சிங்களத்துக்குத் திருவாசகம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்

.


திருவாசகம் அருளியவர் மாணிக்கவாசகர்.
சிங்கள மன்னன் தலைமையில்
சிதம்பரத்துக்கு வந்த புத்த சமயத்தவருடன் சந்திப்பு.
கருத்துப் பரிமாற்றம்.
சைவ சமயக் கொள்கை விளக்கம்.
புத்த சமய மன்னன்அதுவும் சிங்கள மன்னன் சைவ சமயத்தைத் தழுவுகிறான்.
ஆனாலும் திருவாசகம் சிங்களத்தில் இதுவரை இல்லை.
இதோ இந்தத் தலைமுறையில் சிங்களத்தில் திருவாசகம்.
1200 
ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் இருந்து சிங்களத்துக்கு.
நேற்று 31.12.2013 முழுவதும் கல்முனையில் இருந்தேன்.
மொழிபெயர்ப்பாளர் வடிவேலு
பதிப்பாசிரியர் முகில்வண்ணண்
தட்டச்சாளர் தம்பி
யாவரும் திருவாசகம் சிங்கள மொழிபெயர்ப்புக்கு இறுதி வடிவம் கொடுத்தோம்.




அச்சுக்குப் போகும் நிலை எய்தினோம்.
விரைவில் அச்சாகும்.









No comments: