இலங்கைச் செய்திகள்


புலிகளின் பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது

இலங்கை எண்ணெய் அகழ்வு பணியில் பிரான்ஸ்

இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் ஆய்வு செய்த பின்னரே முடிவு: இராணுவம்

வடக்கில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிப்பு

ஈழத்தமிழருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் மோடியை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தல்

இரத்தினபுரியில் டெங்கு நோய் பரவும் அபாயம்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு மூதாட்டி யாழில் கைது

===================================================================

புலிகளின் பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது


19/05/2014   விடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த ஒருவர் மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் சேமித்து வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். நன்றி வீரகேசரி 
இலங்கை எண்ணெய் அகழ்வு பணியில் பிரான்ஸ்

19/05/2014   இலங்கையில் பெற்றோலிய அகழ்வுப் பணிகளில் ஈடுபட பிரான்ஸின் சர்வதேச எண்ணெய் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. 
திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய கடற்பகுதியில் இந்த பணிகள் இடம்பெறுவதற்கான உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது. 
உலகின் 6பாரிய எண்ணெய் நிறுவனங்களில் பிரான்ஸின் சர்வதேச எண்ணெய் நிறுவனமும் உள்ளடங்குகிறது. 
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அந்த நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
 நன்றி வீரகேசரி 

இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் ஆய்வு செய்த பின்னரே முடிவு: இராணுவம்

19/05/2014  தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஊடகப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­ இசைப்பிரியா இரா­ணுவ காவ­லரண் முன்னால் பிறி­தொரு போராளிப் பெண் என சந்­தே­கிக்­கப்­படும் ஒரு­வ­ருடன் உயி­ரோடு உள்ள புகைப்­ப­டங்கள் புதி­தாக வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அவை தொடர்பில் ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே இறுதி முடிவு எடுக்­கப்­படும் என பாது­காப்பு அமைச்சு தெரி­விக்­கின்­றது.
சனல் 4 தொலைக்­காட்சி ஏற்­க­னவே இவ்­வா­றான பல புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்ள நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் பாது­காப்பு தரப்பு தொடர்ந்தும் ஆய்­வு­க­ளையும் விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ள நிலையில், இந்த புகைப்­ப­டங்கள் தொடர்­பிலும் அதில் கவனம் செலுத்­தப்­படும் என பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய குறிப்­பிட்டார்.
குறித்த தொலை­காட்­சி­யா­னது ஏற்­க­னவே பல புகைப்­ப­டங்­களை ஆத­ராங்கள் இன்றி போலி­யாக முன­வைத்­தி­ருந்­த­தா­கவும் அதன் தொடர்ச்­சி­யாக இதுவும் இருக்கும் என தாம் நம்­பு­வ­தா­கவும் விசா­ர­ணையின் இறு­தியில் உண்மை வெளிச்­சத்­துக்கு வரும் எனவும் இதன்போது அவர் சுட்­டிக்­காட்­டினார்.
போலி ஆவ­ணத்தை கொண்டு இரா­ணு­வத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் வித­மாக தொடர்ச்­சி­யாக இவ்­வா­றான போலி புகைப்­ப­டங்கள் அவ்­வப்­போது வெளி­யி­டப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்ட பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய இவ்­வா­றான புகைப்­ப­டங்­களின் உண்மைத் தனமைக் குறித்து தொடர்ந்தும் சந்­தேகம் நில­வு­வ­தாக குறிப்­பிட்டார்.
ஏற்­க­னவே பாது­காப்பு தரப்பு சனல் 4 வீடியோ ஆத­ரங்­களை விஷேட ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அந்த ஆய்­வினுள் இந்த புகைப்­ப­டங்கள் தொடர்­பி­லான விட­யமும் உள்­ள­டங்­கி­யி­ருக்கும் என தான் நம்­பு­வ­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.
முன்­ன­தாக படை­யி­னரால் இசைப்பிரியா மீட்­கப்­பட்டு அழைத்து வரு­வது போன்ற காட்­சி­களை சனல் 4 வெளி­யிட்­டி­ருந்­தது. எனினும் இறு­தி­ யுத்­தத்தின் போது படை­யி­ன­ரு­ட­னான மோதலில் இசைப்
பிரியா கொல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.
இந் நிலை­யி­லேயே இசைப் பிரியா படை­யி­னரின் காவலரன் ஒன்றின் முன்னிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்துக்கு மேலதிகமாக மேலும் சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
 நன்றி வீரகேசரி 
வடக்கில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிப்பு

20/05/2014   இரா­ணுவ வெற்றி விழா நிகழ்வில் ஜன­நா­யகம் பற்றி பேசிய ஜனா­தி­பதிஇ வடக்கில் தமிழ் மக்­க­ளுக்கு உரி­மைகள் இல்­லை­யென்பதை நிரூ­பித்­து­விட்டார். வடக்கில் நினை­வு­கூரல் நிகழ்­விற்கு தடை விதித்­தமை தவ­றான செயற்­பா­டா­கு­மென ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­தது.
அழைப்பு விடுக்­கா­மை­யி­னா­லேயே நாம் யுத்த வெற்றி விழாவில் கலந்­து­கொள்­ள­வில்லை எனவும் அக்­கட்சி தெரி­வித்­தது. யுத்த வெற்றி விழா நிகழ்வில் எதிர்க்­கட்சி பங்­கேற்­காமை மற்றும் வடக்கில் மே 18 நிகழ்­வு­க­ளுக்கு தடை விதித்­தமை தொடர்பில் வின­வி­ய­போதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­டாறு தெரி­வித் தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
இரா­ணுவ வெற்றி விழா நிகழ்வில் ஜனாதி­பதி நாட்டின் ஜன­நா­யகம் பற்­றியும் மக்­களின் உரி­மைகள் தொடர்­பிலும் பேசினார். மூவின மக்­க­ளையும் ஆத­ரிப்­ப­தாகக் கூறிய ஜனா­தி­பதி, வடக்கில் தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்கு தடை விதித்­தது ஏன்? அவர்களை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் வடக்கில் அதி­க­ளவில் இரா­ணு­வத்­தினையும்இ பொலி­ஸா­ரையும் குவித்துதமிழ் மக்­களின் அடிப்­படை உரி­மை­களைமீறும் வகையில் செயற்பட்டதுஏன்? யுத்த வெற்றிக் கொண்­டாட்டம் அவ­சி­ய­மா­ன­தாக இருந்­தாலும் இழப்­புக்­களை சந்­தித்த மக்­களின் வேத­னை­யி­னையும் கவ­னத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில்இ யுத்­தத்தில் இழப்­பு­களை அதி­க­ளவில் சந்­தித்­தது வடக்கில் வாழும் அப்
பாவி தமிழ் மக்­களே.
அவர்­களை நிம்­ம­தி­யாக அஞ்சலி நிகழ்வினை மேற்­கொள்­ள­ விட்­டி­ருந்தால் ஜனா­தி­பதி குறிப்பிட்ட ஜன­நா­யகம் அர்த்­தப்­பட்­டி­ருக்கும். ஆனால், மே தின வெற்றி விழாவில் ஜனா­தி­பதி பேசிய வார்த்­தைகள் அனைத்­தையும் பொய்­யென நிரூ­பிக்கும் வகையில் இரா­ணுவம் வடக்கில் செயற்­பட்­டுள்­ளது.
சர்­வ­தேச நாடுகள் அனைத்தும் இதனை நிச்­ச­ய­மாக அவ­தா­னித்­தி­ருக்கும். இலங்­கையின் உண்மை நிலை­மை­யி­னையும் அனை­வரும் உணர்ந்­தி­ருப்­பார்கள்.
யுத்த வெற்றி விழாவில் எமக்கு அர­சாங்­கத்­தினால் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை. இதனை தேசிய ரீதியில் அனைத்து மக்­களும் கொண்­டாட வேண்டும் என்ற எண்ணம் அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருக்­குமானால் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்தி­ருக்க வேண்டும்.
ஆயினும், இவ் வெற்­றி­யா­னது தனியே அர­சாங்­கத்­தினால் மட்டும் கொண்­டா­டப்பட வேண்டும். யுத்த குற்­றங்­க­ளை புரிந்தும் பொது­மக்­க­ளை அழித்தும் பெற்ற வெற்­றி
யில் நாம் கலந்­து­கொள்ளப் போவ­து மில்லை. அதேபோல் முக்­கி­யமான நாடு­களின் தூது­வர்­களும் கலந்துகொள்­ள­வில்லை என்­பதும் சிந்­திக்க வைத்­துள்­ளது. ஏனெனில், இவ்­வா­றான நிகழ்­வு­களில் எதிர்க்­கட்­சி­க­ளுக்கு அழைப்பு விடுக்­கா­தது தெரிந்த விட­ய­மெ­னினும், சர்­வ­தேச நாட்டுத் தூது­வர்­க­ளுக்கு அர­சாங்கம் அழைப்புவிடுக்­காது இருந்­
தி­ருக்க வாய்ப்­பில்லை.
எனவே, அவ்­வா­றான நிலையில் சர்­வ­தேச நாடு­களின் தூது­வர்கள் வரா­தி­ருந்­தமை ஏன் என்­பதும் சந்­தே­கத்­திற்­கு­ரிய விட­யமே எனவும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி 


ஈழத்தமிழருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் மோடியை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தல்

20/05/2014   ஈழத் தமிழர்களுக்கு உங்களது அரசாங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என ம.மு.தி.க. பொதுச் செயலாளர் வைகோ இந்தியாவின் புதிய பிர தமராகப் பதவியேற்கவுள்ள நரேந்தி ரமோடியை நேற்று திங்கட்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும் பான்மையுடன் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியே ற்கவுள்ள நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பொன னாடை போர்த்தி மலர்ச்செண்டு வழங்கி வாழ்த்து தெரிவித்ததன் பின்னரே வைகோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன் போது பதிலளித்த நரேந்திர மோடிஇ ஈழத் தமிழர்கள் விடயத்தில் என்றும் உறுதுணையாக செயற் படுவேன் என வைகோவிடம் உறுதியளித்துள்ளார்.
குஜராத் பவனில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பின் போது வைகோ மோடியிடம் கூறியதாவது,
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே மே மாதம்ஈழத் தமிழர்களுக்குத் துயரமான மாதம் .இத்தகைய நிலமைக்கு சோனியா காந்தி தலைமையிலான அவரது காங்
கிரஸ் அரசே காரணமாகும்.ஈழத்தமிழருக்கு....
எனவே உங்களது அரசு ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வெளிவிவகார துறையில் ஆக்கிரமித்து உள்ள சோனியாவின் ஆதரவு அதிகாரிகளை அப்புறப்படுத்துங்கள் நதி நீர் இணைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமாகும். ஆகவே முதல் கட்டமாக தென்னக நதிகள் இணைப்பை செயல்படுத்துங்கள். அதே போன்று உங்கள் அரசு ஈழ தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வெளிவிவகார மற்றும் நீர்ப்பாசன துறையில் ஆக்கிரமித்து உள்ள சோனியாவின் ஆதரவு அதிகாரிகளை அப்புறப்படுத்துதல் இங்கு பிரதானமானதாகும்.
இந்திய விடுதலைக்குப் பிறகு வரலாற்றில், ஒரு மகோன்னதமான வெற்றியை ஈட்டி இருக்கின்றீர்கள். இந்திய நாட்டுக்கு ஒரு புதிய விடியலை நீங்கள் தருவீர்கள் என்று கோடானுகோடி மக்கள் நம்பிக்கையோடு வாக்ககளித்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு நீங்கள் ஒரு புதிய விடியலைத் தருவீர்கள் என நான் திடமாக நம்புகிறேன்.
"தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், நீங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய நன்றி உரை, அற்புதமான உரை ஆகும். நான் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களின் நன்றி உரைகளைக் கேட்டு இருக்கிறேன். முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை. உங்கள் உரை எல்லாவற்றையும் விடச் சிறந்தது" "தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் வாழ்த்துச் சொன்னது, உங்கள் உயர்ந்த தலைமைப் பண்பைக் காட்டுகிறது. அனைத்து மாநிலங்களையும் அரவணைத்துச் செல்லும் போக்கைத் தெரிவிக்கிறது"
சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய போது காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தை, நரேந்திர மோடி அரசு ஒருபோதும் செய்யாது. இலங்கை அரசுக்கு உதவாது; ஈழத்தமிழர்கள் பாதுகாப்புக்கு மோடி அரசில் வழிபிறக்கும் என்று குறிப்பிட்டேன். எப்படி இருப்பினும் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறினார்.
இவை அனைத்தையும் செவிமடுத்த நரேந்திர மோடி எனது முதற் பணியாக நதி நீர் இணைப்புக்கு ஏற்ற வகையிலான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு செயலாற்றுவேன். அத்துடன் ஈழத் தமிழர்கள் விடயத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயற்படுவேன். அது மாத்திரமன்றி காங்கிரஸ் ஆட்சியின் வெளியுறவு துறை அதிகாரிகளை மாற்றியமைக்காவிட்டால் தவறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்றும் மோடி வைகோவிடம் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி 


இரத்தினபுரியில் டெங்கு நோய் பரவும் அபாயம்

20/05/2014 இரத்தினபுரி நகர சபை பகுதியில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி மாநகரசபையின் ஐ.ம.சு.கூட்டணி உறுப்பினர் மொஹமட் ஷியாம் தெரிவித்தார்.
இரத்தினபுரி நகரிலுள்ள 5 பாடசாலைகளில் டெங்கு அபாயம் காணப்படுவதுடன் இதில் ஒரு பாடசாலையில் 15இற்கு மேற்பட்ட மாணவர்களும் அப்பாடசாலையின் அதிபரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரத்தினபுரியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் முற்றாக ஒழிக்க முடியவில்லையென பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நன்றி வீரகேசரி பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு மூதாட்டி யாழில் கைது

22/05/2014   பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் மேலும் ஒரு மூதாட்டி பெண் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 
அஜித் ரோகண தெரிவித்தார்.
 
64 வயதுடைய பத்மாவதி என்ற மூதாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது பயங்கரவாதப் புலனாய்வு பிவிரினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
 
மீளிணைய முயற்சிக்கும் விடுதலைப் புலிகளின் எதிர்கால பயன்பாட்டிற்காக காணி ஒன்றை குறித்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும் அக் காணிக்கான பணத்தை விடுதலைப் புலிகளே குறித்த பெண்ணுக்கு வழங்கியிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.  நன்றி வீரகேசரிNo comments: