ஒரு பொருளின் மீது மோதி சேதமடைந்ததையடுத்து அந்த படகில் ஏற்பட்ட நீர்கசிவு காரணமாக மூழ்கியுள்ளது.
மலேசியாவிலுள்ள பெருந்தோட்ட மற்றும் ஏனைய தொழிற்துறைகளில் பல்லாயிரக்கணக்கான இந்தோனேசியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நன்றி வீரகேசரி
சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 13 பேருக்கு மரண தண்டனை
19/06/2014 சீன மேற்கு மாகாணமான ஸின்ஜியாங்கில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியமைக்காக 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24 பேர் பலியாவதற்கு காரணமாக அமைந்த தாக்குதல் உள்ளடங்கலாக 7 வழக்குகள் தொடர்பில் உய்குர் இனத்தவர்கள் உட்பட 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பீஜிங்கில் கடந்த வருடம் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பில் மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதக் குழுக்களுடன் பங்கேற்றமை, படுகொலை, தீ வைப்பு, கொள்ளை மற்றும் சட்டவிரோத உற்பத்தி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே மேற்படி 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் 26ம் திகதி லுக்கின் நகரிலுள்ள பொலிஸ் நிலையம் ஹோட்டல்கள் ஏனைய தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் 24 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பலியானதுடன் 23 பேர் காயமடைந்திருந்தனர்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment