உலகச் செய்திகள்

பங்­க­ளா­தேஷில் ஆர்­பாட்­டக்­கா­ரர்­களும் பொலி­ஸாரும் உக்­கிர மோதல்: ஒருவர் பலி

ரஷ்யாவில் புகையிரத நிலையத்தில் பெண் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்
ரஷ்­யாவில் மீண்டும் தற்­கொலை குண்டுத் தாக்­குதல்; 15 பேர் பலி 23 பேர் காயம்

எல் ­சல்­வா­டோ­ரி­லுள்ள சபர்ரஸ்­ரி­கியு எரி­மலை குமுற ஆரம்­பிப்பு பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் வெளி­யேற்றம்

அமெரிக்காவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரண்டதால் தீ அனர்த்தம்

மெக்ஸிக்கோவில் 300 அடி ஆழத்துக்கு இறங்கிய நெடுஞ்சாலை

வட­கி­ழக்கு அமெ­ரிக்­காவைத் தாக்­கிய பனிப்­புயல்
==========================================================================
பங்­க­ளா­தேஷில் ஆர்­பாட்­டக்­கா­ரர்­களும் பொலி­ஸாரும் உக்­கிர மோதல்: ஒருவர் பலி

30/12/2013      பங்­க­ளா­தேஷின் தலை­நகர் டாக்­காவில் பொலி­ஸா­ருக்கும் எதிர்க்­கட்சி ஆர்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கு­மி­டையே  ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற உக்­கிர மோதலில் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.
ஜன­நா­ய­கத்­துக்­கான நடை பவனி என்ற தலைப்பில் டாக்கா நக­ரி­னூ­டாக ஊர்­வ­ல­மாகச் சென்ற ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் சிலர் தம்மை எதிர் கொண்ட பொலிஸார் மீது வீடு­களில் தயா­ரிக்­கப்­பட்ட குண்­டு­களை வீசி தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த ஊர்­வ­லத்தை தடுக்கும் நட­வ­டிக்­கையில் 11000 பொலி­ஸாரும் அதி­கா­ரி­களும் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
இதன்போது சுமார் 1000 எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.   நன்றி வீரகேசரி 



ரஷ்யாவில் புகையிரத நிலையத்தில் பெண் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்

ரஷ்­யாவில் புகை­யி­ரத நிலை­யத்தில் பெண் தற்­கொ­லைக்­ குண்­டு­தா­ரி­யொருவர் ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 13 பேர் பலி­யா­ன­துடன் 50பேருக் கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

மொஸ்­கோவின் தெற்கே சுமார் 900 கிலோ மீற்றர் தொலை­வி­லுள்ள வொல்கோ­கிரட் நகரில் இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. மேற்­படி தாக்­கு­த­லுக்கு எந்­த­வொரு குழுவும் உரிமை கோர­வில்லை.
இதற்கு முன் கடந்த ஒக்­டோபர் மாதம் மேற்­படி நகரில் பஸ்­ஸொன்றில் பெண் தற்­கொ­லைக்­குண்­டு­தாரியொருவர் நடத்­திய தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நன்றி வீரகேசரி 




ரஷ்­யாவில் மீண்டும் தற்­கொலை குண்டுத் தாக்­குதல்; 15 பேர் பலி 23 பேர் காயம்

31/12/2013     ரஷ்ய வொல்­கொக்ரட் நகரில் பஸ்­வண்­டி­யொன்றில் இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலில் குறைந்­தது 15 பேர் பலி­யா­ன­துடன் 23 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

அந்­ந­கரின் மத்­திய புகை­யி­ரத நிலை­யத்தில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லொன்றில் 17 பேர் பலி­யான சம்­ப­வத்­திற்கு ஒரு நாள் கழித்தே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.
இந்தத் தாக்­கு­த­லை­ய­டுத்து ரஷ்ய தலை­ந­க­ரி­லுள்ள புகை­யி­ர­தங்கள் மற்றும் விமான நிலை­யங்­களின் பாது­காப்பு என்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
ரஷ்­யாவின் வட கோகஸ் பிராந்­தி­யத்­திற்கு அருகில் எதிர்­வரும் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இடம்­பெ­ற­வுள்ள சோசி நகரை இலக்கு வைத்து தாக்­குதல் நடாத்­தப்­ப­டலாம் என அந்­நாட்டு அதி­கா­ரிகள் அச்சம் கொண்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் புகை­யி­ரத நிலையம் மற்றும் பஸ் மீது மேற்­கொள்­ளப்­பட்ட இரு தாக்­கு­தல்­க­ளையும் பயங்­க­ர­வாத தாக்­கு­த­லாக கரு­து­வ­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
பிந்­திய தாக்­கு­த­லா­னது திங்கட்கிழமை டஸர்ஸின்ஸ்கி மாவட்­டத்திலுள்ள சந்தைக்கு அருகில் சன­நெ­ருக்­கடி மிக்க வேளையில் இடம்­பெ­ற­வுள்­ளது.
இந்தத் தாக்­கு­தலில் காய­ம­டைந்­த­வர்­களில் ஒரு வயது குழந்தையொன்று உள்ளடங்குகிறது. மேற்படி தாக்குதல் களுக்கு வட கோகஸ் பிராந்தியத்திலுள்ள தீவிரவாதிகளே காரண மென நம்பப்படுகிறது.   நன்றி வீரகேசரி 





 எல் ­சல்­வா­டோ­ரி­லுள்ள சபர்ரஸ்­ரி­கியு எரி­மலை குமுற ஆரம்­பிப்பு பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் வெளி­யேற்றம்

31/12/2013      கிழக்கு எல் ­சல்­வா­டோ­ரி­லுள்ள எரி­மலை ஞாயிற்­றுக்­கி­ழமை குமுற ஆரம்­பித்­த­தை­ய­டுத்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் அந்த எரி­ம­லையைச் சூழ­வுள்ள பிராந்­தி­யங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

மேற்­படி சபர்­ரஸ்­ரி­கியு எரி­மலை குமுற ஆரம்­பிப்­ப­தற்கு முன் பாரிய வெடிப்பு சத்தம் கேட்­டுள்­ளது.
தொடர்ந்து எரி­ம­லை­யி­லி­ருந்து புகையும் சூடான சாம்­பலும் வெளிப்­பட்­டுள்­ளது.
இந்த எரி­மலைக் குமு­றலால் எவரும் காய­ம­டை­ய­வில்லை.
மேற்படி எரி­ம­லையைச் சூழ­வுள்ள பிர­தே­சங்­களின் சுமார் 300 சமூ­கங்­களைச் சேர்ந்­த­வர்கள் வாழ்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
மத்­திய அமெ­ரிக்­கா­வி­லுள்ள சிறிய நாடான எல் சல்­வா­டோரில் 20க்கு மேற்­பட்ட எரி­ம­லைகள் உள்­ளன.
கடல் மட்டத்துக்கு மேலான 2129 மீற்றர் உயரமான சபர்ரஸ்ரிகியு எரிமலை அந்நாட்டின் மூன்றாவது உயரமான எரிமலையாகும்.    நன்றி வீரகேசரி








அமெரிக்காவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரண்டதால் தீ அனர்த்தம்

01/01/2014    அமெ­ரிக்க வட டகோதா மாநி­லத்தில் எண்­ணெயை ஏற்றிச் சென்ற புகை­யி­ர­த­மொன்று தடம் புரண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் பாரிய தீ அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது.

இதனால் ஏற்­பட்ட புகை­மூட்டம் பல மைல் தொலை­விற்கு அவ­தா­னிக்­கப்­பட்­டு ள்­ளது.
கஸெட்டன் நக­ருக்கு அண்­மையில் இடம்­பெற்ற இந்த அனர்த்­தத்­தை­ய­டுத்து சுமார் 2,300 பேர் அப்­பி­ராந்­தி­யத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.
இந்­நி­லையில் இந்த அனர்த்­தத்­துக்­கான கார­ணத்தை கண்­ட­றிய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
மேற்­படி அனர்த்­தத்தின் போது ஒரு மைல் நீள­மான புகை­யி­ர­தத்தின் சுமார் 50 பெட்­டிகள் தடம் புரண்­டுள்­ளன.
இத­னை­ய­டுத்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் பெருமளவு தீயணைப்புப் படைவீரர்கள் ஈடுபட்டனர்.       நன்றி வீரகேசரி













மெக்ஸிக்கோவில் 300 அடி ஆழத்துக்கு இறங்கிய நெடுஞ்சாலை

01/01/2014    மெக்ஸிக்கோவை சுமார் இரு வாரங்களுக்கு முன் தாக்கிய 1.3 ரிச்டர் முதல் 4.3 ரிச்டர் வரையான தொடர் பூமியதிர்ச்சிகளின் விளைவாக கடந்த சனிக்கிழமை மலைப்பகுதியிலிருந்து 300 அடி பள்ளத்தில் இறங்கிய நெடுஞ்சாலையில் பயணித்த டிரக் வண்டியொன்றின் சாரதி அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க் கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பஜா கலிபோர்னியா தீபகற்பத்தின் துறைமுக நகரான என்சென்னடா நகரில் குறிப்பிட்ட சீமெந்து டிரக் வண்டி பயணம் செய்து கொண்டிருந்த போதே அந்த நெடுஞ்சாலைப் பகுதி கீழிறங்க ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் மேற்படி டிரக் வண்டியின் சாரதி கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி காப்பாற்றப்பட்டார்.
தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை பகுதி டிரக் வண்டி சகிதம் 300 அடி பள்ளத்துக்கு கீழிறங்கி சேதமடைந்துள்ளது.
 நன்றி வீரகேசரி 










வட­கி­ழக்கு அமெ­ரிக்­காவைத் தாக்­கிய பனிப்­புயல்


04/01/2014      வட­கி­ழக்கு அமெ­ரிக்­காவை பாரிய பனிப்­புயல் தாக்­கி­ய­தை­ய­டுத்து இயல்பு நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளதுடன் மாஸா­சு­ஸெட்­ஸி­லுள்ள ஒரு நகரில் மட்டும் 53 சென்­ரி­மீற்றர் அள­வான பனிப்­பொ­ழிவு பதி­வா­கி­யுள்­ளது.
இந்­நி­லையில் நியூயோர்க் மற்றும் நியூ­ஜெர்ஸி ஆளு­நர்கள் அவ­ச­ர­கால நிலை­மையை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் மக்­க ளை வீடு­களில் தங்­கி­யி­ருக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.
கன­டாவில் மொன்­றியல், வின்­னிபெக் ஆகிய பிராந்­தி­யங்­களில் 26 பாகை செல்­சியஸ் அள­வான வெப்­ப­நிலை பதி­வா­கி­யுள்­ளது.
அமெ­ரிக்க வட போஸ்­ர­னி­லுள்ள பொக்ஸ்போர்ட் பிர­தே­சத்தில் 53 சென்­ரி­மீற்றர் அள­வான பனிப்­பொ­ழிவு இடம் பெற்­றுள்­ளது.
சிக்­காக்கோ, நியூயோர்க், நியூ இங்­கி­லாந்து மற்றும் அமெ­ரிக்க தலை­நகர் வாஷிங்டன் வரை­யான பிராந்­தி­யங்­களில் பனிப்­புயல் எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
சிக்­காக்கோ ஓஹரே சர்­வ­தேச விமான நிலை­யத்தில் கார்கள் பனியால் மூடப்­பட்டு காணப்­பட்­டுள்­ளன. அத்­துடன் அங்கு விமான சேவைகள் இரத்துச் செய்­யப்­பட்­டன.
நியூ­யோர்க்கில் பல பாட­சா­லைகள் சீரற்ற கால­நி­லையால் மூடப்­பட்­டுள்­ளன. அதே சமயம் அந்­ந­க­ரி­லுள்ள அவ­சர தேவை­யற்ற அர­சாங்கப் பணி­க­ளி­லுள்­ள­வர்­க­ளுக்கு விடு­முறை வழங்­கப்­பட்டு அவர்கள் வீடு செல்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டது.
இன்­டி­யானா மாநி­லத்தில் பனி நிறைந்த வீதி காரணமாக லொறியொன்று கட்டுப் பாட்டை இழந்து பஸ்ஸொன்றின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
 நன்றி வீரகேசரி 










No comments: