கடற்படை வீரரால் நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்
மன்னார் மாவட்ட பெரும் போக விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடல்
வடக்கில் 71,716 ஹெக்டெயர் காணிகளை கரும்பு உற்பத்திக்கென சுவீகரிக்க திட்டம்
யாழ்ப்பாணத்தில் ராதிகா சிற்சபேசன்
இவ்வருடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவர்ந்த டெவோன் நீர்வீழ்ச்சி
ராதிகா சிற்சபேசன் நல்லூரில் விசேட வழிபாடு
அரச ஆதரவுடன் அப்பட்டமான நில அபகரிப்பு
மன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்
மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
============================================================

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.நன்றி வீரகேசரி
மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எச் .என். பீ. அம்பன்வல தலைமையில் விஷேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.
அரச ஆதரவுடன் அப்பட்டமான நில அபகரிப்பு
02/01/2014 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற அப்பட்டமான நில அபகரிப்பை வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள் இடைநிறுத்தியுள்ளனர். இதே வேளை, நேற்றைய தினம் அங்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பிய சிங்களவர்கள் இன்று மக்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் வருவதை அறிந்து கனரக இயந்திரத்தை காட்டுக்குள் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓடினர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, முல்லைத் தீவு கொக்குத்தொடுவாயில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் 345 ஏக்கர் தமிழர் நிலம், அரச ஆதரவுடன் அபகரிக்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையில் உள்ள கோட்டைக்கேணி, குஞ்சுக்குளம், அம்பட்டம்வாய்க்கால், கொத்தியகாடு, வெளிதொட்டக்கண்டக் குளம், வெள்ளக்கல்லடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 345 ஏக்கர் பரப்பளவுள்ள தமிழர் நிலமே இவ்வாறு புதிதாக அபகரிக்கப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
தகவலறிந்த அக்காணிகளுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று அவதானித்துள்ளனர். எனினும் குறித்த இடத்தில் காடழிப்பை செய்து கொண்டிருந்த சிங்களவர்கள், அக்காணிகள் ஆளுக்கு 50 ஏக்கர் வீதம் 7 பேருக்கு இலங்கை அமைச்சர் ஒருவரால் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு சென்ற மக்களையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது பற்றி கொக்குத்தொடுவாய் மக்கள் நேற்றிரவு ரவிகரனிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலையில் ரவிகரனுடன் கொக்குத்தொடுவாய் மக்கள் காடழிப்பு இடம்பெறும் இடத்திற்கு சென்றுள்ளனர். உழவு இயந்திரத்தில் மக்கள் ரவிகரனுடன் வருவதை அறிந்து கொண்ட சிங்களவர்கள் தாங்கள் பயன்படுத்திய இரண்டு கனரக இயந்திரங்களையும் காடுகளுக்குள் உருமறைப்புச் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற ரவிகரன் குறித்த நிலப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்தார். இரு கனரக இயந்திரங்களும் இலக்கத் தகடு இல்லாமலிருந்ததை ரவிகரன் நேரில் அவதானித்தார்.
அந்நிலப்பகுதியில் சுமார் 63 ஏக்கர் தமிழருக்குரிய அனுமதிப் பத்திரக்காணிகள் என்றும் மிகுதி நிலப்பகுதிகள் தமிழரின் அறுதி உறுதிக் காணிகள் என்றும் தமது காணிப் பத்திரங்களை தமிழ் மக்கள் தனக்கு காட்டினார்கள் என்றும் ரவிகரன் தெரிவித்தார். இந்நில அபகரிப்பு அரச அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் இடம்பெறுவது மிகக்கேவலமான விடயம் எனும் அவர் தெரிவித்தார். இவ்விடயத்தை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் கூறியதாக ரவிகரன் மேலும் தெரிவித்தார். இந்த அபகரிப்புத் தொடர்பான மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வருகின்ற திங்கட்கிழமை அப்பகுதி மக்கள் ஒப்படைக்கவுள்ளனர் என தெரியவருகிறது.
நன்றி வீரகேசரி
மன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
03/01/2014 மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டது.
ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும்இ சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் பல மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் விரிவு படுத்தி மனித புதை குழிகள் தோண்டப்படவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளில் உள்ள மண்டையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்பட்டன.
குறித்த மனித புதை குழி தோண்டும் பணி நாளை சனிக்கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.
இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எழும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் போது சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்
மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மன்னார் மாவட்ட பெரும் போக விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடல்
வடக்கில் 71,716 ஹெக்டெயர் காணிகளை கரும்பு உற்பத்திக்கென சுவீகரிக்க திட்டம்
யாழ்ப்பாணத்தில் ராதிகா சிற்சபேசன்
இவ்வருடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவர்ந்த டெவோன் நீர்வீழ்ச்சி
ராதிகா சிற்சபேசன் நல்லூரில் விசேட வழிபாடு
ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்
ராதிகாவிடம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை
பள்ளி வாயல் மீது இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்
அரச ஆதரவுடன் அப்பட்டமான நில அபகரிப்பு
மன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்
மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
============================================================
கடற்படை வீரரால் நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்
30/12/2013 குச்சவெளி
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரியாய 5 ஆம் வட்டாரத்தில் 4 வயது
சிறுமியொருவர் கடற்படை வீரர் ஒருவரினால் பாலியல்
துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதிக்கு பௌசர்களின்
மூலம் நீர் விநியோகித்து வரும் கடற்படையைச் சேர்ந்த ஒருவரினாலேயே
மேற்படி சிறுமி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக
குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது சகோதரியுடன் இருந்த சிறுமியை அழைத்துச் சென்ற குறித்த நபர் அவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் குச்சவெளி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ள அதேவேளை சிறுமி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரியவை தொடர்பு கொண்டு வினவிய போது, அப்படி ஒரு சம்பவம் நடந்தமை தொடர்பில் தனக்கு இதுவரை தெரியவில்லை எனவும் அது தொடர்பில் தேடிப்பார்ப்பதாகவும் குறிப் பிட்டார். நன்றி வீரகேசரி
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது சகோதரியுடன் இருந்த சிறுமியை அழைத்துச் சென்ற குறித்த நபர் அவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் குச்சவெளி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ள அதேவேளை சிறுமி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரியவை தொடர்பு கொண்டு வினவிய போது, அப்படி ஒரு சம்பவம் நடந்தமை தொடர்பில் தனக்கு இதுவரை தெரியவில்லை எனவும் அது தொடர்பில் தேடிப்பார்ப்பதாகவும் குறிப் பிட்டார். நன்றி வீரகேசரி
மன்னார் மாவட்ட பெரும் போக விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடல்
30/12/2013 மன்னார் மாவட்டத்தில் பெரும் போக விவசாய செய்கையினை மேற்கொண்டு வரும்
விவசாயிகள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசர
கலந்துரையாடல் இன்று மன்னார் உயிலங்குளம் ம.வி பாடசாலையில் மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மாந்தை மேற்கு,மடு,நானாட்டான்,முசலி ஆகிய பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்
மற்றும் பெரும் போக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் என
நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவிக்கையில்,
தற்போது மன்னார் மாவட்டத்தில் மழை பெய்யாததன் காரணத்தினால் பெரும் போக
விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு நீர் இன்றி பல்வேறு
பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கட்டுக்கரை குளத்தை நம்பி தற்போது 4 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பெரும்
போக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் இரண்டு மாதங்களை கடந்த
பயிராக அப்பயிர்கள் காணப்படுகின்றது.
தற்போது நெற்பயிருக்கு உரிய நீர் இல்லாமையினால் ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.
தற்போது எஞ்சியுள்ள பயிர்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுக்கரை குளம் இது வரை திறந்து விடாததன் காரணத்தினாலேயே இந்த
பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.எதிர் வரும் மாதம் நெற்கதிர்
வருகின்ற காலம் என்பதினால் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டிய நிலமை
ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது மட்டுமின்றி அப்பகுதிகளில் கால்நடைகளினால் விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே விவசாய பயிர்ச் செய்கையை பாதிப்படையச் செய்கின்ற
வகையிலும்,பயிர்களை உண்ணும் வகையிலும் கால்நடைகளின் நடமாட்டம்
அதிகரித்துள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரி கவனம் செலுத்தி உரிய
நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் போது கருத்துத்தெரிவித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
எம்.வை.எஸ்.தேசப்பிரிய, விவசாயிகள் எதிர் நோக்குகின்ற இப்பிரச்சினைக்கு
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்கள்
சேகரிக்கப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி
எதிர்வரும் 5 ஆம் திகதி கட்டுக்கரை குளம் திறந்து விடப்பட்டு விவசாய
செய்கைகளுக்கு நீர் சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திறந்து விடப்படுகின்ற நீர் தேவையற்ற விதத்தில் பயன்படுத்திக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி
ஸ்ரான்லி டி மேல்,உதவி மாவட்ட செயலாளர் எம்.பரமதாஸ்,கமநல அபிவிருத்தி
திணைக்கள உதவி ஆணையாளர் தேவரதன், பிரதேச நீர்பாசன பொறியியலாளர் எம்.மயூரன்,
நீர்பாசன திணைக்கள திட்ட முகாமையாளர் கிரிணஸ் ரூபன் மற்றும் பிரதேசச்
செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி
வடக்கில் 71,716 ஹெக்டெயர் காணிகளை கரும்பு உற்பத்திக்கென சுவீகரிக்க திட்டம்
31/12/2013 கரும்பு
உற்பத்தியை மேற்கொள்வதற்கென வடக்கில் பெருமளவான காணிகளை
சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு,
வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் 71 ஆயிரத்து 716
ஹெக்டெயர் காணிகளை சுவீகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம்
எதிர்வரும் 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக் ஷ்மன் செனவிரத்ன இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார். எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமை யில் கூடும் அமைச்சரவையில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. சீனிக் கைத்தொழில் அபிவிருத்திஅமைச்சின் கீழ் கரும்புச் செய்கையை அதிகரித்து சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக நாடுதழுவிய ரீதியில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 801 ஹெக்டெயர் காணி இந்தத் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்படவுள்ளது. இதில் வடக்கில் 71ஆயிரத்து 716 ஹெக்டெயர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது.
இதற்கான பூர்வாங்க அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே அமைச்சர் லக் ஷ்மன் செனவிரத்னவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இதனையடுத்தே எதிர்வரும் 3ஆம் திகதி இறுதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் கரும்பு பயிர்ச்செய்கைக்காக அரசுக்குச் சொந்தமான 109,801ஹெக்டெயர் காணிகள் சுவீகரிக்கப்படும். 99 வருட குத்தகையின் அடிப்படையில் இந்தக் காணிகள் அமைச்சினால் கரும்பு உற்பத்திக்காக பகிர்ந்தளிக்கப்படும். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க வவுனியா மாவட்டத்தில் வவனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், ஓமந்தை, கனகராஜன் குளம், நயினமடு, தந்திரிமலை ஆகிய பகுதிகளில் 42 ஆயிரத்து 111 ஹெக்டெயர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் 24 ஆயிரத்து 340 ஹெக்டெயர் காணிகளும் மன்னார் மாவட்டத்தில் மடு, மாந்தை தெற்கு ஆகிய பகுதிகளில் 5185 ஹெக்டெயர் காணிகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் பகுதியில் 80 ஹெக்டெயர் காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளது.
இதேபோல் மட்டக்களப்பில் செங்கலடி, வவுணதீவு பகுதிகளில் 4869 ஹெக்டெயர் காணிகள் சுவீகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அம்பாறையில் 450 ஹெக்டெயர்களும் அநுராதபுரத்தில் 600 ஹெக்டெயர்களும் பதுளையில் 8000 ஹெக்டெயர்களும் மொனராகலையில் 20 ஆயிரத்து 116 ஹெக்யெடர்களும் சுவீகரிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் 71 ஆயிரத்து 716 ஹெக்டெயர் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றபோதிலும் அந்தக் காணிகள் எப்படி யாருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற விபரம் அமைச்சரவைப் பத்திரத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. கரும்புச் செய்கைக்காக காணி சுவீகரிப்பு என்ற பெயரில் வடக்கில் பெருமளவான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமை தற்போதைய நிலையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 801 ஹெக்டெயர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இதில் 71 ஆயிரத்து 716 ஹெக்டெ்யர் காணி வடக்கில் மட்டும் சுவீகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
லங்கா சீனி தனியார் கம்பனி என்ற நிறுவனமொன்றை ஆரம்பித்து அந்த கம்பனிக்கே இந்தக் காணிகள் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. இதனை இந்தக் கம்பனி கரும்புச் செய்கைக்காக பகிர்ந்தளிக்கும் என்றே அமைச்சரவைப் பத் திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி

31/12/2013 கனடா
நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
ராதிகா சிற்சபேசன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயத்தை
மேற்கொண்டிருந்தார்.
சுற்றுலா விசாவில் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துள்ள அவர்
நேற்றுக்காலை தெல்லிப்பழை - மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்,
கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றுக்குச் சென்று வழிபாடுகளில்
ஈடுபட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாணசபை
உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்
சுகிர்தன் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.
உறவினர் நண்பர்கள் வீட்டிற்கும் சென்ற அவர் வலி.வடக்கிலிருந்து
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சுன்னாகம் சபாபதிப்பிள்ளை
முகாமிற்கும் சென்று மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நன்றி வீரகேசரி
இவ்வருடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவர்ந்த டெவோன் நீர்வீழ்ச்சி
31/12/2013 இலங்கையில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் ஒன்று டெவோன் நீர்வீழ்ச்சி.
எழில் கொஞ்சும் மலையக பகுதியின் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் டெவோன்
பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபல்யமானது. இந்த
நீர்வீழ்ச்சி மகாவலி கங்கையின் கிளையாற்றில் அமைந்துள்ளது.
இந்த டெவோன் நீர்வீழ்ச்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். இந்
நீர்வீழ்ச்சியானது 281 அடி உயரத்தை கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த வருடத்திலும் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
சுற்றுலாப்பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு தவறவில்லை என்பது
குறிப்பிடதக்கது.
நன்றி வீரகேசரி
ராதிகா சிற்சபேசன் நல்லூரில் விசேட வழிபாடு
31/12/2013 கனேடிய நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் யாழ்பணத்தைச் சேர்ந்த திருமதி
ராதிகா சிற்சபேசன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்.நல்லூர் கந்த சுவாமி
கோவிலில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ராதிகா சிற்சபேசன் தற்போது
யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார். இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகாண சபையின் ஆளும்கட்சி
உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு
நடத்தியுள்ளார்.
அத்துடன் வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும்
கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை மன்னாரில் உள்ள
அமைச்சரின் இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார். இதன் போது எதிர்கால
அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மக்களின் நிலை பற்றியும்
அமைச்சர் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசனுக்கு எடுத்துக்
கூறினார்.
இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கு நேற்று அவர்
விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர்
டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கி நிற்கும் அவர்
யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம்
கொண்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்
01/01/2014 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள கனடா நாட்டின் பாராளுமன்ற
உறுப்பினரான ராதிகா சிற்சபேசனின் நடவடிக்கைகளை குடிவரவு
குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவதானிப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ள ராதிகா
சிற்சபேசன் யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்களையும் அக்கட்சி சார்பிலான முக்கியஸ்தர்களையும்
சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் இடம்பெயர்ந்து தற்பொழுதும்
இடைத்தங்கல் முகாம்களில் வாழ்கின்ற மக்களுடனும் மீள்குடியமர்ந்த
மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இதனையடுத்து இவர் நேற்றும் இன்றும் வன்னிக்கு விஜயம் செய்து
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களையும் மக்கள்
பிரதிநிதிகளையும் சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய அவர் நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்வார் என்ற
எதிர்பார்ப்பில் அங்கு காத்திருந்த இலங்கையின் குடிவரவு குடியகல்வு
திணைக்களத்தின் அதிகாரியான ரணவீர என்பவர் மூன்று பெண் பொலிஸாரின்
உதவியுடன் தேடுதல்களை நடத்தியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் அலுவலகத்திற்கு நண்பகல் ஒரு மணியளவில் சென்று
அங்கிருந்தவர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்.
இவ்விசாரணைகளின் போது ராதிகா சிற்சபேசன் அங்கு வந்தாரா எனவும்
கிளிநொச்சியில் வேறு இடங்களுக்குச் செல்லவுள்ளமை தொடர்பாக
அங்கிருந்தவர்களுக்குத் தெரியுமா எனவும் விசாரித்துள்ளனர்.
அப்பொழுது அந்த அலுவலகத்திலிருந்தவர்கள் ராதிகா சிற்சபேசனின்
விஜயம் மற்றும் அவருடைய நகர்வுகள் தொடர்பாக தமக்கு எதுவுமே தெரியாது
எனப் பதிலளித்துள்ளதுடன் வேண்டுமாயின் தம்முடைய அலுவலகத்தினை
சோதனையிடுமாறு கூறியுள்ளனர். அப்பொழுது குறித்த குடிவரவு
குடியல்வு திணைக்களத்தின் அதிகாரியான ரணவீர தாம் அக்கூற்றினை
நம்புவதாகத் தெரிவித்து அங்கு தேடுதல் நடத்தாமல் சென்றுள்ளதாக விடயம்
அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை ராதிகா சிற்சபேசன் நேற்று
வன்னிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த குடிவரவு
குடியல்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலும் பலரிடமும் இரகசியமாக
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி
ராதிகாவிடம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை
01/01/2013 இலங்கைக்கு
வருகை தந்துள்ள கனேடிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா
சிற்சபேசனிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை
மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.நன்றி வீரகேசரி
பள்ளி வாயல் மீது இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்
01/01/2014 கண்டி மாவட்டத்தின் பூஜபிட்டிய பிரதேச சபை பிரிவிலுள்ள அம்பதென்னை, முல்லேகமயில் பள்ளி வாயல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலா பள்ளிவாசல் மீது நேற்று இரவு இனம்தெரியாத குழுவினர் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.
நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் வாகனம் ஒன்றில் வந்த குழு ஒன்று கற்களை
எரிந்து மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் பின்னர் பள்ளி வாயலின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத் தாக்குதல் காரணமான பள்ளி வாசலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிவாயல் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சிங்கள முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையான வாழும் இப்
பிரதேசத்தின் ஒற்றுமையை சீர் குழைப்பதற்காக சிலர் திட்டமிட்டு இச் செயலை
செய்திருக்கலாம் என பிரதேசத்தில் வசிக்கும் பௌத்த தேரர்கள் மற்றும் முக்கிய
பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் செய்தியை கேள்வியுற்ற பௌத்த தேரர்கள் உற்பட பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.
பிரதி அமைச்சர் அப்புல் காதர் மற்றும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற
அங்கத்தவர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட பலர் இவ் விடயம் தொடர்பான மேலதிக
நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மாகாண சபை உறுப்பினர் குணதிலக்க
ராஜபக்ஷ, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ ஆகியோரும் அங்கு
சமூகம் தந்திருந்தனர்.மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எச் .என். பீ. அம்பன்வல தலைமையில் விஷேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.
நன்றி வீரகேசரி
அரச ஆதரவுடன் அப்பட்டமான நில அபகரிப்பு
02/01/2014 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற அப்பட்டமான நில அபகரிப்பை வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள் இடைநிறுத்தியுள்ளனர். இதே வேளை, நேற்றைய தினம் அங்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பிய சிங்களவர்கள் இன்று மக்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் வருவதை அறிந்து கனரக இயந்திரத்தை காட்டுக்குள் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓடினர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, முல்லைத் தீவு கொக்குத்தொடுவாயில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் 345 ஏக்கர் தமிழர் நிலம், அரச ஆதரவுடன் அபகரிக்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையில் உள்ள கோட்டைக்கேணி, குஞ்சுக்குளம், அம்பட்டம்வாய்க்கால், கொத்தியகாடு, வெளிதொட்டக்கண்டக் குளம், வெள்ளக்கல்லடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 345 ஏக்கர் பரப்பளவுள்ள தமிழர் நிலமே இவ்வாறு புதிதாக அபகரிக்கப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
தகவலறிந்த அக்காணிகளுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று அவதானித்துள்ளனர். எனினும் குறித்த இடத்தில் காடழிப்பை செய்து கொண்டிருந்த சிங்களவர்கள், அக்காணிகள் ஆளுக்கு 50 ஏக்கர் வீதம் 7 பேருக்கு இலங்கை அமைச்சர் ஒருவரால் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு சென்ற மக்களையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது பற்றி கொக்குத்தொடுவாய் மக்கள் நேற்றிரவு ரவிகரனிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலையில் ரவிகரனுடன் கொக்குத்தொடுவாய் மக்கள் காடழிப்பு இடம்பெறும் இடத்திற்கு சென்றுள்ளனர். உழவு இயந்திரத்தில் மக்கள் ரவிகரனுடன் வருவதை அறிந்து கொண்ட சிங்களவர்கள் தாங்கள் பயன்படுத்திய இரண்டு கனரக இயந்திரங்களையும் காடுகளுக்குள் உருமறைப்புச் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற ரவிகரன் குறித்த நிலப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்தார். இரு கனரக இயந்திரங்களும் இலக்கத் தகடு இல்லாமலிருந்ததை ரவிகரன் நேரில் அவதானித்தார்.
அந்நிலப்பகுதியில் சுமார் 63 ஏக்கர் தமிழருக்குரிய அனுமதிப் பத்திரக்காணிகள் என்றும் மிகுதி நிலப்பகுதிகள் தமிழரின் அறுதி உறுதிக் காணிகள் என்றும் தமது காணிப் பத்திரங்களை தமிழ் மக்கள் தனக்கு காட்டினார்கள் என்றும் ரவிகரன் தெரிவித்தார். இந்நில அபகரிப்பு அரச அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் இடம்பெறுவது மிகக்கேவலமான விடயம் எனும் அவர் தெரிவித்தார். இவ்விடயத்தை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் கூறியதாக ரவிகரன் மேலும் தெரிவித்தார். இந்த அபகரிப்புத் தொடர்பான மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வருகின்ற திங்கட்கிழமை அப்பகுதி மக்கள் ஒப்படைக்கவுள்ளனர் என தெரியவருகிறது.
மன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
03/01/2014 மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டது.
ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும்இ சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் பல மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் விரிவு படுத்தி மனித புதை குழிகள் தோண்டப்படவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளில் உள்ள மண்டையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்பட்டன.
குறித்த மனித புதை குழி தோண்டும் பணி நாளை சனிக்கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.
இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எழும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் போது சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்
04/01/2014 வவுனியா
பொது வைத்தியசாலைக்கு போதுமான தாதியர்கள் வழங்கப்படவில்லை என
வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
2014 ஆம் ஆண்டு தாதிப் பயிற்சி பெற்று வெளியேறிய சுமார் 1,800 க்கும் மேற்பட்ட தாதியர்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு 95 தாதியர்கள் கோரியிருந்த போதிலும் 12 தாதியர்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேரே தமது பொறுப்பை ஏற்றுள்ளனர்.
இதேவேளை, வடமாகாணத்திற்கு 46 தாதியர்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 41 பேரே கடமையை பொறுப்பேற்றமையால் மாகாணத்திற்கு தேவையான தாதியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் போதுமான தாதியர்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சகல வசதிகளும் உள்ள வவுனியா பொதுவைத்தியசாலைக்கு ஒன்பது தாதியர்கள் போதுமானவர்கள் இல்லை எனவும் இனிவரும் காலங்களில் தாதியர் படிப்பை முடித்து வெளியேறுபவர்களை இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கக்கோரி இவ் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல் 12 மணி தொடக்கம் 01 மணி வரை வவுனியா பொது வைத்தியசாலை முன்றலில் நடைபெற்றது. நன்றி வீரகேசரி

03/01/2014 பள்ளிவாசல்கள், கோயில்கள் மற்றும்
கிறிஸ்தவ மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணை நகரில் மத்திய
மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஸாத் சாலி தலமையில்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களிடம் அஸாத் சாலி கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக நாட்டில் 29 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இறுதியாக
அம்பதென்னையில் ஒரு பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. இதன் பின் இவ்வாறான
செயல்கள் இடம் பெறாது தடை செய்வதற்கு அரசை வற்புறுத்தும் கவனயீர்ப்பு
ஆர்ப்பாட்டமாகவே இவ்வார்ப்பாட்டம் இடம் பெறுகின்றது எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment