ஆண் அழகன் மிதுன்,(Mithun). -- ரமேஷ் நடராஜா

.


ஆண் பிள்ளை என்றால் Cricket , Football (Soccer ), பெண் பிள்ளை என்றால் பரதநாட்டியம் , சங்கீதம்  (இவை எல்லாம் pre uni , SWOT shop மற்ற tuitions எல்லாம் முடித்து , நேரம் இருந்தால் மட்டும்)  என்று இருக்கும் எமது சமுதாயத்தில் இதோ ஒரு வித்யாசமான இளைஞன்.

Mithun தேர்ந்து எடுத்திருக்கும் கலை body building . இளம் வயதினர் Gym சென்று உடலை மெருகேத்தி , பெண்கள் மத்தியில் ஒரு மிடுக்குடன் வலம் வருவது அந்த வயதிற்குரிய செயட்பாடுகள்  தான். ஊரில் அவ்வளவு Gym வசதிகள் இல்லாவிட்டாலும் எமது இள வயதில் நாமும் முறுக்கேத்தி திரிந்தவர்கள் தான்.   
( பெண்கள் திரும்பியே பார்க்கா விட்டாலும், அவர்கள் எல்லோரும் எங்களை பார்ப்பது போல் ஒரு மாயையில் திரிந்த நாட்கள் எல்லோர் வாழ்விலும் வந்து போய் இருக்கும்)

ஆனால் இந்த இளைஞன் , இந்த திறமையை ஒரு படி மேலே கொண்டு சென்று, ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு எம்மவர்களின் திறமையை மற்றுமோர் களத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

நண்பர் ஒருவர் மூலம் Mithun இந்த திறைமை பற்றியும், அண்மையில் Shellharbour இல் நடந்த ஆணழகன் போட்டியில் இவர் 3ம் இடத்தை வென்ற செய்தியையும் அறிந்தேன். சின்ன ஒரு விடயத்தையும்/ வெற்றியையும் ஊதி பெரிதாக்கும் எம் மத்தியில், இந்த Mithun சலசலப்பு இல்லாமல் தனது வெற்றியை அமைதியாக வைத்து விட்டார்.  
Mithun அல்லது அவரது குடும்பம் எனக்கு அவ்வளவாக பளக்கப் பட்டவர்கள் அல்ல.




university நடாத்திய oli oli நிகழ்ச்சியில் ஒரு மிடுக்கான இளைஞன் ! மேடையில் கவனித்தேன், அவரது நடிப்பு திறமை, ஆடல் திறமையை கவனித்தேன். பின் அன்பாலயம் இளம் தென்றல் நிகழ்ச்சியில் இவர் நடனக்குழுவில்     பங்கு பற்றிய போது , இவர் யாரின் குழந்தை, இவர் ஆணழகன் போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்துகிறார் என்று அறிந்து கொண்டேன். (இவர் நடன ஆசிரியர் திருமதி Mirnalini Jayamohan இன் குழந்தை என்று தெரிந்த பிறகு, மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுகொடுக்க வேண்டுமா என்று புரிந்து கொண்டேன் ). 

இவர் ANB south coast physique 2014 tournament இல் கலந்துகொண்டு 3ம் இடத்தை (Bronze Medal) பிடித்து எமக்கு பெருமை உண்டாக்கும் பொழுது, இந்த இளைஞன் பற்றி, அவர் இந்த இடத்தை பிடிக்க பட்டிருக்கக் கூடிய கஷ்டங்களை பற்றி ஒரு ஊடகங்களிலும் நான் பார்க்காத படியால், இதை எம்மவர் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த செய்தியை எழுதுகிறேன்.

வித்தியாசமான திறமைகளை எமது குழந்தைகள் தேர்ந்து எடுக்கும் போது தடை போடும் எம் பெற்றோர்கள் மத்தியில் , இந்த இளைஞன் இந்த திறமையை வளர்க்க உதவிய, ஊக்கம் அளித்த அந்த பெற்றோருக்கு ஒரு சபாஷ் ...


மற்றும் இவரை ஊக்கபடுத்தும் சில நண்பர்களும் இருப்பதாக கேள்விப்பட்டு, Mithun இடமே கேட்டு தெரிந்து கொண்டேன். அவர் Denukkesh, Priyanga, Rangan, Kris , Brindha, Anoj என்ற நண்பர்கள் தனக்கு மிகவும் ஊக்கம் அளித்து உதவிகளும் புரிந்தார்கள் என்று சொன்னார்.

Physiotherapy படிப்பின் மத்தியிலும், ஆடல்,நடனம், body building, இன்னும் பல திறைமைகளை
தன்னுள் வளர்த்து வரும் இளைஞன் Mithun.
  
அவருக்கு ஊக்கம் அளித்த பெற்றோருக்கும் , நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து , இந்த இளைஞன்
இக் கலையில் மென் மேலும் வளர்ந்து பல விருதுகளை அள்ளி குவித்து எமக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.



ரமேஷ் நடராஜா
Sydney 


3 comments:

Anonymous said...

Thank you for bringing this to the notice of others. Congrats Mithun.
The purpose of writing about this is very much needed and appreciated only for the reason that it can be an example to others. Therefore, you comment about:
"சின்ன ஒரு விடயத்தையும்/ வெற்றியையும் ஊதி பெரிதாக்கும் எம் மத்தியில்" is totally unwanted, unwarranted. You are contradicting yourself.

Anonymous said...

Congratulations Mithun. Any achievement requires lot of hard work, sincerity and dedication on the achiever's and his/her family's part. Hats off to Mithu and his family. But I agree with the above comment regarding the writer's attitude. His comment "சின்ன ஒரு விடயத்தையும்/ வெற்றியையும் ஊதி பெரிதாக்கும் எம் மத்தியில்" is unnecessary and contradictory to what he is saying in the rest of the article.
ஊதியும் பெருசாக்க அவருக்கு ஒன்றும் இல்‌லை போல இருக்கு. அந்த ஆதங்கம் அவருக்கு.

Unknown said...

Body Building is not only a demanding sport but requires extra ordinary discipline and perseverance. I thank the author for bringing this to our notice as I'd not have known about this young man who is doing our community proud.

The 2nd "Anonymous" person who has commented on May 31, 2014 - you are a disgrace to the Tamil community and mankind in general. Your comment "ஊதியும் பெருசாக்க அவருக்கு ஒன்றும் இல்‌லை போல இருக்கு. அந்த ஆதங்கம் அவருக்கு" is totally out of line.

It is apparent you have a 'personal score' to settle with the author. It is unfortunate that douchebags like yourself have made their way here. Stop your stupid comments and try to grow up.

Note: I won't be logging in to see your response. So, don't bother.