.
அனைவரும் எதிர் பார்க்கும் சின்ன பட்ஜெட் படங்களில் இந்த "பூவரசம் பீப்பி"யும் ஒன்று. இயக்குனர் கௌதம் மேனன் தான் முதலில் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது, ஆனால் அவருக்கு இருந்த கடன் சுமையால் தற்போது பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷா தயாரித்து வெளியிட இருக்கிறார்.நம் பால்யத்தின் நினைவுகளை அழகாக செல்லுலாய்டில் காட்டும் படமாக தான் இது இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ட்ரைலர் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே சிறுவர்கள் சிலர் பம்பரம் விளையாடுவதையும், இன்னும் சிலர் கிரிக்கெட் விளையாடுவதையும் காட்டி நம் ஏற்ற தாழ்வுகளை அழகாகவும் நெத்தியடியாகவும் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஹலிதா ஷமீன், அதுவும் இவர் ஒரு பெண் இயக்குனர் என்பதால் முதலில் இவருக்கு ஒரு பெரிய சல்யூட்.காதலுக்கு எல்லையே கிடையாது அது எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம், அப்படி இருக்க அது 10 வயதில் வந்தால் என்ன? 16 வயதில் வந்தால் என்ன? என்று சிறுவர்களின் பால்ய காதலை மிகவும் நேர்மையாக காட்டியிடுக்கிறார். என்னது சின்ன பசங்க படத்தில் காதலா ?? என்று உடனே திட்ட ரெடியாக வேண்டாம், ஒரு மனிதனின் உண்மையான காதலே இங்கு தான் ஆரம்பிக்கும் ஏனென்றால் எந்த தேவையும் எதிர் பார்க்காமல் முக்கியமாக காமத்தை எதிர் பார்க்காத காதல் தான் இது. அவர்களுக்கு இடையே உள்ள வெகுளித்தனமான நட்பை படம் பிடித்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.எப்போதும் பெரியவர்களை காட்டிலும் சிறுவர்கள் தான் கேள்வி கேட்பதிலும், பதில் சொல்பதிலும் வல்லவர்கள், அவர்கள் பேசுவது சிறுபிள்ளை தனமாக இருந்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து இருக்கும். "எனக்கு என் பிரண்ட்ஸ்ன ரொம்ப பிடிக்கும், ஆனா என்னால தான் நல்ல பிரண்டா இருக்க முடில", "இதல்லா சின்ன பசங்க விஷயம் உங்களுக்கு தேவையில்லை", "ஆம்பலைங்கனா லைப் பாய் சோப் தான் போடனும்" போன்ற வசனங்கள் எல்லாம் ட்ரைலர் பார்த்து முடித்த பிறகும் நினைவில் நிற்பவை.அருள்தேவ்வின் இசை இப்போதும் மனதை விட்டு நீங்கவில்லை,தயாரிப்பாளர் ஆனதால் படத்திற்கு ஒளிபதிவாளரும் மனோஜ் தான், "நண்பன்" போன்று பெரிய நடிகர்களின் படங்களில் வேலை செய்து விட்டு இதில் இந்த சிறுவர்கள் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், அதுவும் அழகான கிராமத்தை படத்தில் கொண்டு வந்ததற்கு மனம் திறந்து பாராட்டலாம். கண்டிப்பாக ட்ரைலர் பார்த்த அடுத்த கணமே படத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு தோன்றும்.இந்த "பூவரசம் பீப்பி" வெள்ளித்திரையில் வெற்றியடைய "சினி உலகம்" சார்பாக வாழ்த்துகள். -
See more at: http://www.cineulagam.com/tamil/reviews-tamil/trailer/100106/#sthash.9AHyF32Y.dpuf

No comments:
Post a Comment