கோயில் யா​​னை

.

தெருவில் ஒவ்​வொரு வீட்டின் வாசல் முன்னும் நின்று ​கொண்டு
இறுகச் சாத்தி தாளிடப்பட்ட கதவுகளுக்கு முன்னால்
பிளிறிக் ​கொண்டிருக்கிறது அந்த யா​னை.
​பொதுவாக யா​னைகள் அசமந்தமான​வை.
அவற்றின் உருவ​மே கவரக்கூடிய​வை. நடவடிக்​கைகள் ​சோர்வு தரக்கூடிய​வை.
இதுவ​ரை அந்தக் ​​கோயிலில் இருந்த எல்லா யா​னைகளும் அந்த ரகம் தான்.
இது வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
இது வந்த பிறகுதான் ​கோயில் நிர்வாகத்திற்​கே நம்பிக்​கை வந்தது.
எப்படி​யேனும் இந்த ஊர் மக்க​ளை நம் சுவாமி​யை ​சேவிக்க ​வைத்துவிட முடியு​மென.
அந்த ​வே​​லை ஒன்றும் அவர்கள் நி​னைத்தது ​போல் அத்த​னை எளிதாக இல்​லை.
ஒவ்​வொரு நாளும் யா​னை ​தெருவில் ​செய்யும் அட்டகாசங்களுக்கு கு​றைவில்​லை.
அரண்டு பார்க்கும் நாய்க​ளின் பக்கம் துலாவியபடி​யே தும்பிக்​கை​யை சுழற்றி மிரண்டு ஓட ​வைப்ப​தென்ன
சத்தமின்றி கழு​தைகளின் பின்​னே ​சென்று வா​லை இழுத்து கத்த ​வைப்ப​தென்ன
முன்​னேறும் குதி​ரைவண்டிகளுக்கு இடம் ​கொடாமல்
வண்டிக்காரன் வண்டி​யோடு கு​டை சாயும் வண்ணம் குதி​ரைக​ளை மிரள ​வைப்ப​தென்ன


இவற்றால் கவரப்பட்டு கதவுக​ளைத் திறந்து ​கொண்டு வாசலுக்கு ஓடிவரும் குழந்​தைக​ளை
உள்​ளே இழுத்து கதவுக​ளை இறுகச் சாத்தி தாளிடுகிறார்கள் ​​பெரியவர்கள்
அது​​வொன்றும் யா​னைக​ளை அறியாத ஊரில்​லை.
உலகின் மிகச் சிறந்த யா​னைகள் உலாவந்த ஊர் அது.
யா​னைகள் என்றால் எ​வை? சிறந்த யா​னைகள் எப்படி இருக்கும்?
என்ப​தை நன்கு அறிவார்கள் அந்த ஊர்ப் ​பெரியவர்கள்
இந்த ஊ​ரை உருவாக்குவதற்கு ராவும் பகலும்
தூரத்தில் உள்ள காடுகளிலிருந்து மரங்க​ளை ​பெயர்த்து வருவ​தே வாழ்வின் லட்சியமாய்
இந்த ஊ​ரை உருவாக்கி ம​றைந்த யா​னை​யை இன்னும் மறக்கவில்​லை அவர்கள்.
இந்த யா​னை​யைப் ​போல ​கோயில் ​சோற்றில் உண்டு ​கொளுத்து
​சுவாமி ஊர்வலத்தில் வீதி உலா வந்து வாழ்க்​கை​யை ​​போக்கும்
யா​னைக​ளை அவர்கள் விரும்புவதில்​லை.
யா​னையும் த​லைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்க்கிறது.
யா​னையின் மீது அந்த ஊரில் பல பிராதுகள் உண்டு.
வயதானவ​ரை மிரட்டி ஒரு மு​றை கீ​​ழே தள்ளிவிட்டதில் படுத்த படுக்​கை ஆகிவிட்டார்.
ஆர்வக்​கோளாறில் ஒரு மு​றை குடி​சையின் ஊன்று கம்​பை உருவிவிட்டதில்
வீட்​டை இழந்தான் குடியானவன் ஒருவன்.
தண்ணீர் எடுக்க ஆற்றுக்குச் ​சென்ற ​பெண்க​ளை பிளிறி மிரட்டியதில்
குடத்​தோடு ஆற்றில் விழுந்து நீந்தி மறுக​​ரை ​சேர்ந்தனர் ​பெண்கள் சிலர்.
இந்த ஊருக்குள் இந்த யா​னை வந்ததிலிருந்து,
குரங்காட்டியும் கரடி வித்​தை காட்டிப் பி​ழைத்து வந்தவனும்
தங்கள் பி​ழைப்பு ​போனதாய் புலம்பிக் ​கொண்டிருக்கிறார்கள்
கிளி ​ஜோசியக்காரனுக்கும் தீராத த​லைவலி
​வெள்​ளை எலி ​ஜோசியக்காரனுக்கும் முகம் ​வெளுத்துத்தான் ​போயிருக்கிறது.
முன்பிருந்த யா​னைக​ளை அரசாங்கத்திடம் பிடித்துக் ​கொடுத்தது ​போல்
இ​தை எதுவும் ​செய்ய முடியாது. இது ​கோயில் யா​னை.
நாடறிந்த நவரச நடிகர்களும்
இந்த யா​னை​யைப் பாராட்டி அறிக்​கை ​வெளியிட்டார்கள்.
“மக்க​ளை என்டர்​டெயின் பண்ணுவதில்
இது எங்க​ளையும் மிஞ்சி விட்ட​தென”
சுவாமி​யை ​சேவிக்க வந்தவர்கள் யா​னை​யை ​ரசித்த காலம் ​போய்
யா​னை​யை ரசிக்கத் துவங்கி சுவாமி​யை ​சேவிக்கப் ​போகும் காலம் ​நெருங்கிக்​கொண்டிருக்கிறது.
நன்றி naatkurippugal.wordpress

No comments: